29/09/2025
உலக இதய தினம் –செப்டம்பர் 29, 2025
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பையும் மதிப்போம்”
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் நமக்கு நினைவூட்டுகிறது.நம் இதயம் ஒரு நொடிக்கும் ஓய்வில்லாமல் உழைக்கிறது. ஆனால் அதை நாம் அடிக்கடி கவனிக்க மறக்கிறோம் — சோதனைகளை தவிர்க்கிறோம், எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்கிறோம், வாழ்க்கை பழக்கங்களில் சோம்பேறித்தனமாக இருக்கிறோம்.
உலக இதய தினம் 2025 இன் கருப்பொருள் “ஒரு துடிப்பையும் தவற விடாதீர்கள் (Don’t Miss a Beat)” என்பதுதான். இதயத்தின் அழைப்பை கேட்டு, அதை பாதுகாப்போம்.
* உங்கள் இதயம் செய்யும்
சிறிய எச்சரிக்கை அறிகுறிகளையும் புறக்கணிக்க வேண்டாம்.
* பரிசோதனைகளை முறையாக செய்ய வேண்டும்
* சிகிச்சையை தாமதிக்கக் கூடாது
* தினசரி ஆரோக்கியமான பழக்கங்களை தொடர்ச்சியாக கடைபிடிக்க வேண்டும்
உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இதய நோய்கள்.
எனினும் வாழ்க்கை முறை மாற்றம், சீரான சோதனைகள், சரியான ஆலோசனைகள் மூலம் நாம் தடுக்கலாம்.
நாம் செய்ய வேண்டியவை :
1.உடலின் சிக்னல்களை கேளுங்கள்
திடீர் சோர்வு, மூச்சுத்திணறல், அசாதாரண துடிப்பு, படபடப்பு போன்றவை அறிகுறிகளை கவனத்தில் கொள்ளுங்கள்
2. சீரான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்
இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ECG போன்றவற்றை தவறாமல் பரிசோதிக்கவும்.
3. வாழ்க்கை முறை மாற்றங்கள்
* சீரான உணவு (குறைந்த கொழுப்பு, உப்பு, சர்க்கரை; அதிக நார்ச்சத்து)
* தினமும் நடைப்பயிற்சி ( குறைந்தது 20 to 30 நிமிடங்கள்)
* புகையிலை, மதுபானத்தை முற்றிலும் தவிர்த்தல்
* மன அழுத்தம் குறைத்து நல்ல தூக்கம் மேற்கொள்ளுதல், மூச்சுப் பயிற்சி செய்தல்.
* உடல் எடையை கட்டுக்குள் வைத்திருத்தல்
சில நேரங்களில் மட்டும் முயற்சி செய்வது போதாது. ஒழுங்கான பழக்கம்தான் இதயத்தை காப்பாற்றும்.
இதயத்தின் குரலை கேட்போம். துடிப்பை மதிப்போம். ❤️
உங்கள் இதயத்தை பாதுகாக்க ஆரோக்கியமான உணவு தான் முதல் படி! தினசரி உணவில்
👉 அதிக காய்கறி, பழங்கள், முழுதானியங்கள் சேர்க்கவும்
👉 எண்ணெய், உப்பு, சர்க்கரை குறைக்கவும்
👉 மீன், பருப்பு, பயறு போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்
👉 போதுமான தண்ணீர் குடிக்கவும், துரித உணவுகளைத் தவிர்க்கவும்
மேலும் இதய ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள் மற்றும் டிப்ஸ்களுக்கு எங்கள் பக்கத்தை தொடர்ந்து பின்தொடருங்கள்.
#உலகஇதயதினம்
Suki Diet and Wellness Centre