13/09/2024
குறிஞ்சி மருத்துவமனையில் வெற்றிகரமாகச் செயல்படும் தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் :
இதுகுறித்து குறிஞ்சி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் .மணிமாறன் தெரிவித்தது ‘இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விபத்து நேரங்களில் வழங்கப்படும் முதலுதவி சிகிச்சை மட்டும் கிடைக்கும் என்று மக்கள் நினைக்கின்றனர்.ஆனால் விபத்தின் நிலையைப் பொறுத்து பலமான காயம் ,தலைக்காயம்,விலா எலும்பு முறிவு, கை கால் எலும்பு முறிவு போன்றவற்றிற்கும் இத்திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை பெற முடியும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லை.
இந்த கட்டணமில்லா அவசர சிகிச்சைகள் வழங்க ஆதார் அட்டை அல்லது ஏதோவொரு அரசு அங்கீகரிக்கும் அடையாள அட்டை இருந்தால் போதும் காப்பீடு திட்டம் வேண்டும் என்ற அவசியம் இல்லை.
விபத்தில் பாதிக்கப்பட்ட கிராமப்புறத்தினர், நகர்ப்புறத்தினர், வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இந்த திட்டத்தின் மூலம் விபத்தில் அடிப்பட்டவரை கட்டணமில்லா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்று இல்லை. நமது குறிஞ்சி மருத்துவமனை போன்று இத்திட்டத்தில் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லலாம். முதலுதவிக்கும்,அவசர சிகிச்சைக்கும் இத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லா சிகிச்சை வழங்கி வருகிறோம்.எனவே,விபத்து மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் தாமதிக்காமல் நமது மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் வரலாம்,பணம் பற்றிக் கவலைப்படாமல் சிகிச்சையும் பெறலாம்” என்று தெரிவித்தார்.