
01/03/2024
7) இமைக்காற்று (கூர்மன்)
இரு கண்களிலும் இவற்றின் இருப்பிடம் அமைந்துள்ளது.
இமைக்காற்றின் தொழில்:
கூர்மன் என்ற இமைக்காற்று அத்திநாடியுடன் இயைந்து கண்களின் செயல்பாடுகளை இயக்கும்.
இமைக்காற்றின் குறைபாட்டினால் வரும் நோய்கள்:
இதன் குறைபாட்டினால் கண் பார்வைக் குறைபாடுகள் வரும். இது அத்திநாடியுடன் இயைந்து செல்லாமல் முரண்பட்டால் கபாலச் சூலை,தலைநோய், இதழ் நோய், கண்நோய், நடுக்கம், விக்கல் போன்ற நோய்கள் வரும்.