Dr.Naga siddha clinic

Dr.Naga siddha clinic அனைத்து நாட்பட்ட நோய்களுக்கான சித்த மருத்துவமனை

கழுத்து எலும்பு தேய்மானம் அடைந்திருப்பதாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது சொன்னார்கள். இதற்கு என்ன உணவுப் பழக்கம...
03/01/2025

கழுத்து எலும்பு தேய்மானம் அடைந்திருப்பதாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது சொன்னார்கள். இதற்கு என்ன உணவுப் பழக்கம் இருந்தால் விரைவில் குணமடையும்?

மத்திய வயதுள்ளவர்களுக்கும் அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கும் கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம், கழுத்தெலும்பு தேய்மானம். ‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Cervical Spondylitis) என்பது இதன் மருத்துவப் பெயர். முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்துபோவது அல்லது விலகிவிடுவது போன்ற காரணங்களாலும் கழுத்துவலி வருவது உண்டு.


பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத் தொடங்கும். இதற்கு ஜவ்வுகளில் நீர்ச்சத்து குறைவதும், எலும்புகளில் கால்சியம் உள்ளிட்ட சில சத்துக்கள் குறைவதும் முக்கியக் காரணங்கள். இதனால், எலும்புகள் மெலிந்து, வலுவிழந்துவிடும். இவ்வாறு வலுவிழந்த எலும்புகள் வழக்கமான தசைகளின் அழுத்தம் காரணமாக, விரைவிலேயே தேய்ந்துவிடும். ஜவ்வு விலகியிருந்தால், அது கைகளுக்கு வரும் நரம்புகளை அழுத்தும். அப்போது கழுத்தில் மட்டுமல்லாமல் கைகளுக்கும் வலி பரவும். சில நேரம் வயதானவர்களுக்கு கழுத்தெலும்பில் எலும்பு முடிச்சுகள் (Osteophytes) வளரும். இதனாலும் கழுத்து வலி வரக்கூடும்

இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்துவலியை ஏற்படுத்துகிறது.

படுத்துக்கொண்டே நெடுநேரம் செல்போனை உபயோகிப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை கண்டிப்பாக வருவதற்கு வாய்ப்பு உண்டு.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்துவலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்குக் கழுத்துத் தசைகள் சீக்கிரத்தில் இறுகிவிடும். இதுவும் 50 வயதில் நிகழும். புகைபிடிக்கும் பழக்கம் இருந்தாலோ உடற்பருமன் இருந்தாலோ கழுத்துவலி சீக்கிரத்தில் வந்துவிடும்.


கழுத்துவலிக்கு இன்னொரு காரணம் இது: வயதாக ஆக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் விரைவில் சோர்ந்து போகும். அப்போது கழுத்தை அந்தத் தசைகளால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடாகக் கழுத்துவலி வரும். அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்குப் பாதை போடும்.

அறிகுறிகள்

இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவதுபோல் வலிக்கும். விரல்கள்வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும்போது கழுத்துவலியுடன் தலைசுற்றலும் ஏற்படும். நடப்பதற்குச் சிரமமாக இருக்கும்.

என்ன பரிசோதனை?

கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம்.

என்ன சிகிச்சை?

ஆரம்பநிலையில் உள்ள கழுத்துவலியைச் சாதாரண வலி மாத்திரைகளால் குணப்படுத்திவிடலாம்.
நமது சித்த மருத்துவத்தை பொருத்தவரையில் மேற்பூச்சித் தைலங்கள் கசாயங்கள் போன்றவை இது மட்டுமின்றி வெளிப்புற சிகிச்சையான வர்ம முறை சிகிச்சைகள் புற வளைய முறை சிகிச்சைகள் மிகவும் அற்புதமான பலனை தரும்...

மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வதும் நல்லது, .


என்ன உணவு?

புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மிகுந்த பால், பால் பொருட்கள், மீன், முட்டை, இறைச்சி, காய்கறி, பழங்களை உட்கொள்ள வேண்டும். கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, பீட்ரூட், அவரை, துவரை, பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, , வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் கால்சியம் மிகுந்துள்ளது. இந்த உணவு வகைகளில் ஒன்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் இவையன்றி பிரண்டை அனைத்து வகையான கீரைகள் மேலும் அனைத்து வகையான முளைகட்டிய சிறுதானியங்கள் இவற்றிலும் கால்சியம் சத்து மிகுந்து உள்ளது

தடுப்பது எப்படி?

# எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.

# பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்தவரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள். பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு உறங்குங்கள்.

# ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.

# கணினியில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை, கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்கவேண்டும் என்றிருந்தால் கழுத்துவலி உறுதி.

# கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகப் படிக்கும்போதும் கணினியைப் பார்க்கும்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.

# தலையைக் குனிந்துகொண்டே அதிக நேரம் வேலை செய்யக் கூடாது. உதாரணம் - தையல் வேலை செய்கிறவர்கள்.

# மிருதுவான, சிறிய தலையணையைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படிப் படுத்துக்கொண்டால் கழுத்தும் தலையும் வசதியாக இருக்கிறதோ, அப்படிப் படுத்து உறங்குங்கள்.

# அளவுக்கு அதிகமான சுமையைத் தூக்காதீர்கள்.

# உடல் பருமன் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

# நடத்தல், நீந்துதுல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளில் ஒன்றை தினமும் கடைப்பிடியுங்கள்.

# கழுத்துத் தசைகளுக்கு வலுவூட்டும் தசைப்பயிற்சிகளை அல்லது யோகாசனப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யலாம்.

#மேலும் வேகத்தடை மற்றும் குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்கிக் கொள்வது நல்லது.

#தற்போது இளம் வயதினர் நெடுதூர பயணமாக (long trip )இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்....
நன்றி.
மேலும் ஆலோசனைக்கு
Dr.R.மிதுன்.BSMS.MD(AM)
Dr.J.G.அனிஷாகாந்தி.BSMS.Msc(psy).
Dr.நாகா சித்தா மருத்துவமனை.
சேலம் toஅரூர் மெயின் ரோடு,
மஞ்சவாடி பஸ் ஸ்டாப்
தர்மபுரி மாவட்டம்..
மேலும் தொடர்புக்கு: 9524918131
7639290922..

01/01/2025
04/10/2024
கல்லீரல் கொழுப்பு நோய்:Fatty liver:சித்த மருத்துவர் R மிதுன் BSMS.MD(AM)சமீப காலமாக மக்கள் மத்தியில் பரிச்சயமான மருத்துவ...
01/04/2024

கல்லீரல் கொழுப்பு நோய்:
Fatty liver:

சித்த மருத்துவர்
R மிதுன் BSMS.MD(AM)

சமீப காலமாக மக்கள் மத்தியில் பரிச்சயமான மருத்துவ வார்த்தைகளில் ‘கொழுப்புக் கல்லீரலும்’ (ஃபேட்டி லிவர் - Fatty liver) சேர்ந்துவிட்டது. முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடியதாக இருந்த இந்த நோய், இப்போது குழந்தைகளுக்கும் வருகிறது என்பதுதான் நம்மை உஷார்ப்படுத்தி இருக்கிறது.


கொழுப்புக் கல்லீரல் என்றால் என்ன?

பெயரே நோயைச் சொல்கிறது. அதாவது, கொழுப்பு மிக்க கல்லீரல்! இது எப்படி ஏற்படுகிறது? எதற்கும் அசராத கல்லீரல், இரண்டு விஷயங்களில் ‘ஆட்டம்’ காண்கிறது. ஒன்று, மது. மற்றொன்று, கொழுப்பு. மதுவில் இருக்கும் ஆல்கஹால் எப்படிப் பலசாலி கல்லீரலையும் நோஞ்சான் ஆக்கி, நம்மை மரணக் குழிக்குள் தள்ளுகிறதோ அதுபோல கொழுப்புக் கல்லீரல் பிரச்சினைக்கு நாம் சாப்பிடும் அதீத சர்க்கரையும் கொழுப்பு மிகுந்த உணவுகளும்தாம் முக்கியக் காரணங்கள்.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைச் சேகரித்துவைப்பதே கல்லீரல்தான். அவசரத்துக்கு உடலுக்கு சக்தியைத் தர இயற்கை தந்திருக்கும் ஏற்பாடு இது. இப்படிச் சேகரிக்கப்படும் கொழுப்பு ஒரு கட்டத்தில் கல்லீரலுக்கு எதிரியாகிவிடுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.


நம்முடைய தவறான உணவுப் பழக்கம்தான் கொழுப்புக் கல்லீரலுக்கு முக்கியக் காரணம். அதிலும் உடல் உழைப்பும் இல்லாமல், உடற்பயிற்சியும் செய்யாமல், மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடுகிறோம். இது போதாதென்று இடையிடையே நொறுக்குத்தீனி, வார இறுதி பார்ட்டி, மாதம் ஒரு பஃபே விருந்து.


அதிலும் செந்நிற இறைச்சிகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடனடி உணவுகள், கார்ன் சிரப், ஜெல்லி, கேக், சிப்ஸ், ஐஸகிரீம், செயற்கை இனிப்புகள், குளிர் பானங்கள் என நமது உணவுமுறை முற்றிலும் மாறிவிட்ட பிறகு, உடல் பருமன் பிரச்சினை அதிகமாகி விட்டது. தம் வாழ்நாளில் மதுவை ஒருமுறைகூடத் தொடாதவருக்கும் கொழுப்புக் கல்லீரல் வருவது இப்படித்தான்.


கொழுப்புக் கல்லீரல் பிரச்சினைக்கு அடுத்த காரணம், நீரிழிவு நோய். இதில் இன்சுலின் சரியாகச் சுரக்காது என்பதால், ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாது. அதுபோல் தேவைக்கு மேல் உள்ள கொழுப்பு அமிலங்களும் ரத்தத்தில் தேங்கும்.


இவற்றைக் கல்லீரல் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும். இதுவும் ஓர் அளவுக்குத்தான். அதற்குள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்திவிட்டால், கொழுப்புக் கல்லீரலுக்கு இடமில்லாமல் போகும். தவறினால், ‘முதல் கட்டக் கொழுப்புக் கல்லீரல்’ (Grade I Fatty Liver) தலையெடுப்பதைத் தடுக்க முடியாது.



கொழுப்புக் கல்லீரலின் பல நிலைகள்!

உணவிலிருந்து வரும் கொழுப்பு மொத்தமும் கல்லீரலில் சேரும் ஆரம்ப நிலைக்கு ‘முதல் கட்டக் கொழுப்புக் கல்லீரல்’ என்று பெயர். பெண்கள் ஃபேசியல் செய்யும்போது சில கிரீம்களை முகத்தில் பூசிக்கொள்வதைப் போல, கல்லீரலின் மேற்புறம் மட்டுமே கொழுப்பு படியும் நிலை இது எந்தவோர் அறிகுறியையும் வெளிக்காட்டாமல், எந்த வழியிலும் ஆரோக்கியத்தைக் கெடுக்காமல் ‘அமைதி’யாக இருக்கும். வேறு காரணத்துக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது, கொழுப்புக் கல்லீரல் இருப்பது எதேச்சையாகத் தெரியும்!


இந்த நேரத்தில் நாம் உஷாராகிவிட வேண்டும். முதல் கட்டத்துக்குக் காரணம் தெரிந்து அதைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், இது இரண்டாம் நிலைக்குத் தாவிவிடும். இப்போது கல்லீரலில் அநேக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். இதுவரை மேற்பூச்சாக இருந்த கொழுப்புகள் கல்லீரலுக்குள் ஊடுருவுவதால் அங்கே அழற்சியும் வீக்கமும் உண்டாகின்றன.


கல்லீரல் செல்கள் இருக்கும் இடத்தில் ஆங்காங்கே குவியல் குவியலாகக் கொழுப்பு செல்கள் இடம் பிடிக்கின்றன. வீட்டில் சமையல் அறையெங்கும் விருந்தாளிகள் அமர்ந்துவிட்டால், சமையல் எப்படி நடக்கும்? அப்படித்தான், இப்போது கல்லீரலின் செயல்பாடு குறைந்து செரிமானக் கோளாறுகள் ஏற்படும். வயிறு வலிக்கும். வாந்தி வரும். சிலருக்குக் காமாலை எட்டிப் பார்க்கும். அத்தோடு சிரமங்கள் நின்றுகொள்ளும். இதற்கும் பயப்படத் தேவையில்லை.

ஆபத்து எப்போது ஆரம்பிக்கும்?

கொழுப்புக் கல்லீரலின் மூன்றாம் கட்டம்தான் ஆபத்தானது. இதில், இதுவரை கல்லீரலில் அழற்சி ஏற்பட்ட இடங்களில் தழும்புகள் தோன்றி, சுருங்கும். தேங்காய்க்குள்ளே இருக்கிற ‘பருப்பி’ல் அதன் வெளிப்பக்கம் இருக்கிற நார்கள் இடம்பிடித்துவிட்டால் எப்படி இருக்கும்? கற்பனை செய்துபாருங்கள். அப்படித்தான் கல்லீரல் இப்போது இருக்கும்.

இதற்கு ‘ஃபைப்ரோசிஸ்’ என்று பெயர். இதுவே நாளடைவில் ‘சிரோசிஸ்’ எனும் கல்லீரல் சுருக்க நோய்க்குக் கொண்டு சென்று உயிருக்கு ஆபத்தை வரவழைக்கும். ஆனால், நவீனத் தொழில்நுட்பத்தில், இந்த நோய்க்குக் ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை’ (Liver transplantation) செய்து உயிரைக் காப்பாற்றவும் வசதி இருக்கிறது என்பது ஆறுதல்.

என்ன பரிசோதனைகள் உள்ளன?

கொழுப்பின் காரணமாகக் கல்லீரலில் நேர்ந்திருக்கும் பாதிப்பைத் துல்லியமாக அறிவதற்கு என்சைம் பரிசோதனைகள் இருக்கின்றன. வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதும் உதவும்.

அத்துடன் ‘லிவர் பயாப்சி’யும் கைகொடுக்கிறது. பயாப்சி எடுக்கப் பயப்படுபவர்களுக்காகவே ‘ஃபைப்ரோஸ்கேன்’ எனும் நவீன சோதனை இப்போது வந்துள்ளது. இதன் மூலம் நோயைக் கணித்து முதல் இரண்டு நிலை கொழுப்புக் கல்லீரலுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள், வைட்டமின்-இ கலந்த ஆன்டிஆக்ஸிடென்டுகள், உணவுமுறை மாற்றங்கள் போன்ற வற்றைப் பின்பற்றிக் கொழுப்புக் கல்லீரலைச் சமாளித்து விடலாம்.

என்ன செய்ய வேண்டும்?

* மதுவை மறக்க வேண்டும்.
* உடல் எடையைப் பேண வேண்டும்.
நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
* கொழுப்பு மிகுந்த உணவுகளான செந்நிற இறைச்சிகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடனடி உணவுகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
* முக்கியமாக, பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய்யில் கவனம் தேவை.
* நொறுக்குத் தீனிகளை ஓரங்கட்ட வேண்டும். மைதா உணவுகளும் வேண்டாம்.
* இனிப்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
* உணவில் உப்பு அளவோடு இருக்கட்டும்.
* வெள்ளை அரிசி உணவுகளைக் குறைத்துக் கொண்டு, முழுத்தானிய உணவுகளையும் சிறுதானிய உணவு களையும் அதிகப்படுத்த வேண்டும்.
* கீரைகள், பழங்கள், காய்கறிகள் தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஃபிளவினாய்டு நிறைந்த காய்கறிகள், பழங்கள் அதிக பலன் தரும். அதற்கு அவரைக்காய்க்கு முக்கியத்துவம் தர வேண்டும். தினமும் 3 கப் காய்கறி தேவை.
* சிவப்பு, ஆரஞ்சு, அடர் பச்சை மற்றும் மஞ்சள் நிறக் காய்களும் பழங்களும் சிறந்தவை.
* எண்ணெய்ப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது.
* தாவரப் புரதங்களைக் கூட்ட வேண்டும். உதாரணம்; பருப்பு மற்றும் பயறுகள், முளைவிட்ட தானியங்கள்.
* ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்துள்ள மீன் உணவுகளைச் சேர்த்துக்கொண்டால் நல்லது.
* தினமும் ஓர் உடற்பயிற்சி அவசியம். நடைப்பயிற்சி மிகவும் நல்லது. சைக்கிள் ஓட்டுவதும் நீச்சலும் அதே பலனைத் தரக்கூடியவையே.
* மன அழுத்தம் ஆகாது.
* 6 - 8 மணி நேரம் இரவுத் தூக்கம் தேவை..
* இத்தனையும் சரியாக இருந்தால் கொழுப்புக் கல்லீரலுக்கு நம் உடலில் இடமில்லை; சிகிச்சையும் தேவையில்லை.
சித்த மருத்துவர்.R.மிதுன் BSMS.MD.(AM)
சேலம் toஅரூர் மெயின் ரோடு
மஞ்சவாடி
தர்மபுரி மாவட்டம்.. முன் பதிவிற்கு
9524918131
7639290922

இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்... (மீள் பதிவு)
14/11/2023

இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்... (மீள் பதிவு)

சர்க்கரை நோயின் காரணங்கள்


சர்க்கரை நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.

இன்சுலின் சுரப்பைத் தடுப்பதற்கெனப் பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. நீரிழிவு நோய் உருவாவதற்கு முன்பே இவை நம் உடலில் காணப்படுகின்றன; பின்னொரு நாளில் நீரிழிவு நோய் வருவதைத் தூண்டுகின்றன. இவற்றை ‘சர்க்கரை நோயின் முன்காரணிகள்’ ( Diabetes Risk Factors ) என்கிறோம். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே போதும், நீரிழிவு நோய் வரலாம்.

பரம்பரைத் தன்மை

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. நம் உடலில் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில்தான் மரபணுக்கள் (Genes) உள்ளன. இவைதான் செல்கள் எப்படி உருவாக வேண்டும், எப்போது உருவாக வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுத் தருகின்றன.

உதாரணமாக, ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் கணையத்தில் பீட்டா செல்கள் எப்போது, எவ்வளவு இன்சுலினைச் சுரக்க வேண்டும் என்று இந்த மரபணுக்கள்தான் கற்றுத்தரும். அதன்படி அந்தச் செல்கள் இன்சுலினைச் சுரந்து, ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் வைத்துக்கொள்ளும். அதனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவது இல்லை.

புத்தகங்களை அச்சிடும்போது பிழைகள் ஏற்படுவதைப்போல, சிலருக்கு இந்த மரபணுக்கள் உருவாகும்போது பிழைகள் ஏற்பட்டுவிடும். அப்போது, உடலில் நடைபெற வேண்டிய இயல்பான பணிகள் நடைபெறாது. உதாரணமாக, இன்சுலினைச் சுரக்கச் செய்கின்ற மரபணுவில் பிழை உண்டானால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படும்.

நீரிழிவு நோய் வந்துவிடும். இந்த மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து இவர்களுக்கு வந்திருக்கும். இனி, இவர்கள் வாரிசுகளுக்கு அவை கடத்தப்படும். அப்போது, அவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும். இவ்வாறு, அந்தப் பரம்பரையின் வம்சாவளியில் வருபவர்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் கடத்தப்படுகிறது.

உடல் பருமன்

சர்க்கரை நோயை வரவேற்கும் அடுத்த காரணி, உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் ஊடுகொழுப்பு உணவு(Transfat) வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இப்படித்தான் நீரிழிவு நோய் வருகிறது.

இன்னொரு வழி இது: உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது செல்களின் இயல்புத் தன்மை மாறுகிறது. இதனால், செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் சிரமப்படுகிறது. அப்படியே சென்றாலும், செல்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால், இன்சுலின் தனது இயல்பான பணியைச் செய்ய முடிவதில்லை. இதன் விளைவாகவும் நீரிழிவு நோய் ஏற்படும்.

இன்சுலின் எதிர்ப்பு உணர்வு

உடலில் கொழுப்பு சேரச் சேர, கொழுப்புத் திசுக்களில் உள்ள செல்கள், இன்சுலின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை; இன்சுலினை எதிர்க்கின்றன. இன்சுலின் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.

சில வேளைகளில், கையில் சாவி இருந்தாலும், அது பூட்டைத் திறக்கச் சண்டித்தனம் செய்யும் அல்லவா? அதுபோல, சிலருக்கு இன்சுலின் சரியாகச் சுரந்தாலும், அது சரிவர வேலை செய்யாது. காரணம், இவர்களுடைய செல்களில் ‘இன்சுலின் ஏற்பான்கள்' (Insulin Receptors) குறைவாக இருக்கும். இதனால், செல்களுக்குள் குளுகோஸ் நுழைய முடியாமல் ரத்தத்தில் தங்கிவிடும். இதன் விளைவாக, ரத்தச் சர்க்கரை அதிகமாகி, இவர்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிடும். இதைத்தான் ‘இன்சுலின் எதிர்ப்பு உணர்வு' (Insulin Resistance) என்கிறோம்.

அதிக உடல் எடை உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்கள், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுகிறவர்கள் ஆகியோருக்கு இன்சுலின் எதிர்ப்பு உணர்வு அதிகமாக இருக்கும். சிலருக்கு, பரம்பரை காரணமாகவும் இது வரக்கூடும்.

மன அழுத்தம்

நீரிழிவு நோய்க்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கவலை, கோபம், இழப்பு, பயம், பதற்றம், ஏமாற்றம், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படும்போது, நம் உடலில் அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளுகான், கார்ட்டிசால், வளர்ச்சி ஹார்மோன், செரட்டோனின் ஆகியவை அதிகமாகச் சுரந்து, இன்சுலின் செயல்படுவதைத் தடுக்கின்றன.

இதனால் நீரிழிவு நோய் வருகிறது. மன அழுத்தம் காரணமாக, ஒருவருக்கு நீரிழிவு நோய் புதிதாகவும் வரலாம் அல்லது ஏற்கெனவே நீரிழிவு நோய் இருந்தால் அது அதிகப்படலாம்.

அடிக்கடி கர்ப்பம் அடைதல்

கர்ப்பமான பெண்களுக்கு, கர்ப்பப்பையில் குழந்தை வளர்ந்து வரும்போது சில ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன. இதன் காரணமாக நீரிழிவு நோய் வருகிறது. இந்த ஹார்மோன் பிரச்சினை பிரசவத்துக்குப் பிறகு பல பேருக்குச் சரியாகிவிடுகிறது. இதனால், குழந்தை பிறந்த பின்னர், இவர்களுக்கு நீரிழிவு நோய் மறைந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது.

அதிலும் அடிக்கடி கர்ப்பமாகும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினையும் அடிக்கடி வருவதால், நீரிழிவு நோய் நிலைத்துவிடுகிறது. குறிப்பாகச் சொன்னால், கர்ப்பத்தின்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூன்று கிலோவுக்கு மேல் எடை கொண்ட குழந்தையைப் பெற்ற பெண்கள், பெரிய தலையுடன் குழந்தையைப் பெற்ற பெண்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

உயர் ரத்த அழுத்தம்

சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்த மும் மிக நெருங்கிய ‘நண்பர்கள்’. சர்க்கரை நோயை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகள் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தும் என்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, ரத்த அழுத்தம் 140/90 மி.மீ. பாதரச அளவுக்கு அதிகமாக உள்ளவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ரத்த மிகைக் கொழுப்பு

உடல் பருமன் உள்ளவர்களில் பெரும்பாலோருக்கு ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகவே இருக்கிறது. ஒருவருக்குத் திசுக் கொழுப்பும் ரத்தக் கொழுப்பும் அதிக அளவில் இருக்கும்போது, அவருக்குக் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகிவிடும். இந்தக் கொழுப்பு அமிலங்கள் கணையத்தைப் பாதிக்கும். அப்போது நீரிழிவு நோய் வரும்.

சினைப்பை நீர்க்கட்டிகள்

பெண்களுக்குச் சினைப்பையில் உருவாகின்ற ஒரு வகை நார்க்கட்டிக்கு ‘சினைப்பை நீர்க்கட்டி' (Poly Cystic O***y Syndrome - PCOS) என்று பெயர். இந்த நோய் ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone) எனும் ஹார்மோன் அதிகமாவதால் வருகிறது. உடல் பருமன் உள்ள பெண்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது. இவர்களுக்கு முகத்தில் பருக்களும், முடியும் அதிகமாக இருக்கும். மாதவிலக்கு சரியாக நிகழாது. கழுத்தின் பின்புறத் தோல் கறுப்பாக, தடிப்பாக, வரிவரியாக இருக்கும் (Acanthosis nigricans). இந்த நோய் உள்ள பெண்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது.

சோம்பலான வாழ்க்கை முறை

உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாதவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரிக்கும்போது, அந்த அதீதச் சர்க்கரையைச் செலவழிக்க வழியில்லாமல், கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை அதிகரிக்கிறது. இந்த மாதிரி அதிகரித்த எடைக்கும் சேர்த்துக் கணையம் இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கிறது. இப்படித் தொடர்ந்து சுரக்கும்போது, கணையம் சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. நாளடைவில் இன்சுலின் சுரப்பது குறைந்துவிடுகிறது அல்லது நின்றுவிடுகிறது. இதனால், இவர்களுக்குச் சீக்கிரமே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது.

சர்க்கரை நோயைத் தடுக்க முடியுமா?

மேற்சொன்ன வழிகளில் நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் வருவதைத் தள்ளிப்போடலாம்.

# மாவுச்சத்துள்ள உணவு வகைகளையும் கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளையும் இனிப்புப் பண்டங்களையும் குறைத்துச் சாப்பிட வேண்டும்.

# எண்ணெயில் பொரித்த, வறுத்த பண்டங்களையும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

# நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

# அதிகப்படியான ஸ்டிராய்டு மருந்துகளை தவிர்க்க வேண்டும்.

# தினமும் 45 நிமிடங்களுக்கு யோகா/ நடைப்பயிற்சி / உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

# உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்

# உணவில் மஞ்சள், மிளகு, கருஞ்சீரகம், வெந்தயம் போன்றவை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

# குளிர்பானங்கள்,துரித உணவுகள், குடிப்பழக்கம், புகைப்பழக்கம், போன்றவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Dr.நாகா சித்த மருத்துவமனை
சேலம் to அரூர் மெயின் ரோடு, மஞ்சவாடி
9524918131,7639290922

10/09/2022

இன்று செப்டம்பர் 8 உலக பிசியோதெரபி தினம்:
பிசியோதெரபி
மருந்து இல்லாமல் வலி நீக்கும் மருத்துவம்,


வளர்ந்து வரும் மருத்துவ துறையில் பிசியோதெரபி மருத்துவம் கடந்த சில வருடமாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து நம் மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்கள் மனிதன் வாழும் சூழ்நிலைகளை பாதித்தாலும் ஒவ்வொரு மருத்துவ துறைகளும் அதனதன் தனிப்பட்ட முறைகளில் சிறப்பானது. அதுபோல் பிசியோதெரபி மருத்துவ முறை தனிப்பட்ட வழிமுறைகளை கொண்டு உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை சரி செய்யவும், கட்டுப்படுத்தவும் கண்டறியப்பட்ட ஒன்றாகும். ஆங்கில மருத்துவத்தின் சிறப்பு பிரிவாக செயலாற்றி வளர்ந்து அதன் வெற்றி பாதையில் பயணித்து வருகிறது.

மூட்டு வலி, தசை வலி, முதுகு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, தோள்பட்டை வலி, தசை பிடிப்பு, கழுத்துவலி, மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினைகளை மாத்திரையின் தேவையில்லாமல் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் தனிப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட முறைகளை கொண்ட மருத்துவ முறைகளை கொண்டு குணப்படுத்திட கண்டறியப்பட்டதே பிசியோதெரபி மருத்துவமாகும். இது ஆங்கில மருத்துவத்தின் ஒரு சிறப்பு பிரிவேயாகும்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியோடு தன்னையும் இணைத்து கொண்டு பிசியோதெரபி மருத்துவம் மென்மேலும் வளர்ந்து வருகிறது. வலியை போக்க மாத்திரைகள் பல்வேறு கண்டறியப்பட்டாலும் பல்வேறு பக்க விளைவுகளை உடலில் விதைத்து விட்டே செல்லும், அனைவருக்கும் தெரிந்த பக்க விளைவு வயிற்று எரிச்சல் மற்றும் புண் போன்றவை. பிசியோதெரபி மருத்துவ முறை இது போன்ற எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி தகுந்த வலி நிவாரணியாக சமீபகாலங்களில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் முறையாக படித்து தகுதி பெற்ற மருத்துவர்களை கொண்டு சிகிச்சை பெறும் போது இதன் மகத்துவத்தை இன்னும் செவ்வனே உணரலாம். வலி நிவாரணத்தோடு நின்று விடாமல் மூளை ரத்த அழுத்தம் பாதிப்பால் ஏற்படும் பக்கவாதம், மூளை வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள், விளையாட்டின் போது ஏற்படும் காயங்கள், எலும்பு முறிவுக்கு பின் மூட்டு இறுகி போதல் பல்வேறு பிரச்சினைகளை உடற்பயிற்சி மூலமும், சில இதற்கெனவே வடிவமைக்கப்பட்ட சிறப்பான உபகரணங்களைகொண்டு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவத்தின் மூலம் சரிபடுத்தி கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் நூறு சதவீத உடல் ஊனத்தை குறைத்து வெற்றிகரமாக யாருடைய உதவியும் இல்லாமல் வாழ வழிச்செய்திட உதவும் உன்னத பிசியோதெரபி மருத்துவம்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, தோல்பட்டை வலி, மூட்டு தேய்மானம், குதிகால் வலி இது போன்ற மற்ற மருத்துவத்தில் சரி செய்ய முடியாதவற்றை உடற்பயிற்சி, சுடுநீர் ஒத்தடம், மின்சார சிகிச்சை, குளிர்ந்த நீர் ஒத்தடம், லேசர் சிகிச்சை இன்னும் சில மருத்துவ உபகரணங்களையும் பிசியோதெரபி மருத்துவர்களால் கைகளை கொண்டு செய்யும் இது போன்ற சிகிச்சைகளை கொண்டு நிரந்தர தீர்வு த ரமுடியும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இடுப்புமூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பின் ஏற்படும் வலிகளையும் பிசியோதெரபி சிகிச்சைகள் மூலம் சரி செய்து கொண்டு மீண்டும் பழைய வாழ்க்கையை அடைய முடியும். இது மட்டும் அல்லாமல் விளையாட்டின் போது ஏற்படும் காயங்கள், ஜவ்வு காயங்கள், கிழிதல் போன்ற பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு உண்டு.

இதைபோல பெண்களுக்கு மாத விலக்கு பிரச்சினைகளின் போது ஏற்படும் முதுகு வலி போன்ற பிரச்சினைகளை பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும். அதே போல் முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு சிதைவு நோயினால் ஏற்படும் மூட்டுவலி, முதுகுவலி,தோல் பட்டை வலி, கழுத்துவலி போன்ற வலிகளை சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலம் பிசியோதெரபி மருத்துவர்களின் அறிவுரைகளின் மூலம் எளிதில் சரிசெய்யமுடியும்.

நவீன மருத்துவத்தின் ஒரு பகுதியான பிசியோதெரபி மருத்துவம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது. உலக பிசியோதெரபி மருத்துவர்கள் பெருமன்றம் 1951-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந்தேதி உருவாக்கப்பட்டது. அதன் நினைவாக 1996-ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8-ந்தேதி உலகத்தில் உள்ள அனைத்து தரப்பு மருத்துவர்களும் இந்த நாளை உலக பிசியோதெரபி மருத்துவர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பக்கவிளைவுகள் இல்லாத பிசியோதெரபி மருத்துவம் சென்று சேரும் வண்ணம் இந்த வருடம்நாள்பட்ட வலியை அதாவது நாள்பட்ட முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, குதிகால் வலி போன்ற வலிகளை பிசியோதெரபி மருத்துவம் கையாள்கிறது.
Dr.அருண்.,BPT.,MIAP
IAP reg no; L49330
நாகா பிசியோதெரபி சென்டர்,
எண்:3, பாலா மருத்துவமனை எதிரில்,
பெருமாள் கவுண்டர் தெரு,
வாழப்பாடி.
தொடர்பு எண்; 9943538640
9489328423

Address

Manjavadi, Pappireddipatti
Harur
636905

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+919524918131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Naga siddha clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Naga siddha clinic:

Share

Category