09/05/2023
கோவைமாவட்டம்
அன்னூர்வட்டம்
சொக்கம்பாளையத்தில் இயங்கி வரும் விடுதி முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல் தமிழ் வழியில் 4ஆம் வகுப்பு முதல் 12 ஆம் முடிய SC, ST, BC & MBC மாணவியர்கள் கல்வி கற்க பள்ளியும் தங்கிப்பயில உறைவிடமும் விடுதியில் 3 வேலை உணவுடனும் கூடிய இலவச விடுதி வசதியும் உள்ளது. விடுதி உள்ள மாணவியர்களுக்கு மாலை வேளையில் டியூசன் எடுக்கப்படும்
அத்துடன் ஒரு வாரத்திற்கு 5 முட்டைகள், மாலை வேளையில் சுக்கு மல்லி காபி மற்றும் சுண்டல் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் Rs. 100/-(பற்பசை, குளியல் சோப், துணி சோப், தேங்காய் எண்ணெய் வாங்குவதற்காக) மாணவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மாதத்திற்கு நான்கு முறை அசைவம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகம், வருடத்திற்கு 4 ஜோடி பள்ளிச்சீருடை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாய், தலையணை, போர்வை மற்றும் பல பயன்களை முற்றிலும் கட்டணமின்றி அரசு வழங்குகிறது.
மேலும் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டு உபகரணங்களான ரிங், வாலிபால், பேட்மின்டன்,செஸ் ஃபோர்டு, கேரம் போர்டு, போன்றவைகளும். மாணவியர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் உலக செய்திகளை தெரிந்து கொள்ளவும் தொலைக்காட்சி பெட்டி போன்றவைகளும் விடுதியில் உள்ளன என்பதை பெற்றோர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்
தொடர்புக்கு
காப்பாளினி,
அரசு பிற்படுத்தப்பட்டவர் மாணவியர் விடுதி(MBC) சொக்கம்பாளையம்
அன்னூர் (தாலுகா)
கோவை (மாவட்டம்)
தொடர்பு எண்கள் : 9360599997
தேவையான ஆவணங்கள் :
1.மாணவியின் பள்ளி மாற்றுச்சான்றிதழ்
2.மாணவியின் மதிப்பெண் பட்டியல்
3.மாணவியின் சாதிச்சான்று
4.வருமானச்சான்று
5.மாணவியின் ஆதார் அட்டை
6.மாணவியின் பெயரில் வங்கிக்கணக்கு விபரம்
7.குடும்ப அட்டை
8.மாணவியின் போட்டோ-6
குறிப்பு: அனைத்தும் ஜெராக்ஸ் 2 செட்(போட்டோ தவிர)
தங்களுக்கு பயன் இல்லை என்றாலும் /( அப்பா, அம்மா உதவி இல்லாமல் ஆதரவற்று இருக்கின்ற குழந்தைகள்)
தயவு செய்து மற்ற குழுக்களுக்கு பகிரவும் ஏதோ ஒரு ஏழை மாணவி பயன்பெறட்டும்.🙏🏻🙏🏻