
23/10/2022
தீபாவளி வாழ்த்துக்கள் ✨️
இந்த இனிய தீபாவளித் திருநாளில்
திக்கெட்டும் தீப ஒளி பரவட்டும்.
தீப ஒளியில்
இதுவரை சூழ்ந்திருந்த
இருள் நீங்கட்டும்.
இன்னல்கள் விலகட்டும்.
தீய எண்ணங்கள் அகலட்டும்.
நல்லதே நினைக்கின்ற
நல்ல எண்ணம் மலரட்டும்.
தீமையை வேரறுப்போம்.
நேர்மையை விதைத்து வைப்போம்.
மலரட்டும் மனிதநேயம்.
சீன தேசத்தை
எதிர்த்து போராடும்
சிவகாசி நகராட்சி தொழிலாளர்களின்
வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.
இன்று ஏற்றும் இந்த தீப ஒளி
ஒளிரட்டும் எல்லா நாளும்.