
22/09/2024
பெருஞ்சீரகம்:
இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்று சோம்பு என அழைக்கப்படும் பெருஞ்சீரகம். இது, உணவில் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. பெருஞ்சீரகம் உணவின் சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை, மவுத் ஃப்ரெஷனராகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, ஆயுர்வேதத்தில் பெருஞ்சீரகம் ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது..
பெருஞ்சீரகத்தில் கால்சியம், சோடியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளன. அவை, உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
செரிமானம், வயிற்று வலி, வாய் மற்றும் கண்பார்வை ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. பெருஞ்சீரகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். மேலும், இது நியாபக சக்தியை அதிகப்படுத்துகிறது. இது மட்டும் அல்ல, இன்னும் பல நன்மைகளை சோம்பு கொண்டுள்ளது.
ஜீரண சக்தி அதிகரிக்கும் :
பிரியாணி, அசைவ உணவு போன்ற ஹெவியான உணவுகளை உண்ட பின் இறுதியாக சோம்பு எடுத்துக் கொள்வார்கள். காரணம், அது எப்பேர்பட்ட உணவையும் எளிதில் செரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
உடலுக்கு குளிர்ச்சியானது :
வெயில் காலங்களில் சமைக்கப்படும் உணவுகளில் சோம்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதன் காரணம் அதன் குளிர்ச்சித் தன்மைக்காகத்தான். உடல் சூட்டைத் தணிக்க வெறும் வாயில் சோம்புவை மென்று திண்பதால் சூடு தணியும்.
வற்று வலியை குணப்படுத்தும்:
ஆரோக்கியமான குழந்தை அவ்வபோது வற்று வலியால் துடித்தால் உடனே சோம்பு கொடுங்கள். இதனால் வயிறு களிமண் போல் கணமாக இருந்தாலோ, வயிற்று வலி இருந்தாலோ வலி நிவாரணியாகச் செயல்படும்.
வாயுத் தொல்லை நீங்கும் :
வாயுப் பிரச்சனை உடல் அஜீரணத்தால் ஏற்படக் கூடியது. அதனால் வற்றுக்குச் செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் வாயு எரிச்சலும் குணமாகும்.
நீரிழிவு பிரச்னை கொண்டோருக்கு சிறந்தது :
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, சோம்புவை கொதிக்க வைத்து கொடுத்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரி செய்து சம அளவில் வைத்துக் கொள்ளும்.
உடல் வலி நீங்கும் : மூட்டு வலி, தசை வலிகளுக்கு சோம்பு சிறந்த வலி நிவாரணி. இதை ஆய்விலும் கண்டறிந்துள்ளனர்.
ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் :
சோம்பு டீயை நீங்கள் தினமும் பருகுவதால் உடலில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். டீ, காஃபிக்கு சோம்பு டீ நல்ல மாற்றாக இருக்கும். இதை அருந்துவதால் ஃபீலிங் ஃப்ரெஷ்ஷாக உணர்வீர்கள்.
தாய் பால் சுரக்க உதவும் :
குழந்தைப் பெற்ற பெண்களுக்குத் தாய் பால் சுரத்தலில் பிரச்சனை இருந்தால் சோம்புவை உண்பதால் பால் நன்றாக சுரக்கும்.
கண் பார்வை சீராகும் :
கண்கள் மங்களாகத் தெரிவது, தூரப் பார்வை, கிட்டப் பார்வை போன்ற பிரச்சனைகள் கொண்டோர் சோம்புவை தினமும் எடுத்துக் கொள்ளலாம். கண் பார்வைக் கோளாறுகள் இல்லாதோரும் உட்கொள்வதால் பிற்காலத்தில் வரும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
உடல் சுத்திகரிப்பு :
உடலின் நச்சுகளை நீக்கி நல்ல கிளென்சராக சோம்பு செயலற்றுகிறது. இதனால்தான் சோம்பு உட்கொண்ட பின் உடலும் புத்துணர்வாக இருக்கிறது.
இந்த பதிவு உங்களுக்கு பயன்பெற்று பிடித்திருந்தால் லைக் செய்து பகிர்ந்து பின்பற்றுங்கள்.
நன்றி
மேலும் விபரங்களுக்கு
Dr. B. சிவராஜ் BNYS,
(யோகா மற்றும் இயற்கை மருத்துவர்)
CBS இயற்கை மருத்துவம் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்,
இராயக்கோட்டை ரோடு,
IDBI வங்கி அருகில்,
MGM பேலஸ் எதிரில்,
கிருஷ்ணகிரி-635001
CONTACT📞 099653 75356