23/06/2025
கால் பாதங்கள் அழகாக இருக்க மற்றும் வெடிப்புகள் வராமல் தடுக்க **☺️**************************
☺️ தினமும் செப்பல் உபயோகிப்பவர்கள் குறைந்தது 3 or 4 தடவை கால் தேய்த்து கழுவவேண்டும்.
☺️ கடினமான ( கல் மாதிரியான ) செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.
😊 வாரத்திற்கு 3 முறை இரவில் படுக்கும்முன் உள்ளங்கால்களுக்கு நல்எண்ணெய் தேய்த்து படுக்கவேண்டும்.
🌻 தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.
🌻 தினமும் குளிக்கும்போது கால்களை சொரசொரப்பான தரையில் நன்கு தேய்க்கவேண்டும்.
🌻 கால்களுக்கு ஷூ அணிவதால் கால்வெடிப்பு வராது தடுக்கும்.
🌻 ஷூ அணியும் பழக்கம் உள்ளவர்கள் socks அணிவதற்கு முன்னாடி கால்களுக்கு கிரீம் or எண்ணெய் லேசாக தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
🌻 பொதுவாக பழங்கள் மற்றும் ஜூஸ் அதிக அளவில் உபயோகித்தால் தோலுக்கு மினுமினுப்பு அதிகம் கிடைக்கும். முக்கியமாக இளமையாக இருக்கலாம்.
🌻 வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும்.(லேசாக தேய்க்கவும்).
🌻 கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பாசிபருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.
🌻 இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைக்கவும்.
🌻 பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும்.வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள். 👍👍👍(அவசியம் ஹோட்டலில் வேலை செய்யும் நண்பர்கள் , நண்பிகள் காலணிகள் உபயோகிக்கவும்.)
🌻 ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.
🌻 விளக்குஎண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.
🌻 மருதாணி பவுடருடன் தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
🌻 மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்
🌻 பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.
🌻 வெங்காயத்தை வணக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும். செல். , 99449 27334 , 94433 43056 ஜெயம் ஹோமியோ கிளினிக் சேலம் since 1997.. Jayam HOMOEO Clinic , Dr.K.Ezhilarasu , BHMS.,CCH.,SINCE 1997.