04/10/2023
🟪✒️ படித்து தெரிந்துகொள்வோம்
(குறிப்பு இந்த கட்டுரையை நீண்ட நேரம் படிக்க வேண்டிவரும் Save செய்து படியுங்கள் )
🟪கொலஸ்டிரால் என்ன செய்யும்
👁️வாங்க படிப்போம்
🟪நடைபயிற்ச்சி, யோகாசன பயிற்சி,தியானப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்
🟪 தேங்காய், தேங்காய் எண்ணெயை உணவு தயாரிப்பில் சேர்த்து வரலாம்
🟪மனஅழுத்தம், கவலையில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலே எந்த கொழுப்பும் ஒன்னும் செய்யாது.!
🟪 சமையல் எண்ணெய் ஒருபார்வை
🟪30 வயதை கடந்தவர்கள் வருடம் ஒருமுறை Lipid profile Test செய்து கொலஸ்டிரால் தன்மையை அறிந்து கொள்ளலாம்
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை(since1953)
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, சென்னையில் டாக்டரை சந்திக்க பேசவும்
🟪Ph:9443475684
🟦🟥🟧🟨🟩🫀🟫⬛🟥
❤️❤️❤️04-10-23 ❤️❤️❤️
🟦கொலஸ்டிரால் (Cholesterol)
என்றால் அனேகமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொலஸ்டிரால் எவ்வாறு மனிதனுக்கு தீங்கு விளைவிக்கிறது?கொலஸ்டிரால் அதிகம் உடையவர்கள் எந்த வகையான உணவை
உட்கொள்ள வேண்டும்? மீண்டும் கொலஸ்டிரால் வராமல் எப்படி தடுப்பது? அதற்கான மருத்துவ முறைகள் என்ன என்பதை இனி ஆராய்வோம்.
🟦பொதுவாக கொலஸ்டிராலை, கொழுப்பு
என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் கொழுப்புவேறு. கொலஸ்டிரால் வேறு ஆகும். கொழுப்பு அமிலத்திலிருந்து கொலஸ்டிரால் கிடைக்கிறது கொழுப்பில் ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides )கொலஸ்டிரால், கொலஸ்டிரால் எஸ்டர் மற்றும்
கொழுப்பில் கரைந்துள்ள விட்டமின்கள் (Fat Soluble
Vitamines A,D,E,K) அடங்கும்.
🟦கொலஸ்டிராலானது மனித உடலில் அதிக அளவில் தேவைக்கு மேல் சேரும்போது, தீய விளைவுகளை அளிக்கக்கூடியது. இந்த கொலஸ்டிரால் திசுக்களில் அதிக பங்கு வகிக்கிறது மேலும் நாம் சாப்பிடும் மாமிச பண்டங்களில் கொலஸ்டிரால் அதிகம் காணப்படும். எடுத்துக்காட்டாக கோழிமுட்டை, ஈரல், மூளை போன்ற மாமிச உணவுப் பண்டங்களிலும் பால், கிரீம் (Cream) மற்றும் "கேவியர்” (Caviare) எனப்படும் உப்பும் எண்ணையும் சேர்த்து வறுத்த அசைவ உணவுகளிலும் கொலஸ்டிரால் உள்ளது.
🟦முதன்முதலில் கொலஸ்டிராலை அறிஞர்கள் மனிதனின் பித்த கல்லிலிருந்து (Gall stone) கண்டு பிடித்தனர். கொலஸ்டிராலை கிரேக்க மொழியில் "கோல்" (Chole) என்பர், “கோல்" என்றால் பித்தம் (Bile) என்று பெயர். "ஸ்டிரியோஸ்" (Stereos) என்பதை கடினம் (Hard) என்று அழைப்பார்கள். பின்பு அறிஞர்கள் மனித மூளை, இரத்தம் மற்றும் இரத்தக் குழலில் உறைந்து இருப்பதைக் கண்டனர். ஆல்கஹால் (Alcohol) மற்றும் வேறுபட்ட சேர்க்கையால் கொலஸ்டிரால் எஸ்டர் (Ester) என்ற அமிலங்களின் வடிவில் கிடைக்கிறது. பொதுவாக எஸ்டர்கள் தண்ணீர், அமிலம் மற்றும் காரங்களில் கரைவது இல்லை. எனவே இவைகள் மனிதனின் இரத்தக் குழல்களில் உறைந்து விடுகின்றன. இதனால் அத்திரோகிளிரோசிஸ் (Atherosclerosis) ஏற்படுகிறது. அதனால்கொலஸ்டிரால் மனித உடலில்
🫀👁️
130-230 மி.கி. /100mg/dl
என்ற இடைப்பட்ட அளவு இருந்தாக வேண்டும். அளவுகளில் கூடுதலோ, குறைவோ உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதாவது
1)Total Cholesterol 130- 230 mg/dl
2)LDL Cholesterol 100 mg/dl
3)VLDLCholesterol 30mg/dl
4)Triglycerides 130 mg/dl
5)HDL Cholesterol 50 mg/dl
இதில் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dl க்கு மேலே செல்லச் செல்ல இதயநோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகும். இதன் அளவை 200mg/dl க்கு குறைவாக இருக்கும் படி உணவை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது.
LDL கொலஸ்டிரால் அளவு 100mg/dl அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. அதனால் 30வயதுக்குமேல் சென்றவர்கள் வருடத்திற்கு ஒருமுறை ,மேற்கண்ட கொழுப்பைக் கண்டறிய இரத்தத்தில் லிப்பிட் புரோபைல் Lipid profile Test செய்து தெரிந்துகொள்வது நல்லது.
🟦 இதில் LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால்
HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைசெய்யகூடும். இதற்கு அத்திரோகிளிரோசிஸ் Atherosclerosis என்று பெயர்.
ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் இரத்தக்குழாய்களில் படிவதை தடுக்கிறது. அதனால் HDL அளவு ரத்தத்தில் கூடுவதை நன்மையானதாக கருதப்படுகிறது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் அதனால் தான் இதனை லிப்போபுரோட்டின்(Lipoprotein) என்போம்.
🟦மனிதனின் நரம்பு செல்களிலும், அட்ரினல் சுரப்பிகளிலும் (Adrenal Gland) தசைகளிலும், குடல்களிலும் மனித இரத்தத்தில் உள்ள சிவப்பு (R.B.C.) மற்றும் வெள்ளை (W.B.C.) அணுக்களில் கொலஸ்டிரால் உள்ளது. கொலஸ்டிரால் மனித உடலில் அசிட்டைல் கோ எ (Acetyl Co.A) விலிருந்து கிடைக்கிறது. இந்த அசிட்டைல் கோ எ- உடலில் முக்கியமாக நடைபெறும் வளர்சிதை மாற்றங்களில் (Metabolism) பங்கு கொள்கிறது. மனித உடலில் அசிட்டைல் கோ எ கொழுப்பு அமிலத்திலிருந்து பல என்ஸைம்களின் விளைவால் நமக்கு கிடைக்கிறது.
கொலஸ்டிரால் மனித உடலில் சேமிக்கப்பட்டு தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டும் இருக்கிறது. நாம் தினமும் உண்ணும் உணவில் கொலஸ்டிரால் அதிகமாக இருந்தால், இரத்தத்திலும் கொலஸ்டிரால் அதிகப்பட்டு விடும். நம் எடையில் மொத்தத்தில் 0.2 விழுக்காடு அளவு கொலஸ்டிரால் உள்ளது.
உண்மையிலேயே கொலஸ்டிரால் மனித உடலில் நன்மையையும், தீமையையும் செய்கிறது. நன்மை என்று எடுத்துக்கொண்டால் கொலஸ்டிரால் ஈரல் உதவியுடன் பித்த உப்புக்களை (Bile salt) நம் உடலில் உண்டாக்க பயன்படுகிறது. மேலும் பால் சுரப்பு சம்பந்தமான ஹார்மோன்களையும் (S*x Hormones) உற்பத்தி செய்கின்றது. அதாவது உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) போன்றவை உடலில் சுரப்பதற்கு கொலஸ்டிரால் தேவைப்படுகிறது.கொலஸ்டிரால் சமவீகிதத்தில் கிடைத்தால் தான் மேற்கண்ட ஹார்மோன் சுரக்கும். மேலும்
நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின்" டி" க்கும் இந்த கொலஸ்ட்ரால் கொஞ்சம் தேவைப்படுகிறது.
🟦சில வேளைகளில் கொலஸ்டிரால் உடலில் அதிகமானால் இரத்தக் குழலின் ஓரங்களில் படிந்து, இரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும். இவ்வாறு தடைபடுவதால் தொடர்ந்து திசுக்களுக்கு செல்லும் பிராணவாயு (Oxygen) வின் அளவு குறைந்து சரிவர இயங்காமல் போக முடிகிறது. இவ்வாறு இரத்தப் படிவு ஏற்படுவதால், மாரடைப்பு (Heart stroke) உண்டாகும். மாரடைப்பு அடிக்கடி ஏற்படுபவர்களுக்கு, நெஞ்சில் வலி அதிகமாக இருக்கும்.ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு வலிதெரிவதில்லை ஆனால் வியர்வை,மூச்சுவிட சிரமம் ஏற்படுத்தும், இதற்கு காரணம் இரத்த ஓட்டம் இதயத்திற்கு சரிவர செல்வதில்லை. இதேபோல மூளையில் இச்செயல் ஏற்பட்டால் பக்கவாதம் தோன்றலாம்.
🟦கொலஸ்டிராலினால் பித்தம் உண்டாகிறது என்று கூறினோம். இவ்வாறு கொலஸ்டிராலும், பித்தமும் கலந்து சுரக்கக் கூடும். இவ்வாறு இரண்டும் கலந்து சுரந்தால், கெட்டியாக மாறி, பித்தம் வரும் பாதையையும், பித்தம் சுரக்கும் பையையும்
அடைத்துக் கொள்ளும். இதனால் ஒருவகையான அடைப்பு மஞ்சட்காமாலை (Obstructive Jaundice) ஏற்பட வழியுள்ளது.இதனால் கொழுப்பு சீரணமாவதில் சிரமம் ஏற்படுத்தும்.
🟦 மனிதக் குடலில் கொழுப்பு எப்படி செரிமானம் அடைகிறது என்றால், சாப்பிட்ட உணவில் சீரணத்திற்காக செல்லும்போதே வாயில் ஏற்படும் சீரண நீர் மற்றும் இரைப்பையின் சீரண நீர் கலந்து செரிக்க ஆரம்பித்து, இந்த உணவு சிறுகுடலை வந்தடையும் போது அங்கு பித்தநீர், கணையநீர் உணவில் கலந்து சீரணமாக உதவி செய்யும்.இதனால் உணவில் உள்ள மாவு, புரதம் கொழுப்பு சத்துக்கள் இங்கு செரிக்கப்பட்டு ,சிறுகுடலில் மோர்க்குழம்பு போல் (Emulsion) மாற்றப்படும்.பின்னர் இதனை நிணநீர் குழல்களால் (Lymph Vessels) உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலக்கிறது.இச்செயல் துரிதமாக நடைபெற பித்தநீர் கணையநீர் உதவுகின்றன.
🟦 இவ்வாறு சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கும்போது இதிலிருந்து கொலஸ்ட்ரால் நம் குடலில் உறிஞ்சப்பட்டு அதனை கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது.
இது தினமும் நடைபெறும் நிகழ்வு.இங்கு சேமிக்கப்பட்ட கொழுப்பை தேவைப்படும் போது இரத்தத்தில் வெளியேற்றுவும் மேலும் உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் கல்லீரல் செயல்படுகிறது. கல்லீரல் நம் உடலுக்கு ஒரு தொழிற்சாலை போன்றது.
🟦இக்கொலஸ்ட்ரால் கொழுப்பு, நம் செல்களுக்கு வடிவம் கொடுத்து, அதற்கு சுவராகவும் இருந்து, இயக்கவும் செய்கிறது. முக்கியமாக மனிதனின் மூளை வளர்ச்சிக்கும், செல்களின் செயல்பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் உதவியாக இருக்கிறது.
🟦நாம் தினம் உண்ணும் உணவில் மாவுப் பொருள் (Carbohydrate) புரதப்பொருள் (Proteins), கொழுப்புப் பொருள் (Fat), விட்டமின்கள் (Vitamines) அடங்கும். இவைகள் உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகின்றன
1 கிராம் மாவுப்பொருள் 4 கலோரியையும் (Calory) இதேபோல் 1 கிராம் புரதம் 4 கலோரியையும் 1 கிராம் கொழுப்புப் பொருள் 9 கலோரியையும் 1 கிராம் மதுசாரம் (Alcohol) 7 கலோரியையும் கொடுக்க வல்லது. இவைகளில் கொழுப்பு மற்றும் மதுசாரப் பொருட்களே, அதிக கலோரி மதிப்பை பெற்றுள்ளன. எனவே அதிகமாக கொழுப்பு உண்டாலும், மதுபானம் அருந்தினாலும், இதயநோய்கள் எதிர்காலத்தில் நிச்சயம் வரக்கூடும் என்பதில் ஐயமில்லை.
மாவுச்சத்து, மாமிச சத்து, உணவுப் பண்டங்கள் செரிமானம் அடைய வெகுநேரம் ஆகும். ஆனால் இவைகள் உடலுக்கு அதிக சக்தியை (Energy) அளிக்கக் கூடியவை. மனிதன் அவ்வப்போது செய்யும்
வேலைகளில் இந்தச் சக்தி பயன்படுகிறது. இவ்வாறு சக்தி உபயோகப் படுத்தப்படாமல் இருப்பின் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் மிகுந்து உடல் கனத்து விடும். (Obesity). இவ்வாறு கனத்த உடல் கொண்டவர்களின் உடலுக்கு இதயநோய், இரத்த அழுத்தம் (Hypertension) நீரிழிவு (Diabetes) போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
இவ்வாறு உடல் கனத்தவர்கள் முறையான உடற்பயிற்சி, (arobics excercise )கட்டுப்பாடான உணவு இவற்றுடன் அதிகம் கோபம் காட்டாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கு கொலஸ்டிராலினால் தீங்குகள் அதிகம் வர வாய்ப்பில்லை. 6 முதல் 12 விழுக்காடுகள் மனித மொத்த எடையில் கொழுப்புதசை இருக்குமானால், அவர்கள் தேகப் பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். மேலும் உணவுக் கட்டுப்பாடும் முக்கியம்.
🟦உணவில் நல்லெண்ணெய்,
சூரியகாந்தி எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்
அரிசி தவிடு எண்ணெய்
நிலக்கடலை எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
சோயாபீன் எண்ணெய்
கடுகு எண்ணெய் வகைகளை சமையலுக்கு உபயோகிக்க வேண்டும்.
"பாம் ஆயில்" (Palmoil) போன்ற எண்ணெய்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து, மேலும் குளிர்ச்சியில் நெய்போல உறையும் எண்ணெய்களையும் (Saturatedoil) உபயோகிக்கக் கூடாது. ஆனால் சோயாபீன் எண்ணெயில் 14 விழுக்காடு அளவே உறையும் தன்மையுள்ள கொழுப்பு (Saturated Fat) உள்ளதால் உடலுக்கு அது ஏற்றது. இதேபோல நல்ல எண்ணெய்,கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய், இம்மூன்றையும் தினமும் உணவு தயாரிப்பில் பயன்படுத்திவரலாம்.தேங்காய்,ஆலிவ் எண்ணையையும் அவ்வப்போது உணவு தயாரிப்பில் சேர்த்து வரலாம்.
🟦தேங்காய் எண்ணெய்யில் லாங் மற்றும் மிடியும் செயின் டிரைகிளிசரைடு இருப்பதால் சில நன்மையும் , குறைவான தீமையும் தரவல்லது. மேலும் மோனோலாரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் இதில் உள்ளது. தாய்ப்பால், தேங்காய் தவிர வேறு எதிலும் இந்த அமிலம் கிடையாது. இச்சத்து இதில் இருப்பதால் சிறந்த ஊட்டச்சத்தாகவும் தாய்ப்பாலுக்கு நிகரான சத்தை தேங்காய் பெற்றுள்ளதால் இங்கு குறிபிட்டே ஆக வேண்டும்.
🟦மேற்கிந்திய உணவில் ஆலிவ் ஆயில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் தேங்காய் எண்ணெயை ஒப்பிடும்போது அதிகம் சூடுபடுத்தி (deep fry) தயாரிக்கும் உணவில் தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெயைவிட சிறந்தாக இருந்து வருகிறது.
🟦கடுகு எண்ணெய் கடுகு எண்ணெய் உடலின் கொழுப்பை சமநிலை செய்ய உதவுகிறது. ஆல்ஃபா லினோலிக் அமிலம், ஒமேகா 3 நிறைவாக இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவேதான் இதை பாரம்பரிய உணவுப் பொருளாக சமையலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அதில் Allyl Isothiocyanates (AITC) எனப்படும் மூலக்கூறானது அமைந்து பாக்டீரியா எதிர்ப்பி ஆண்டிமைக்ரோபியல் ஆக்டிவிட்டி நிறைந்ததாக இருக்கிறது . மேலும் குடல் புற்றுநோய் தாக்கத்தை குறைப்பதாகவும் தெரியவருகிறது. கடுகு எண்ணெயை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும் முழுகடுகை எண்ணையில் இட்டு தாளித்து அதன் பயனை பன்னெடுங்காலமாக அனுபவித்து வருகிறோம்.தாளிப்பதால் ஆன்டிஆக்ஸிடென்டுகள் நமக்கு உணவில் கிடைத்து விடுகிறது. இதனை கேரளாவில் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து நிறுபித்துள்ளனர். கடுகு எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் அதன் நல்ல சுவையை மாற்றம் செய்யும். நாம் பயன்படுத்தும் நல்ல எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் உணவின் சுவையை கூட்டிதரும்.
🟦எண்ணெய் இல்லாமல் உணவில்லை. நல்ல எண்ணெய் இல்லாமல் வாழ்க்கையில் வளமில்லை என்பதை உணர்ந்திருந்த முன்னோர்கள், நிலக்கடலையிலிருந்து கடலை எண்ணெய்,கறுப்பு எள்ளிலிருந்து நல்லெண்ணெய், தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய், முத்துக்கொட்டையிலிருந்து விளக் கெண்ணெய், அரிசித் தவிட்டிலிருந்து தவிட்டு எண்ணெய், கடுகிலிருந்து கடுகு எண்ணெய் எனத் தயாரித்தார்கள்.
பொரிக்கவும், வறுக்கவும், கடலை எண்ணெய். தாளிக்க, சமைக்கவும், உடலை பொலிவாக்க,எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய் எண்ணெய். உடல் உஷ்ணத்தைத் தணிக்கவும்.. உடலில் உள்ள அழுக்கை நீக்கவும் விளக்கெண்ணெய் என் யாரும் சொல்லாமலேயே அனைத்து எண்ணெய்களையும் பயன்படுத்தி நல்ல கொழுப்புகளையும் உடலில் தக்கவைத்துக் கொண்டார்கள்.
🟦ஜங்புட் என அழைக்கப்படும் எண்ணெய்யில் பெரித்து , பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உருளைகிழங்கு சிப்ஸ்,மசாலா சிப்ஸ்,பப்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காமல் இருந்தாலே நம் சந்ததிகளுக்கு, எதிர்காலத்திற்காக, அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய ஆரோக்கியமாகவும்.
ஜங்புட்டில் கலக்கப்படும் உப்பு,டேஸ்ட் மேக்கர் பேன்றவை குழந்தைகளை உண்ண அடிமைப்படுத்தி வரும்.அதேபோல சில உணவகங்களில் அஜினோமோட்டோ எனப்படும் வேதியியல் உப்பை சேர்த்து சுவைகூட்டுவதால் அதனை அதிகம் உட்கொள்பவர்களுக்கு எதிர்காலத்தில்- சிக்கிரமாக பல உடல்நல பிரச்சனைகளை வரவைத்துவிடும்.
🟦இரத்த அழுத்தம் அதிகரித்தவர்கள் உணவில் ஊறுகாய்,அப்பளம்,அதிகஉப்பு சேர்ப்பதை தவிர்ப்பது மிக அவசியம்.இதனால் சிறுநீரக செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
🟦தினமும் ஓரேவகை எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்தி உணவு தயாரிப்பதை தவிர்க்கலாம்.
🟦கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது . மாமிசம் உட்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு எழும் சந்தேகம், என்னவென்றால். நமக்கு எங்கிருந்து கொழுப்பு உடலுக்கு கிடைக்கும்.
இவர்களுக்கு பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்றவைகளில் பூரித கொழுப்பு (Saturated) இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
மேலும் ஒற்றை அபூரிதக் கொழுப்பான Mono unsaturated fatty acid -இதனை சுருக்கமாக MUFA என்றழைப்போம்.இது கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
பன்ம பூரிதக் கொழுப்பு அதாவது Poly unsaturated fatty acid -இதனை சுருக்கமாகPUFAஎன்போம்.இது சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
MUFA அதாவது அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெகளை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, உணவு தயாரிப்பின் போது பூரிதக் கொழுப்பாக Saturated fatty acid மாறுகிறது.
இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும்.
🟦ஒரே எண்ணெயைப் பல முறை சுடுபடுத்தி காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.
🟦ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் (TGL) குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.
ஒமேகா 3 உள்ள உணவுகள்
மீன், சால்மன், சுறா, வால்நட், சோயா, ஆளிவிதை(Flax Seeds), அரிசி தவிட்டு எண்ணெய்யிலும்.
ஒமேகா 6 உள்ள உணவுகள்
சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது
🟦மேலும் "காப்பி" (Coffee) இரண்டு கப்புகளுக்கு மேல் உட்கொண்டால் 20 விழுக்காடு கொலஸ்டிரால் உடலில் அதிகமாகிறது. எனவே காப்பியை அதி உட்கொள்ளக் கூடாது
🟦கொலஸ்டிரால் இரத்தத்தில் அதிகம் உடையவர்கள் ,நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்,ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்புகள் அதிகமாக உள்ளதால். இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாற்றி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol லாக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாக வாய்ப்பளிக்கிறது.அதனால் இவைகளை தேவைக்கு அதிகமாக உண்ணாமலும்.
கடல் மீன், சுறாமீன், இஞ்சி, பூண்டு, வெங்காயம், சீரகம், மஞ்சள், பாதாம்பருப்பு, வெந்தயம், பச்சை காய்கறிகள், பழங்கள்,விதையுள்ள தீராச்சைப்பழங்களை அதிகம் சேர்த்துக்கொண்டும் வரலாம்.
எண்ணெய்யில் நீண்ட நேரம் பொறித்த உணவுகளை தவிர்க்கவும் வேண்டும்.
🟦பின்வரும் பரிகார முறைகள் சிகிச்சைகள் ஆகியவற்றைக் கையாளுவதாலும், கொலஸ்டிரால் கட்டுப்படும்
🧿 நவீன மருத்துவத்தில் தேவையின்றி உட்கொள்ளப்படும் துரித சக்தி வாய்ந்த ஆண்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை உபயோகிப்பதை இயன்றவரை தவிர்த்திட வேண்டும். எவ் நீரிழிவு வர நவீன ஆண்டிபயோடிக் காரணமாக அமைவதாககருதப்படுகிறதோ
அதேபோன்று கொலஸ்டிரால் உற்பத்தியாகவும் நவீன ஆண்டிபயோடிக் காரணமாக அமையும் என்று சில நிபுணர்கள் கருதுகிறார்கள
🧿 கொழுப்புச் சத்து உணவுகளை உட்கொள்ளும் போது நார்ச்சத்து (Fibrous Food) விதைப்பகுதி, தோல்பகுதி மிகுந்த காய்கறிகள், பழங்கள் கலந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் கொழுப்பு உறிஞ்சப்படுதல் சிறுகுடலில் குறைய வாய்ப்பு அதிகம்
கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:
🧿சீரான உடற்பயிற்சி
🧿உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
🧿புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
🧿மது அருந்துவதைத் தவிர்ப்பது
🧿அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
🧿அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
🧿பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
🧿நடைபயிற்ச்சி, யோகாசன பயிற்சி, தியானப் பயிற்சி , பிராணாயாமம் செய்வதன் மூலம் கொலஸ்டிராலும், இரத்த அழுத்தமும் கட்டுப்படும்.
🧿மனஅழுத்தம்,கவலை யில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலே எந்த கெட்டகொழுப்பும் ஒன்னும் செய்யாது.
நம் ஆரோக்ய வாழ்வுக்கு நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரிய வாழ்க்கைமுறை என்றும் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.
சித்தமருத்துவதில்
1. நெல்லிக்காய் கல்பம்
2.திரிபலாதி சூரணம் 3. பவழ பற்பம் 4. அன்ன பவழ செந்தூரம் போன்ற மருந்துகள் கொலஸ்டிரால் கட்டுப்படுத்தும் மருந்துகளாக இன்றும் உள்ளது.
🟦ஆங்கில மருத்துவத்தில் statin வகை மருந்துகள் பல உதவிபுரிவதாக உள்ளன. அதில் அடோர்வாஸ்டாடின் Atorvastatin உலகமுழுவதும் பரவலாக பயன் படுத்தப்படுகிறது.ஆனால் இதன் பின்விளைவுகளான
தலைவலி, தலைசுற்றல்.
வழக்கத்திற்கு மாறாக சோர்வு, பலவீனமாக உணர்தல்,மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, செரிமாணப் பிரச்சனைகள்.தசைவலி.தூக்கமின்மை, மேலும் பிளேட்லெட் எண்ணிக்கையை குறைக்க கூடியதாகவும் சிலருக்கு இருந்து வருகிறது.இதனை உட்கொண்டு வரும்போது கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் இதனை தவிர்ப்பது நல்லது .
🟦அந்த வகையில் பாரம்பரிய நம் மரபுவழி மருத்துவத்தை கடைபிடித்து நாள்பட்ட பலநோய்களை வெல்வோம்.
இன்று கொலஸ்டிரால், இதயநோய் பாதுகாப்பிற்கு சித்தா ஆயுர்வேதத்தில் பல மருத்துவ முறைகள் உள்ளன.அர்ஜுனா என்றழைக்கப்படும் மருதமரத்தின் பட்டை இதயநோய் வராமல் தடுக்க கூடியது.அதேபோல எலுமிச்சை பழம், இஞ்சி, பூண்டு,சீரகம்,தாமரை மலர், செம்பரத்தம்பூ, ரோஜா இதழ்கள்,கடுக்காய்,நெல்லி, தான்றிக்காய் மூலிகைகள் மேலும் மான்கொம்பு,முத்து,பவளம் மூலமாக ,விதிப்படி தயாரிக்கப்பட்ட பற்பங்கள் இதயநோய் வராமல் தடுக்கும். நம் உணவுப்பொருள்,சித்தா ஆயுர்வேத மருந்துகள் எந்த தீங்கில்லாமல் கொலஸ்ட்ராலை குறைக்க உதவிபுரிகின்றன
நன்றி
கொலஸ்டிரால் பற்றி பேசிய வீடியோ பார்க்க
YouTube link click செய்து பாருங்கள்.
இதோ லிங்க்
Ok நண்பர்களுக்கும் share செய்யுங்கள்
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை(since1953)
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, சென்னையில் டாக்டரை சந்திக்க பேசவும்
🟪Ph:9443475684
🫀🫀🫀04-10-23🫀🫀🫀