23/08/2025
ஓரிதழ் தாமரை காயகல்பம்
ஓரிதழ் தாமரை,தொழுகண்ணி,விஷ்ணுகிரந்தி,கீழாநெல்லி ,மணதக்காளி கீரை,மகா வில்வம் ஆகிய மூலிகைகளை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து ,தனித்தனியாக பொடித்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
காலை மாலை வெறும் வயிற்றில் ஐந்து கிராம் பொடியை 15 கிராம் தேன் கலந்து அருந்த வேண்டும் அல்லது 100 மில்லி பாலில் 5 கிராம் பொடியை கலந்து அதனுடன் பனை கல்கண்டு சேர்த்து அருந்த வேண்டும்.
உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியற்றி சகல உறுப்புகளையும்(வயிறு கல்லீரல்,கணையம்,சிறுநீரகம்,இனபெருக்க உறுப்புகள்) புதுபித்து நன்றாக இயங்க செய்யும்.உடலில் உள்ள உறுப்புகளின் கெட்ட கழிவுகளை வெளியற்றினாலே அதன் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.இது ஏறக்குறைய வாகனங்களை சர்விஸ் விடுவது போன்றதுதான்.
நான் சிறுவனாக இருக்கும் போது ,என்னுடைய ஆயா வருடத்தில் சில முறை கீழாநெல்லி கீரையை அரைத்து உருண்டையாக உருட்டி வாரத்தின் விடுமுறை நாட்களில் கொடுப்பார்கள்,வாசனையை பார்த்தாலே கசப்பாக இருக்கும்,வாந்தி வரும்,விழுங்கும் போதே வாந்தி வரமாதிரி ஏமாற்றி துப்பினால் ,அவர் கைவசம் இன்னும் சில உருண்டைகள் இருக்கும் அதை தந்து விழுங்க செய்வார் ,வயதுக்கு தகுந்தார் போல உருண்டையின் அளவும்,எடையும் மாறுபடும்,ஏதுக்கு ஆயான்னு கேட்டால்,மஞ்சள் காமாலை வராது ,வயித்து பூச்சி சாகும்,நல்லா பசி எடுக்கும்னு சொல்லுவாங்க(அது கல்லீரலையும், வயிற்றையும் சுத்தப்படுத்தி அங்குள்ள கழிவுகளை வெளியே ற்றும் வேலையை செய்கிறது).இந்த நிகழ்வு நம்மில் பலருக்கு நடந்த ஒன்றுதான்.
வயல் வேலைக்கு செல்லும் பெண்கள் மதிய உணவுக்கு தூக்கு என்ற பாத்திரத்தில் உணவு எடுத்து செல்வர்கள் திரும்பி வீட்டுக்கு வரும் போது சில காட்டு கீரைகளும் அதனோடு மணதக்காளி கீரை மற்றும் அதன் பழங்களை கொண்டு வருவர் ,பழங்களை காய வைத்து வற்றலாக செய்து குழம்பு வைப்பார்,கீரையை துவையளாகவோ,குழம்பாகவோ செய்வர் ,இது இனபெருக்க உறுப்பு,சிறுநீரகம்,கல்லீரல் போன்ற உறுப்புகளை பலப்படுத்தும்.
சிவாலயங்களில் தொன்று தொட்டு செய்துவரும் வில்வ இலை அபிசேகம்,நாம் அறிந்த ஒன்றுதான் அந்த வில்வ இலைக்கு நுரையீரல்,ரத்த ஓட்டம்,வயிறு,இனபெருக்க மண்டலம் ஆகியவற்றில் உள்ள கழிவுகளை அகற்றி பலப்படுத்தும் தன்மை கொண்டது.