06/05/2022
எண்ணெய் குளியல்
இன்றைய நவீன உலகத்தில் நாம் மறந்து போன நம் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் எண்ணெய் குளியலும் ஒன்று. காலநிலை மாறுபாடு இன்று ஒரு பேசு பொருளாகியுள்ளது. இதனால் உடலில் மலட்டுத்தன்மை, மூலம், பௌத்திரம், முடியுதிரல், தோல் நோய்கள், மஞ்சள் காமாலை, கல்லடைப்பு, வயிற்றுவலி, உறக்கமின்மை போன்ற பல நோய்கள் ஏற்படுகிறது. இதனில் இருந்து உடலை பாதுகாக்க வாரம் இரு முறை எண்ணெய் குளியல் செய்வது நல்லது.
சாதாரணமாக அனைவரும் நல்லெண்ணெய் உபயோகிக்கலாம். நோய்களுக்கு ஏற்ப எண்ணெய் மாறுபடும்.
ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளிலும் எண்ணெய் குளியல் செய்யலாம்.
முறை:
சூரிய உதயத்திற்கு முன்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எண்ணெயை சூடு வராமல் தேய்த்து இருபது நிமிடங்கள் கழித்து சுடு தண்ணிரீல் குளித்தல் வேண்டும்.
குறிப்பு:
எண்ணெய் குளியல் செய்த அன்று பகல் உறக்கம் மற்றும் தயிர்சோறு சாப்பிடக்கூடாது.
Bethesda Siddha Hospital, Trichy
Phone: 9843842617