12/09/2019
தைராய்டு போற்றுதும் தைராய்டு போற்றுதும்!
உங்களுக்கு எவ்வளவு ஆற்றலும், திறனும் தேவை என்று தீர்மானிப்பது தைராய்டு சுரப்பியே!
சமீப காலமாக மருத்துவர்கள் உங்களை தைராய்டு சோதனைகள் மேற்கொள்ள நிர்பந்தப்படுத்துவதும் இதன் காரணமாகவே! குறிப்பாக பெண்களுக்கு! ஆண்களுக்கும்தான்!
அசதி, கவனக்குறைவு, தேவையில்லாமல் முடி கொட்டுதல் இவை எல்லாமே வயதாவதன் அறிகுறி என்றாலும் இவ்வளவு சீக்கிரமா? காரணம் தைராய்டு சுரப்பிகள் முறையாக செயல்படாததே!
இவ்வளவு ஏன்! உங்கள் சுவாசத்திறனை தீர்மானிப்பதும் கூட இதன் பணியே!
முன் கழுத்தில் காலர் எலும்புகளுக்கு அருகில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் உருவ அமைப்பை ஒத்த சுரப்பியே தைராய்டு சுரப்பி!
முடி கொட்டுதா? -
தைராய்டு தான்!
கரகரன்னு குரலா? - தைராய்டு தான்!
எப்பப்பாத்தாலும் சளித்தொந்தரவா? - தைராய்டு தான்!
கவனக்குறைவா? - தைராய்டு தான்!
அயோடின் தான் தைராய்டு ஹார்மொன் உருவாக முக்கியக்காரணி. பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து
வெளிவரும் TSH தைராய்டு சுரக்கத்தூண்டும் ஹார்மோனும் அவசியம்.
அவ்வளவு முக்கியம் இந்த ஹார்மோன்! கூடினாலும் பிரச்னை, குறைந்தாலும் பிரச்னை தான்! கவனம் மக்களே!
குறைந்தால்!
படபடப்பு, கொடுங்கனவு
உலர்ந்த சருமம்
சுலபமாய் குண்டாவது
கவனக்குறைவு
எரிந்து விழுதல்
கடும் அயர்ச்சி
புருவ மெலிவு
முடி கழிதல்
தோல் வெளிறுதல்
கூடினால்!
அசதி
அதீத வியர்வை
முடி உதிர்வு
அதிக இதய படபடப்பு
கை நடுங்குதல்
மூச்சு விட சிரம்ப்படுதல்
என இது வெறும் டீசர் தான்! டிரைலர், மெயின் பிக்சர் - உங்களை படபடக்கச்செய்து விடும், அதனால் இவ்வளவே!
தைராய்டு போற்றுதும்! தைராய்டு போற்றுதும்!