சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

  • Home
  • India
  • Mumbai
  • சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

சித்த மருத்துவ வாழ்வியல் மையம் சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

04/06/2025

*தலைவலி என்பது ஒரு நோய் அல்ல, ஒரு நோய்யின் அறிகுறி ஆகும்.*

மலச்சிக்கல் செரிமானக்கோளாறு மற்றும் திரும்ப, திரும்ப ஒரே விஷயத்தை சிந்தனை செய்தால் தலைவலி வரும்.

மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மை காரணமாகவும் தலைவலி வருகிறது.

தொடர் பயணம் மற்றும் மழையில் நனைதல் காரணமாகவும் தலைவலி வரலாம்.

காய்ச்சல் காரணமாக நமது உடலில் ஏற்படும் அதிக உஷ்ணத்தால் தலைவலி வரும்.

அதிக உடல் உழைப்பு மற்றும் மன அழுத்தம் ஏற்படும்படி பேசினாலும், பேசுவதை கேட்டாலும் தலைவலி வரலாம்.

தலையின் பின்புறம் ஏற்படும் தலைவலி,நெற்றியில் ஏற்படும் தலைவலி,நெற்றி பொட்டில் ஆரம்பித்து தலையின் நடுப்பகுதி வரை ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி என நான்கு வகைப்படும்.

தலைவலிக்கு சித்த வைத்தியத்தில் மிக எளிய மருத்துவம் உள்ளது.
ஒரு வெற்றிலையில் சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு சீரகம் வைத்து நன்கு மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு டம்ளர் சூடு நீர் அருந்த தலைவலி குணமாகும்.

காய்ச்சல் அறிகுறி உடன் வரும் தலைவலிக்கு ஒரு வெற்றிலை, சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு சீரகம் எடுத்து அதை நன்கு மை போல் அரைத்து தலையில் பற்றுப்போட தலைவலி குணமாகும் .

மூக்கு அடைத்து தலைவலி வந்தால் ஒரு விராலி மஞ்சளை எடுத்து விளக்கெண்ணெய்யில் முக்கி எடுத்து அதை சுட்டு வரும் புகையை நுகர தலைவலி குறையும்
,(இந்த மருத்துவ முறையை குழந்தைகளுக்கு செய்யக்கூடாது,

குழந்தைகளுக்கு வெற்றிலையில் மிளகு மற்றும் சீரகம் வைத்து நன்கு மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு டம்ளர் சூடு நீர் அருந்தும் மருத்துவ முறை மட்டுமே போதுமானது தலைவலி குணமாகும்.

செரிமானக்கோளாறு காரணமாக ஏற்படும் ஒற்றை தலைவலி வாந்தி எடுத்தால் குணமாகும்.

டென்ஷன் மற்றும் படபடப்பு மூலம் வரும் தலைவலிக்கு தூக்கம் மட்டுமே போதுமானது.

ஆழ்ந்த உறக்கம், உடல் தளர்வு மற்றும் மனத்தளர்வு ஆகியவற்றை நமது வாழ்வில் கடை பிடித்தால் தலைவலி வர வாய்ப்பு குறைவு. முச்சு பயிற்சி செய்வதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து டென்ஷன் மற்றும் படபடப்பு மூலம் வரும் தலைவலி உட்பட பல்வேறு நோய்கள் குணமாகும்.

சீறும் சிறப்பும் கொண்ட சீமை நாயுருவி, ஒரு மருத்துவப் பயனுள்ள மூலிகை. இதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். குறிப்பாக, செரிமானப...
24/05/2025

சீறும் சிறப்பும் கொண்ட சீமை நாயுருவி, ஒரு மருத்துவப் பயனுள்ள மூலிகை. இதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். குறிப்பாக, செரிமானப் பிரச்சனைகள், தோல் நோய்கள், மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு இது உதவியாக இருக்கிறது.

சீமை நாயுருவியின் பயன்கள்:
செரிமானத்தை மேம்படுத்துகிறது:
அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு இது நிவாரணம் அளிக்கிறது. செரிமான அமைப்பைத் தூண்டி, ஊட்டச்சத்தை உறிஞ்சுவதற்கும் இது உதவுகிறது.

தோல் பிரச்சனைகளுக்கு நல்லது:
அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மூலம் சொறி, அரிக்கும் தோலழற்சி, முகப்பரு போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பயனுள்ளதாக இருக்கும்.

இரத்த சோகைக்கு நல்லது:
இரத்த சோகை பிரச்சனையை சரிசெய்ய இது உதவுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு நல்லது:
இது சிறுநீரக கற்களை கரைத்து, சிறுநீரகக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

இருமல் மற்றும் காய்ச்சலுக்கு உதவுகிறது:
வேர்ப் பொடியுடன் சிறிது மிளகு பொடியும், தேனும் சேர்த்துக்கொடுக்க இருமல் நீங்கும், காய்ச்சல் குறையும்.

வயிற்றுப்போக்குக்கு உதவுகிறது:
மோருடன் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கை குணப்படுத்தவும் பயன்படுத்தலாம்.

பூச்சி கடிக்கு உதவுகிறது:
பூச்சி கடியால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை போக்க உதவுகிறது.

பாம்புக்கடி மற்றும் வெறி நாய் கடியின் விஷத்தை போக்க உதவுகிறது:
இதன் இலைச்சாறு பிழிந்து குடித்தால் பாம்புக்கடி மற்றும் வெறி நாய் கடியின் விஷத்தை போக்கலாம்.

உடலின் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்:
சீமை நாயுருவியின் இலை மற்றும் பூக்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மூலிகை மருந்து உடலின் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

மூலம்:
நாயுருவி விதையை அரிசி கழுவிய நீருடன் உட்கொண்டால் மூலம் நீங்கும்.

மூளை நோய்களை போக்க உதவுகிறது:

நாயுருவி செடியை எப்படிப் பயன்படுத்துவது?
நாயுருவி பொடியை 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம்.

நாயுருவி இலைகளின் பேஸ்ட்டை விஷ பூச்சி கடிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.

மருத்துவர் ஆலோசனை:
சீமை நாயுருவி செடியை பயன்படுத்துவதற்கு முன், மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.

குறிப்பாக, உங்களுக்கு ஏதேனும் மருத்துவக் காரணங்கள் இருந்தால், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நாயுருவி செடியை பயன்படுத்தக்கூடாது.

பல நன்மைகளுக்காக பயன்படுத்தப்படும் பகுச்சி இலை மூலிகை.. பகுச்சியின் தமிழ் பெயர் "கற்போக அரிசி" அல்லது "கார்போக அரிசி" ஆக...
18/05/2025

பல நன்மைகளுக்காக பயன்படுத்தப்படும் பகுச்சி இலை மூலிகை..

பகுச்சியின் தமிழ் பெயர் "கற்போக அரிசி" அல்லது "கார்போக அரிசி" ஆகும்.

இது குறிப்பாக தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு பயன்படுத்தபடுகிறது.

பகுச்சி எண்ணெய் மயிர்க்கால்களைத் தூண்டி, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளைக் குணப்படுத்த உதவுகிறது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது,

இது விட்டிலிகோ போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

செரிமான அமைப்புக்கு உதவுகிறது:
இது தீபனா, பச்சனா, அனுலோமன் போன்ற செரிமான பண்புகளைக் கொண்டுள்ளது, இது அஜீரணம், அமா மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு உதவுகிறது.

நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது:
இது ஒரு நரம்பு டானிக் என்பதால், வாத கோளாறுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

வாதம், பித்தம், கபம் என்பவை ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு அடிப்படைக் கோட்பாடாகும். இவை மூன்றும் உடல் இயக்கத்தின் முக்கிய அ...
15/05/2025

வாதம், பித்தம், கபம் என்பவை ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு அடிப்படைக் கோட்பாடாகும். இவை மூன்றும் உடல் இயக்கத்தின் முக்கிய அங்கங்கள். 💧🔥🌬️

`வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். 🌸 உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

`முத்தாது’ என்று தமிழ்ச் சித்த மருத்துவத்திலும், `த்ரீதோஷா’ என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயங்களைத்தான்

📜 `மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று’ 📜

- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார்.

வாதம், பித்தம், கபம் 💧🔥

வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.

பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.

கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.

தவிர்க்கவேண்டிய, சாப்பிடவேண்டிய உணவுகள்!

* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்.

* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும். மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும்.

* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது.

* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது... ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி... இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.

* சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு... என கபத்தால் வரும் நோய்கள் பல. பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம். மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும். அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக்கொண்டே வரும் வாழ்க்கைத்துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது.

🌸 கழிவு தேக்கம் தான் நோய், கழிவு நீக்கம் தான் ஆரோக்கியம் என்ற பழமொழி, நம் உடலில் கழிவுகள் தேங்குவது நோய்களுக்கும், கழிவு...
12/05/2025

🌸 கழிவு தேக்கம் தான் நோய், கழிவு நீக்கம் தான் ஆரோக்கியம் என்ற பழமொழி, நம் உடலில் கழிவுகள் தேங்குவது நோய்களுக்கும், கழிவுகள் முறையாக நீங்குவது ஆரோக்கியத்திற்கும் 🧘🏻‍♀️🙏🏻 வழிவகுக்கிறது. 🌸

🖤 கழிவு தேக்கம்:
நம் உடலுக்குத் தேவையில்லாத கழிவுகள், உணவுப் பொருட்கள் மற்றும் நச்சுகள் நம் உடலில் தேங்கினால், அவை நோய்களை ஏற்படுத்தும்.

💚 கழிவு நீக்கம்:
நம் உடலில் இருந்து கழிவுகள் முறையாக வெளியேறுவது, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

⚫ உடலில் கழிவுகள் தேங்குவதால்: ⚫

☑️ மலச்சிக்கல்: உணவு செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி கழிவுகள் வெளியேறாமல் இருப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது,

☑️ சோர்வு மற்றும் மனச்சோர்வு: கழிவுகள் தேங்குவதால், உடல் சோர்வாகவும், மனச்சோர்விலும் இருக்கும்.

☑️ உடல் உறுப்புகள் செயலிழப்பு: கழிவுகள் தேங்குவதால், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவற்றின் செயல்பாடு குறைகிறது.

🟢 கழிவு நீக்கம் சிறப்பாக இருந்தால்: 🟢

✅ உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்படும்: கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறப்பாக செய்கின்றன.

✅ நோய் எதிர்ப்பு சக்தி கூடும்: கழிவுகள் வெளியேறினால், நோய் எதிர்ப்பு சக்தி கூடி, உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

✅ உடல் எடை குறையும்: கழிவுகள் வெளியேறினால், உடல் எடை குறையும்.
சருமம் பொலிவுடன் இருக்கும்: கழிவுகள் வெளியேறினால், சருமம் பொலிவுடன் இருக்கும்.

🔺 எச்சரிக்கை:🔺
கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்றுவதற்கு, போதுமான நீர் அருந்துதல், மூலிகை டீ குடித்தல் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல், போதுமான தூக்கம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

மருத்துவம் பற்றி ஓஷோ❤ *_மருத்துவம் ஓஷோ_* ❤💚 பதஞ்சலியின் யோகா மனிதனுக்கு இருப்பது ஒரு உடல் அல்லஅது ஐந்து படிவங்களாக அதாவத...
23/04/2025

மருத்துவம் பற்றி ஓஷோ

❤ *_மருத்துவம் ஓஷோ_* ❤

💚 பதஞ்சலியின் யோகா மனிதனுக்கு இருப்பது ஒரு உடல் அல்ல

அது ஐந்து படிவங்களாக அதாவது ஐந்து உடல்களாக இருப்பதாக சொல்கிறது

1. அன்னமய கோசம்
2. பிராணமய கோசம்
3. மனோமயக் கோசம்
4. விஞ்ஞானமயக் கோசம்
5. ஆனந்தமயக் கோசம்

இந்த ஐந்து உடல்களுக்கு பின்னால்தான் உங்கள் மெய்யிருப்பு இருக்கிறது

இந்த ஐந்து உடல்களையும் தனித்தனியாக ஐந்து வகையான மருத்துவங்கள் பார்க்கின்றன

1. அலோபதி
இது உங்கள் அன்னமய கோசத்தில் வேலை செய்கிறது

அதாவது அலோபதி வைத்தியம் மனித உடலை மட்டுமே நம்புகிறது

இதில் விஞ்ஞானக் கருவிகள்தான் உங்கள் உடலை பார்க்கின்றன

2. அக்கு பஞ்சர்
இது உங்கள் பிராணமயக் கோசத்தில் வேலை செய்கிறது

அதாவது அக்கு பஞ்சர் வைத்தியம் உயிரியல் சக்தியில் உயிரியற் பொருளில் வேலை செய்ய முயலுகிறது

அக்குபங்சர் உடலில் ஏதாவது கோளாறு என்றால் உடலைத் தொடவே தொடாது

அது உடலின் முக்கிய புள்ளிகளைத்தான் தொடும்

உடனே மொத்த உடலும் நன்றாக வேலை செய்யத் துவங்கி விடும்

உங்கள் மைய உடலில் ஏதாவது கோளாறு என்றால் அலோபதியால் குணப்படுத்த முடியாது

ஆனால் அக்குபஞ்சரால் அதை எளிமையாக குணப்படுத்த முடியும்

மைய உடல் என்பது உடலுக்குச் சற்று மேலானது

அந்த மைய உடலை சரி செய்து விட்டால்

உடல் தானாகவே அதை பின்பற்றும்

காரணம் உடலின் வரைபடம் மைய உடலில்தான் உள்ளது

மைய உடலின் செயல் வடிவம்தான் புற உடல்

ரஷ்யாவின் கிர்லான்
புகைப்படக்கருவி நமது உடலில் எழுநூறு மையப் புள்ளிகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது

புற வழியாக நமக்கு இந்த எழுநூறு மையப்புள்ளிகள் தெரிவதில்லை

நீங்கள் உங்கள் மையப்புள்ளிகளை சரி செய்வதன் மூலம் உடலின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கலாம்

ஒரு அக்குபங்சர் மருத்துவருக்கு நோய் முக்கியமில்லை நோயாளிதான் முக்கியம்

காரணம் நோயாளிதான் நோயை உருவாக்கி இருக்கிறார்

3. ஹோமியோபதி
இது இன்னும் சற்று ஆழமாக சென்று மனோமயக் கோசத்தில் வேலை செய்கிறது

சிறிய அளவிலான மருந்து ஆழமாகப் போகும் மருந்தின் அளவைக் குறைத்துக் கொண்டே செல்லும்

இந்த முறைக்கு வீரியப்படுத்துதல் என்று பெயர்

அதிக வீரியம் இருக்கும் போது அதன் அளவு சிறியதாக இருக்கும்

அது மனோ மையத்தின் ஆழத்திற்கு செல்லும்

அது உங்கள் மன உடலுக்குள் செல்லும்

அங்கிருந்து வேலை செய்யத் துவங்கும்

பிராணமயத்தைவிட அதிகமாக வேலை செய்யும்

4. மனோவசிய சிகிச்சை (ஹிப்னாடிசம்)

இது விஞ்ஞான மயக் கோசத்தை தொட்டு வேலை செய்யும்

இது எதையும் எந்த மருந்தையும் பயன்படுத்தாது

இது யோசனையை மட்டுமே பயன்படுத்தும்

இது ஒரு யோசனையை உங்கள் உள் மனதில் விதைக்கும் உங்களை மனோவசியப் படுத்தும்

உங்களுக்கு எது பிடிக்குமோ அது சிந்தனை சக்தியால் வேலை செய்கிறது

இது அப்படியே சிந்தனை சக்திக்குள் குதிக்கிறது

விஞ்ஞானமய கோசம் உணர்வுகளின் உடல்

உங்கள் உணர்வுகள் ஒரு யோசனையை ஏற்றுக்கொண்டவுடன்
அது இயங்கத் துவங்குகிறது

மனோவசிய சிகிச்சை உங்களுக்கு ஒரு வகை உள் பார்வையைக் கொடுக்கும்

5. தியானம்

ஆனந்தமய கோசத்திற்கு தியானம்தான் சிகிச்சை வைத்தியம்

தியானம் உங்களுக்கு எந்த யோசனையையும் சொல்லாது

காரணம் யோசனை என்பது வெளியில் இருந்து வருவது

யோசனை என்றால் நீங்கள் யாரையாவது நம்பியிருக்க வேண்டும்

தியானம்தான் உங்களை சரியானபடி உணரச் செய்கிறது

தியானம் ஒரு தூய்மையான புரிந்து கொள்ளுதல் அது ஒரு சாட்சிபாவ நிலை

தியானத்தில் ஒருவர் ஆழ்ந்து உள்ளே சென்றால்

ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்

உலகத்தில் தியானம் வெற்றி பெற்றால்

பிறகு எந்த மதமும் தேவையில்லை

தியானத்தில் நீங்கள் இருத்தலோடு நேரடி தொடர்பில் இருப்பீர்கள்

தியானத்தின் உச்சமே புத்துணர்ச்சி

தியானம் முழுமை பெறும் போது உன்னுடைய இருத்தல் முழுவதிலுமே ஒளி வருகிறது

முழு பேரின்பம் பரவுகிறது
முழு பரவசம் உன்னை ஆட்கொள்கிறது 💚

*_தினமும் 10 நிமிடம் இதை செய்தால் உங்கள் வாழ்க்கை 360° மாற்றம்!_வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறீர்களா? தினமும் 10 நிமிட...
17/04/2025

*_தினமும் 10 நிமிடம் இதை செய்தால் உங்கள் வாழ்க்கை 360° மாற்றம்!_

வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறீர்களா?

தினமும் 10 நிமிடங்கள் ஒரு சிறப்பு செயலில் செலவிட்டால், உங்கள் வாழ்க்கையில் மாபெரும் மாற்றம் நிகழலாம்!

அறிவியல் மற்றும் வெற்றியாளர்களின் அனுபவங்கள் காட்டும் முக்கியமான 10 நிமிட தினசரி பழக்கங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

1. காலை எழுந்தவுடன் தியானம் செய்யுங்கள்.

தியானம் (Meditation) என்பது மூளை செயல்பாடுகளை மேம்படுத்தும் ஒரு அற்புதமான பழக்கம். வெற்றியாளர்கள் தங்கள் நாளை சாந்தமான மனதுடன் துவங்குகிறார்கள்.

*உங்கள் பயன்கள்:*

மன அழுத்தம் குறையும்

கவனம் அதிகரிக்கும்

நபரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்

*செய்யவேண்டியது:*

காலை 10 நிமிடங்கள் மூடிய கண்களுடன் அமைதியாக அமருங்கள்

உங்கள் சுவாசத்தை கவனமாக உணருங்கள்

நேர்மறை எண்ணங்களை மனதில் உருவாக்குங்கள்

2.உங்கள் நாளுக்கான இலக்கை திட்டமிடுங்கள்.

உங்கள் நாளை திட்டமிடுவது, உங்களை ஒழுங்குமுறையாக, முடிவெடுக்கும் தன்மை கொண்டவனாக மாற்றும்.

*உங்கள் பயன்கள்:*

நாளை வெற்றி பெறுவதற்கான திட்டம் உருவாகும்

ஆதிக்கம் இல்லாத சூழ்நிலைக்கு மாறலாம்

நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாம்

*செய்யவேண்டியது:*

"முடிவுசெய்ய வேண்டிய 3 முக்கிய பணிகளை" எழுதுங்கள்

நாளுக்குள் அடைய வேண்டிய இலக்குகளை குறிப்பிட்டுக் கொள்ளுங்கள்

அவை எவ்வாறு உங்களின் நீண்டநாள் இலக்குகளுக்கு உதவுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்

3. உடற்பயிற்சி செய்யுங்கள்.

உடல் சுறுசுறுப்பாக இருந்தால், மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்! நாளுக்கு 10 நிமிடம் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றும்.

*உங்கள் பயன்கள்:*

ஆற்றல் அதிகரிக்கும்

உடல் எடை கட்டுப்படும்

மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும்

*செய்யவேண்டியது:*

10 நிமிடம் யோகா / ஸ்டிரெச்சிங் செய்யுங்கள்

தொடர் உடற்பயிற்சி (Jumping Jacks, Push-ups, Squats)

வெளியே சென்று நடைபயிற்சி செய்யுங்கள்

4. புத்தகங்கள் அல்லது ஆடியோபுக் கேட்குங்கள்.

வெற்றியாளர்கள் அனைவரும் தினமும் வாசிப்பதை ஒரு பழக்கமாக வைத்துள்ளனர்.

ஒரு புத்தகம் ஒரு நண்பனாகவும், அறிவுக்கோப்பாகவும் இருக்கும்.

*உங்கள் பயன்கள்:*

புதிய தகவல்கள் கிடைக்கும்

முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்

வாக்குத்திறன் (Communication Skills) மேம்படும்

*செய்யவேண்டியது:*

தினமும் மணிக்கு 10 நிமிடங்கள் வாசிக்கவும்

நீங்கள் விரும்பும் தலைப்புகளில் ஆடியோபுக்குகளை கேட்கலாம்

தொழில் வளர்ச்சி, மனநலம், முதலீடு, வெற்றி கதைகள் போன்ற புத்தகங்களை தேர்வுசெய்யுங்கள்

5. குறைவாக செல்போன் பயன்படுத்துங்கள்.

இன்றைய உலகில் முக்கியமான விஷயம் – செல்போன் அடிமையாகாதிருப்பது! அதிக நேரம் செல்போனில் செலவழிப்பது நேரத்தை வீணாக்கும் ஒரு பழக்கம்.

*உங்கள் பயன்கள்:*

மனதளவில் அமைதி ஏற்படும்

உங்கள் நேரம் பயனுள்ளதாக இருக்கும்

உங்கள் உறவுகள் மற்றும் தொழில் வாழ்க்கை மேம்படும்

*செய்யவேண்டியது:*

முதல் 10 நிமிடம் மொபைலைத் தொடவே கூடாது

தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் 'No Mobile Time'

மொபைல் நோட்டிஃபிகேஷன்களை குறைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்

6. நன்றி சொல்லுங்கள்.

நன்றி கூறுதல் உங்கள் வாழ்க்கையை நேர்மறை நோக்குடன் மாற்றும்.

வெற்றியாளர்கள் அனைவரும் கற்றுக்கொண்ட ஒரு பழக்கம் – நன்றி சொல்லுதல்!

*உங்கள் பயன்கள்:*

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்

உறவுகள் மேம்படும்

மன அழுத்தம் குறையும்

*செய்யவேண்டியது:*

தினமும் நீங்கள் நன்றியாக உணரும் 3 விஷயங்களை எழுதுங்கள்

உங்களை ஊக்குவித்த ஒருவருக்கு நன்றி சொல்லுங்கள்

நீங்கள் சந்திக்கும் மனிதர்களுக்கு நேர்மறை வார்த்தைகளை வழங்குங்கள்

7. உங்களுக்குள் உள்ள ஆற்றலை அடையாளம் காணுங்கள்.

உங்கள் உடலுக்கும், மனதிற்கும், எண்ணங்களுக்கும் நீங்களே முதலாளி என்பதை உணருங்கள்! உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.

*உங்கள் பயன்கள்:*

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

தோல்விகளை சமாளிக்கும் திறன் மேம்படும்

உங்கள் கனவுகளை நனவாக்க முயற்சிக்கலாம்

*செய்யவேண்டியது:*

உங்களுக்குள் உள்ள திறமைகளை எழுதி பாருங்கள்

உங்களை ஊக்குவிக்கும் வெற்றி கதைகளை படிக்கவும்

தோல்வியால் குறைகூறாமல், அதை ஒரு பாடமாக நினைப்பது முக்கியம்

*முடிவுரை*

வெற்றி என்பது உங்களை தேடி வராது!

அதை நீங்கள் உருவாக்க வேண்டும்!

தினமும் 10 நிமிடங்கள் இந்த பழக்கங்களை மேற்கொண்டால், உங்கள் வாழ்க்கையில் 360° மாற்றம் நேரிடும்.

நாளைய வெற்றியை உருவாக்க நீங்கள் இன்று தொடங்குங்கள்!

தினமும் 60 அல்லது 70 நிமிடங்கள் என்றால் யாரும் இதை படிக்க பொறுமை இல்லை. அதனால் தான் தினமும் 10 நிமிடங்கள் என்று பொய் சொல்லி இருக்கிறார்கள்
மன்னிக்கவும்

சித்த மருத்துவ வாழ்வியல் மையம். மும்பை , பெங்களூர், சென்னை;

_Join Now and Live a Healthy , Happy and a Disease-free Life!_ 🌟

*For more details :*

WhatsApp Details : +91 9930720234

புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகளில் முள் சீத்தாவும் ஒன்று.முள் சீத்தாப் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மா...
15/04/2025

புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகளில் முள் சீத்தாவும் ஒன்று.

முள் சீத்தாப் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள் நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

புற்றுநோயால் உருவாகும் கட்டிகளை கரைத்தல், கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்பனவர்றை குணப்படுத்துவதுடன், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற உடலுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றலும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.

இரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி. உடல் நடுக்கம், இருதய கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல் போன்ற பல்வேறு நோய்களையும் தீர்க்கும் உன்னதமான மருந்தாகும். இயற்கையின் கொடையாகவும் முள் சீத்தாப்பழம் உள்ளது.

முள் சீத்தாவில் அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது. இது இதய நோய் பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கும். உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்கும்.

தினமும் முள் சீத்தா டீயை பருகி வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். இதில் உள்ள இரும்பு சத்து இரத்த நலன்களுக்கு அதிக வலுவை தருகிறது. நீரிழிவு நோயினால் அவதிப்படுகின்றவர்களுக்கு முள் சீத்தா ஓர் அற்புத தீர்வை கொடுக்கிறது. சர்க்கரையின் அளவை இது அதிகரிக்காமல் உடலை சீராக வைக்கிறது.

தேவையற்ற உணவுகளை அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவதால் இன்று பலர் அவதிப்படும் மிக மோசமான நிலைதான் இந்த மலசிக்கல் நோய். இதற்கு முள் சீத்தா இலைகள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது.

முள் சீத்தாப்பழங்களில் அடங்கியுள்ள புற்றுநோய் எதிர்ப்பு வேதிப்பொருள் புற்று நோய் செல்களை மட்டுமே அழிக்கும். ஆரோக்கியமான செல்களுக்கு எவ்விதமான ஆபத்தினையும் இப்பழங்கள் ஏற்படுத்துவதில்லை.

முள் சீத்தாப்பழம் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரித்து உடலினை நாட்பட்ட நோய்கள், தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. வயிறு, நுரையீரல், மார்பு, கணையம் போன்ற புற்று நோய்களை இந்த முள் சீத்தா பழம் குணப்படுத்த வல்லவை.

கிட்டத்தட்ட 12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமை இந்த முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது. முள் சீத்தா பழம் மற்றும் இலைகளை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

கசாயம் செய்து அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கசாயம் செய்முறை & சாப்பிடும் முறை

முள் சீத்தா இலை - 5
பப்பாளி இலை - 1/2 இலை
வேப்பிலை - 1/2 கைபிடி
மஞ்சத்தூள் - 2 கிராம்

இவை அனைத்தையும் சிதைத்து இதனுடன் 4 டம்ளர் நீர் சேர்த்து 1 டம்ளராக சுண்டவைத்து வடித்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்
அதேபோல் மாலையில் செய்து சாப்பிட வேண்டும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர புற்றுநோய் நச்சுகள் படிபடியாக நீங்கும்.

ஆங்கில மருத்துவம் எடுத்து கொள்பவர்களும் இதனை சாப்பிடலாம். இந்தகசாயம் புற்றுநோய்க்கு எதிராக நன்கு செயல்படுகின்றது.

இது ஒரு துணை மருந்து ஆகையால் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்து கொள்வது நன்மை பயக்கும்.

மருத்துவ ஆலோசனைக்கு முன் பதிவு அவசியம் : 9930720123 | 9930720234

மலச்சிக்கல் முதல் வாயு, அஜீரணம் வரை... மலக்குடல்பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு.Gut Health : மலச்சிக்கல், வாயு, அஜீரணம்...
11/04/2025

மலச்சிக்கல் முதல் வாயு, அஜீரணம் வரை... மலக்குடல்பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு.

Gut Health : மலச்சிக்கல், வாயு, அஜீரணம், ஹெமராய்ட்ஸ் உள்ளிட்ட மலக்குடல் பிரச்சனைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

1. மலச்சிக்கலுக்கு (Constipation) – உடனடி தீர்வு

மலச்சிக்கல் இருந்தால் உப்பு தண்ணீர் குடிக்கலாம். 1 டீஸ்பூன் எப்சம் சால்ட் (Epsom Salt) மற்றும் வெந்நீர் சேர்த்து இரவில் குடிக்கவும். அலோவேரா ஜூஸ் குடிக்கலாம். 1/4 கப் அலோவேரா மற்றும் தேன் கலந்து காலையில் குடிக்கலாம். அதேபோல், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில்/நல்லெண்ணெய், அதனுடன் வெந்நீர் சேர்த்து காலை அல்லது இரவு குடிக்கலாம். மலச்சிக்கலை போக்க உணவில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். நார்ச்சத்து மிக்க கீரை, வெல்லம், பழங்கள் பப்பாளி, அத்தி சாப்பிடவும். ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் தவறாமல் குடிக்கவும்.

2. வாயு/ஏப்பம் (Gas & Bloating)

மலச்சிக்கல் இருந்தாலே வாயு தொல்லை இருக்கும். வாயு தொல்லை நீங்க அசாஃபோட்டிடா (Perungayam) 1 சிட்டிகை எடுத்து அதனுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். சீரகத்துடன் சோம்பு சேர்த்து சமநிலையாக வறுத்து பொடி செய்து, தண்ணீரில் கலந்து குடிக்கவும். பீன்ஸ், கோகோ கோலா, பிரியாணி, அதிக கொழுப்பு உணவுகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்

3. ஹெமராய்ட்ஸ் (Piles) – வலி & இரத்தப்போக்கு தீர்வு

இந்த பிரச்சனை இருப்பவர்கள் நாவற்பழம் காலையில் தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். ஆலிவ் ஆயில் புண்ணில் தடவ வலி குறையும். திராட்சை விதை எண்ணெய் (Grapeseed Oil) வாங்கி தினமும் காலை மாலை என 1 ஸ்பூன் குடிக்கவும். கட்டாயம் மசாலா உணவுகள், மது, புகையிலை தவிர்க்கவும்.

4. அஜீரணம் (Indigestion) – உடனடி தீர்வு

செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகம் மற்றும் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் வாயு குறையும். புதினா டீ வைத்துக்கூட குடிக்கலாம். கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் அஜீரணம், வாயு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருந்துகளை அதிகம் சார்ந்திருக்காமல் முடிந்தவரை இயற்கை வழிமுறைகளில் தீர்வு தேடிக் கொள்வது நல்லது.

மலக்குடல் பிரச்சனைகளை சரி செய்யும் உடல் பயிற்சிகள்,

உடற்பயிற்சிகள் குடல் இயக்கத்தை (Bowel Movement) மேம்படுத்தி, மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவும்.

1. பவனமுக்தாசனம் (Wind-Relieving Pose)

படுக்கையில் பின்புறம் சாய்ந்து, ஒரு காலை மடித்து மார்புக்கு அருகே கொண்டு வரவும். 15-30 வினாடிகள் வைத்திருங்கள். இந்த பயிற்சி குடலில் அழுத்தம் குறைக்கும், வாயு வெளியேறும்.

2. மலாசனம் (Squatting Pose – Indian Toilet Position)

கால்களை அகலமாக விரித்து முழங்கால்களை மடித்து உட்காரவும். 1-2 நிமிடம் வைத்திருங்கள். இந்த பயிற்சி இயற்கையான மலம் கழிக்க உதவும்.

3. கபாலபாதி (Skull-Shining Breathing)

ஆழமாக மூச்சிழுத்து, விரைவாக மூச்சை வெளியேற்றவும். இதனால், உதரவிதானம் வேகமாக இயங்கும். 1 நிமிடம் செய்யவும். இந்த பயிற்சி குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.

வாயு/ஏப்பத்தை (Gas & Bloating) குறைக்கும் பயிற்சிகள்

1. அனுலோம் விலோம் (Alternate Nostril Breathing)

வலது கை பெருவிரலால் வலது மூக்கை மூடி, இடது மூக்கில் மூச்சிழுக்கவும். பிறகு இடது மூக்கை மூடி, வலதில் வெளியேற்றவும். இந்த பயிற்சி மூலம் வாயு குறையும், செரிமானம் மேம்படும்.

2. பலாசனம் (Child’s Pose)

முழங்கால்களில் உட்கார்ந்து, முன்புறம் வளைந்து நெற்றி தரையை தொடவும். 30 வினாடிகள் வைத்திருங்கள். இந்த பயிற்சி மூலம் வயிற்றில் அழுத்தம் குறையும்.

ஹெமராய்ட்ஸ் (Piles) பிரச்சனைக்கான பயிற்சிகள்

மூலாதார ஆசனம் (Pelvic Floor Exercises – Kegels)

மலக்குடல் தசைகளை (அடிவயிறு) 10 வினாடிகள் சுருக்கவும், பிறகு தளரவிடவும். 10 முறை செய்யவும். இதன் மூலம் ஹெமராய்ட்ஸ் வலி குறையும்.

சர்பாசனம் (Cobra Pose)

வயிற்றில் படுத்து, கைகளால் தூக்கி மார்பை நீட்டவும். 15-30 வினாடிகள் வைத்திருங்கள். இந்த பயிற்சி மூலம் குடல் இயக்கம் சீராகும்.

அஜீரணம் (Indigestion) குறைக்கும் பயிற்சிகள்

வஜ்ராசனம் (Thunderbolt Pose)

முழங்கால்களில் உட்கார்ந்து, 5-10 நிமிடம் இருக்கவும். இந்த பயிற்சி அமிலம் குறையும், செரிமானம் மேம்படும்.

திரைக்கோணாசனம் (Triangle Pose)

கால்களை அகலமாக விரித்து நின்று, ஒரு கை கீழே, மற்றொன்று மேலே நீட்டவும். 30 வினாடிகள் வைத்திருங்கள். இந்த பயிற்சி மூலம் வயிறு பிரச்சனைகள் குறையும்.

பொது குடல் ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்

தினமும் 30 நிமிடம் விரைவு நடை (Brisk Walking) செய்யவும். காலையில் எழுந்ததும் 1 கப் வெந்நீர் குடிக்கவும். யோகா/பிராணாயாமம் செய்யுங்கள் – குடல் இயக்கம் சீராகும்.

இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். நன்றி

உடல் ஆரோக்கியம் உங்கள் கையில்.! இந்த *8*ல் மட்டும் இருக்கட்டும் கவனம்!குழந்தை பருவம் முதல் முதியவர் ஆகும்வரை ஒவ்வொரு நில...
09/04/2025

உடல் ஆரோக்கியம் உங்கள் கையில்.!
இந்த *8*ல் மட்டும் இருக்கட்டும் கவனம்!

குழந்தை பருவம் முதல் முதியவர் ஆகும்வரை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான நோய் மனிதனை தாக்குகிறது. எனவே நோயின்றி வாழ நாம் தேவையான முன்னெடுப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

1. உணவு:

நாம் உட்கொள்ளூம் உணவுகளில் சரிவிகித உணவை உட்கொள்வதின் மூலம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். வைட்டமின்கள், தாதுக்கள் கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். இதில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பால் பொருட்கள், புரதம் நிறைந்த உணவுப் பொருட்கள் அடங்கும். இவைகள் நல்ல ஊட்டச்சத்துடன் நமக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லன. இயற்கை விவசாயத்தில் குறைவான பூச்சிக்கொல்லிகள் உபயோகப்படுத்தப்படுத்தப்படுகின்றன. ஆர்கானிக் உணவு என அழைக்கப்படும் இவற்றை உண்பதால் நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இவ்வுணவை உட்கொண்டு நம்மால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

2. உடற்பயிற்சி:

அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை ஒரு வழக்கமாக கொள்ள வேண்டும். நம் உடல்நலத்திற்காக தினம் ஒரு மணி நேரத்தையாவது ஒதுக்க வேண்டும். வேகமாக நடத்தல், நண்பர்களுடன் ஏதேனும் ஒரு விளையாட்டை குழுவாக விளையாடுதல் போன்ற உடலியக்க செயல்பாடுகளில் ஈடுபடலாம். இதனால் நமது உடல் ஆரோக்கியமாகவும் கட்டமைப்போடும் இருக்கும். இவை நமது தசைகளை வலிமைப்படுத்தும். உடற்பயிற்சி நமது திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு சென்று நமது இதயத்தை திறம்பட செயல்பட உதவுகிறது. இதனால் நாம் நமது அன்றாட வேலைகளைச் செய்வதற்கு அதிக ஆற்றலும் கிடைக்கிறது.

3. தூக்கம்:

நல்ல ஆரோக்யத்திற்கு நல்லத் தூக்கம் வேண்டும். நல்ல தூக்கம் என்பது படுக்கைக்குச் சென்றவுடன் 30 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்குள் உறக்கத்தைப் பெறுவது. அவரவர் வயதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட மணிநேரத் தூக்கத்தைத் நாம் பெறும்போது நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

4. தியானம்:

ஒரு நாளைக்கு 10 நிமிடங்களாவது தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுவது நல்லது. அதனால் மனதில் அமைதியை பெற முடியும். தியானம் செய்ய அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து, வசதியாக உட்கார்ந்து தியானத்தை தொடங்க வேண்டும். சுவாசப் பயிற்சியில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். இதன் மூலம் உடல், மனம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாய் நம்மால் வைத்திருக்க முடியும்.

5. காலமுறை பரிசோதனைகள்:

இரத்தத்தில் சர்க்கரை,உயர் இரத்த அழுத்தம் போன்றவை அதிக உடல் பருமன் காரணமாக ஏற்படுபவை. மேலும் இவை இருதய நோய்க்கு இடமளிக்கும். எனவே, 40 வயது வரை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் (18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு) அதன் பிறகு ஒவ்வொரு ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் காலமுறை பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்பவர்கள் அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் மாற்றம் தேவைப்படலாம். இவ்வாறு செய்வதால் நோயின் தீவிரத்தைத் தடுத்து நீண்ட நாட்கள் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்

6. சுத்தம் சுகாதாரம்:

சுற்றுச்சூழலை சுத்தமாகவும், பசுமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பல்வேறு வழிகளைக் கண்டறியலாம். நமக்குத்தேவையான உணவு வகைகளை நமது தோட்டத்திலேயே வளர்க்கலாம். வீட்டுக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைத் தவிர்க்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

7. திட்டமிடல்:

காலை எழுந்ததும் என்ன செய்வது என்பதை திட்டமிட்டு தினமும் எழுந்ததும் இந்த வேலைகளை செய்துவிட வேண்டும். இதனால் நேரமும் கூடுதலாகக் கிடைக்கும். அவசர அவசரமாக எழுந்து டென்ஷனுடன் செய்ய வேண்டிய தேவையுமிருக்காது.

8. காலை உணவும் போதுமான தண்ணீரும்:

எந்த விஷயத்திற்காகவும் காலை உணவை சமரசம் செய்துகொள்ளாதீர்கள். அன்றைய நாளை சிறப்பாக்க வேண்டுமெனில் உடலில் ஆற்றல் வேண்டும். அதை உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது நமது தாகத்தை தீர்ப்பதோடு, உடலின் நச்சுக்களையும் வெளியேற்றி மற்ற உறுப்புகளுக்கு போதுமான ஆற்றலை அளிக்கிறது.

இவற்றை பின்பற்றினால் நம்மால் நெடுநாள் நலமாக வாழ முடியும். முயன்றுதான் பாருங்களேன்.

வணக்கம் உறவுகளே.!அனைத்து வகையான உடல் பிரச்சனைக்கும் இயற்கை மருத்துவ முறையில் தீர்வுகளை பெறலாம்.வரும் ஏப்ரல் மாதம் 12 முத...
07/04/2025

வணக்கம் உறவுகளே.!

அனைத்து வகையான உடல் பிரச்சனைக்கும் இயற்கை மருத்துவ முறையில் தீர்வுகளை பெறலாம்.

வரும் ஏப்ரல் மாதம் 12 முதல் 15 வரை சென்னையில் இருக்கிறேன் இயற்கை மருத்துவ ஆலோசனை பெற விரும்புகிறவர்கள் கீழ்காணும் எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.!

முன்பதிவு | 9930720123 | 9930720234 |

ஆரோக்கிய நன்மை பயக்கும் அகாசியா பொடி (Acacia powder) பல நன்மைகளை கொண்டுள்ளது, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமிரு...
07/04/2025

ஆரோக்கிய நன்மை பயக்கும் அகாசியா பொடி (Acacia powder) பல நன்மைகளை கொண்டுள்ளது, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமிருப்பதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு நோயிலிருந்து பாதுகாத்தல், குடல் இயக்கத்தை சீராக்குதல் போன்ற பல நன்மைகள் உள்ளன.

அகாசியா பொடியின் நன்மைகள்:
கரையக்கூடிய நார்ச்சத்து:
அகாசியா பொடி கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, மேலும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்:
கரையக்கூடிய நார்ச்சத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு:
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

குடல் ஆரோக்கியம்:
குடல் இயக்கத்தை சீராக்குகிறது, மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சனைகளைத் தடுக்கிறது.

எடை இழப்பு:
கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குவதால், பசியை கட்டுப்படுத்தி, எடை இழக்க உதவுகிறது.

பல் ஆரோக்கியம்:
அகாசியா மரத்திலிருந்து எடுக்கப்படும் பசை வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, பற்பசை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

இருமலுக்கு:
கருவேலம் பட்டை பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவதால் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

உணவுத் தொழில்:
உணவுத் தொழிற்சாலையில் உணவின் தரத்தைச் சீராக வைத்திருக்கவும், அச்சுத் தொழிலிலும் இது பயன்படுகிறது.

அழகு சாதனப் பொருட்கள்:
அழகு சாதனப் பொருட்கள், இனிப்பு வகைகள் ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகிறது.

Address

Sion West Mumbai
Mumbai
400022

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919930720234

Website

Alerts

Be the first to know and let us send you an email when சித்த மருத்துவ வாழ்வியல் மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to சித்த மருத்துவ வாழ்வியல் மையம்:

Share