29/10/2025
*கோபாஷ்டமி திருநாள் (29.10.2025)*
*புதன்கிழமை*
🌾🐄🌾🐄🌾🐄🌾🐄🌾
*சகல நன்மைகளையும் தரக் கூடிய புண்ணிய நாள்*
இந்த நன்னாளில் கோவர்த்தன கிரியை தூக்கி ஏழு நாட்கள் மழையில் இருந்து தங்களைக் காத்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு கோபியர்கள் பல விதமான பக்ஷணங்கள் செய்து தங்களது நன்றியை தெரிவித்தார்கள்.
மேலும் நந்தகோபர்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு கன்றுகளை வளர்க்கும் பொறுப்பில் இருந்து கோமாதாக்களை வளர்க்கும் பொறுப்பை வழங்கினார்.
*பாரதம் முழுவதும் உள்ள பாரம்பரிய நாட்டுப் பசுக்களை வணங்கும் திருநாள்*
நாட்டுப் பசுக்களைக் கொண்டாடும் ஒரு திருநாள். பண்டைய பாரதத்தில் கால்நடைகளே செல்வங்களாக இருந்து வந்துள்ளன.
அதிலும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என உணவுப்பொருட்களை வழங்கி நமக்கு வாழ்வருளும் நாட்டு மாடுகளை போற்றிப் பாதுகாப்பது நமக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது.
கோபாஷ்டமி தினத்தில் நாட்டுப் பசுக்களை குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். புல், கீரைகள், பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை உணவாக அளித்து நீர் கொடுத்து பசுக்களின் பசியை தணிக்க வேண்டும்.
நாட்டுப் பசுவில் சகல தெய்வங்களும் உறைகின்றன என்பது புராணங்கள் கூறும் செய்தி. எனவே பசுவை வணங்கி அதன் அருளைப்பெற்றால் சகல தேவர்களின் அருளையும் பெறலாம் என்பது இந்த கோபாஷ்டமி நாளின் தத்துவம்.
கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த துவாபர யுகத்தில் இருந்தே இந்த கோஷ்டாஷ்டமி கொண்டாடப்பட்டுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
நாட்டுப் பசுக்களை வைத்து இருப்போர் கொண்டாடக் கூடிய பண்டிகை இது.
இல்லாதவர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு சென்று அங்கிருக்கும் கோசாலைகளில் உள்ள நாட்டுப் பசுக்களை வணங்கி ஆசி பெறலாம். சர்வ மங்களமும் அளிக்கும் கோஷ்டாஷ்டமி நாள் இன்று .
சுப காரியங்கள் , பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் மேம்பட விரும்புபவர்கள் இந்த நாளில் அவசியம் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள
நாட்டுப்பசுக்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள முறையில் பூஜைகள் செய்து ஆகாரம் வழங்கி வணங்கினால் இறையருளால் நிச்சயம் வேண்டுதல்கள் நிறைவேறும்.
இந்த புண்ணிய நாளை தவர விடாதீர்கள் , அவசியம் கோப பூஜை செய்து அல்லது கோபூஜையில் கலந்து கொண்டு நலமும் வளமும் பெறுவோமாக