19/05/2023
🟪சிறுநீரககல்-Kidney stones ( Renal calculi, Nephrolithiasis or Urolithiasis)
🟪சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகிறது?
🟪அறிகுறிகள் என்ன?
🟪சிறுநீரககல் நீக்கும் சித்தா-ஆயுர்வேத மூலிகைமருந்துகள்.
🟪மீண்டும் கல்உற்பத்தி ஆகாமல் தடுக்கும் உணவுகள்
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
🟦டாக்டர் இ.இலக்கியன் BAMS
🟦 டாக்டர் ஜெ.ஆர்த்திகா BAMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை(since1953)
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, சென்னையில் டாக்டரை சந்திக்க பேசவும்
🟪Ph:9443475684
🟩🟩🟩19-05-23🟩🟩🟩
🟦சிறுநீரககல் முன்பு 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் பிரச்னையாக இருந்து வந்தது.ஆனால் இன்று இளம் வயதினருக்கும், ஆண் பெண் வேறுபாடு இன்றி, அதிக எண்ணிக்கையில், இருபாலருக்கும் சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
இதனால் சிறுநீர் வெளியேறும் பாதையில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. தாங்கமுடியாத வலியும் தோன்றிவிடுகிறது.
சிறுநீரககல் உறுவாவதற்கு இன்றைய உணவு,பழக்க வழக்கம் ஒரு காரணமாகவும் அமைகிறது.
🟦முதலில் சிறுநீரகக்கல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இரத்தத்தில் யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் அளவுக்கு அதிகமாக இருந்து,அதுவே சிலநேரங்களில் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதையில் இத்தாது உப்புகள் படிதல் முறையில்- தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்களாகும்.
🟦சிறுநீரக கல் எவ்வாறு உருவாகிறது என்றால் ,
உடலில் இருக்கும் அதிகப்படியான கால்சியம், யூரிக், ஆக்சலேட் சிறுநீர் வழியாக வெளியேற வேண்டும். இவை வெளியேறாமல் சிறுநீரகப்பாதையை அடைத்து நிற்கும் போது, அல்லது தேங்கும் போது படிமங்களாக படிந்து நாளடைவில் கடினமாக மாறி கற்கள் தோன்றும் .
சிறுநீரில் அளவுக் அதிகமாக யூரிக் அமிலம் உற்பத்தியாவதுடன், கல் உருவாவதைத் தடுக்கும் சிட்ரேட் எனும் இராசாயன உடலில் குறைவதாலும் சிறுநீரகக்கல் தோன்றிவிடுகிறது. அதாவது யூரிக் அமிலத்தின் அளவுக்கும் கல் உருவாகாமல் தடுக்கும் அமிலத்தின் அளவுக்கும் இடைப்பட்ட விகிதம், நம் உடலில், எப்போதும் சரிவர அமையவேண்டும். இதுவே கல் ஏற்படுவதை தடுக்ககூடிய முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.சிறுநீரின் pH அளவும் விகிதப்படி இருப்பதும் மிக அவசியம். இப் pH அளவு கூடினாலும் குறைந்தாலும் நோயாக மாறிவிடும்.சிறுநீரின் pH மதிப்புகள் 6.0 to 7.5 வரம்பில் உள்ளது.
சிலருக்கு மரபு வழியாக சிறுநீரில் அதிகளவில் கால்சியம் வெளியாகலாம் . அது இல்லாமல் உணவுப் பழக்கம், தண்ணீர் குறைவாகக் குடிப்பது போன்ற காரணங்களால் இக்கால்சியம் அதிகமாக படிதல் ஏற்பட்டு சிறுநீரககல் ஏற்படலாம்.
சிறுநீரகத்தில் உருவாகின்றன பெரும்பாலான கற்கள் கால்சியம் வகையைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. மேலும்
🟦சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.அவை
1)யூரிக் அமிலக் கற்கள்-Uric acid stones
2)சல்பேட் கற்கள்-Sulfate stones
3)மும்மைக் கற்கள் (Struvite stones -magnesium-ammonium phosphate- or infection stones
4)சிஸ்டீன் கற்கள்-Cysteine stones(இது சிலருக்கு பாரம்பரிய முறையில் வருகிறது)
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றை அதாவது Urinary tract infection-னை பயன்படுத்திக்கொண்டு மும்மைக்கற்கள் தோன்றிவிடுகிறது.
🟦சிறுநீரகக் கல் இருப்பதற்கான அறிகுறிகள்
பெரும்பாலும் எந்த அறிகுறியும் ஆரம்பத்தில் இருக்காது. எதார்த்தமாக ஸ்கேன் எடுக்கும்போதுதான் நமக்கு தென்படும். சிலருக்கு சிறுநீரில் மிகசிறிய கல்லும் கலந்து வெளியேறலாம். அந்தசமயத்தில் சிலருக்கு வலி ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டிருந்தால் பின் வயிற்றிலிருந்து வலி பரவி வரும். சிறுநீரில் ரத்தமும் கலந்து வெளியேறினால் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றிய அறிகுறியாகும்.சிறுநீரக மட்டுமல்லாது சிறுநீர் தங்கும் பையிலும் கல் உறுவாகிவிடும்.
லாயின் எனப்படும் இடுப்புக்கு மேலே வயிற்றுப் பின்புறம் வலி ஏற்பட்டால் (Loin pain) மேற்குறிப்பிட்ட குறிகுணம் இருந்தால் முதலில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் . அப்போது சிறுநீரகத்தில் ஏற்பட்ட பெரிய கற்களை இச் சோதனையில் கண்டுபிடித்துவிடலாம். அதேநேரத்தில், சிறிய அளவு கற்களாக சிறுநீர்ப்பையில் இருந்தால் இதற்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும். இதன் மூலமாக கல்லின் அளவு மற்றும் இடத்தை பொறுத்து நவீன மருத்துவ சிகிச்சை முறைகளான லேசர் அல்லது அறுவை சிகிச்சை முறைகளை பின்பற்றி சிகிச்சை எடுக்கலாம்.
🟦உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, பேராதைராய்டு ஹார்மோன் மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடல் பருமன், பரம்பரை போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.
✅பொதுவாக 5 முதல் 6 மி.மீ விட்டமுள்ள கற்களாக இருந்தால் ,நாம் அதிகமாக அருந்தும் தண்ணீரினால், சிறுநீர் வழியாகவே இது வெளியேறி விடும். வெளியேறும் சமயத்தில் சிலருக்கு வலியுடன் தொந்தரவும் ஏற்படலாம்.
6 மில்லிமீட்டருக்கு மேல் அளவுள்ள கற்கள் தானாக வெளியேறுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறுநீரகத்தில் நீராகப் பிரிக்கப்படும்போது, அந்நீரில் நிறைந்துள்ள உப்புகள் சில வேளை சிறுநீரகத்திலேயே தங்கி உறைவதுண்டு. உறைத்த உப்பின் பகுதி எந்த இடத்தில் தங்கியதோ அங்கு பெருத்து வளரும். கற்கள் சிறியதாகயிருந்தால் சிறு நீருடன் கலந்து வெளியேறும்.
உறைந்த கற்கள் சிறுநீரகத்தில் உட்பக்கத்திலோ, வெளிப்பக்கத்திலோ தங்கிப் பெருத்து வளருமாயின், உப்பின் வகைகளுக்கேற்ப உறைந்த கற்களின் வடிவங் களுக்கேற்ப குறி குணங்களும், துன்பங்களும் சற்று வித்தியாசப்படும். கற்களின் முனைகள் முள்ளைப்போல் கூர்மையாயிருப்பின் கடுமையான குறிகுணங்களையும். வழுவழுப்பாக யிருப்பின் இலகுவான குறிகுணங்களையும் காட்டும். உப்பு உறைந்த இடங்களுக்கேற்ப குறிகுணங்களும் வேற்றுமையடையும். வெளிவரும் கற்கள் நீர்ப்பையிலேயே சில வேளைத் தங்கிவிடும். தங்கிய கல் உருவத்தில் பெரியதாக இருந்தால் வெளியே வருவதில்லை. வலியும், வேதனையை தரும்.
🟥சிறு அளவிலிருந்து கல் முனை கூர்மையாய் இருந்தால் அவைபுரளும் போது கீறி தாங்க முடியாத வலியையும், இரத்தக்கசிவையும் உண்டாக்கி, சிறுநீருடன் கலந்து வெளியேறும். வயிறு பக்கத்து இடுப்பு, தொடைபகுதியில் வலி. விரை மேலுக்கு இழுத்துக் கொள்ளுதல் . அடிக்கடி சிறு நீரிறங்கும். குளிர்சுரம், வாத்தி, முகம் வெளுத்தல், கை கால்கள் சில்லிடல், நாடிகள் தளரல், முகம் வியர்த்தல், உடல் சோர்வு ஆகிய குறி குணங்களையும் உண்டாக்கும். சிறுநீருடன் குருதியும், சிறிய கற்களும் வெளிப்படலாம்.
சிறுநீரகத்தின் உட்பக்கத்தில் (Body of the kidney) தோன்றிய கற்கள் பெரிதாகி, தாபிதத்தையும் சீழையு முண்டாக்கும், அச்சீழ் சிறு நீருடன் கலந்து இழியும். அடிக் கடி நீரிழியும். முதுகின் பக்கத்திலும் நடுவிலும் வலியுண்டாகும். இவ்வலி சில நேரம் மிகக் கடுமையாகவும், இலகுவாகவும் இருக்கும்.
🟥கற்கள் சிறியதாகயிருப்பின் அவை மெல்லமெல்ல நழுவி வெளி வந்துவிடுவதுமுண்டு. இருபக்கத்து சிறுநீரகத்தில் கற்களுண்டாயின் மிகுந்த துன்பத்தை விளைவிக்கும்.
சில வேளைகளில் கல் புரண்டு கொண்டே வந்து வெளியாவதற்கு முயன்று வெளியாகாமல் நீர்தாரையிலோ , ஆண்களுக்கு ஆண்குறி நீர்பாதையிலோ அல்லது முனையில் வந்து தடைப்பட்டு நின்றால் மிகுந்த வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும்.சிறுநீர் இறங்கிக் கொண்டிருக்கும் போதே திடீரென அடைத்துக் கொள்வதும் உண்டு. கற்கள் கரடுமுரடா, கூர்மையா இருப்பின் கீழ் வயிற்றிலும், நீர்ப் புழையிலும் ஆசனவாய் பகுதியிலும் தாங்க முடியாத எரிச்சலையும், வலியையும் உண்டாக்கும். இரத்தமும் வெளியாகும்.
🟩ஆண்களுக்கு உடல் உழைப்பால் வியர்வை அதிகம் வெளியேறும் . இதனால் உடலில் நீர்குறைந்து கல் உறுவாகும் . கோடையில் அதிகமாக பாதிக்கப் படுவார்கள்.
இரவு நேரங்களில் அதிக நேரம் உட்கார்ந்து மலசலம் கழிக்காமல் வேலை செய்பவர்களுக்கும் , மிகசூடான இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் குடிதண்ணீர் குடிப்பதற்கான வாய்ப்பு குறைவான இடங்களில் பணிபுரிவோருக்கும் சிறுநீரகக்கல் ஏற்பட வாய்ப்புண்டு
✅சித்தமருத்துவத்தில் இதனை கல்லடைப்பு எனகுறிப்பிட்டு சித்தர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.அதில் யூகிமுனி சித்தர்
உணவு, நீர் முதலியவைகளினால் வளிக்குற்றமும், தீக்குற்றமும் மிகுந்து உடல் நீரைச் சுண்டச் செய்து சிறு நீரிலுள்ள உப்பை நீர்க் குண்டிக்காயில் (kidney) உறையச் செய்து, கீழ் நோக்குங்கால் வன்மையோடிருந்தால் அக்கற்களை எளிதில் சிறு நீருடன் வெளி யேற்றியும், வன்மை குறைந்திருந்தால் அக் கற்களை அவ்வப்போது வெளி யாக்காது, அங்கங்கே சிறுநீர் போகும் வழியில் எங்கேனும் தங்கச் செய்து இந்நோயைப் பிறப்பிக்கும் என்பதுடன் வளி, அழல்,ஐயம்,முக்குற்ற அடிப்படையில் பிரித்து சிகிச்சை முறைகளை வகுத்து தந்துள்ளனர்.வளி, அழல், ஐயம் ஆகிய மூன்றுவகைக் கல்லடைப்பு நோய்கள் தக்க மருந்துகளால் குணமாகு மெனவும் முக்குற்றகல்லடைப்பு நோய் தீராது எனவும் குறிப்பிடுகின்றனர்.
🟦சித்தமருத்துவத்தில் சிறு,பெரு நெருஞ்சில்(Tribulus terrestris )சிறுகண் பீளை(Aerva lanata),மாவிலிங்கம் (Crataeva nurvala-வருணா), தண்ணீர் விட்டான் கிழங்கு,பார்லி, நீர்முள்ளி ,நெருஞ்சில், சுரைக்கொடி,மற்றும்
நண்டுகல், கல்நார், குங்கிலியம், படிகாரம் மூலம் தயாரிக்கப்படும் பற்பங்களை உறியமுறையில் தக்க அனுபானத்தில் கொடுக்க சிறுநீர் கல் நீங்கும். குணமானபின்பு தக்க உணவுமுறைகளை பின்பற்றி தகுந்த மூலிகைமருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது மீண்டும் கல்உற்பத்தி ஆகாமல் பாதுகாக்கலாம்.
🟦கல் பெரிதாக இருந்தால் அவர்களுக்கு நவீன மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
✅தீவிர வலியை உண்டாக்காத கற்களுக்கு உணவுமுறையுடன் கல்கறைக்கும் சிறந்த மருந்துகளை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.கல் வெளியானபின் நல்ல உணவுப்பழக்கத்துடன் , அடிக்கடி தண்ணீர் அருந்தும் பழக்கத்தால் சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் கற்கள் தோன்றாமல் தவிர்த்து வரலாம். தினசரி நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு அதிகரிக்காமல், அதேநேரத்தில் ஒருநாளைக்கு 2லிட்டருக்கு மேல் 3லிட்டர்வரை தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும்.கோடைகாலத்தில் கூடுதலாக பருகலாம். சிறுநீரகசெயலிழப்பினர் மருத்துவரின் ஆலோசனைப்படி அளவுடன் தண்ணீர் பருக வேண்டும்.
ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவார்கள். இது நாளடைவில் சிறுநீரகத்தின் செயல்பாடுகளையும் பாதிக்க செய்யும். அளவோடு இருந்தால் நல்லது.
🟦சிறுநீரகக்கல் குணமான பின்னரும் வரக்கூடிய வாய்ப்பு உண்டு . மேலும் அறுவை சிகிச்சைமுறையில் கல்நீக்கபட்டாலும் , மீண்டும் வர வாய்ப்புள்ளது.அதனால் உணவுமுறையில் மாற்றம் செய்து, போதிய அளவு தண்ணீர் அருந்தினால் வராமல் தடுக்க முடியும்.
🟦 பால் பொருட்கள் - பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
🟦சால்மன் போன்ற மீன்களில்– வைட்டமின் டி, ஒமேகா,மீன் எண்ணெய் உட்கொள்வதால் கால்சியம் உறைந்து கல்லாகமாறுவதை இது தடுத்து விடுகிறது என்ற கருத்தும் உள்ளது.கல் ஏற்பட்டவர்கள் இதனை தேவை இல்லாமல் உட்கொள்ள வேண்டும்.மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
மாமிச புரதம் - சிவப்புநிற இறைச்சியை உட்கொண்டபின் யூரிக் அமிலத்தின் அளவை இரத்தத்தில் அதிகரிக்கிறது, இது கல் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இப்புரதங்கள் உடலில் உள்ள சிட்ரேட்அளவைகுறைந்து சிறுநீரக கற்களை தோன்றிவித்துவிடுகின்றன . அதனால் கோழி கறி, மீன், ஆட்டு இறைச்சி வாரத்தில் ஒரு நாள் குறைவாக்ளவில் எடுத்து கொள்ளலாம். அல்லது தவிர்த்து விடுங்கள்
தக்காளி,(விதை நீக்கப்பட்ட தக்காளியை சேர்த்துக்கொள்ளலாம்.)காலிஃபிளவர்,முட்டைகோஸ்,அத்திப்பழம், சப்போட்டா, திராட்சை ,உலர் பழங்கள், பாதாம்பருப்பு, வாதுமைபருப்பு, முந்திரிப்பருப்பு, பிஸ்தா, வேர்க்கடலை, இனிப்பு பண்டங்கள், வால்நெட் , ஸ்ட்ராபெரி ,பீட்ரூட்,சக்கர வள்ளிக்கிழங்கு, சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, கீரை, பசலைக் கீரை, கடலை பருப்பு , பிளாக் டீ, காஃபி,டார்க் சாக்லேட்டுகள்,ஐஸ்கிரீம்,போன்றவற்றில் அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் சிறுநீரககற்கள் உள்ளவர்கள் தவிர்த்துவிடலாம். அல்லது மிக குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.
உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம் தவிர்க்கலாம்.
மேலும் கருப்பட்டி,சோடா - கோகோ கோலா மற்றும் பெப்சி-கோலா போன்ற குளிர்பானங்களில் செயற்கை சர்க்கரை (பிரக்டோஸ், சுக்ரோஸ்) மற்றும் பாஸ்பேட் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளதால், இது சிறுநீரக கற்களை தோற்றுவிக்கும் . தவிர்த்து விடுங்கள்.
குறிப்பாக அதிக அளவு உப்பு, சர்க்கரை, புரதம், கால்சியம், ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை சிறுநீரகக்கல் ஏற்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, சிட்ரஸ் பழச்சாறு உணவுவகைகள், சிறுநீர் கற்களை வேகமாக கறைக்க கூடியதாகும். இளநீர், வாழைத்தண்டுச் சாறு, பார்லி வேகவைத்த தண்ணீர், கடைந்த நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
✅கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும். முடக்கத்தான் கீரையையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையை(Normal value Urine pH 6.0 to 7.5,) குறைக்கும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும், கல் உருவாவதும் தடுக்கப்படும். சிறுநீரகத்தில் ஒருமுறை கல் தோன்றி விட்டால் , குணமான பின்னரும் எச்சரிக்கையாக உணவுமுறை, தேவயான தண்ணீர் பருகி, வாழ்நாள் முழுவதும் அடிக்கடி சோதித்து, கவனத்துடன் இருந்து வரவேண்டும்.
நன்றி
🟩🟩🟩19-05-23 🟩🟩🟩
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
🟦டாக்டர் இ.இலக்கியன் BAMS
🟦 டாக்டர் ஜெ.ஆர்த்திகா BAMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை(since1953)
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, சென்னையில் டாக்டரை சந்திக்க மேலும் விபரம் பெற பேசவும் அழைக்கவும்.
🟪Ph:9443475684
🟩🟩🟩🧿🧿🧿🟩🟩🟩