01/07/2025
குத்தாலம் தேசிய மாற்று முறை மருத்துவ மன்றத்தின் 23 வது தேசிய கருத்தரங்கம் கடத்த 29.6.2025 அன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். H.V. ஹண்டே மற்றும் நீதியரசர் ஹரிதாஸ், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. கதிரவன், திரைப்பட நடிகர் பூவிலங்கு மோகன், சென்னை காவல்துறை உதவி கமிஷனர் திரு. ராஜாராம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழாவில் மாற்றுமுறை மருத்துவத்தின் முன்னேற்றம் குறித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்தும் வெகுவாக விவாதிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
விழாவினை குத்தாலம். டாக்டர். T. செல்வராஜ் தலைமை ஏற்க விழா சிறப்பாக நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை சென்னை நவீன் பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் வெகு சிறப்பாக அமைத்துக் கொடுத்தது.
விழாவில் கலந்துகொண்ட அனைத்து
உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்திற்கு உறுதுணையாக பல்வேறு வகையில் உதவியாக இருந்த திரு. தங்க. மகேஸ்வரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
The 23rd National Conference of the National Board of Alternative Medicine, Kuttalam was held in Chennai on 29.6.2025.
Former Health Minister Dr. H.V. Hande and Justice Haridas, Supreme Court Advocate Mr. Kathiravan, Film Actor Poovilangu Mohan, Chennai Police Assistant Commissioner Mr. Rajaram and many others attended as special guests and graced the occasion.
The progress of alternative medicine and the safety of doctors were discussed at length at the event and the meeting concluded amicably.
The event was presided over by Kutthalam. Dr. T. Selvaraj, Chairman of NBAM. The event was held in a grand manner.
The event was organized very well by Naveen Fine Arts, Chennai.
We express our heartfelt gratitude to all the members and guests who participated in the event.
We also express our heartfelt gratitude to Mr. Thanga. Maheswaran, who helped the National Board of Alternative Medicine in various ways.