24/07/2025
ஒரு நடிகனாகனும்னு பெரிய
பெரிய முயற்சிகள் எல்லாம்
செய்தேன்.சில வாய்ப்புகள்
வந்தது.அந்த வாய்ப்புகள்
வந்த போது தான் தெரிந்தது.
நடிக்கிறது; நான் நினைக்கிற
மாதிரி சுலபம் இல்லைன்னு. ...
ஒரு நெடுந்தொடர் படப்பிடிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனி;
" எதாவது இன்ஸ்டியூட்ல
சேர்ந்து நடிக்க கத்துக்க.இப்படி
ஒரு ஷாட் எடுக்க பத்து டேக்
வாங்காத " ன்னு கடிந்து
கொண்டார்.சரின்னு ஒரு
இன்ஸ்டியூட்ல சேர்ந்து நடிப்பை முறையா கத்துக்க ஆரம்பிச்சேன்.
அப்பதான் திரைப்பட நடிப்புன்னா
சும்மா இல்ல.உடலசைவு
மொழியில ஆரம்பிச்சி
குரல் ஏற்ற இறக்கம்,
மேனரிசம்,மைம்,டைப் ஆப்
வாய்ஸ்னு எவ்ளோவோ விசயம் அதுக்குள்ள இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.
நான் படித்த பதினைந்து
பேர் குழுவில நேரடி
நடிப்புத்தேர்வுல இரண்டாவது மாணவனாகவும் எழுத்துத் தேர்வுல முதலாவது மாணவனாகவும் வந்தேன்.அந்த காலகட்டத்துல
இன்ஸ்டியூட்ல இருந்த வீடியோ
கேமரால பலப்பல சினிமா
காட்சி நாவல் காட்சிகளை
நடித்து நடித்து அலுத்து விட்டது.
அதன் பிறகு சினிமாவில் சிறிய வேடங்களில் நடிக்க வேண்டும்.
என்ற ஆர்வமே இல்லாமல்
போய் விட்டது.
அப்போதுதான் இயக்குனர் பாக்யராஜின் உதவி இயக்குனர்கள்; பார்த்திபன்,லிவிங்ஸ்டன் என்று பலரும் ஹீரோவாக நடித்து வந்தனர்.சரி நாமும் உதவி இயக்குனர் ஆயி ... கதாசிரியர் ஆயி ... இயக்குனர் ஆயி ... ஹீரோ ஆய்டனும்னு சில இயக்குனர்கள்ட்ட உதவி இயக்குனரா சேர முயற்சி பண்ணினேன்.
பல கதை விவாதம், ஒரு படம்,
அரை படம் வேலைப் பார்த்ததுனு
காலம் ஓடிகிட்டே இருந்தது.
உருப்படியா எதுவும் நடக்கல.
சினிமால நான் ஜெயிச்சா நீயும் வந்துருவேன்னு சொல்லிட்டிருந்த நண்பர்கள் பலரையும் சில பல
காரணங்களால
பிரிய வேண்டி வந்தது.
ஊர்லயும் சில குடும்ப பிரச்சினைகள். " அட போங்கய்யா நீங்களும் உங்க சினிமாவும் " னு ஊருக்கு வந்துட்டேன்.
இங்க வேலைக்கு என்ன பன்றதுன்னு யோசிச்சி தினத்தந்தில
யோகா வகுப் பெடுப்பதாய்
ஒரு விளம்பரம் பண்ணினேன்.
கடகடனு பல மாணவர்கள் சேர்ந்தனர்.ஏற்கனவே நான்
யோகாவை பல குருமார்களிடம் கற்றிருந்ததால் யோகா சிகிட்சை முறைகளோடு இயற்கை வாழ்வியல் முறைகளையும் சேர்த்து பயிற்சி கொடுத்து பல நோயாளிகளை குணப்படுத்தவோ அல்லது
முன்னை விட நல்லாருக்கேன்.
என்ற நிலைக்கு மாற்றவோ
செய்தேன்.
சினிமா என்னை துரத்தி துரத்தி வேட்டையாடி உருக்குலைத்து
விரட்டி விட்டது. யோகமோ
என்னை அப்படியே
வாரி வளர்த்தெடுத்தது.
எங்க இடத்துக்கு வகுப்பெடுக்க வாங்க,
என் பிரச்சினையை கேளுங்கனு பலரும் என்னை நோக்கி படையெடுத்தனர்.
அதில் முக்கியமானவர் ராஜவர்மன் என்ற பாரதி.எனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை அறிமுகம் செய்ததோடு நான் மஹா யோகா என்ற நூலை எழுத பொருளுதவியும் செய்து நான் ஒரு மஹா கலைஞனாக உருவாக காரணமாக அமைந்தார்.யோகா ஆசிரியர் பணி ஆரம்பித்து பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன.
மஹா யோகா நூலை எழுதி 13 ஆண்டுகள் ஆகி விட்டன.அதன் பிறகு ஆதி மருத்துவம் என்று மற்றொரு இயற்கை வாழ்வியல் நூலையும் எழுதி விட்டேன்.நடிப்புக்கலை என்ற Pdf நூலும் எழுதி வெளியிட்டேன்.
யோகம்; என் சினிமா காயங்களுக்கு மட்டுமல்லாது தன்னை நாடி வந்த பலரின் உடல் மன காயங்களையும் ஆற்றும் மஹா வைத்தியனாக
என்னை மாற்றியது.!
https://youtu.be/d8QwaPPHztY
-ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில்D.Y.T.
படம்: 2012 ஆம்
ஆண்டு தினத்தந்தி பத்திரிகையில் வெளி வந்த எனது மஹா யோகா நூலிற்கான மதிப்புரை.அதில் எனது யோகா தெரபி குரு காலஞ்சென்ற Dr.A.S.அசோக்குமார் அவர்களின் வாழ்த்தும் கையொப்பமும் அடங்கி உள்ளது.!🧘👨👨👦👦💥🌴🍁
வாழ்க வையகம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் ...
👨👨👦👦🌴💥🙏🏼❤️🍁