26/03/2025
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள அரசு சமுதாய நல நிலையத்தில் சென்னை, வைஷ்ணவி நல மற்றும் தொண்டு அறக்கட்டளை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை நோய்களுக்கான சித்த மருந்துகள் மாதுளை மணப்பாகு, அன்னபேதி செந்தூர மாத்திரை மற்றும் உடல் எடை அதிகரிக்க பஞ்ச முட்டி கஞ்சி ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார நல அலுவலர் டாக்டர் ராஜா அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்
கரியாலூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் ராஜேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் மயில்சாமி, மருத்துவர் அரவிந்தன், பழங்குடியினர் நடமாடும் சித்த மருத்துவ பிரிவு மருத்துவர் ரத்தினமால்யா ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் வைஷ்ணவி நல மற்றும் தொண்டு அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் சுதர்சன ராவ் மற்றும் திட்ட இயக்குனர் தீபா ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு மருந்துகளை வழங்கி விழிப்புணர்வு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார நல செவிலியர் ஜெயந்தி, சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ரவி, மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் கல்வராயன் மலை பகுதியில்
உள்ள கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி இறுதியில் கரியலூர் அரசு சுகாதார நல நிலைய சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபு அவர்கள் நன்றி கூறினார்.
கல்வராயன் மலையில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கு சித்த மருந்துகள் வழங்க அனுமதி அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார நல அலுவலர் அவர்களுக்கும், ஆதரவு அளித்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அவர்களுக்கும் மருந்துகள் வழங்கும் வைஷ்ணவி நல மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் திரு மோகன் அவர்களுக்கும் சித்த மருத்துவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.
- DrPrabhu Chinnasamy MD(S)