04/01/2026
இராஜபாளையம் அருகே அமைந்துள்ள முகவூரில் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தினரால் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மதி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் மகேந்திர சேகர் மற்றும் மதி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கவிஞர் திலகபாமா அவர்களின் வழிகாட்டுதலின்படி முகாம் நடைபெற்றது. முகாம் மருத்துவராக மருத்துவர். ராஜேஷ் மற்றும் மருத்துவர் மணிஷ் கலந்து கொண்டனர். 150க்கும் மேற்பட்ட பொது மக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.