13/08/2022
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🙏🙏
தியானம் செய்யும் போது ஏன் உடல் வலிக்கிறது:
தியானம் என்பது இறைவனை சந்திப்பதற்கு செல்லக்கூடிய ஒரு பாதை. அந்த பாதை என்பது சற்று கடினமாக தான் இருக்கும். இறைவனை செல்லும்பொழுது நாம் சேர்த்து வைத்துக் கொண்ட கர்மாக்கள் உடன் சேர்ந்து செல்ல முடியாது. அந்த கர்மாக்களை சற்று இறக்கி வைத்துவிட்டு தான் நாம் செல்ல முடியும். அப்படி தியானம் செய்யும் போது உடலில் வலி ஏற்படுகிறது. அந்த வலியைப் நீங்கள் உணர்ந்தால் உங்களது கர்மாக்கள் குறைவதை நீங்கள் உணரலாம்.
தியானத்தின் மூலம் மட்டும்தான் நீங்கள் இறைவனுடன் அதிகமாக உணர்வுகளுடன் பேசமுடியும். நீங்கள் பொதுவாக இறைவனை தேடி சென்று வேண்டி, வேண்டி பல்வேறு இடங்களுக்கு சென்று சர்க்கரை பொங்கல் சமைத்து விட்டு குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு வருவது அல்ல. ஆடுகளை வெட்டி இறைவனுக்கு பரிசு அளிக்கிறேன் என்று கூறி அவர்களே அதனை உண்டு விட்டு வருவதும் இல்லை. இறைவனிடம் தன்னுடைய பண ஆசைகளை கோரிக்கையாக வைப்பதுமில்லை.
இந்த தியானத்தின் மூலம் நீங்கள் இறைவனை காணும் பொழுது உங்களது உடல் கூசும். உங்களது உடல் சிலிர்க்கும். உடலில் வலி அதிகமாகும். அப்பொழுதுதான் நீங்கள் சேர்த்து வைத்த கர்மாக்களின் வெளிப்பாடு உங்களது முகத்திற்கு முன்னால் நன்கு தெரியும். அப்பொழுது உங்களை நினைத்து நீங்களே வெட்கம் கொள்வீர்கள். அந்த நிமிடத்தில் தான் உங்களுடைய ஒவ்வொரு கர்மாவும் கழிந்து கொண்டே வரும். நீங்கள் மறுபடியும் கர்மாக்களை சேர்த்துக் கொள்வதற்கு முற்பட மாட்டீர்கள். அதன்பிறகுதான் இறைவனை சந்திப்பதற்கான ஒரு பாதை உங்களுக்கு திறக்கிறது. அந்த பாதை என்பது ஞானத்திற்கான ஒரு பாதை. இந்த பாதையில் நீங்கள் செல்லும் பொழுது வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் தான் இருக்கும். இன்பம் மட்டும் தான் இருக்கும்.
இந்த பாதை முதலில் கடினமாக தான் இருக்கும் நீங்கள் கடந்த வர கடந்து வர அதுவும் பூப்போன்ற பாதையாக மாறிவிடும்.
___________________________________
இறைவனம் - சென்னை நங்கநல்லூர்
(ஆஞ்ச கோவில் அருகில்)
(இறைவனம் மையத்தில்- உடலில் ஏற்படக்கூடிய அனைத்து குறைபாடுகளுக்கும் மருந்தில்லா மருத்துவ முறைகள், யோகப் பயிற்சிகள், தியானம், வாழ்வியல் ஒழுங்கு முறைகள் அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது)
___________________________________
நன்றி🙏
யுவராஜ்
(மகிழ்ச்சியாய் இரு)
+91 9789802067
நலம் பெறுக🙏 வளம் பெறுக🙏
___________________________________
#தியானம் #ஆழ்மனதியானம் #சக்ரா #கர்மா