ANBU Homoeo Clinic

ANBU Homoeo Clinic Holistic and Individualized Approach to Health
Gentle & permanent Cure
Online consultation available.

வயது 5 ஆண் பேச்சு வரவில்லை.நாக்கு தடித்து இருந்தது.நாக்கு வாய்க்கு வெளியே நீட்ட முடியாது.அடிக்கடி பல்லை கடித்தல் வாணீர் ...
23/05/2025

வயது 5 ஆண்
பேச்சு வரவில்லை.
நாக்கு தடித்து இருந்தது.
நாக்கு வாய்க்கு வெளியே நீட்ட முடியாது.
அடிக்கடி பல்லை கடித்தல்
வாணீர் ஊற்றும். மூக்கில் எப்பொழுதும் சளி ஒழுகும்.
எப்போதும் சளி தொடர்ந்து சளி இருமல்.
நடக்க தாமதம். பேச்சே வரவில்லை.
பற்களில் சொத்தை. கருப்பு நிறம்.
பருவ மாறுதல் கூடுதல் தொந்தரவு தரும்.
குளிர்ந்த பானங்கள் குளிர்ந்த உணவு சளியை அதிகப்படுத்தும்.
தலை பெரிதாக இருந்தது.
தலையில் அதிக வியர்வை.
தானே சாப்பிட முடியாது.
ஊட்ட வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மலம் கழித்தல்.
எந்நேரமும் துரு துரு வென இருத்தல். (Hyper activity )
ஏதாவது கேட்டு அடம் பிடித்தல்.
கைக்கு வந்த பொருளை உடைத்தல் அல்லது கிழித்தல்.
பல் துலக்க மறுத்தல். அதே நேரத்தில் குளிக்க ஆசைப்படல்.

கடந்த ஒன்னறை ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை. குறிகளுக்கு தக்கபடி ஹோமியோ மருந்தை தேர்வு செய்து மாற்றி வந்தோம். படிப்படியான முன்னேற்றம்.
சிறப்பு பள்ளிக்கு சென்று வந்தவன்.
சிறப்பு பள்ளி ஆசிரியர்களே நல்ல முன்னேற்றம் உள்ளது. என்கின்றனர். மேலும் வளர்ச்சி குறைந்த பிள்ளைகளோடு சேர்ந்து அவர்களை போல பின்னோக்கி நடந்து கொள்கிறான். இது தொடர்வது நல்லதல்ல. நார்மல் பள்ளிக்கு அனுப்புங்கள். இங்கே அழைத்து வர வேண்டாம் என கூறிவிட்டனர். தற்போது பள்ளி சென்று வருகிறான். ஒரளவிற்கு பேச்சு வருகிறது. தனது தேவையை சொல்கிறான்.
சிகிச்சை தொடர்கிறது.

அன்பு ஹோமியோ கிளினிக்
காரைக்குடி / திருப்பத்தூர்
94866 11164 / 077080 47158

வயது 29 பெண்.கடந்த ஏழு மாதங்களாக இடதுபக்க நெஞ்சு வலி. நெஞ்சு பாரம். பெருமூச்சு விடுதல்.செருமல் - வறட்டு இருமல் அடிக்கடி....
05/05/2025

வயது 29 பெண்.
கடந்த ஏழு மாதங்களாக இடதுபக்க நெஞ்சு வலி. நெஞ்சு பாரம்.
பெருமூச்சு விடுதல்.
செருமல் - வறட்டு இருமல் அடிக்கடி.
தூக்கமின்மை.
மட்டன் சிக்கன் சாப்பிட்டால் செறிமானமின்மை.
இதய வலி முதுகை நோக்கி பரவுதல்
இடது பக்கம் படுத்தால் மூச்சு விட சிரமம்.
அளவு கடந்த சோர்வு. பலவீனமாக உணருதல்.
தாகமின்மை.
பசியின்மை.
மலச்சிக்கல் வாரத்திற்கு ஒரு முறை மலங்கழித்தல்.
வெள்ளைப்படுதல்.

மாதவிலக்கு ஐந்து நாள் இருக்கும். ஆனால் கடந்த மாதம் 20 நாட்கள் கட்டி கட்டியாக குறைவாக இருத்தல்.
நடந்தால் அசைந்து கொண்டிருந்தால் தொந்தரவுகள் குறைகிறது. உட்கார்ந்து இருந்தால் படுத்தால் தொந்தரவுகள் கூடுகிறது.
தலைவலி தலை பாரமாக இருத்தல்.
கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் தலைவலி பாரம் சற்றே குறைகிறது.

இதெல்லாம் விட அவரது மனதை பாதித்தது
சித்தாப்பா உட்பட ஐந்து பேர் (நெருங்கிய உறவினர்கள் ) இறப்பு. அதுவும் ஒரு வருடத்திற்குள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா ஊசி போட்டதால் அடிக்கடி இருமல் சளி தொந்தரவுகள்.

இவரது எல்லா குறிகளையும் ஆய்வு செய்தோம். இவரது குறிகள் காட்டிய ஹோமியா மருந்தை அளித்து ஒரு வாரம் கழித்து வரச்சொன்னோம்.
தற்போது அவரது தூக்கம் பசி இதயவலி பெருமூச்சு விடல் உள்ளிட்ட தொந்தரவுகள் 60% குறைந்தது. சிகிச்சை தொடர்கிறது.

அன்பு ஹோமியோ கிளினிக்
காரைக்குடி / திருப்பத்தூர்
94866 11164 / 077080 47158

Empowering Health, Enriching life. Celebrating the power of homeopathy.
10/04/2025

Empowering Health, Enriching life. Celebrating the power of homeopathy.

10/04/2025

World Homeopathy Day April 10,2025.

வயது 60 பெண்.இடது சினைப்பையில் கேன்சர் கட்டி பரவி கிட்னிக்கும் பரவியது. 5 தடவை ஹீமோதெரபி செய்துள்ளார். ஹீமோகுளோபின் 7.4....
09/04/2025

வயது 60 பெண்.
இடது சினைப்பையில் கேன்சர் கட்டி பரவி கிட்னிக்கும் பரவியது.
5 தடவை ஹீமோதெரபி செய்துள்ளார். ஹீமோகுளோபின் 7.4.
யூரின் அடக்க முடியல கடுப்புடன் கூடிய எரிச்சல்.
வயிறு வலி அதிக உணவு எடுத்தால் வலி.
கல்லீரல் வீக்கம்.
தானே எழுந்து நடக்க முடியாது. இரவில் அதிக தடவை யூரின் வருதல். அவ்வப்போது காய்ச்சல். பசியின்மை.
சிறிது நேரம் உட்கார முடியாது. படுக்க வேண்டும்.

கடந்த பத்து மாத ஹோமியோ சிகிச்சை.
ஹீமோகுளோபின் 20- 8 -2024 ல் - 9.8
10 - 3 - 2025 ஹீமோகுளோபின் அளவு
10.1.
தற்போது தனது வேலையை அவர் கவனித்துக் கொள்கிறார்.
வீட்டு வேலை, காய் நறுக்குதல் ,பாத்திரம் கழுவுதல் வேலைகளை செய்கிறார்.
சிகிச்சை தொடர்கிறது.

அன்பு ஹோமியோ கிளினிக்
காரைக்குடி / திருப்பத்தூர்
94866 11164 / 077080 47158

மனிதன் இயற்கை  பரிணாமத்தின் உயர்ந்தபட்ச விளைவு. எனவே மனிதனிடம் உயிரற்ற இயற்கையான கல், மண் ,கனிம வளங்களின் பல்வேறு உயிரின...
30/03/2025

மனிதன் இயற்கை பரிணாமத்தின் உயர்ந்தபட்ச விளைவு. எனவே மனிதனிடம் உயிரற்ற இயற்கையான கல், மண் ,கனிம வளங்களின் பல்வேறு உயிரின ஜீவராசிகள் , தாவர வகை ,விலங்கு வகை, புழு பூச்சி ,ஊர்வன பறப்பன , பாலூட்டி ஜீவராசிகள் பண்புக் கூறுகளும் உண்டு. மனிதன் மேலும் மேலும் உடலளவிலும் மன அளவிலும் கீழிலிருந்து மேல் நிலை நோக்கி வளர்ச்சி அடைய வேண்டும். அவ்வாறு இல்லாமல் உயிரற்ற இயற்கை உயிருள்ள இயற்கையின் பண்புக் கூறுகள் சிறு அளவில் வெளிப்பட்டால் மனிதனுக்கு நோய்கூறுகள் வெளிப்படுகின்றன. இதற்கு மாறாக பெற்றோர்களிடம் ஆரோக்கியமற்ற நிலை காரணமாக உயிரற்ற இயற்கை உயிருள்ள இயற்கை பண்புக் கூறுகள் அதிகமாக குழந்தைகளிடம் வெளிப்படுகின்றன.
இதனையே வளர்ச்சிக் குறைவு என்கிறோம்.

ஹோமியோபதி மருத்துவ முறையில் மண் உள்ளிட்ட கனிம வளங்கள் மற்றும் தாவர வகை ,விலங்கு வகை ,ஏன் ஊர்வன, பறப்பன எல்லாவற்றிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் முழு நிறைவான மனிதனாக மாற்றுகிறார்கள். இவ்வளவு நுணுக்கமாக மருந்து தயாரிப்பது ,நோயறிதல் மற்றைய மருத்துவ முறைகளில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அன்பு ஹோமியோ கிளினிக்
காரைக்குடி / திருப்பத்தூர்
94866 11164 / 077080 47158

சோரா என்பது,,,, " அரிப்பு நமைச்சலாக வெளிப்படுகிறது. இந்த சோரா எனும் இராட்சதன் போன்ற நிலைமையே இன்று தோன்றும் பல்வேறு வியா...
26/03/2025

சோரா என்பது,,,, " அரிப்பு நமைச்சலாக வெளிப்படுகிறது. இந்த சோரா எனும் இராட்சதன் போன்ற நிலைமையே இன்று தோன்றும் பல்வேறு வியாதிகளுக்கு மூல காரணமாகின்றது. இவ்வியாதிகளுக்கு பதாலஜி சாஸ்திரப்படி நரம்பு பலவீனம், ஹிஸ்டிரியா. பித்தவாயு. பைத்தியம் உன்மத்தம் காக்கை வலிப்பு. பலவித வலிப்புகள் பல எலும்பு வியாதிகள். கல்லீரல் கோளாறுகள் புற்றுநோய். கீல்வாதம் மஞ்சட்காமாலை. பாண்டு மாதவிடாய்க் கோளாறுகள். சரீரத்தின் பல உறுப்புகளிலிருந்து உதிரப் பெருக்கு. காசம் செவிடு பக்கவாதம் முதலிய ஆயிரக்கணக்கான பெயர்களிட்டு . அவை ஒவ்வோன்றும் தனி வியாதியாக கருதப்படுகிறது. இது தவறு என்பது ஹானிமனின் கருத்து . பக்கம் 44
ஆர்கனான் - சாமுவேல் ஹானிமன்.
வி ஆர் மூர்த்தி ( கும்பகோணம்) மொழிபெயர்ப்பு

அன்பு ஹோமியோ கிளினிக்
காரைக்குடி / திருப்பத்தூர்
94866 11164 / 077080 47158

ஆரோக்கிய மனிதன் என்றால் எல்லா வகையான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். விருப்பு வெறுப்பு ஒத்துக் கொள்ளாதது என்பதெல்ல...
22/03/2025

ஆரோக்கிய மனிதன் என்றால் எல்லா வகையான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். விருப்பு வெறுப்பு ஒத்துக் கொள்ளாதது என்பதெல்லாம் நோய்க்குறியே. இதை ஹோமியோ மருத்துவரிடம் தெளிவாக சொல்ல வேண்டும். ஹோமியோ மருத்துவர் சரியான ஹோமியோ மருந்தை தேர்வு செய்ய உதவும்.
அன்பு ஹோமியோ கிளினிக்
காரைக்குடி / திருப்பத்தூர்
94866 11164 / 077080 47158

18/03/2025

திடீரென வரும் நோய்களுக்கு உடனடியாகவும் நீண்ட கால நோய்களுக்கு நீண்ட காலம் ஆகும் என கூறி உள்ளீர்கள். அதே நேரத்தில் உங்களது பதிவில் எட்டு ஆண்டுகள் மாதவிலக்கின்மை இருந்தது என்கிறீர்கள் மருந்து அளித்த 30 நாளில் மாதவிலக்கு வந்துள்ளது என கூறுவது முரண்படாக உள்ளதே ,

ஹோமியோபதி மருத்துவ முறையில் நோய் குணமாவது
1) மனித உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவது மூலமும்.
2) மனித உடலில் மேலிருந்து கீழ் என்பது மூலமும் ( தலை மார்பு கால் பாதம் என்றபடி கீழ் நோக்கி )
3) ஒருவருக்கு தற்போதுள்ள துயர் பல கட்டமாக வளர்ந்து இருக்கலாம். மருந்து கொடுக்க கொடுக்க கடைசியில் வந்தது முன்னதாகவும் முதலில் வந்தது கடைசியாகவும் என்றபடி வெளிப்பட்டு நோய் குறி நீங்கலாம்.

பொதுவாக நோயாளியை பற்றி மதிப்பீடு மருத்துவருக்கு சரியாக இருக்குமானல் மருந்தின் அளவு வீரியம் சரியாக இருந்தால் எளிதாக துரிதமாக குணமாகலாம். உடற்குறிகள் மெதுவாகவும் மனக்குறிகள் விரைவாகவும் நீங்கலாம்.

அன்பு ஹோமியோ கிளினிக்
காரைக்குடி / திருப்பத்தூர்
94866 11164 / 077080 47158

THE FUTURE OF MEDICINE
17/03/2025

THE FUTURE OF MEDICINE

A new documentary film reshaping the medical landscape and restoring Homeopathy's

ஹோமியோபதி மருத்துவர்கள் மனிதனுக்கு வரும் நோய்களை இரண்டாக பிரிக்கிறார்கள். ஒன்று அவ்வப்போது திடீரென்று வந்து போகிற நோய்கள...
16/03/2025

ஹோமியோபதி மருத்துவர்கள் மனிதனுக்கு வரும் நோய்களை இரண்டாக பிரிக்கிறார்கள். ஒன்று அவ்வப்போது திடீரென்று வந்து போகிற நோய்கள். இரண்டு பல காலம் தொடர்ந்து வளர்ந்து நீடித்து தொல்லை தரும் நோய்கள். இதனை நாள்பட்ட நோய்கள் என்கிறார்கள்.

திடீரென வந்து போகிற குறுகிய கால நோய்களுக்கு உடனடியாக தீர்வு காணலாம்.

நாள்பட்ட நோய்களை படிப்படியாக மாத கணக்கில் ஏன் சிலருக்கு சில ஆண்டுகள் சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

ஹோமியோபதி மருத்துவம் நாள்பட்டு சிகிச்சை பெற்றால் மட்டுமே குணமாகும் என்பது பொதுவாக சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல. திடீரென வரும் நோய்க்கு உடனடியாகவும் நாள்பட்ட நோய்க்கு நாள்பட்டே தீர்வுகிடைக்கும் என்பதே உண்மையாகும்.

அன்பு ஹோமியோ கிளினிக்
காரைக்குடி / திருப்பத்தூர்
94866 11164 / 077080 47158

ஆரோக்கியமாக வாழ நல்ல உணவு அவசியம். எதார்த்த வாழ்க்கையில் கிடைப்பதை உண்டு வாழ்வதையே வழக்கமாக கொண்டுள்ளோம். இது சரியான பழக...
14/03/2025

ஆரோக்கியமாக வாழ நல்ல உணவு அவசியம். எதார்த்த வாழ்க்கையில் கிடைப்பதை உண்டு வாழ்வதையே வழக்கமாக கொண்டுள்ளோம். இது சரியான பழக்கமல்ல. நாக்கு சுவைக்கு உண்பதை விட உடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்பதை தேடி தேடி சாப்பிடுங்கள். நமக்கு மட்டுமல்ல எதிர் கால சந்ததி நலனுக்காக மலட்டு கோழி மலட்டு முட்டைகள் விதையில்லாத காய் கனிகள் தவிருங்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடுங்கள்.

அன்பு ஹோமியோ கிளினிக்
காரைக்குடி / திருப்பத்தூர்
94866 11164 / 077080 47158

Address

Thirupathur
Karaikudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANBU Homoeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share