Tamilnadu chemists & druggists

  • Home
  • Tamilnadu chemists & druggists

Tamilnadu chemists & druggists Tncda

05/10/2025

*ஒரு வாரமாக கரூர் stampede, நடிகர் விஜய் மட்டுமே limelightல் இருக்க. இதற்கிடையில்,*

*அக்டோபர் 1 ஆம் தேதி, தமிழ்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு, மத்தியப் பிரதேசத்திலிருந்து ஒரு கடிதம் வருகிறது.*

*நினைவில் கொள்க, அக்டோபர் 1 விடுமுறை நாள்.!*

*அதில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பது குழந்தைகள் கல்லீரல் தொற்று, சிறுநீரக தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் செயலிழந்து இறந்துள்ளனர்,*

*அவர்கள் அனைவரும் சளி, ஜுரம், இரும்பல், பாதிப்பால் மருத்துவச் சிகிச்சைக்கு வந்தவர்கள் என்றும் அவர்களுக்கு antibiotics உட்பட coldrif and nextros DS கொடுத்து அங்குள்ள clinicல் மருத்துவம் பார்த்ததாகவும் அக்குழந்தைகள் ஒருசில நாட்களிலே மரணம் அடைந்ததாகவும், அதில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மருந்தில் தான் சந்தேகிப்பதாகவும், ஆதலால், அம்மருந்து, அம்மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பற்றிய தகவல்கள் இணைத்து, இதை விசாரித்து, உரிய பரிசோதனைகள் செய்து பதில் தருமாறு விண்ணப்பிக்கின்றனர்.*

*அது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள Sresan pharmaceutical நிறுவனம் தயாரிக்கும் 'Coldrif' Syrup (SR-13 Batch) குறித்ததாகும்.*

*அக்டோபர் 1 அரசு விடுமுறை நாளாக இருந்தாலும், செய்தி அறிந்து, அன்றே அதே விடுமுறை நாளில் நண்பகல் ஆய்வாளர்கள் குழு ஒன்று தொழிற்சாலையை அடைகிறது,*

*விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அக்குழுவினர் உடனே மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வகத்துக்கு செல்கின்றனர், அவ் ஆய்வகத்தில் 39 கடுமையான மற்றும் 325 முக்கியமான நடைமுறை விதி மீறல்களை அவர்கள் கண்டறிகின்றனர். Coldrif மற்றும் மற்ற நான்கு syrupகளின் மாதிரிகளை எடுக்கின்றனர். ஆலையில் இருந்த மீதமுள்ள அனைத்து stockகளையும் freeze செய்கின்றனர். எடுக்கப்பட்ட மாதிரிகளை Diethylene Glycol (DEG) மற்றும் ethylene glycol கலப்படம் சோதனைக்கு உட்படுத்துவதற்கான சிறப்பு அறிவுறுத்தலுடன், சென்னை அரசு ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது.*

*அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளயே, அரசு ஆய்வாளர்கள், form 13 ஐ வெளியிட்டு, Coldrif syrup ( Batch SR-13) தரமற்றது என்று அறிவிக்கின்றனர், 48.6 சதவீதம் Diethylene Glycol கலந்துள்ளது என்றும்.*
*இது, paint தயாரிக்கப் பயன்படும் ஒரு industrial solvent ஆகும், இது கடுங்கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்த அறிக்கையில், குறிப்பிட்ட Syrup ethylene glycol சோதனையிலும் தோல்வியடைந்தது என உறுதிப்படுத்துகிறது. மற்ற நான்கு மருந்துகள் தரமானவை என கண்டறியப்படுகிறது என அறிவிக்கின்றனர்.*

*அறிவிப்போடு நிற்காமல், அக்கணமே தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கைக்கு தீவிரமாகிறது.*

*A Statewide alert was issued. மாநிலம் தழுவிய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது, கலப்பட Syrupன் விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடுக்க உத்தரப் பிறப்பிக்கப்படுகிறது. அம்மருந்து தமிழகத்தில் விற்க தடை செய்யப்படுகிறது என்று உத்தரவுப் பறக்கிறது.*

*விநியோகப் பட்டியல், மாநிலத்திலுள்ள அனைத்து மருந்து ஆய்வாளர்களுக்கும் வழங்கப்படுகிறது, மொத்த மற்றும் சில்லறை மட்டங்களில் கிடைக்கக்கூடிய அனைத்துப் Stockகளையும் freeze செய்ய கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதோடு நிற்காமல், உற்பத்தியாளரிடமிருந்து கிடைத்த மாநிலங்களுக்கு இடையேயான விநியோக பதிவுகளின் அடிப்படையில், துரிதமாக ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கும் தகவல்கள் அனுப்பப்படுகிறது. இவை அனைத்தும் ஆய்வுக்கூட்படுத்தப்பட்டு முடிவுகள் பெற்ற 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடக்கிறது அதுவும் அரசு விடுமுறை நாளில்.!*

*அக்டோபர் 3 ஆம் தேதி, பொதுநலன் கருதி, நிறுவனத்திற்கு உற்பத்தியை நிறுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் உரிமத்தை ரத்து செய்வதற்கான Show cause நோட்டீஸ் வழங்கப்பட்டதுள்ளது. மேலும், syrupன் எந்தவொரு Stock இருப்பின், உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.*

*பொதுமக்கள் குழந்தைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தகவல் பெற்ற ஒரே இரவில் தமிழக அரசு அதுவும் விடுமுறை நாளில் துரிதமாக செயல்பட்டு அம்மருந்தைச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முடிவைக் கண்டறிந்து அம்மருந்தைத் தடைசெய்ய ஆணை பிறப்பிக்கிறது.!*

*தகவல் தந்த மத்திய பிரதேச மாநிலமோ ஆற அமர உக்காந்து இன்று அதாவது அக்டோபர் 4ம் தேதி மாலை 'தடை ஆணை' பிறப்பித்துள்ளது அதுவும் ஒன்றிய அரசின் ஹெல்த் மினிஸ்ட்ரி செவிக்கு எடுத்துச் சென்று அவர்கள் உறுதி செய்த பின்.!*

*அதனால் தான் சொல்கிறேன், Tamilnadu is 100 times better than other states of India. Bcz, Tamil Nadu have got something concrete, something distinct, something different to offer to the nation at large.*

*04-10-2025*

02/10/2025
22/09/2025

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இளைஞர் அணி அலுவலகம் - முத்தமிழறிஞர் கலைஞர் சிலை- கலைஞர் நூலகம் அமைப்பதற்காக கழக இளைஞர் அணித் துணைச் செயலாளரும்- ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சகோதரர் K.E.Prakash அவர்களின் ஏற்பாட்டில், இளைஞர் அணி அறக்கட்டளை பெயரில் வாங்கப்பட்டுள்ள இடத்துக்கான ஆவணங்களை கழகத் தலைவர்- மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றோம்.

சகோதரர் பிரகாஷ் அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்!

Dmk Abdulmalik DMK Youth Wing ைஞர்_அணி

18/09/2025
Coimbatore district chemists association election general body meeting on 27/7/25
27/07/2025

Coimbatore district chemists association election general body meeting on 27/7/25

18/07/2025

மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.கழக அரசு 'தமிழ்நாடு' என்று பெயர்ச்சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள் இன்று!

ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை - 1967இல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த கழக அரசு நிறைவேற்றியத் திருநாள்.

' #தமிழ்நாடு' என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, 'வாழ்க' என்ற உறுப்பினர்களின் வாழ்த்து ஒலியால் சட்டமன்றமே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது.

"தமிழ்த் தாயின் நெஞ்சங் குளிர்ந்திடத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றி விட்டோம் என்கிற பூரிப்பு எல்லா உறுப்பினர்களின் உள்ளத்திலும்" என்று எழுதினார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, அண்ணா - கலைஞர் வழிநின்று முறியடித்தார் நமது முதலமைச்சர் M. K. Stalin அவர்கள்.

நம் தலைவர்கள் போராடி மீட்டுத் தந்த தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லிக்கு காவு கொடுக்க கிளம்பியிருக்கும் பாசிசத்தின் பல்லாக்குத் தூக்கிகளை வீழ்த்துவோம்.

தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை குலைக்க நினைக்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஓரணியில் நின்று விரட்டியடிக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்!

தமிழ் வெல்க!
தமிழ்நாடு வாழ்க!!

#தமிழ்நாடு_நாள்

Tamilnadu chemists association meeting held at Dindugal
03/06/2025

Tamilnadu chemists association meeting held at Dindugal

Submitted memorandum to honourable TN chief minister on 5/5/25 at vanikar sangam peramaippu meeting
06/05/2025

Submitted memorandum to honourable TN chief minister on 5/5/25 at vanikar sangam peramaippu meeting

Address

Kk Selvan Secretary Tamilnadu Chemists Association

600028

Telephone

+914428191522

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu chemists & druggists posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tamilnadu chemists & druggists:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram