24/02/2022
அயலக மருத்துவப் பட்டதாரிகளுக்கு ஆறுதல் சேதி!
வெளிநாட்டில் இளநிலைப் பட்ட மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவர்களாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்வதற்கான கட்டணம் ரூ.3,54,000இலிருந்து
ரூ.29,400ஆகக் குறைக்கப்படுகிறது.
இதற்கு ஆணையிட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ மாணவர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் எப்.எம்.ஜி. தேர்விலும் (FMG) வெற்றிபெற்ற பின்னர், இந்த மருத்துவ மாணவர்கள், மிக அதிக அளவில் கட்டணம் செலுத்தமுடியாததால், பயிற்சி மருத்துவர்களாகச் சேரமுடியாமல் சிரமப்பட்டனர். இதனால் முறையாகப் படித்தும் தங்கள் மருத்துவ சேவையைத் தொடங்கமுடியாத நிலையில் இவர்கள் இருந்தனர்.
இதற்கு முதல் கட்டத் தீர்வாக மாவட்ட மருத்துவமனைகளில், வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களாகப் பயிலும் இடங்களை அதிகரித்தது.
தற்போது பயிற்சிக் கட்டணத்தைக் குறைத்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் M.B.B.S மருத்துவ படிப்பை முடித்த மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவர்களாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்ந்து பயில்வதற்கான கட்டணம் ரூ.3,54,000 லிருந்து ரூ.29,400 குறைத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்திய மெடிகல் கவுன்சில் நடத்தும் எப்.எம்.ஜி. தேர்விலும் (FMG) வெற்றி பெற்ற பின்னர், இந்த மருத்துவ மாணவர்கள் மிக அதிக அளவில் கட்டணம் செலுத்த முடியாததினால், பயிற்சி மருத்துவர்களாக சேர முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் முறையாகப் படித்தும் மக்களுக்குத் தங்கள் மருத்துவ சேவையை வழங்க இயலாத நிலையில் இவர்கள் இருந்தனர்.
இதற்கு அரசு முதல் கட்டத் தீர்வாக மாவட்ட மருத்துவமனைகளில், வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களாக பயில இடங்களை அதிகரித்தது.
தற்போது பயிற்சிக் கட்டணத்தைக் குறைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணை பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
எப்.எம்.ஜி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய தமிழ்நாடு அரசிற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.