19/02/2025
பூனைமீசை மூலிகை-பித்தபை நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்புகள், சிறுநீரக கோளாறுகள், அதிக உடல் எடை, இரத்தம் அசுத்தம் போன்ற கோளாறுகளை எளிமையாக குணமாக்கும் எளிமையான மூலிகை.
இந்த மூலிகையானது நல்ல நீர் வளம் உள்ள அனைத்து இடங்களிலும் வளரும் தன்மை கொண்ட தாவரம் ஆகும்,எளிய முறையில் பெருக்கம் அடையும் ஒரு தாவரம் ஆகும்,பொதுவாக இந்த தாவரத்தின் கிளைகளை வெட்டி வைத்தாலே வளரும் தன்மை கொண்ட எளிமையான தாவரம் ,விதைகள் மூலமாகவும் வளர்க்கலாம் ,தினமும் ஈரப்பதம் இருப்பது அவசியம் ,தொட்டி செடியாகவோ அல்லது குறைந்த இடதிலோ இதை வளர்க்கலாம்,தற்போது எல்லா நர்சரிகளிளும் பூனைமீசை மூலிகை கிடைக்கும் ,ஒரு செடி மற்றும் கிடைத்தால் போதும் ,அதன் மூலம் ஏகப்பட்ட செடிகள் உருவாக்கலாம்.
பூனை மீசை செடியின் அறிவியல் பெயர்-Orthosiphon aristatus ,இதை ஜாவா டீ என்றும் ,சீரக துளசி என்றும் அழைப்பர் ,இந்த மூலிகை துளசி இனத்தை சார்ந்த ஒன்றுதான்.
இந்த மூலிகையின் இலை,தண்டு,வேர்,விதை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்து,பச்சையாகவோ அல்லது காய்ந்த நிலையில்லோ உபயோகப்படுத்தலாம்...
..நீங்களும் இந்த மூலிகை செடியை வளர்த்து பயன் பெறுங்கள்.. இந்த மூலிகை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து,நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யவும்,உடல் எடையை குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது, தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .இதை
மாறிவரும் உணவு பழக்கம்,மேலும் தற்போது நமக்கு கிடைக்கும் அனைத்து உணவு பொருள்களிலும் அதிகப்படியான உப்புகள் ,ரசாயனங்கள் கலந்துதான் வருகின்றது,என்னதான் நாம் ஆரோக்யமாக உணவுகள் எடுக்கின்றோம் என்று நினைத்து கொண்டு இருந்தாலும் உடல் படிப்படியாக செயல் இழக்க தொடங்குகிறது...நாம் இந்த கழிவுகளை அவ்வப்போது வெளியற்றினால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும், எனவே பிரச்னை உள்ளவர்கள் மட்டும் தான் இந்த மூலிகை கசாயம் அருந்த வேண்டும் என்பதில்லை ,வழக்கமாக டீ,காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் இதற்கு பதிலாக இந்த கசாயத்துடன் பனை வெல்லம் அல்லது கரும்பு வெல்லம் ஏதேனும் ஒன்றை கலந்து இளம் சூடாக அருந்தலாம்.இப்படி செய்வதன் மூலம் தேவை இல்லாத நச்சு கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேற செய்கின்றது.
இந்த மூலிகையை டீ ஆகா செய்து பயன்படுத்த விரும்பினால் 150 மில்லி நீரில் 5 கிராம் பொடியை போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி,பனை வெல்லம் அல்லது வெல்லம் சேர்த்து அருந்தலாம் .
முடிந்த அளவு இயற்கை வழியில் விளைந்த உணவு பொருள்களை எடுத்தும் ,தேவை இல்லாத உணவு பழக்கம்,மது ,புகை ,புகையிலை பழக்கம் இவற்றை கைவிட்டும் வாழ்ந்தாலே எந்த விதமான நோய்களும் நம்மை அணுகாது,அப்படி வந்தாலும் உடனடியாக விலகிவிடும்
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751
சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு
பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------