
22/04/2024
எசென்ஸ் அக்குபங்சர்
--------------------
ஒரு டாக்டர்க்கு தன் கிட்டே வர்ற நோயாளிகளை சரி செய்கிற கடமையும் பொறுப்பும் நிறையா இருக்கு. அதை தாண்டிய அறமும் நிச்சயமாக வேண்டியதா இருக்கு. மற்ற மருத்துவத்தை விட எசென்ஸ் அக்குபங்சர் மருத்துவத்தில் அது நிறையவே இருக்கு.
மற்ற மருத்துவம் மாதிரி இந்த நோய்க்கு இந்த மருந்து இந்தாங்க சாப்பிடுங்கன்னு என எளிதா ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்துட்டு போயிட முடியாது.. இங்க இந்த நோய்க்கு இந்த புள்ளிதான்னு எந்த ஸ்டேண்டர்டு புரோட்டகாலும் கிடையாது..
நோயோட தன்மையும் நோயோட மூலமும் ஒவ்வொரு நபருக்கும் வேற வேறயா இருக்கும் போது ஒரு புரோட்டகால வெச்சுகிட்டு என்ன பண்ண முடியும் சொல்லுங்க. எசென்ஸ் அக்குபங்சர்ல எப்பவுமே நோய்க்கு சிகிச்சை பண்ண மாட்டோம். நோயாளிக்கு தான் சிகிச்சை பண்ணுவோம்..!!
ஒவ்வொரு நோயாளியும் தன்னுடய மனதிலும் உடலிலும் மற்றவரை விட வித்தியாசமானவர் என்பதால் ஒவ்வொரு நோயாளியுமே எங்களுக்கு முதல் நோயாளி தான். இரண்டு பேர் ஒரே நோயோட வந்தாலும் அவங்களுக்கான அக்குபங்சர் புள்ளிகளும் அந்த நோய்க்கான மூல காரணங்கள் கண்டிப்பாக வேற வேறவேறயாத்தான் இருக்கும்.
வளர் பிறையா தேய்பிறையான்னு பார்க்கணும். உற்பத்தி சுற்றா இல்ல தடுப்பு சுற்றான்னு பார்த்து நோய்க்கு தகுந்தாற்போல புதுசா நாமளே புள்ளிகளை கண்டுபிடிக்கணும். இந்த சிரமம் எல்லாம் எசென்ஸ் அக்குபங்சர் டாக்டர்க்கு மட்டும் தான். நோயாளி மிக எளிதா நாங்க குடுக்கிற சிகிச்சையால சுலபமா தன் நோயை சரி பண்ணிக்கலாம். எல்லா மருத்துவத்திலும் மருந்து எடுத்தவுடனே குணம் கிடைக்கும். ஆனால் எசென்ஸ் அக்குபங்சர் மருத்துவத்துல நோய் குணமாவதோடு ஒரு விவரிக்க முடியாத சுகமும் கிடைக்கும்.
ஏன் விவரிக்க முடியாதுன்னு சொல்றேன்னா அது ஒரு தனி அனுபவம் அனுபவிக்கிறவனுக்கு மட்டுமே புரிகிற ஒன்று... காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் எடுத்துகிறோம்ன்னு வைங்க.. கண்டிப்பா காய்ச்சல் சரியாகும் ஆனால் ஒரு வித அலுப்பும் அசௌகரியமும் இருக்கும் (இப்பல்லாம் நாம அதுக்கு பழகிட்டோம்)
ஆனா எசென்ஸ் அக்குபங்சர்ல சிகிச்சை எடுத்துக்கும் போது பக்கவிளைவுகள் இல்லாம, நோய் நம்மல விட்டு போகறது மட்டும் இல்லாம, எந்த தடயத்தையும் ஏற்படுத்தாம போயிருக்கும்,
பல பேர் நினைக்கிற மாதிரி இது லேட்டா வேலை செய்யும் என்றெல்லாம் கிடையாது. சரியான புள்ளிகளை தேர்ந்தெடுத்து சரியா சிகிச்சை கொடுத்தா நெற்றியில் திருநீரு வைக்கிற நேரத்துல நோய் குணமடைவதை நாம் உணர முடியும். நோயாளியை சரி செய்யும் போது பல நேரம் என்னை ஒரு மந்திரவாதியை போல உணர்ந்திருக்கிறேன்.
எத்தனையோ டாக்டரை பார்த்துட்டேன் சார், எவ்வளவோ ஆஸ்பத்திரி ஏறி இறங்கிட்டேன். ஆனா நீங்க குடுத்த ட்ரீட்மெண்ட்டால என்னோட நோய் சுத்தமாக சரியா போச்சுன்னு சொல்லிட்டு வர்ற ஒரு ஃபேஷண்ட் குடுக்கிற எனர்ஜி அடுத்த 5 வருஷம் என்னை இன்னும் உற்சாகமா ஓட வைக்குது.
Essence Acupuncture... !!! Always it's Safe.... It cures.
Thanks to Umapathi Sir. u done a great job for giving essence for us.
அன்புடன்
டாக்டர்.சதீஷ் கண்ணன்
எசென்ஸ் அக்குபங்சர் மருத்துவர்.