MAHI Acupuncture

MAHI Acupuncture Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MAHI Acupuncture, Acupuncturist, காவல்நிலையம் எதிரில். , ஜேடர்பாளையம். , நாமக்கல் மாவட்டம், Namakkal.

💝💞💝💞💝💞💝💞💝💞💝💞அக்குபங்சர் உலகம் இதுவரை அறிந்திராத அதி உன்னத எசன்ஸ் அக்குபங்சர்(TCM முறை & இந்திய அக்குபங்சர் இரண்டும் இணைந...
12/10/2022

💝💞💝💞💝💞💝💞💝💞💝💞
அக்குபங்சர் உலகம் இதுவரை அறிந்திராத அதி உன்னத எசன்ஸ் அக்குபங்சர்(TCM முறை & இந்திய அக்குபங்சர் இரண்டும் இணைந்த அதற்கும் மேலான)
💝💞💝💞💝💞💝💞💝💞💝💞.....

🍇💐🍇💐🍇🍇💐🍇💐🍇💐🍇💐
ஆக்குஹீலர்களாக இருந்தாலும் அக்குபங்சரிஸ்ட்டாக இருந்தாலும்....
அக்குபங்சர் பற்றி ஆழந்த தேடல் உள்ளவரா நீங்கள்....இது உங்களுக்கானது....
🍇💐🍇💐🍇💐🍇💐🍇💐🍇💐🍇

🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀
நீங்கள் செய்யும் சிகிக்சை முறையை இன்னும் மேம்படுத்த நினைக்கின்றவரா...
இது உங்களுக்கானது.....
🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸

🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻
நீங்கள் மிக சிறந்த அக்குபங்சர் நிபுணராக வேண்டும் என்று நினைக்கின்றீர்களா இது உங்களுக்கானது....
🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻

🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼
இதுவரை அக்குபங்சர் உலகம் அறிந்திருந்திராத சிகிக்சையை அறிய வேண்டுமா இது உங்களுக்கானது.....
🌼🌻🌼🌻🌼🍁🌼🌻🌼🌻🌼🌻🌼

🫐🍇🫐🍇🫐🍇🫐🍇🫐🍇🫐🍇🫐
எத்தகைய நாட்பட்ட கொடிய நோய்களையும்....மன நோய்களையும் மிக எளிதில் களைந்திட வேண்டுமா இது உங்களுக்கானது.....
🫐🍇🫐🍇🫐🍇🫐🍇🫐🍇🫐🍇🫐

🌹🌾🌹🌾🌹🌾🌹🌾🌹🌾🌹🌾🌹
நீங்கள் இதுவரை கற்ற அக்குபங்சர் மருத்துவம் நடைமுறையில் போதுமானதாக இல்லை என்பதை உணர்கிறீர்களா இது உங்களுக்கானது.....
🌹🌾🌹🌾🌹🌾🌹🌾🌹🌾🌹🌾🌹

🍂💮🍂💮🍂💮🍂💮🍁💮🍂💮🍂
நீரிழிவு நோயை குணப்படுத்த முடியாமல்....சர்க்கரையின் அளவு 300...400 என்று கூடிக் கொண்டே போனாலும்....உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் என்று சொல்லிக் கொண்டு இருப்பது உங்கள் மனசாட்சியை உறுத்துகிறதா....
இது உங்களுக்கானது....
🍂💮🍂💮🍂💮🍂💮🍁💮🍂💮🍂

👲🌸👲🌸👲🌸👲🌸👲🌸👲🌸👲
பல நோய்கள் என்று இல்லை....ஒன்றே ஒன்றுதான் என்று கூறிக் கொண்டு....
கேன்சர்.....கைக்கால் செயலிழப்பு
சோரியாசிஸ் போன்ற கொடிய நோய்களில் ஒன்றும் செய்ய முடியாமல் திணறுபவரா....இது உங்களுக்கானது.....
👲🌸👲🌸👲🌸👲🌸👲🌸👲🌸👲

🤔🍎🤔🍎🤔🍎🤔🍎🤔🍎🤔🍎🤔
அக்குபங்சர் துறையில் பல சந்தேகங்கள் கேள்விகள் இருந்தும் விடைக்காண முடியாமல்....
விடைசொல்ல யாருமில்லை என்று நினைப்பவரா.....இது உங்களுக்கானது....
🤔🍎🤔🍎🤔🍎🤔🍎🤔🍎🤔🍎🤔

🔥🌀🔥🌀🔥🌀🔥🌀🔥🌀🔥🌀🔥
உலகில் எந்த மிகசிறந்த அக்குபங்சர் நிபுணரும் திணறக்கூடிய விஷயங்களிலும்....
அந்த அக்குபங்சர் நிபுணர்களே வியக்கும் அக்குபங்சரின் மேலான உண்மைகளை தெரிந்துக் கொள்ள விருப்பம் உள்ளவரா....இது உங்களுக்கானது...
🔥🌀🔥🌀🔥🌀🔥🌀🔥🌀🔥🌀🔥

🧅🪂🧅🪂🧅🪂🧅🪂🧅🪂🧅🪂🧅
மறைந்து போன பல அக்குபங்சர் இரகசியங்கள் மீது தேடல் உள்ளவரா இது உங்களுக்கானது.....
🧅🪂🧅🪂🧅🪂🧅🪂🧅🪂🧅🪂🧅

💮🌾💮🌾💮🌾💮🌾💮🌾💮🌾💮
அக்குபங்சர் வாழ்வியல் முறை பின்பற்ற வேண்டும்.....போன்ற எந்த கட்டுப்பாடும்....பட்டினி முறை எல்லாம் இல்லாமல்.....சிகிக்சை செய்ய விருப்பமா......இது உங்களுக்கானது.....
💮🌾💮🌾💮🌾💮🌾💮🌾💮🌾💮

🪔🧧🪔🧧🪔🧧🪔🧧🪔🧧🪔🧧🪔
நூற்றுக்கு ஒன்றிரண்டு என்றில்லாமல்....சிகிக்சைக்கு வரும் அனைவருக்குமே.....சிகிக்சை தொடங்கிய அந்த நிமிடமே
பெரும் மாற்றம் நிகழ்வதை உணர வேண்டுமா.... இது உங்களுக்கான.....
🪔🧧🪔🧧🪔🧧🪔🧧🪔🧧🪔🧧🪔

💥🎆💥🎆💥🎆💥🎆💥🎆💥🛢️💥
வாரக் கணக்கில்,
மாத கணக்கில், வருட கணக்கில் சிகிக்சை அளிக்காமல்.... எத்தகைய கொடிய நோயையும்
அதிக பட்சம் 5,6 சிட்டிங்கில் குணப்படுத்த விரும்புகிறீர்களா.....
90% நோய்களை ஒரே சிட்டுங்கில் குணபடுத்த முறையை அறிய விருப்பமா....இது உங்களுக்கானது....
💥🎆💥🎆💥🎆💥🎆💥🎆💥🛢️💥

👪😇👪😇👪😇👪😇👪😇👪😇👪
எல்லாவற்றிற்க்கும் மேலாக....
நீங்கள் உங்கள் பிரச்சனையை உங்கள் குடும்ப பிரச்சனையை 100% எந்த சாக்கு போக்கும் சொல்லாமல் குணப்படுத்த வேண்டுமா.....
உங்கள் குடும்பத்தாரையும்....உங்கள் நண்பர்களையும்.... அக்குபங்சர் வாழ்வியல் முறை என்று....
நோய்களை குணப்படுத்த முடியாமல் சங்கபடுத்துகிறீர்களா......
உங்கள் அக்குபங்சர் வாழ்வியல் முறையை கூறுவதால்....உங்கள் குடும்பம் மற்றும் உறவினர் இடையே பெரும் சங்கடத்தை சந்திக்கின்றீர்களா...... இது உங்களுக்கானது.....
👪😇👪😇👪😇👪😇👪😇👪😇👪

உங்களுக்கான இந்த எசன்ஸ் அக்குபங்சர் telegram app மூலம் ஆன் வகுப்பாக எடுக்கப் படுகிறது....

💜🏅💜🏅💜🏅💜🏅💜🏅💜🏅💜
மொத்த கட்டணம் ரூபாய் 50,000 மட்டும்....
ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் தவணை முறையாகவும் செலுத்தலாம்....
💜🏅💜🏅💜🏅💜🏅💜🏅💜🏅💜

ஒரு வருட முழுமையான ஆன்லைன் அக்குபங்க்சர் வகுப்பு....

💵💴💵💴💵💴💵💴💵💴💵💴💵
நீங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும் வெளியில்....இந்த உலகில் வேறெங்கும் கற்க முடியாத ஒன்று.... மிக மிக குறைந்த கட்டணத்தில்.....
💵💴💵💴💵💴💵💴💵💴💵💴💵

வரும் நவம்பர் 15ஆம் தேதி
15/11/2022 வகுப்புகள் ஆரம்பமிக்கப்பட
இருக்கிறது....

வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பம் உடையோர்....
மேலும் விவரங்கள் தெரிந்துக் கொள்ள விரும்புவோர்
கீழ்கண்ட லிங்க்கை தொட்டு குழுவில் இணையுங்கள்....
https://t.me/+BoZJCLt3621jMzZl

SP-6 மண்ணீரல் சக்தியோட்ட பாதையில் உள்ள ஆறாவது புள்ளி.புள்ளியின் சீன பெயர்கள்: SAN YIN JIAO= Three yin JunctionTAIYIN= Gr...
17/05/2021

SP-6 மண்ணீரல் சக்தியோட்ட பாதையில் உள்ள ஆறாவது புள்ளி.

புள்ளியின் சீன பெயர்கள்:
SAN YIN JIAO= Three yin Junction
TAIYIN= Greater yin
CHENGMING= Receive Life
XIAZHI SANLI= Lower Three Regions.

Three Yin Junction எனும் பெயர் மூன்று Yin' சக்தியோட்ட பாதைகளின் சந்திப்பு எனும் பொருள் தருகிறது.

மண்ணீரல்,சிறுநீரகம்,கல்லீரல் எனும் மூன்று "யின்" சக்தியோட்டப் பாதைகளும் சந்திக்கிற ஒரு புள்ளியாக SP 6 இருப்பதால், இது Three Yin junction என அழைக்கப்படுகிறது.

இந்த பெயரின் அடிப்படையில் பார்க்கும்போது, Sp-6 எனும் மண்ணீரல் புள்ளியானது மண்ணீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் எனும் மூன்று Yin உறுப்புகளையும் இணக்கப் படுத்தும் புள்ளி எனவும் கொள்ளலாம். இவ்வாறு அந்த மூன்று உறுப்புகளுக்கு இடையே இணக்கம் ஏற்படுத்தி அவற்றிலிருந்து சக்தியை பெறவும் செய்கிறது. இவ்வாறு இந்த புள்ளி Yin Qi யை முறைப்படுத்துவதால் " Greater Yin" எனும் பெயரும் பெறுகிறது.

பொதுவாகப் பெரும்பாலான அஜீரண கோளாறுகள், கர்பப்பை கோளாறுகள், சிறுநீர் பிரச்சனைகள், பாலியல் குறைபாடுகள், மனக்கோளாறுகள் போன்றவை மண்ணீரலோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

சீன மரபு அக்குபங்சரைப் பொறுத்தவரையில் மண்ணீரலானது,
* ஒன்றைத் தன்மயமாக்கி அதை "இன்னொன்றாக உருமாற்றுதல்" (Transformation); உருமாற்றியதைக் கடத்துதல்' (Transportation),
மற்றும் உறுப்புகளை அதனதன் இடத்தில் பிடித்து வைத்திருப்பது (Holding) ஆகிய மூன்று செயல்களைச் செய்கிறது.

மேற்கண்ட அடிப்படையில் இரத்தம் மற்றும் Qi உருவாக்கத்தில் மண்ணீரலின் பங்களிப்பு முதன்மையானது.
மண்ணீரலில் Qi அல்லது Yang பற்றாக்குறை ஏற்படும் போது, மண்ணீரலின் 'தன்வயப்படுத்தி உருமாற்றுதல்' மற்றும் 'உருமாற்றியதைக் கடத்துதல்' பணி பாதிப்படைந்து, வயிறுமந்தம், மலத்தில் செரிக்காத உணவுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் (எப்போதும் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு), வயிற்று பொருமல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மண்ணீரலில் போதிய அளவு இரத்த உருவாக்கம் இல்லாத போது படபடப்பு, மாதவிடாய் இன்மை, அல்லது மிகக் குறைவான மாதவிடாய், மங்கலான பார்வை, மகப்பேறுக்கு பிறகு தலைசுற்றல் போன்றவைகள் ஏற்படும்.

இதன் 'பிடித்துவைத்திருக்கும்' (Holding) செயல் பாதிக்கும்போது
அதீதமான மாதவிடாய் உதிரப்போக்கு, மலம் மற்றும் சிறுநீரில் இரத்தம் கலந்து போவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும் மண்ணீரலின் Qi யானது பலகீனமடைந்து Qi sinking ஆவதால் கர்ப்பபை இறக்கம், குடலிறக்கம் போன்ற நோய்கள் உருவாகும்.

SP6 தூக்கமின்மைக்கு மிகச்சிறந்த புள்ளியாகும். குறிப்பாக இரத்த பற்றாக்குறை மற்றும் Yin பற்றாக்குறை காரணமாக ஏற்படும் தூக்க பிரச்சனைகளை களைகிறது, மண்ணீரலால் போதிய அளவு இரத்தத்தை உருவாக்க முடியாதபோது தான் மண்ணீரல் மற்றும் இதயமானது பற்றாக்குறையால் (deficiency) பாதிக்கப்படுகிறது. இந்த பற்றாக்குறை நிவர்த்தி செய்யப் படாமல் போகும் போது, இதய இரத்தத்தில் குடியிருக்கும் ஆன்மாவானது (Shen) நிலைபெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாறு தூக்கமின்மை பிரச்சனை உருவாகிறது. மேலும் மனச்சிதறல், விரக்தி போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

SP6 இரத்தத்தை உருவாக்கி, அதன் மூலம் shen நிலைபெற உதவுவதால் நல்ல உறக்கம் ஏற்படவும், தீவிர மன பாரத்தை குறைத்து Shen க்கு (ஆன்மா) அமைதியைத் தருகிறது,

மண்ணீரல் செழிப்பாக இருக்கும் போது இதயத்திற்கும் சிறுநீரகத்திற்குமான தகவல் தொடர்பு பலமாக இருக்கிறது,
இதனால் நினைவாற்றல் மற்றும் சிந்தனை வளமாகிறது. சிறுநீரகத்திற்கும் இதயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, மண்ணீரலானது இதயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் மையமாக இருந்து செயல்படுகிறது, இரண்டையும் சமநிலை படுத்துகிறது. மேலும்
சிறுநீரக jing மற்றும் இதயத்தின் Shen ஆகியவற்றுக்கு இடையை ஒரு பிணைப்பை உண்டாக்குகிறது.

Sp 6 புள்ளியை தூண்டுவதன் மூலம் மண்ணீரல் பற்றாக்குறையால் ஏற்படும் அனைத்து குறைபாடுகளையும் களையலாம்.
உதாரணமாக பசியின்மை, தளர்வான மலம், சோர்வு, மற்றும் கவலை ஆகிய பிரச்சனைகளுக்கு ST36 புள்ளியோடு SP6 புள்ளியையும் சேர்த்து தூண்டி உடலின் நடுப்பகுதியை (Middle jiao) வலுப்படுத்தி நிவாரணம் பெறலாம்.

Sp6 இரத்தம் மற்றும் Qi'க்கு ஊட்டமளிக்கும், இதனால் நீண்டகாலமாக இருக்கும் சோர்வை நீக்கி உற்சாகத்தை தருகிறது.

மண்ணீரல் Qi பற்றாக்குறை மற்றும் முழுமையடையாத மண்ணீரலின் உருமாற்றம் (Transformation) மற்றும் கடத்தும் (Transportation) செயல்களால் மண்ணீரலில் ஈரப்பதம் அதிகரிக்கும். பொதுவாகவே ஈரப்பதத்தால் உடலின் கீழ் பகுதிதான் (Lower jiao) தான் முதலில் பாதிப்படைகிறது,

Sp.6 ஈரப்பதத்தை (Dampness) நீக்குகிறது,
ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் (Damp -heat) அல்லது குளிர்(Damp-cold) அதிகரிப்பதால் உடல் பாரமாக இருக்கும் உணர்வு, நீர்வீக்கங்கள் ஏற்படும்,
குறிப்பாக கீழ் உடலில் (Lower Jiao) ஈரப்பதத்தால் ஏற்படும் பிரச்சனைகளான சளி கலந்த மலம், வயிற்றுப்போக்கு, கலங்கலான சிறுநீர், வெள்ளைப்படுதல் மற்றும் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு ஆகியவற்றை SP.6 குணப்படுத்தும்.

மேலும் இந்த புள்ளி சிறுநீர் செயல்பாடுகளில் ஈரப்பதத்தால் (Dampness) ஏற்படும் பிரச்சனைகளை களைவதில் சிறப்பான பங்களிப்பை தருகிறது, சிறுநீர் வெளியேறுவதில் உள்ள தடைகளை நீக்கி வலிகளை போக்குகிறது, சிறுநீரை தக்கவைக்கும் போது சிலருக்கு ஏற்படும் அடிவயிற்று வலியை நீக்கும்.

Sp6 கல்லீரல் மற்றும் சிறுநீரக மெரிடியன்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கல்லீரலின் மிக முக்கிய பணியான முறையான Qi ஓட்டம் மற்றும் கல்லீரல் இரத்தத்திற்கு இந்த புள்ளி ஊட்டமளிக்கிறது,
கூடவே சிறுநீரக Qi க்கும் உதவுகிறது,

கர்பப்பையானது கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்படகூடிய உறுப்பு என்பதால், கர்பப்பை சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும் SP-6 ஐ தூரத்து புள்ளியாக பயன்படுத்த முடியும்.

ஈரப்பதத்தால் கல்லீரல் Qi தடைபடும்போது வலி மிகுந்த மாதவிடாய், வயிற்று வலி, எரிச்சல் போன்றவை ஏற்படும்.
Sp-6 தூண்டுவதால் கல்லீரலில் உள்ள ஈரப்பதம் வெளியேற்றப்பட்டு கல்லீரல் Qi சுற்றோட்டம் அடைகிறது, இவ்வாறு
இந்த புள்ளி கர்பப்பை மற்றும் மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது,

குறிப்பு* கர்ப காலத்தில் இந்த புள்ளியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக சக்தியோட்ட பாதையோடு இணைந்து இருப்பதால் Sp.6 சிறுநீரகத்திற்கு ஊட்டம் கொடுக்கிறது, குறிப்பாக சிறுநீரக yin க்கு எனலாம்.
இதன் காரணமாக காது இரைச்சல், உடல் சூடாக இருப்பது போன்ற உணர்வு, இரவில் வரும் அதிக வியர்வை, வறண்ட வாய் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த புள்ளியை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

மண்ணீரலின் sinew channel பிறப்புறுப்பில் பிணைகிறது, அதனால் ஆண்-பெண் இருபாலருக்கும் பாலியல் மற்றும் பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் SP -6 கொண்டு சிகிச்சை அளிக்கலாம், பிறப்புறுப்பில் வலி, சுருக்கம், விரைவீக்கம், அனிச்சையாக விந்து வெளியேறுதல், ஆண்களின் அதிகமான காம செயல்பாடு, ஆண்மைக்குறைவு போன்ற கோளாறுகளை SP-6 கொண்டு சரி செய்யலாம்.

காலில் உள்ள மூன்று Yin சக்தியோட்ட பாதைகளும் கீழ் உடலில் (lower Jiao) ரென்-மாய்(RENmai) மற்றும் ச்சோங்-மாயோடு(CHONGmai) தொடர்புகொண்டு உள்ளது. எனவே Sp6 இரத்தத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் இரத்தம் மற்றும் Yin க்கு ஊட்டமளிக்கிறது.

இரத்த தேக்கத்தை நீக்குகிறது, இரத்தத்தை நகர்த்துகிறது, கீழ் உடலில் (Lower Jiao) உள்ள கர்பப்பைக்கு இரத்தத்தை நகர்த்தி கர்பப்பை சார்ந்த பிரச்சனைகளை குணமாக்குகிறது, செறிவான Yin தன்மையால் இரத்தத்தை குளிர்ச்சி அடைய செய்கிறது, இரத்த சூட்டை (Blood heat) தணிக்கிறது.

ஆய்வு.
மகேந்திரன்.
ஜேடர்பாளையம்.
நாமக்கல் மாவட்டம்.
cell-9597820861
7904848355

Address

காவல்நிலையம் எதிரில். , ஜேடர்பாளையம். , நாமக்கல் மாவட்டம்
Namakkal
637213

Telephone

+919597820861

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAHI Acupuncture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category