16/08/2025
நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட்(NGO) மது போதை மற்றும் மனநல சிகிச்சை மறுவாழ்வு மையம் சார்பாக 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு திரு.P.M.மாணிக்கம் Msc தலைமை தாங்கினார். சேக்கிழார் அடிமை சண்முக செங்கல்வராயன் வரவேற்றார். திரு KME கருணாகரன் D.pharm,K.M ஏகாம்பரம் Mc, A.G.சிவகலைவாணன் M. A sociology மற்றும் K. ஹமலதா முன்னிலை வகித்தனர். திரு J.K.N.பழனி M.A.CS,அவர்கள் அதிமுக நகர கழக செயலாளர், ரோட்டரி முன்னாள் ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழா சிறப்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாக A. கபில் குமார் Msw, M. ராயப்பன் Msw,P.கிருஷ்ணமூர்த்தி (பாரஸ்ட் ஆபீசர் Redt) திருமதி K. ஆண்டாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பெரியவர்களுக்கும், தாய்மார்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.Dr. K.K.சிவ சண்முகம் D.Pharm நிறுவனர் & தலைவர் நீயூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் நன்றியுரை ஆற்றினார்.