15/09/2022
மதுபோதை மீட்பு சிகிச்சை (பக்கவிளைவுகளற்ற சித்த மருத்துவ முறை) -FREE DEADDICTION THERAPY
#
#
(மருந்து உட்பட ஆலசோனை முற்றிலும் இலவசம்)
மதுப்பழக்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. படித்தவர் ,படிக்காதவர்,பாமர மக்கள் ,ஏழைகள், வசதி படைத்தவர்,பெரிய அந்தஸ்த்தில் வாழ்பவர்கள் என்று பாரபட்சம் பாராமல் எல்லோரையும் பீடித்துள்ள ஒரு மிகக்கொடிய பழக்கமாக பரவிவருகிறது. சிறிது சிறிதாக ஆரம்பித்து கடைசியில் ஒருவரை முழுமையாக மூழ்கிவிடச் செய்யும் தன்மை இந்த மது என்ற அரக்கனுக்கு உண்டு. இதனால் மதுவை அருந்துபவர் மட்டுமல்லாது அவருடைய குடும்பம், உறவு ,நட்பு,சமூகம் வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது . மதுவினால் பல தீமைகள் ஏற்படுகின்றன என்று தெரிந்தும் கூட பலர் அதிலிருந்து விடுபட முடியாமல் துன்பப்படுகின்றனர். மதுவுக்கு அடிமையானவர் போதையில் செய்கின்ற தவறுகளால் அவருடைய குடும்பம் நிம்மதியை இழந்துவிடுகின்றது. இனிமையான இல்லற வாழ்வும் பாதித்துவிடுகிறது. சண்டைகளும் பிரச்சனைகளும் உருவாகி பல குடும்பங்கள் பிரிந்துவிடுகின்றன. மதுவினால் ஏராளமான பணம் செலவாவதால் கடனும், வறுமையும் ஏற்படுகிறது. மதிக்கப்படுகின்ற இடங்களில் ஒருவர் போதையில் நடந்து கொள்ளும் முறைகளால் பலர் வெறுக்கின்றனர். குடும்ப சமுதாய அந்தஸ்து குறைகிறது. போதையின் போது பலர் வாகனங்கள் ஓட்டி விபத்தில் சிக்குகின்றனர். பலர் தற்கொலையும் செய்து கொள்கின்ற சூழ்நிலையும் ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் மது குடிப்பவரின் உடல் நிலையும் மிகவும் பாதிக்கப்படுகிறது .
தொடர்ந்து மது அருந்துவதால் 1.இதயம் , 2.ஈரல் நோய் (liver cirrhosis), 3.கல்லீரல் புற்று, 4.சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படுகின்றன. மேலும், 5.மூளை நரம்பு பாதிக்கப்பட்டு( korsakoff's syndrome), 6.மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது . 7. Wernike's syndrome என்ற நடக்க முடியாத நோய் ஏற்படுகிறது.
மதுவில் இருக்கின்ற Alcohol என்ற நஞ்சானது கொஞ்சம் கொஞ்சமாக அதனை அருந்துபவரை முழுமையாக குடிப்பழக்கதில் ஆழ்த்திவிடுகிறது. இதனால் மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுதலை பெறமுடியாமல் பலர் தங்களது பொன்னான வாழ்வை இழந்து தவிக்கின்றனர். பல இளைஞர்களின் வாழ்வு மதுப்பழக்கத்தால் கேள்விக் குறியாகிவி்டுகிறது.
இந்தக் கொடிய மதுபோதைப் பழக்கத்திலிருந்து மீள நினைப்பவர்களுக்கு அருணாச்சல மெய்ஞான அறக்கட்டளையின் சார்பில் AVS சித்த வைத்தியசாலையின் மூலம் மது போதைமீட்பு சிகி்ச்சை மற்றும் ஆலோசனை திறம்பட அளிக்கப்படுகிறது.
சிகிச்சை முறைகள் :
1. மதுவின் தீமை பற்றியும் அதை தவிர்க்க வேண்டிய வழிகளைப் பற்றியும் பாதிக்கப்பட்டவர்க்கு எடுத்துக் கூறி மனநல ஆலோசனை வழங்குதல்.
2. பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களால் பக்க விளைவுகளற்ற சித்தா மூலிகை மருந்துகள் கொடுத்தல்.
3. மதுவை மறப்பதற்கும் மனத்திடம் ஏற்படுவதற்கும் எளிய யோகா/தியானப் பயிற்சிகள்(Meditation Therapy) வழங்குதல்.
இந்த சிகிச்சையின் மூலம் படிப்படியாக மதுப்பழக்கதிலிருந்து மீள முடியும் .மது பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்
"போதையை ஒழிப்போம்!
புதிய பாதையை வகுப்போம்!"
தொடர்புக்கு
AVS வைத்திய சாலை- 6383298048
728 E,1st Floor,Jothi Illam,(Opp.to Alvernia School), Ramandhapuram,Coimbatore-641045
(Run by Arunachala Meignana Arakattalai)
(மருந்து உட்பட ஆலசோனை முற்றிலும் இலவசம்)