29/10/2023
சளி, இருமலை தேன் தடுக்குமா?
தேன் உடலில் ஏற்படுத்தக் கூடிய நன்மை குறித்து நிறைய ஆதாரப்பூர்வமான ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
அந்த ஆய்வு முடிவுகள் சொல்வது மிகவும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
பயன்பாட்டில் உள்ள மற்ற மருந்துகளைக் காட்டிலும் சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசம் தொடர்பான அனைத்து தொந்தரவுகளையும் தேன் சரி செய்யக் கூடியது என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தேன் கொடுக்கப்பட்டதில், மற்ற மருந்துகளைக் காட்டிலும் தேன் சிறப்பாக சுவாசம் தொடர்பான தொந்தரவுகளை சரிசெய்து இருக்கிறது. (நிறைய ஆய்வுகள் இருப்பதால் நீங்களே இணையத்தில் தேடி பெறலாம்)
இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் அனைத்து மரபு மருத்துவங்களிலும் சுவாசம் சம்மந்தப்பட்ட தொந்தரவுகளுக்கு தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நமக்கும் தெரிந்திருக்கும்.
சரி, சுவாசம் தொடர்புடைய தொந்தரவுகளுக்கு தேனை எப்படி பயன்படுத்துவது?
இஞ்சி, மிளகு, கிராம்பு - இவற்றில் ஏதேனும் ஒன்றை நீரில் கொதிக்க வைத்து இறக்கிய பின்னர், ஒரு டம்ளர் கொதித்த நீரில் தேவையான தேனை கலந்து பருகலாம். அல்லது, நீரை மட்டும் கொதிக்க வைத்து, அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறையும் தேனையும் சேர்த்து பருகலாம். எப்போது வேண்டுமானாலும் பருகலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் பருகலாம். இரவு நேரத்தில் உணவுக்குப் பின்னர் பருகுவது கூடுதல் பலனளிக்கும்.
அதெல்லாம் சரி, சாதாரணமாக சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கடைகளிலும் கிடைக்கக் கூடியது தேனா?
டெல்லியில் உள்ள "அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (Centre for Science & Environment)" 2020 ல் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள முக்கியமான பத்து பிராண்டுகளின் தேன் கலப்படம் மிக்கது என்பதே ஆய்வு முடிவு. சொல்லப்போனால் அவை தேனே இல்லை என்று ஆய்வு முடிவு சொல்கிறது.
அப்போ அது தேன் இல்லாமல் வேறென்ன?
செயற்கையாக தேன் செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்திய நிறுவனங்களால் 10,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை தண்ணீர் (sugar syrup) இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை தண்ணீரை கொண்டு செயற்கை தேன் உருவாக்கி இந்திய சந்தையில் விற்றது போக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அப்படி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் செயற்கை தேனின் அளவு 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் 583 மெட்ரிக் டன் என இந்திய அரசின் "வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் - Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)" ன் இணையதளம் சொல்கிறது.
கலப்படமில்லாத இயற்கையான தேனை சாப்பிட்டால் மட்டுமே தொடக்கத்தில் சொல்லியுள்ள நன்மைகள் கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் செயற்கை தேனை உண்டால் உடல்நல பாதிப்புகள்தான் ஏற்படும்.
இப்படி பயமுறுத்திட்டீங்களே, நல்ல தேனுக்கு எங்கே போறது?
இயற்கையான கலப்படம் இல்லாத தேனை அகவெளியில் வழங்கி வருகிறோம். நான்கு விதமான தேன் வகைகளை வழங்கி வருகிறோம்.
1.மலைத் தேன் (Forest Honey)
2.நாவல் தேன் (Jamun Honey)
3.முருங்கை தேன் (Moringa Honey)
4.பண்ணைத் தேன் (Farm Honey)
எப்படி வாங்குறதுன்னு கேட்கிறீங்களா?
பட்டுக்கோட்டை மயில்பாளையத்தில் உள்ள "அகவெளி இயற்கை அங்காடி"யில் வாங்கலாம்.
www.agaveli.com என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம். 7395877894 என்ற எண்ணிலும் ஆர்டர் செய்யலாம். கீழுள்ள WhatsApp இணைப்பிலும் ஆர்டர் செய்யலாம்.
https://wa.me/message/4A5ZLEAKBFEQG1
நல்ல பொருட்களை தொடர்ந்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதிலும், அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதிபூண்டு இருக்கிறோம்.
#அகவெளி
#தேன்