21/06/2023
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கு
"""Try to diagnose before death"""
அதாவது ஒருவன் நோயுற்று மருத்துவரை அணுகும் பொழுது அம்மருத்துவரோ அவருக்கு எவ்வித நோயினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டும். இதுவே மருத்துவத்தில் முக்கிய அம்சம் ஆகும்.
இதனை கீழே உள்ள பாடல் முந்தைய காலத்திலே தெளிவாக விளக்கியதில் சித்த மருத்துவராகிய எனக்கு பெரிய அளவிலான வியப்பாக இல்லை.
ஒரு 17 வயது பெண் பிள்ளை 3 நாள் காய்ச்சல், உடல் வலி என்று allopathy மருத்துவரை அணுகி dolo 650, amoxyllin போன்ற மருந்தினையும்,oral rehydration salts(ORS) போன்ற மருந்துகளை உண்ட பிறகும் காய்ச்சல் சரியாகாமல், பிறகு இரத்த பரிசோதனைகளை ( blood investigations) எடுத்து பார்த்ததில் platelet குறைந்து இருந்தது.(NS1 antigen positive ) என்பதை கண்டறிய,பிறகு saline, antibiotics,(for upcoming infections )கொடுத்து அதனுடன் பப்பாளி இலை சாறு கலந்த மாத்திரையை பரிந்துரைத்த 3 நாட்களில் நல்ல முன்னேற்றம்.
பிறகு அவரது தாய் அந்த மாத்திரையுடன் நமது op யில் வந்து sir இந்த மாத்திரை சாப்பிட்டு என் பொண்ணுக்கு சரி ஆகிடுச்சு ஆனா உடல் சோர்வு மட்டும் விடல என்று சொல்ல, நோயின் தாக்கத்தை கூறி மாதுளை மணப்பாகு மற்றும் (iron) அயம் சேர்ந்த சில மருந்துகளை பரிந்துரை செய்தேன். இதில் allopathy மருத்துவரோ நான் ஏன் பிற மருந்தினை (siddha proprietary drugs) கொடுக்க வேண்டும் என நினைக்காமல் நோயிற்கு ஏற்றவாறு தகுந்த சிகிச்சையை அளித்துள்ளார்.
மருந்து எதுவாக இருப்பினும் முதலில் நோயை கண்டறிந்து"" Try to diagnose before death "" என்ற சொல்லிற்கேற்ப பின் தகுந்த மருத்துவம் செய்ய வேண்டும்.
"" MOON SHINE SIDDHA HOSPITAL""
Heal with us!