20/05/2023
செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. ஆண்மை அதிகரிக்குமாம்
சென்னை: நாம் எல்லோரும் உணவு உண்டபின்பு சாப்பிடக்கூடியது வாழைப்பழம். இதில் ஏராளமான வகைகள் இருந்தாலும், செவ்வாழை பழத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என எண்ணற்ற உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் உள்ளன.
Aகண் நோய் முதல் மலட்டு தன்மை பிரச்சனை வரை தீர்வு தரக்கூடியது தான் செவ்வாழை. மூளை செயல்பாடு, இதய செயல்பாடு, கல்லீரல், எலும்புகள் வலுவடைய மற்றும் குடல் இயக்கம் என அணைத்து உடல் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் இப்பழத்தில் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் சீறுநீரகங்களில் கற்கள் வராமல் தடுக்க பெரிதும் உதவுகின்றது. இரத்த அளவை அதிகரிக்கவும், ஹீமோக்ளோபினை அதிகரிக்க தேவையான அயன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இதில் உள்ளது.
இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் 1 அல்லது 2 பழம் சாப்பிட்டுவந்தால், இரத்த அளவையும், புதிய இரத்தத்தையும் உற்பத்தி செய்யும் பெரிதும் உதவுகின்றது. நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள் சுமார் 1 மாதம் வரை தொடர்ச்சியாக செவ்வாழை சாப்பிட்டுவந்தால் அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். செவ்வாழை பழத்தில் ஏராளமான நன்மைகளும், பல நோய் தீர்க்கும் மருத்துவ தன்மையும் உள்ளது.
ஆண்மை குறைவு நீங்க : சில ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி வருவதால் மொத்த உடல் பலம் குறைந்துவிடும், இதனால் ஆண்மை குறைபாடு ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு. நரம்பு தளர்ச்சி ஏற்படுபவர்கள், 48 நாள் தினமும் காலை மற்றும் மாலையில் சாப்பிட்டுவந்தால், நரம்பு பெலம் பெரும், ஆண்மை தன்மையும் சீரடையும். செவ்வாழை, குழந்தை பேரு தரும் பழம் என்றும் இப்பழத்தை சொல்வதுண்டு. 40 நாள் தொண்டர்ந்து இரவில் பழம் சாப்பிட்டு, பின் 1 ஸ்பூன் தேன் சாப்பிட்டுவந்தால், கருவுற அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவத்தில் கூறப்படுகிறது
செவ்வாழை பழத்தை சாப்பிட சிறந்த நேரம் : இப்பழத்தை சரியான நேரத்தில் சாப்பிட்டால் இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். இதனை சாப்பிட சரியான நேரம் காலை 6 மணி, அல்லது காலை உணவு பிறகு 11 மணி, மற்றும் மாலை 4 மணி அளவில் சாப்பிடலாம்.