Dot E-commerce Services

Dot E-commerce Services E-commerce Business

29/03/2026
Buy 2 Get 1 Free Fresh Juice!Exclusive offer for this Ramadan Iftar Time!Order now by Dot App.Bit.ly/DotApp
22/02/2026

Buy 2 Get 1 Free Fresh Juice!
Exclusive offer for this Ramadan Iftar Time!

Order now by Dot App.
Bit.ly/DotApp

Combo offer of the month!
19/02/2026

Combo offer of the month!



08/02/2024

Give your valentine a love letter disguised as a heart blushing chocolate!

Download app & Order Now!

Bit.ly/DotApp

Limited stock!!!




Thanks to all.
02/01/2023

Thanks to all.

07/10/2022

தாம்பத்ய பலத்திற்கும் ஆண்மை
-------------குறைபாட்டிற்கும்-----------

ஒரு நோய்க்கான காரணமும் அது ஆரம்பமாகும் இடமும் தெரியாமல்
--------------ஒரு நோயினை -------------
தவிர்க்கவும் முடியாது குணமாக்க வும் முடியாது.

இன்று பெரும்பாலான ஆண்களை, உடல் , மன ரீதியாக காயப்படுத்திக் கொண்டிருக்கும், ஒரு விஷயம், தாம்பத்ய திருப்தியின்மை என்கிற ஆண்மைக் குறைபாடு.

காமம் உடலை விட்டு மனதில் தங்குவதும் ஆண்மைக்குறைபாடே.

முதலில் இந்த குறை பாட்டைப் பற்றி சரியாக, தெளிவாக புரிந்து கொண்டால் மட்டுமே,
மனதில் தைரியமும், சரி செய்து விடலாம், என்ற முழு நம்பிக்கையும் வரும்.

ஆண்களுக்கான இந்த குறைபாடு பெண்களுக்கும் "மன உளைச்சலை" உண்டாக்கும் என்பதை உணர்ந்து
--------------கொள்பவர்கள்------------
கண்டிப்பாக இதை சரி செய்து கொள்வது தாம்பத்ய வாழ்க்கையின் அன்பை அதிகப்படுத்தவே செய்யும்.

இந்த குறைபாடு வருவதற்கு, பல காரணங்கள் இருந்தாலும், அனை வரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரணங்கள்...!

சுவாச மண்டலமும், செரிமான மண்டலமும், சரியாக இயங்காததே

இந்த இரண்டும் தான் சிறுநீர்பை, சிறுநீரகங்களின், சக்தியைக் குறைத்து ஜனன உறுப்புக்களை, பலமிளக்கச் செய்து, ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கி விடுகிறது.

இதை ஆரம்பத்திலேயே சரி செய்யா மல் அலட்சியமாக இருந்ததினால் தான்
அனைத்து உறுப்புகளிலும் இதன் பாதிப்பின் வெளிப்பாடாய், தசை நார்கள் ,நரம்புகள், பலமிழந்து, வலுவிழந்து, இரத்தம் கெட்டுப்போய், இரத்தத்தின் அளவும் குறைந்து, உடல் மொத்தமும், பலவீனமாகி, விடுகிறது.

இதனால் தான் ஆண்மைக்கு மருந்தெடுக்கும்முன் முறைப்படி தரமான மருந்துகளால்,ராஜ உறுப்புக்களின் கழிவுகளை நீக்கி,

அதன்பின் மருந்தெடுத்தால் மட்டுமே ஆண்மைக்குறைபாட்டை நிரந்தர தீர்வுக்குள் கொண்டுவரமுடியும்.

இதில் சிலருக்கு ஒரே மாதத்தில் ஆண்மைக்குறைபாடு நிவர்த்தி யாகும்.
இன்னும் சிலருக்கோ மூன்று மாதங்களுக்குள் நிவர்த்தியாகும்

காரணம் அனைவருக்கும் இரத்தம் கெட்டுப் போன அளவு, இரத்தத்தின் அளவு, மலச்சிக்கல், மல ,ஜல,சளிக் கழிவுகளின் தன்மை ஒரே அளவில்

இருக்க வாய்ப்பில்லை, வேறுபடும் !

இதை சரியாக புரிந்து கொண்டவர் கள் மருந்து பொருட்களையோ, மருத்துவர்களின் திறமைகளையோ, குறைகூறி நேரத்தையும் காலத்தை யும் வீணடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

நமக்கு ஏற்படும் எல்லா உடல் உபாதை களுக்கும் நாமே முழு முதல் காரணம் என்பதை உணர்ந்து புரிந்து கொண்டு

பொறுமையுடன் மருந்துண்டால் எப்பேர் பட்ட ஆண்மைக் குறை பாட்டையும் அதிக பட்சம் மூன்றே மாதங்களில் மிக எளிதாக நிவர்த்தி செய்தல் சாத்தியமே.
(இன்று பெரும்பாலான ஆண், பெண்கள், ஆரோக்யம் தடுமாறி உடல், மன ரீதியாக பாதிக்க பட்டு அனேக நோய்களால் பாதிக்கப் படுவதற்கு இந்த "மன உளைசலே" காரணம் )

தன்னிச்சையாக மருந்து செய்ய முடியாதவர்கள் மட்டும் தகவல் தரலாம்

--------தாம்பத்ய பலத்திற்கு-------

சுத்தி செய்த கிராம்பு-------10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்-10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி ---10 கிராம்.
புரசம் பிசின் -----10 கிராம்
பாதாம் பருப்பு. -----10 கிராம்
சாரப் பருப்பு -----10கிராம் முந்திரிப்பருப்பு. -----10 கிராம்
நெல்லிப்பருப்பு. -----10 கிராம்
லவங்கபட்டை, ---10 கிராம்
ஏலம்., ----10 கிராம்
அதிமதுரம், ---10 கிராம்
அக்ர காரம், ----10 கிராம்
கோஷ்டம், ----10 கிராம்
சந்தனத் தூள், ----10 கிராம்
பூனைக்காலிவித்து. ----10 கிராம்
முருங்கை வித்து. ---10 கிராம்
பூமி சர்க்கரைக்கிழங்கு.-----10 கிராம்
அமுக்கரான் கிழங்கு, -----10 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு,-10 கிராம்
நிலப்பனை கிழங்கு, ---10 கிராம்
அத்தி வித்து, ---10 கிராம்
அரச வித்து, ----10 கிராம்
ஆலம் வித்து, ----10 கிராம்
நீர்முள்ளி விதை, ---10 கிராம்
நத்தைச்சூரிவிதை. ---10கிராம்

உலர்த்திப் பொடித்து சலித்து சேமித்து வைத்துக் கொண்டு காலை மாலை மூன்று கிராம் உண்டு பசும் பால் குடிக்க நல்ல பலன் தரும்.

வேறு ஆரோக்ய குறைபாடு உள்ளவர் கள் அதை நிவர்த்தி செய்து கொண்டு பயன்படுத்துவது நலம்.

வாழ்த்துக்கள்

உடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள் – ஜூஸ்கள். அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா நல்லா இர...
10/04/2021

உடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள் – ஜூஸ்கள்.

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்கும் என நினைக்கிற வீட்டில் எல்லாம் ஜீஸ் பவுடர் ஒரு வர பிரசாதம்.

முன்பெல்லாம் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் டப்பா டப்பாவாக வாங்கி வர சொல்லி வீட்டில் எல்லோரும் பருகுகிற பானமாக இருந்த இந்த TANG.. ஜீஸ் –இப்போது எல்லா மளிகை கடைகளிலும் எளிதாக கிடைக்கிறது .

சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த ஜீஸ் பவுடரை சாப்பிடாதவரே இருக்க முடியாது!

உண்மையில் இது என்ன என்று பார்த்தால்...
அழகான பெயின்ட் பவுடர் என்று நாம் அதில் உள்ள சேர்மான பொருட்களை லேபிளை பார்த்தாலே நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி குறைவு முதல் ,ஞாபக மறதி, பசியின்மை போன்ற சிறிய நோய் முதல் புற்று நோய் வரை வர வைக்க கூடிய பல தீங்கு செய்யும் பொருட்கள் அதனில் உள்ளதை லேபிளை படித்தாலே நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும் .

ஜூஸ் பவுடர்கள் –ஜூஸ்கள்
பல ஆண்டுகாலம் இந்தியா மற்றும் எல்லா நாடுகளிலும் பல குளிர் பானங்கள் கிடைக்கபெற்றாலும் அவைகளில் TANG.,RASNA......போன்ற பவுடர் ஜீஸ் வகைகள் எல்லோருடைய வீட்டிலும் எளிதாக ஆக்கிரமித்துள்ளது .

சமிபகாலத்தில் நடந்த ஓர் ஆராய்ச்சியில் இந்த ஜூஸ் பவுடர்களில் பல தீங்கு பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவற்றுள் சிட்ரிக் அமிலம் Trisodium Citrate, Tricalcium Phosphate, ஸாந்தன் கம், கம் அரபு, பீட்டா-கரோட்டின், போலிக் ஆசிட் மற்றும் பல.

இந்த கட்டுரையில் ஜூஸ் பவுடர்கள் –அதிலும் TANG., RASNA . பற்றி சில தீங்கான உண்மைகளை பற்றி பார்ப்போம்.

ஜீஸ் பவுடர்களில் சேரக்கூடிய சேர்மான பொருட்கள் ( அவர்கள் லேபிளில் குறிப்பிட்டது போல் )

🃘 சர்க்கரை
🃘 சிட்ரிக் அமிலம்
🃘 Trisodium Citrate
🃘 Tricalcium Phosphate
🃘 ஸாந்தன் கம்
🃘 கம் அரபு,
🃘 சோடியம் Carboxymethyle Cellulose
🃘 வைட்டமின் சி
🃘 உப்பு
🃘 நிறங்கள் டைட்டானியம் டை ஆக்சைடு / Tatrazine / Sunset மஞ்சள் FCF
🃘 பீட்டா-கரோட்டின்
🃘 போலிக் ஆசிட்
🃘 வைட்டமின் B2

1. சர்க்கரை
ஜீஸ்களில் முக்கிய மூலப்பொருள் சர்க்கரை. சர்க்கரை நமது உடல்த்திற்கு எவ்வளவு கேடு என்பது நமக்கு தெரியும். அதனால் அதை பற்றி பேச அவசியம் இல்லை..

2. சிட்ரிக் அமிலம்
பொது பல் மருத்துவ அகாடமி படி, ஹைட்ரோ க்ளோரிக் அல்லது கந்தக அமிலம் விட சிட்ரிக் அமிலம் பல் எனாமலுக்கு மிகவும் கேடு.இப்போது கிடக்கிற இந்த சிட்ரிக் அமிலம் முழுக்கு முழுக்க ஆய்வகத்தில் தயாரிக்கபடும் ஒரு வேதியியல் கலவை .

3. Trisodium Citrate
அளவுக்கு அதிகமான ஓர் சேர்க்கை உறுப்பான Trisodium Citrate உபயோகிப்பதனால் சிறுநீரக சீயழிலப்பு ஆபத்து அதிகரிக்கபடுகிறது. மேலும் சில மக்களுக்கு ஓவ்வாமை எதிர்வினைகளுக்கும் ஏற்படலாம். நிச்சயமாக கர்ப்பிணி பெண்களும் ,குழந்தைகளும் இதை பயன்படுத்தவே கூடாது .

4. Tricalcium Phosphate
இது ஒரு ரசாயன் சேர்மம் ஆகும். ஜீஸ்களில் சேர்க்கப்படும் Tricalycium பாஸ்பேட், பெரும் அளவில் சொப்புகள், சோப்பு பவுடர் மற்றும் பிற சுத்தம் செய்யப்படும் பொருட்களில் அதிகமாக பயன்படுத்தபடுகிறது.
இதனால் சிறுநீர் அதிகரித்தல், உலர் வாய், தாகம் அதிகரித்தல், பசியின்மை, மலச்சிக்கல், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். புற்று நோய் கூட உருவாகும் .

மூத்திரப்பை சார்ந்த நோய்கள் எளிதாக உருவாக காரணமாகும் இந்த பெயின்ட் பவுடர் .

5. அஸ்பார்டேம்
இது ஜீஸ்களில் உபயோகிக்கும் ஓர் செயற்கையான. இனிப்பு இது தொடர்ந்து பயன்பத்துவதன் மூலம் மூளை திசுக்களின் துளைகள் ஏற்படலாம் .

கர்ப்பமான பெண்கள் இதை அருந்துவதால் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு மூளை மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது, மேலும் இது வலிப்பு, தலைவலி, ஒற்றைத்தலைவலி, சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்று நோயை கருவில் விளைவிக்கிறது.

இந்த மூலக்கூறான அஸ்பார்டேம் முற்றிலும் சந்தையில் இருந்து அகற்றபட்ட வேண்டியது அவசியம். தற்போது இது ஆரஞ்சு கலந்த ஜீஸ்களில் காணப்படுகிறது.

6. அக்சல் ப்ளேம் பொட்டசியம் (Acesulfame Potassium)
FDA ஒப்புதலின் படி இந்த செயற்கையான இனிப்பை ஜீஸ் பவுடர்களில் பயன்படுத்தப்படுகிறது என்பது ஓர் கேள்விக் குறியாகவே உள்ளது.

சமிபத்தில் நடந்த ஓர் ஆய்வின் படி இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றது என்று கூறபடுகிறது.
மேலும் ஆராய்ச்சியின் படி இது மார்பக மற்றும் நுரையிரல் கட்டிகள், நாள்ப்பட்ட சுவாச நோய் மற்றும் லுகேமியா நோய் வருவதற்கு இது வழிவகுக்கின்றது. ஜீஸ் பவுடர்களில் இந்த ரசாயனம் பயன்படுத்தபடுகிறது.

7. Maltodextrin
இது ஜீஸ் பவுடர்களில் ஒரு கைட்டிதன்மைக்காக பயன்படுத்தபடுகிறது. இது பல பக்க விளைவுகள் கொண்டவையாகும்.

மனிதன் இதை உட்க்கொள்ளும் அளவை பொறுத்து mild முதல் கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும் மேலும் இது நமது ஆரோகியதிற்க்கு
ஆபத்தானது.

8. ஸாந்தன் கம்
இதை பயன்படுத்துவதால் குடல் சார்ந்த விளைவுகள், ஏற்பட காரணமாக உள்ளது. ஜீஸ் பவுடர்களில் இதை பயன்படுத்துவதால் குடல் சார்ந்த சிக்கலான வயிரறு வலி, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் தோல் எரிச்சல், தலைவலி, மூக்கு, தொண்டை மற்றும் நுறையீரல் எரிச்சல், வயிறு வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

9. கம் அரபு (Gum அரபிக்)
இது ஒரு கெட்டி தன்மைக்காக கம் அரபு -juice powder இல் பயன்படுத்தபடுகிறது. இதை பயன்ப்படுதுவதால் கொழுப்பு, ஒவ்வாமை, சுவாச பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகங்கள், கல்லீரல் சேதப்படுகிறது.

10. சோடியம் Carboxymethyle Cellulose
இந்த மூலபொருள் மட்டும் பாதுகாப்பானது. மேலும் இதுவும் கனம் இரசாயன கலவை தான்.

11. டைட்டனியும் டை ஆக்சைடே
இது நிறத்திற்காக ஜீஸ் பவுடர்களில் பயன்படுத்தபடுகிறது. தொழில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு படி இது மனிதனின் புற்று நோயை உருவாக்குகிறது

12. Sunset Yellow FCF
இந்த நிறமி பெரும் மக்களுக்கு ஒரு ஓவ்வாமையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆஸ்பிரின் ஒவ்வாமை. உலக சுகாதார அமைப்பின்படி, இதனை நுகர்வதாலே கட்டிகள் அதிகரிக்கும் தன்மை உண்டாக்குகிறது என்கிறது ஆய்வு ..அப்படியானால் இதை அருந்துபவர்கள் கதி ?

13. Tartrazine
Juice இல் உபயோகிக்கப்படும் செயற்கை நிறமான “மஞ்சள் #5”. இதனை Tartrazine என்று கூறலாம். மேலும் இது சுவாச பிரச்சனை மற்றும் Hyperactivity போன்றவை அதிகரிக்க மிக முக்கிய காரணமாய் அமைகிறது

14. வைட்டமின்கள்.
செயற்கையான பல வைட்டமின்கள் உள்ளடக்கியது..இதை பருக இயற்கையான பானங்களில் உள்ள வைட்டமின்களை கிரகிக்கும் தன்மையை உடல் இழந்து விடும்.

இந்த TANG RASNA,.. ஜீஸ் பவுடர்கள் இயற்கையான சிட்ரஸ் உள்ளடக்கிய ஜீஸ் பவுடர் அல்ல .செயற்கையான எசன்ஸ் கலந்த ,ஆய்வகத்தில் உண்டாக்கிய மிக மோசமான விளைவுகளை உருவாகும் ஒரு மிக மோசமான் பவுடர் பெயின்ட்டே ஆகும்

Juice powder அனைத்து சுகாதார இயற்கை சிட்ரஸ் நன்மைகள் கொண்ட Orange சாறு அல்ல; இது ஆரஞ்சு போன்ற சுவை வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பானம் ஆகும்.

நன்றி.


அமுக்கரா எனும் அற்புத மூலிகை"பெண்களுக்குத் துணை சதாவேரிக் கிழங்கு;ஆண்களுக்குத் துணை அமுக்கரா கிழங்கு" எனும் மூலிகை பழமொழ...
07/11/2020

அமுக்கரா எனும் அற்புத மூலிகை

"பெண்களுக்குத் துணை சதாவேரிக் கிழங்கு;
ஆண்களுக்குத் துணை அமுக்கரா கிழங்கு" எனும் மூலிகை பழமொழி இதன் மருத்துவப் பெருமையைப் பறைசாற்றுகிறது.

சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு.
சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது. மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு.

அடையாளம்: இரண்டு முதல் மூன்றடிவரை வளரும் செடி வகை. முட்டை வடிவம் கொண்ட இலைகளின் மேற்பரப்பில் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். சிவப்பு நிறத்தில் சிறிய அளவிலான காய்களைத் தாங்கியிருக்கும். ஆங்கிலத்தில் Indian ginseng என்றும் தாவரவியலில் Withania somnifera என்றும் பெயர் கொண்ட அமுக்கரா (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.
‘விதானோலைட்’ (Withanolide), ‘விதாஃபெரின்’(Withaferin), ‘சைடோஇண்டோசைட்ஸ்’ (Sitoindosides), ‘சோம்னிஃபெரைன்’ (Somniferine) போன்ற நலம் பயக்கும் வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.

பெயர்க்காரணம்: அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி ஆகிய மாற்றுப் பெயர்களைக் கொண்டது அமுக்கரா.

அமுக்கரா அதிகம் நம் வாழ்க்கையில் பயன்படுத்த மறந்து இருப்பது அதே நேரத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டியது.
முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு.

பழமையான மூலிகையான அமுக்கரா வை நம்முடைய முன்னோர்கள் ஆயுர்வேத முறையில் ஞாபகமறதியை சரி செய்ய பயன்படுத்தி வந்தனர்.
இதில் இயற்கையாகவே நினைவு திறனை அதிகரிக்கும் பண்பு உள்ளது.நம்முடைய உடலுக்கு தேவையான வேதி பொருட்கள் புரதங்கள்,அமினோஅமிலங்கள் இதில் நிரம்பியுள்ளதால் இது நமக்கு நல் ஆற்றலை தருகிறது.

அமுக்கரா வின் குணங்கள்:

• தன்மை கசப்பு, துவர்ப்பு, கார சுவை கொண்டது.
• உஷ்ண குணம், மக்கட் பேறு பெறுவதற்கும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.
• வாத, கப தோஷங்களை குறைக்கும்.
• பலத்தை அதிகரிக்கும்
• இளமையான தோற்றத்தை அளிக்கும்
• முதுமையை குறைக்கும்
• புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பசியைத் தூண்டும்
• நல்ல உறக்கத்தைத் தரும்
• காசம் என்றழைக்கப்படுகிற சளி, இருமல், மூச்சுத் திணறல்
• காயம்,சருமநோய், தோல்நோய்கள்(குஷ்டம்), வீக்கம்
ஆகிய நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது அஸ்வகந்தா.


ஆண்மையை அதிகரிப்பது மட்டுமல்ல,அமுக்கரா நம் மூளையின் நேர்மறை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.மூளையில் ஏற்படும் அழற்சி,வயோதிகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
நமது உடலில் உள்ள Free radicals ஐ வெளியேற்றி உடலை ஊக்கமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும். உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை அமுக்கரா சீர் செய்யும்.

இதன் உறுப்புகளில் இருந்து நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.மேலும் இதில் உள்ள வித்தனாய்டு மற்றும் சோம்னிட்டால் சத்துக்கள் நம்முடைய மனஅழுத்தத்தை குறைத்து நம்மை தேவையற்ற சிந்தனையில் இருந்து தடுக்கிறது. எனவே இதனை நம் வீட்டிலே வளர்ப்பது மிகவும் அவசியமானது.இதனை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

அமுக்கரா வேரில் உள்ள சத்துக்கள் நம்முடைய இதயத்திற்கு சத்து மருந்தாக பயன்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மேலும் கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வை மேம்படவும் உதவி புரிகிறது.உடலில் தேங்கும் கெட்ட கொலட்ராலை குறைத்து,இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

அமுக்கரா இலைகளை அரைத்து அதன் சாறை நம்முடைய காயங்களுக்கு மேல் தடவினால் விரைவில் குணமாகும். அதே போல் இதன் வேர் சாறை நம்முடைய உடம்பில் அடிபட்டோ வேறு காரணத்தாலோ ஏற்பட்டிருக்கும் வீக்கங்கள் மேல் தடவினால் அந்த வீக்கம் விரைவில் கரையும்.


அமுக்கரா பொடியை அன்றாடம் உண்டு வந்தால் நமது நரம்பு மண்டலமும் வலுவாகிவிடும்.மேலும் மலட்டுத்தன்மையும் நீங்கும்.
காலையில் அஸ்வகந்தா வேரின் பவுடரை சிறிதளவு நெய் அலலது தேன் கலந்து சாப்பிட்டு வருவது சரியாய் இருக்கும்.

ஆண், பெண் இரு பாலருக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் அமுக்கரா உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளை செய்யக்கூடியது.
அமுக்கராவிற்கு கெட்ட கிருமிகளை முற்றிலும் அழிக்கும் குணம் உள்ளது.அதனால் இது சிறுநீரக இரைப்பை-குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்துகிறது.
புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ள இது உடலை கீமோதெரபியின் பக்க விளைவுகளிலிருந்தும் காக்கிறது.
தொடர்ந்து 4 வாரங்கள் அமுக்கராவை உட்கொண்டுவந்தால் நீரழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் அதிகமாகி இருக்கும் சர்க்கரை அளவு குறையும்.

அமுக்கரா தைராய்டு சுரப்பை அதிகப்படுத்துகிறது இதன் மூலம் ஹைப்போ தைராய்டு பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம்.
சரி எப்படி இதை உண்ண வேண்டும்:-

பாரம்பரியம முறைப்படி அமுக்கரா பொடியினை வெதுவெதுப்பான பசும்பால் மற்றும் சுத்தமான மலைத்தேனுடன் கலந்து இரவு உறங்கும் முன் உட்கொள்கிறார்கள்.

பொதுவாக கால் அல்லது அரை தேக்கரண்டி அளவு பொடியை ஒரு நாளிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்ற அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தேனிற்கு பதிலாக நாட்டு சர்க்கரையையும் சேர்த்துக்கொள்ளலாம்,

பொதுவாக அமுக்கராவை டீயில் கலந்து உட்கொள்வது பரவலாக பின்பற்றப்படுகிறது.

சித்த மருந்து கடைகளில் அமுக்கரா லேகியம் எளிதாக கிடைக்கும்...
பவுடராகவும் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்துங்கள் அதன் மூலம் தாம்பத்திய உறவில் இருக்கும் சிக்கல்களை தவிருங்கள்.

அழகான வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் அமுக்கரா அருமையான செழுமையான மூலிகை இதை உட்கொள்பவர்களுக்கு நல்ல உடல் பலம் கிடைக்கும்.…

தூக்கமின்மை குறைபாட்டை சரி செய்து, சுகமான தூக்கம் பெற அஸ்வகந்தாவின் சூரணத்தை சர்க்கரையுடனும் நெய்யுடனும் சேர்த்து கலந்து இரவில் தூங்குவதற்கு முன் உணவு சாப்பிட்ட பிறகு உண்டு வந்தால் பலன் பெறலாம்.

கட்டிகள் எந்தவிதமாக இருப்பினும் அதை சரி செய்யும் திறன் கொண்டது அமுக்கரா. அனைத்துவிதமான கட்டிகளை கரைக்க அமுக்கராவின் இலைகளை வைத்து பற்று போட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன சித்த மருத்துவ நூல்கள்.

வாதத்தினால் ஏற்படும் இதய நோயை குணப்படுத்த அமுக்கரா இலையை அரைத்து அதை பசையாக்கி, அதில் தான்றிக்காயின் பொடி மற்றும் வெல்லத்தை சேர்த்து வெந்நீருடன் உணவு உண்ட பிறகு பருகி வரலாம்.

குழந்தை புஷ்டியாகவும் ஆரோக்கியமாக வளர அமுக்கராவால் செய்யப்பட்ட நெய்யை சாப்பிட்ட பிறகு பருக வைக்க வேண்டும்.

அமுக்கரா பால் கஷாயத்தை நெய்யுடன் சேர்த்து மாதவிடாய் முடிந்து, ருது காலத்தில் உள்ள பெண்கள் குளித்த பிறகு பருகினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும் கிடைக்க அமுக்கராவின் வேறில் பால் கஷாயம் செய்து நெய் சேர்த்து பால் கொண்டு உணவு உண்ட பிறகு பருக வைக்க வேண்டும்.

ஆரோக்கியம் மேம்பட தினமும் அஸ்வகந்தா சூரணத்தை பால் அல்லது நெய் அல்லது தைலத்தோடு சேர்த்து உண்ண வேண்டும். இதை 15 நாட்கள் பின்பற்றலாம்.

பாலில் வேகவைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அமுக்கரா சூரணத்தை, பாலில் கலந்து பருக, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவற்றின் தரமும் அதிகரிக்கும். மனத்தைச் சாந்தப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்கும் பானமாகவும் இந்த ‘அமுக்கரா-பால்’ பயன்படும்.

அமுக்கரா பொடி இரண்டு பங்குடன், கற்கண்டு பொடி ஆறு பங்கு சேர்த்து, அரைக் கரண்டியளவு தேனில் குழைத்து அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர, பலவீனத்தால் ஏற்படும் நடுக்கம் மறையும்.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினைக்கு அமுக்கரா சார்ந்த மருந்துகள் பலன் தரக்கூடியவை.

வயோதிகத்தில் ஏற்படக்கூடிய மறதியைத் தள்ளிப் போடும் ஆற்றல் இதற்கு இருக்கிறது.

நீர்முள்ளி விதை, குறுந்தொட்டிவேர், வெள்ளரி வேர், அமுக்கரா கிழங்குப் பொடி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டுவர, விந்தணுக்கள் சார்ந்த குறைபாடுகள் நீங்கும்.

இலைகளுடன் மிளகு சேர்த்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வழங்க, காய்ச்சலின் தீவிரம் தணியும்.

‘பாலும் பழமும்’ எனும் பதத்தை, இளம் தம்பதியினருக்கான வாக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அவ்வகையில் ‘பாலும் அமுக்கரா பொடியும்’ என்பதை நாற்பதைக் கடந்தவர்களுக்கான மூலிகை மந்திரமாகச் சொல்லலாம். அதே நேரத்தில், ஆண்களுக்கு உண்டாகும் பாலியல் பிரச்சினைகளுக்கான ‘மூலிகை வயாகராவாக’ மட்டுமே அமுக்கரா பார்க்கப்படுகிறது.
Sd
அமுக்கரா கிழங்கு, பாதாம் பருப்பு, பிஸ்தா, சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து பாலிலிட்டுக் கொதிக வைத்துப் பருக, உடலுக்கு உடனடியாக ஊட்டம் கிடைக்கும்.

நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் பிடியில் நீண்ட நாட்களாகச் சிக்கித் தவிப்பவர்களின் உள்ளுறுப்புகள் சோர்ந்துவிடாமல் பாதுகாக்கும் தன்மை அமுக்கராவுக்கு உண்டு.

அமுக்கரா கிழங்கு, ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு,
சிறுநாவற் பூ ஆகியவற்றுடன் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் ‘அமுக்கரா சூரணம்’ எனும் சித்த மருந்து, பல நோய்களுக்கான எதிரி! மற்ற மருந்துகளின் ஆற்றலை அதிகரிக்கவும், சில மருந்துகளைச் சுமந்து செல்லும் வாகனமாகவும் அமுக்கரா சூரணம் பயன்படுகிறது.

இதன் கிழங்குடன் சில மூலிகைகள் சேர்த்து நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் தலை முழுகும் எண்ணெய் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் மாயங்கள் நிகழ்த்தும்.

மெலிந்து போன அங்கங்களையும் அஸ்வகந்தாவினால் செய்த தைலத்தை கொண்டு தேய்த்தால் பலம் மிகுந்தவையாக மாற்ற முடியும்.

அமுக்கரா, சிற்றாமுட்டி தாவரத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் அசுவகந்தாதி எண்ணெய், வெளிப்பிரயோகமாகப் பயன்படும் சிறந்த உடல்பிடி மருந்து.

அமுக்கரா கிழங்கு பொடி, கேழ்வரகு மாவு, சுக்குத் தூள், கஸ்தூரி மஞ்சள் இணைந்த கலவையை, சாதம் வடித்த தண்ணீரில் குழைத்து வீக்கங்களின் மீது தடவி வர விரைவில் குணம் கிடைக்கும்.

இவ்வாறான பல தனித்துவ மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால்தான் கீர்த்தி பெரிது என்று அமுக்கரா வை குறிப்பிடுகிறார்கள்.!

Address

146D, Main Road
Kadayanallur
627751

Opening Hours

Monday 7:30am - 10pm
Tuesday 7:30am - 10pm
Wednesday 7:30am - 10pm
Thursday 7:30am - 10pm
Friday 7:30am - 10pm
Saturday 7:30am - 10pm
Sunday 7:30am - 10pm

Telephone

+916381163960

Alerts

Be the first to know and let us send you an email when Dot E-commerce Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dot E-commerce Services:

Share