நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

  • Home
  • India
  • Theni
  • நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர் இவ்வுலகின் தலைசிறந்த மருத்துவர் நம் உடல்தான் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு மருத்துவம் தேவைப்படாது.
(3)

இன்று மக்கள் மத்தியில் ஆரோக்கியம் தொடர்பாக பல குழப்பங்கள் நிலவி வருகிறது. அவற்றை பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவதே இந்த முகநூல் பக்கத்தின் நோக்கம். "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" என்கிற உண்மையை மக்களுக்கு எடுத்துரைப்பதே எனது தலையாய பணி.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

தொடர்ந்து இரவு 12 மணிக்கு மேல் தூங்கும்போது நமது இரத்தநாளத்தில் கொழுப்பு படியும் சூழல் ஏற்படுகிறது. தொடர்ந்து 9 மணிக்குள...
16/08/2025

தொடர்ந்து இரவு 12 மணிக்கு மேல் தூங்கும்போது நமது இரத்தநாளத்தில் கொழுப்பு படியும் சூழல் ஏற்படுகிறது. தொடர்ந்து 9 மணிக்குள் தூங்கும்போது நமது இரத்தநாளம் சுத்தமாகிறது...

நன்றி - தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் பக்கம் மற்றும் தற்சார்பு வாழ்க்கை

தொடர்ந்து 9 மணிக்குள் தூங்கும்போது...

பித்தநீரானது நல்ல முறையில் சுரந்து நமது இரத்தநாளத்தில் படிகின்ற கொழுப்பை கரைத்து இரத்தநாளத்தை சுத்தமாகிறது, நாம் அதிகபட்சமாக தூக்கத்தின் பலனை பெறுகிறோம், உடல் மீண்டும் சீராகிறது, மன அழுத்தம் குறைகிறது, நோய் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறைகிறது, நமது உணர்ச்சிகளை நன்றாகக் கட்டுப்படுத்த முடிகிறது, மற்றவர்களின் உணர்ச்சிகளையும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

தொடர்ந்து இரவு 12 மணிக்கு மேல் தூங்கும்போது...

இயற்கைக்கு எதிரான வாழ்வியல் நமக்கு தந்த பரிசு, இரவுக் கலாச்சாரம். இதன் பயனாக நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றோம். இரவு நெடுநேரம் கழித்து படுக்கைக்கு செல்வதால், உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்படைகின்றன. மேலும் வள்ளுவர் சொன்ன “மிகினும், குறையினும் நோய் செய்யும்” என்ற வழிமுறை ஹார்மோன்களுக்கும் பொருந்தும். இரவு தாமதமாக படுக்கைக்கு செல்லும் பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தால், அது ஹார்மோன்கள் சுரக்கும் அளவுகளை பாதிக்கின்றது. இதனாலும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தனி மனித அளவில் என்று பார்த்தால், நீண்ட நேரம் இரவு கண் விழித்தல் பொறுமையை குறைத்து கோபத்தை அதிகரிக்கின்றது. இதுவே செய்தித்தாள்களில் காண்பது போன்ற, குடும்பங்களில் நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றது. மேலும் அதிகரித்து வரும் விவாகரத்துகளுக்கான விதைகள் இந்த பின்இரவு நேரங்களிலேயே பெரும்பாலும் ஊன்றப்படுகின்றன.

இது தவிர சமூக ரீதியாக பார்த்தால், இரவு நீண்ட நேரம் கண் விழித்தல், மன இறுக்கத்தை அதிகரிக்கின்றது. இது மது போன்ற போதை பழக்கங்களை நோக்கி பல மனிதர்களை நகர்த்துகின்றது. இதை ஒட்டிய சாலை விபத்துகளும் அதிகரிக்கின்றன.

இயற்கை சார்ந்த தூக்க முறை என்பது எல்லா வகையிலும் இன்றைய நிலையில் அவசியமானது. இது இன்றைய நிலையில் கடினமான ஒன்றுதான். ஆனாலும் இயன்றவர்கள் முயற்சித்து பார்க்கலாம். மற்றவர்கள் குறைந்தபட்சம் இதனை சிந்தித்தாவது பார்க்கலாமே. ஏனென்றால் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”.

ஆரோக்கியம் என்றும் இலவசமே!

உங்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான தேடல் இருந்தால் நீங்கள் தாராளமாக "நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்?" Telegram குழுவில் இணைந்து கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியம் என்றும் இலவசமே. இலவசமாக கிடைக்கக் கூடிய ஆரோக்கியம் வியாபாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த Telegram குழுவை நடத்தி வருகிறேன். உடலும் மனமும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம் என்கிற உண்மையை புரிந்து கொண்டால் மட்டுமே ஆரோக்கிய வாழ்வு சாத்தியப்படும். அதற்காகத்தான் நான் மனம் தொடர்பான பதிவுகளை அதிகளவில் பகிர்ந்து கொள்கிறேன்.

Telegram, YouTube மற்றும் Blogspot முகவரிகளை Comment பகுதியில் பகிர்ந்துள்ளேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

சரித்திரம் தெரிந்து கொள்வோம்

விழிப்புணர்வு வினீத்

20. வெயில் காலம் வசப்படமரபு மருத்துவம் (நாம் மறந்த உணவியலும் வாழ்வியலும்) தொடரின் கீழ்வரும் பாகங்களை இணையத்தில் பார்க்க ...
14/08/2025

20. வெயில் காலம் வசப்பட

மரபு மருத்துவம் (நாம் மறந்த உணவியலும் வாழ்வியலும்) தொடரின் கீழ்வரும் பாகங்களை இணையத்தில் பார்க்க விரும்பினால் Comment பகுதிக்குச் செல்லுங்கள்.

தகிக்கும் வெயில், வறண்டுபோகும் உடல், கொதிக்கும் தேகம் ஆகிய மூன்றே வார்த்தைகளில் தற்போதைய சூழ்நிலையைச் சொல்லிவிடலாம். இந்த வேனிற் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள விழிப்பு முதல் உறக்கம்வரை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

குளியல்

வேனிற் காலத்தில் சூரிய உதயத்துக்கு முன் கண் விழிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்தக் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிப்பது சிறந்தது. உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தைப் போக்கவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் நீராடுவது பயன்தரும். வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதால், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

கற்றாழை கூழ் அல்லது எலுமிச்சையைத் தலையில் தேய்த்துக் குளிப்பதால் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியை அதிகரித்துக்கொள்ளலாம். நீரோட்டம் உள்ள ஆறுகளில் குளித்து, வேனிற் காலத்தைக் கடத்திய நம்முடைய முன்னோர்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. எனவே நீரோட்டம் மிக்க ஆறுகள், அருவிகளில் குளிப்பது உடலுக்குக் குளிர்ச்சியை மட்டுமல்லாமல் உற்சாகத்தையும் தரும்.

உணவு அறிவியல்

மருத்துவ அறிவியலை முன்னிறுத்தியே நம் முன்னோர்கள் ஒவ்வொரு பருவ காலத்துக்கும் தகுந்த உணவு முறைகளைக் கடைப்பிடித்து வந்தனர். வெயில் காலத்தில் காரம், புளிப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையும் செரிக்காத உணவையும் ஒதுக்குவது அவசியம். உடலுக்கு வெப்பம் தரும் அசைவ உணவு, எண்ணெய்ப் பதார்த்தங்கள், புளிக் குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நீர்க்காய்களான பீர்க்கம், சுரை, பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம். உணவு முறை தவறாக இருந்தால் செரியாமை, வயிற்றுப்போக்கு, ஆசனவாய் எரிச்சல், மூலம் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும்.

பேயன் வாழைப்பழம், சீத்தா, கொய்யா, திராட்சை, பலா, வெள்ளரி, முலாம் (கிர்ணி) போன்ற பழங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தட்பத்தைக் கொடுக்கும். வெயில் காரணமாக வறண்டுவிட்ட உடல்தாதுகளுக்கு வலுவூட்ட, உணவில் நெய்யைச் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்வது அவசியம். கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத், இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவை வேனிற் காலத்தைக் குளிர்விக்கும் பானங்கள்.

மண்பானை மகத்துவம்

வேனிற் காலத்தில் நீரைக் குளிரவைத்துக் குடிப்பதற்காக வாய் குறுகிய மண்பாண்டங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். வாய் சிறுத்த பானைகளை, ‘தொகுவாய் கன்னல்’ (வாய் குறுகிய நீர்ப்பாண்டம்) என்று பத்துப்பாட்டில் ஒன்றான ‘நெடுநல்வாடை’ நூல் குறிப்பிடுகிறது. நீரைக் குளிர்விப்பதற்குக் குளிர்பதனப் பெட்டியைவிட, மண்பானைகளே ஆரோக்கியமானவை. ஃபிரிஜ்ட்களில் குளிரூட்டப்பட்ட நீரைக் குடிப்பதால், தொண்டை அலர்ஜி, தலை பாரம், காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அத்துடன் கிருமித் தொற்றுகளின் தாக்கம் பெருகவும் ஃபிரிட்ஜ் நீர் வழிவகுக்கிறது. பானையில் ஊற்றிக் குடிக்கும் நீரோடு சந்தனச் சக்கைகள், நன்னாரி வேர், வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து, வடிகட்டி குடிப்பது சுட்டெரிக்கும் வெயிலுக்குச் சிறந்த பானம் என்கிறது சித்த மருத்துவம். குளிர்பதனப் பெட்டிகளைத் தவிர்த்து நீரையும் பானங்களையும் பானைகளில் வைத்தே குளிர்ச்சியாகப் பயன்படுத்தலாம்.

ஆடையில் அக்கறை

ஜீன்ஸ் பேன்ட் மற்றும் நம் தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தாத இறுக்கமான ஆடைகளை அணிவது, உடலுக்குத் தீங்கானதே. குறிப்பாக வெயில் காலத்தில் இவ்விதமான இறுக்கமான உடைகளால், பலவிதமான தோல் நோய்கள் உண்டாகின்றன. உடலை உறுத்தாத மெல்லிய உடைகளே வெயில் காலத்துக்கு ஏற்றவை. அதிலும் மகாத்மா முன்மொழிந்த கதர் ஆடைகளை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. வெயில் காலத்தில் ஆபரணங்கள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதனால் தேவைப்படும்போது மட்டும் அணிந்துகொள்ளலாம்.

வாசனைப் பொருட்கள்

வியர்வை நாற்றத்தைத் தடுக்கப் பல வகையான செயற்கை வாசனைத் திரவியங்கள், சந்தைகளில் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவை தரமானவையா, நம் உடலுக்கு ஏற்றவையா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. அதிகரிக்கும் வியர்வையோடு சேரும் செயற்கை திரவியம் வேதியியல் மாற்றம் அடைந்து, ஒரு வித்தியாசமான நாற்றத்தை உண்டாக்குவதோடு, அரிப்பு, ஒவ்வாமை போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.

வியர்வை நாற்றத்தைத் தடுக்கச் செயற்கைப் பொருட்களுக்குப் பதிலாகச் சந்தனச் சாந்து, ஜவ்வாது, பன்னீர் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தலாம். ஆடைகளுக்கு நறுமணம் ஊட்டத் துவைக்கும்போது, சில வகை திரவங்களைச் சேர்ப்பதுபோல, முற்காலத்தில் அகிற் புகையூட்டி ஆடைகளுக்கு நறுமணம் சேர்த்ததாக ‘மதுரைக் காஞ்சி’ நூல் குறிப்பிடுகிறது. கூந்தலுக்கும் உடலுக்கும் மணமூட்ட அகிற்கட்டை புகையைச் சங்க கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இப்போதும் அதை முயற்சித்துப் பார்க்கலாம்.

ஆவாரை தலைப்பாகை

போக்குவரத்து வசதி இல்லாத காலங்களில் நெடுந்தூர நடைப்பயணம் மேற்கொள்வோரும் சரி, வெயிலில் உழைக்கும் விவசாயிகளும் சரி, வெப்பத்தைத் தடுப்பதற்குப் பயன்படுத்திய முக்கிய இயற்கை உபகரணம் ஆவாரை இலையும் பூவும். தலையில் ஆவாரை இலை, பூக்களை வைத்துக் கட்டிக்கொண்டு அல்லது முண்டாசுக்கு அடியில் வைத்துக்கொண்டு வெப்பத்தைத் தணித்துக்கொண்டனர். இன்றைய காலத்தில் அப்படித் தலையில் கட்டிக்கொண்டு வெளியே செல்ல முடியாது.

எனினும் வீட்டில் இருக்கும்போது, இதை முயற்சிக்கலாம். வெயிலில் தொப்பி அணிந்து செல்லும் பழக்கமுடையவர்கள் தொப்பிக்கு அடியில் ஆவாரை இலை, பூ மற்றும் வேப்ப இலைகளை வைத்துக்கொள்ளலாம். ஆவாரை தலைப்பாகையானது, உடலில் உண்டாகும் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதிக வெப்பத்தால் உண்டாகும் தலைவலியையும் தடுக்கும். வெப்பநிலை அதிகரித்து இருக்கும் பதினோரு மணி முதல் மூன்று மணிவரையிலான பகல் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அத்தியாவசியம் எனில் குடையுடன் செல்லலாம்.

மரங்களின் தாலாட்டு

மதிய நேரங்களில் வாய்ப்பிருந்தால் மரங்களின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறுவது உடல் மற்றும் மனதுக்கு இதம் தரும். ஆனால், இரவில் அடர்ந்த மரங்களுக்கு அடியில் உறங்குவது கூடாது. ஏனெனில், பகலில் பிராண வாயுவை (O2) அள்ளிக் கொடுக்கும் மரங்கள், இரவில் கரியமில வாயுவை (CO2) அதிக அளவில் உமிழ்கின்றன. இதை ‘இராமரமுஞ்சாரா’ என்கிறது ‘ஆசாரக்கோவை’ நூல். அனல் பறக்கும் வேனில் காலத்தில், அதிக நேரம் பகலில் உறங்குவதையும் தவிர்க்க வேண்டும். வேனிற் காலத்தில் மெத்தையையும் தவிர்க்கலாம். வீட்டில் ஜன்னலைத் திறந்து வைத்து, நல்ல காற்றோட்டத்தை உண்டாக்குவதும் அவசியம்.

ஏ.சி.நல்லதா?

ஜன்னல்களில் தென்னை அல்லது பனையோலை ‘தட்டி’ அமைத்து, அதில் வெட்டிவேர், வேம்பு இலை, புங்கன் இலைகளைச் செருகி வைத்து நீர் தெளித்து, இயற்கை ‘ஏர் கண்டிஷனர்’களைப் பயன்படுத்தி வந்தவர்கள் நாம். ஆனால், இன்றைக்குப் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள்வரை ‘ஏ.சி’ இல்லாத வீடுகளே இல்லை என்பதுபோல் ஆகிவிட்டது. அதிக நேரம் ஏ.சி. பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை மணி அடிக்கின்றன சில நோய்களின் அறிகுறிகள்.

இதன் காரணமாகத் தோல் வறட்சி, நுரையீரல் சார்ந்த நோய்கள், உடல் சோர்வு, கப நோய்கள், நாளவிபாதம் (வெரிகோஸ் வெய்ன்) போன்றவை உண்டாகப் பல மடங்கு வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து நீண்ட காலத்துக்கு ஏ.சி. பயன்படுத்துவதால், நம் உடலை மாசுபடுத்துவது மட்டுமன்றி, சுற்றுச்சூழலையும் பெருமளவுக்குச் சீரழிக்கிறோம். ஏ.சி. பயன்படுத்தப்படும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொண்டால், உடலுக்கும் பூமிக்கும் நலம் நிச்சயம்.

தொடரும்...

நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை மற்றும் இணையத்தளம்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

சரித்திரம் தெரிந்து கொள்வோம்

விழிப்புணர்வு வினீத்

19. மாசடைந்த குடிநீரும் மாசு நீக்கும் வெந்நீரும்மரபு மருத்துவம் (நாம் மறந்த உணவியலும் வாழ்வியலும்) தொடரின் கீழ்வரும் பாக...
11/08/2025

19. மாசடைந்த குடிநீரும் மாசு நீக்கும் வெந்நீரும்

மரபு மருத்துவம் (நாம் மறந்த உணவியலும் வாழ்வியலும்) தொடரின் கீழ்வரும் பாகங்களை இணையத்தில் பார்க்க விரும்பினால் Comment பகுதிக்குச் செல்லுங்கள்.

“ஓடுற ஆத்துத் தண்ணியையும், ஊறுற ஊத்துத் தண்ணியையும் குடிச்சு, ஆரோக்கியமாக வளர்ந்தோம். ஆனால் இப்போ, பெரிய டப்பாவுல (Can water) அடைச்சுவைச்ச தண்ணியைக் குடிச்சுட்டு, ‘புதுசு புதுசா நோய் வந்து வாட்டுதே’ என்று புலம்பும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

மனிதர்களைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணம், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் எனப் பல காரணங்கள் இருந்தாலும், குடிக்கும் நீரில் ஏற்பட்ட மாற்றமும் மிக முக்கியமானது. குடிக்கும் நீரிலும் கலப்படம் வந்துவிட்டது.

கேடயமாகப் பாதுகாக்கும்

மழைக் காலத்தில் அதிகமாகப் பரவும் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளிடமிருந்து தப்பிக்க, வெந்நீரில் அதிமதுரப் பொடி, சிறிதளவு மிளகுத் தூள், துளசி, தூதுவளை இலைகளைப் போட்டுக் குடிக்கலாம். டெங்கு, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சல் அரக்கர்களின் பிடியில் சிக்காமல் இருக்க, கேடயம் போலிருந்து இந்த வெந்நீர் பாதுகாக்கிறது.

பல்வேறு பலன்கள்

மலம் சரியாக வெளியேறாமல் தவிப்பவர்கள், எந்த மருத்துவரிடம் செல்லலாம் என்று யோசிப்பதற்குப் பதிலாக, வெந்நீரில் சிறிது சீரகத் தூளைப் போட்டுக் குடித்தால், குடலின் இயக்கம் அதிகரித்து மலம் எளிதாக வெளியேறும்.

ரத்தக் கொதிப்பு, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், கை, கால் எரிச்சல், வயிற்று வலி, கழிச்சல் போன்றவை குணமாக வெந்நீரில் சீரகமும் வெந்தயமும் ஊறவைத்துக் குடிக்கலாம்.

வெந்நீரில் சாயமர (பதிமுகம்) சக்கைகளையும், கருங்காலி வேரையும் கலந்து அருந்தும் பழக்கம் கேரள மக்களிடையே இன்றளவும் தொடர்கிறது. துவர்ப்புச் சுவையுடைய சாயமரச் சக்கைகளை நீரில் கொதிக்க வைத்துக் குடித்துவருவதால் செரிமானமின்மை, கழிச்சல், அதிகத் தாகம், தோல் நோய்கள் போன்றவை குணமடைவது மட்டுமன்றி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கும் குறையும். இந்த நீருக்குக் கிருமிநாசினித் தன்மை இருப்பதால் நீரிலுள்ள நுண்கிருமிகளை அழிக்கும்.

உணவும் வெந்நீரும்

உணவுக்கு முன்: சாப்பிடுவதற்கு முன் வெந்நீர் அருந்தினால் பசி மந்தப்படும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் சாப்பிடுவதற்கு முன்பு நீர் அருந்தலாம் என்கின்றன சில ஆராய்ச்சி முடிவுகள்.

சாப்பிடும்போது இடையிடையே நீர் அருந்துவதால், செரிமானச் சுரப்புகளின் (Digestive enzymes) செயல்கள் பாதிக்கப்பட்டு, உணவு செரிமானம் ஆகும் ஆற்றல் குறையும். உணவு அருந்தும்போது இடையில் நீர் அருந்துவது, செரிமானத்துக்கு அவசியமான பசித் தீயை, நீர் ஊற்றி அணைப்பது போன்றதாகும். அதிலும் சாப்பிடும் உணவுக் கவளங்களுக்கு இடையே நீருக்குப் பதிலாகக் குளிர்பானத்தைக் குடிக்கும் இன்றைய தலைமுறையினரின் செரிமானம் பெரிதும் பாதிக்கப்படும்.

உணவுக்குப் பின் அருந்தலாமா?

சாப்பிட்டு முடித்துச் சிறிது நேரம் கழித்து நீர் அருந்துவதால் வயிற்று உப்புசம், கை, கால் மூட்டு வலி போன்ற வாத நோய்கள், சில வகை கண் நோய்கள் போன்றவை தீரும். மேலும் நீண்ட ஆயுளும், சுக்கிலமும் பெருகும் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன சித்தர்களின் பாடல்கள். உணவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சத்துகளை, திசுக்கள் அதிகளவில் உட்கிரகித்துக்கொள்ள, சாப்பிட்ட பின் நீர் அருந்துவதே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

நீரைத் தூய்மையாக்க

ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு, அதில் 3, 4 தேற்றான்கொட்டைகளை இழைத்துப் போட்டு, சில மணி நேரம் அசையாமல் வைத்திருக்க, நீரில் உள்ள அழுக்குகள், பாத்திரத்தின் கீழ் தங்கும். மேலுள்ள தெளிந்த நீரை எடுத்துக் காய்ச்சிப் பயன்படுத்தலாம். தேற்றான் கொட்டைக்குப் பசியைத் தூண்டும் தன்மையும், உடலைத் தேற்றும் குணமும் இருப்பதால், இந்த நீரை அருந்த உடல் உரம் பெறும். தேற்றான் கொட்டையால் நீரிலும் சிறிது இனிப்பு சுவை சேரும்.

நன்றாகக் கனிந்த நெல்லிக்கனியை நீரில் ஊறவைத்தும், அந்த நீரைப் பருகலாம். இதனால் நீர் தூய்மையாவது மட்டுமன்றி, நீருக்குப் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை உண்டாகும். இந்த நீரைப் பருகிவந்தால், உடல் குளிர்ச்சி அடைந்து சிறுநீரும் மலமும் சிரமமின்றி வெளியேறும்.

தொடரும்...

நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை மற்றும் இணையத்தளம்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

சரித்திரம் தெரிந்து கொள்வோம்

விழிப்புணர்வு வினீத்



#மரபு மருத்துவம்

18. நோய்களை விரட்டும் மூலிகைக் குடிநீர்மரபு மருத்துவம் (நாம் மறந்த உணவியலும் வாழ்வியலும்) தொடரின் கீழ்வரும் பாகங்களை இணை...
06/08/2025

18. நோய்களை விரட்டும் மூலிகைக் குடிநீர்

மரபு மருத்துவம் (நாம் மறந்த உணவியலும் வாழ்வியலும்) தொடரின் கீழ்வரும் பாகங்களை இணையத்தில் பார்க்க விரும்பினால் Comment பகுதிக்குச் செல்லுங்கள்.

கேரளப் பாரம்பரியம் என்றவுடன் புட்டு - கடலைக்கறி, சிவப்பான மட்டையரிசி, மீன் உணவு போன்றவற்றுடன் நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் மூலிகைக் குடிநீர். கேரளத்தில் பெரும்பாலான வீடுகளிலும் உணவகங்களிலும் மிதமான சூட்டில் கொடுக்கப்படும் குடிநீரில், பல வகை மூலிகைகள் கலந்திருப்பது, ஆரோக்கியத்துக்குத் தரப்படும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நீர் மூலம் பரவும் பல நோய்களுக்கு மூலிகைக் குடிநீர் முட்டுக்கட்டையும் போடுகிறது.

தாகச் சமணி, தாக முக்தி என்ற பெயர்களில், குடிநீரில் சேர்க்க வேண்டிய மூலிகைக் கலவைகள் அங்கே சாதாரணமாகக் கிடைக்கின்றன. அந்த மூலிகைகள் அனைத்தும் தமிழகத்திலும் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி நாமும் நோய்களைத் தடுக்கலாம். அந்த மூலிகைக் குடிநீர் வகைகள் என்ன?

பதிமுகம் (சாயமரம்) குடிநீர்

கேரளத்தின் சில இடங்களில் தரப்படும் குடிநீர் வெளிர் ரோஜா நிறத்தில் இருப்பதைப் பார்க்கலாம். பதிமுகச் சக்கைகளை நீரில் கொதிக்க வைத்துக் கொடுப்பதே, இந்த நிறத்துக்கும் மணத்துக்கும் காரணம். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி வெள்ளைப்படுதலையும் இது குறைக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ரத்தப்போக்கைத் தடுப்பதற்காகப் பதிமுகம் பயன்படுத்தப்படுகிறது. உடலின் வெப்பத்தைக் குறைத்துப் பசியையும் தூண்டுகிறது.

இதில் ‘Juglone’ எனும் வேதிப்பொருள் கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது; ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. வீக்கமுறுக்கி செய்கையைக் கொண்டிருப்பதால், தாய்லாந்து நாட்டு மக்கள் இதை மூட்டுவாத நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

கேன்சர்க்கு ‘லட்சுமி தரு’

கேரளத்தில் பயன்படுத்தப்படும் சில வகை குடிநீர் பொடிகளில் லட்சுமி தருவின் இலைகள் ஐம்பது சதவீதம் சேர்க்கப்படுகின்றன. Simarouba glauca என்ற தாவரவியல் பெயர் கொண்ட லட்சுமி தரு, ‘சொர்க்க மரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்குப் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வலி நிவாரணி, கிருமிநாசினி, புழுக்கொல்லி, பசித்தீ தூண்டி, காய்ச்சல் அகற்றி எனப் பன்முகப் பண்புகள் லட்சுமி தரு தாவரத்துக்கு உண்டு. இதிலுள்ள Ailanthinone, Glaucarbinone வேதிப்பொருட்கள் பல நோய்களைக் குணப்படுத்துவதற்குக் காரணமாக உள்ளன.

சர்வசுகந்தி

சர்வசுகந்தி இலைகளை நீரில் கொதிக்க வைத்துச் சிலர் அருந்துகின்றனர். இதன் தாவரவியல் பெயர் Pimenta dioica. சிறந்த எதிர்-ஆக்ஸிகரண (ஆன்ட்டி ஆக்சிடன்ட்) பொருளாகச் செயல்படுகிறது. இலைகளிலுள்ள வாசனை எண்ணெய் காரணமாக, நீரை அருந்தும்போது நல்ல வாசனையுடன் இருக்கிறது. சில பகுதியினர் உணவிலும் இந்த இலைகளைச் சேர்க்கின்றனர்.

தாகமுக்தி குடிநீர்

வெட்டிவேர், பதிமுகம், கருங்காலி, நன்னாரி, சுக்கு, ஏலம், மல்லி ஆகிய மூலிகைகள் தாகமுக்தி குடிநீர் கலவையில் சேர்கின்றன. ஒரு தேக்கரண்டிப் பொடியை, ஐந்து லிட்டர் நீரில் கலந்து லேசாகக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம். நன்னாரி கலந்திருப்பதால் இந்த நீரை அருந்தும்போது, நன்னாரி சர்பத் போன்ற மணமும் சுவையும் கொண்டிருக்கும். நெடுந்தூரப் பயணத்தின்போது ஏற்படும் சிறுநீர் எரிச்சலுக்கும், தலைவலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளுக்கும் தாகமுக்தி குடிநீரைப் பயன்படுத்தலாம்.

தாகச் சமணி குடிநீர்

லட்சுமி தரு இலை, பதிமுகம், கருங்காலி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, நன்னாரி, ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம், அதிமதுரம் போன்ற மூலிகைகளின் தொகுப்பே தாகச் சமணி குடிநீர். இது உடலில் தேங்கிய கழிவை அகற்றி, ரத்தத்தைத் தூய்மைப்படுத்துகிறது. உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து உணவு செரிமானத்தை அதிகரிக்கிறது. வெட்டிவேர், ஏலம், நன்னாரி, சீரகம் ஆகியவற்றால் பித்தம் சார்ந்த நோய்களும் குறைகின்றன.

மூலிகைப் பொட்டணங்கள் (கிழி):

டீத்தூள் பொட்டலத்தைப் பாலில் இட்டுக் குடிக்கும் ‘டிப் டீ’ போல, மூலிகைப் பொட்டலத்தைச் சூடான நீரில் போட்டு ‘மூலிகை நீராக’ பயன்படுத்தும் வகையில் மூலிகைப் பொட்டலங்களும் கிடைக்கின்றன.

குடிக்கும் நீரில் சில மூலிகைகளைக் கலந்து நோய்களை நீக்கும் முறை தமிழகத்திலும் பல காலமாக வழக்கில் இருக்கிறது. சீரக நீர், வெந்தய நீர், நெல்லி நீர், தேற்றான் கொட்டை நீர் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

சீரகக் குடிநீர் (அ) ஊறல் நீர்

சிறிது சீரகத்தை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைக் குடிக்கலாம் அல்லது சீரகத்தை முதல் நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அந்த ஊறல் குடிநீரை அருந்தலாம். சீரகத்திலுள்ள ‘Thymol’ எனும் வேதிப்பொருள் செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி நல்ல பசியை உண்டாக்குகிறது. உடலில் உள்ள வாயுக்களைக் கட்டுப்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளுக்குச் சீரக நீர், பக்க விளைவில்லா மருந்து. அசைவ உணவு சாப்பிடும்போது சீரக நீரைப் பயன்படுத்தினால் மந்தம், உப்புசம் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. வயிறு சார்ந்த நோய்களைப் போக்குவதுடன் கூடுதல் பலனாக இரும்புச் சத்தையும் சீரகம் அளிக்கிறது.

வெந்தய ஊறல் நீர்

வெந்தய விதைகளை நீரில் ஊற வைத்து அருந்த, பித்தம் சார்ந்த நோய்கள் குறையும். சிறுநீர் எரிச்சல், சிறுநீர்ப் பாதை தாபிதம், வயிற்றுப் புண், மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி போன்ற தொந்தரவுகளுக்கு வெந்தய ஊறல் நீர் பயன்படுத்தலாம். வெந்தயத்தில் உள்ள 4 - hydroxyisoluecine எனும் அமினோ அமிலம், கணைய செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை முறைப்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிக அளவில் இருப்பவர்களும், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் இதை அருந்தலாம்.

நெல்லி ஊறல் நீர்

நெல்லிக்காய் ஊறல் நீர் தயாரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்கு கலக்கவும். கடைசியாக அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பானமாக குடிக்கவும். நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் நெல்லிக்காய் நீரை குடித்து வந்தால், பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நெல்லிக்காயில் அமினோ அமிலம் ஏராளமாக காணப்படுகிறது. இதன் உதவியுடன் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையத் தொடங்குகிறது. இதுவே நெல்லிக்காய் நீர் எடையைக் குறைக்கும் பானமாகக் கருதப்படுவதற்குக் காரணம்.

உங்களுக்கு பருக்கள் அல்லது சுருக்கங்கள் பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக நெல்லிக்காய் நீரை குடிக்கவும். மேலும், நெல்லிக்காய் வலுவான மற்றும் பளபளப்பான கூந்தலை பெற பயன்படுத்தப்படுகிறது.

தேற்றான் கொட்டை ஊறல் நீர்

நீரை தூய்மைப்படுத்தும் சக்தி தேற்றாங்கொட்டைக்கு உண்டு. பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று தேற்றாங்கொட்டையைப் போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் அந்த நீரானது சுத்தமாகிவிடும்.

தேற்றான் கொட்டை உடல் சூடு, வயிற்றுக் கடுப்பு, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் முதலான பிரச்னைகளை சரி செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. புண்களையும், காயங்களையும் ஆற்றும் தன்மை உடையது தேற்றாங்கொட்டை. மேலும், வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளையும் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. பலவீனமானவர்களுக்கு பலத்தை அளிக்கக்கூடிய சக்தி இந்தக் கொட்டைகளுக்கு உள்ளது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டி விடுகிறது. இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி விடுவார்கள். இதனாலேயே ‘தேறாதவனையும் தேற்றும் தேறாமரம்’ என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

எப்படிக் குடிப்பது?

மேற்குறிப்பிட்ட மூலிகைக் கலவைகளை மழை மற்றும் குளிர் காலங்களில் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் குடிக்கலாம் (கொதிநீர்). அதையே வெயில் காலத்தில், மூலிகைகளை நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின் மண் பானைகளில் நீரைச் சேமித்து, குளிர்ந்த நீராகவும் பயன்படுத்தலாம்.

உணவகங்களிலும் வீடுகளிலும் கொதிக்க வைத்து ஆறிய மூலிகை நீரைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், நீர் மூலம் பரவும் நோய்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடலாம். அன்றாடம் குடிக்கும் குடிநீரோடு மூலிகைகளைச் சேர்த்துக்கொண்டால், நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, புதிது புதிதாக வரும் விநோத வைரஸ்களையும் விரட்டி அடிக்கலாம்.

தொடரும்...

நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை மற்றும் இணையத்தளம்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

17. உண்ட பிறகு குறுநடை கொள்வோம்மரபு மருத்துவம் (நாம் மறந்த உணவியலும் வாழ்வியலும்) தொடரின் கீழ்வரும் பாகங்களை இணையத்தில் ...
05/08/2025

17. உண்ட பிறகு குறுநடை கொள்வோம்

மரபு மருத்துவம் (நாம் மறந்த உணவியலும் வாழ்வியலும்) தொடரின் கீழ்வரும் பாகங்களை இணையத்தில் பார்க்க விரும்பினால் Comment பகுதிக்குச் செல்லுங்கள்.

01. நல்லது செய்யும் ‘ஆவி’

02. வலிகளுக்கு விடை தரும் ‘ஒற்றட முறைகள்’

03. காலை நேரம் நம் கையில் இருக்கிறதா?

04. மலச்சிக்கலை நெறிப்படுத்தும் சித்த மருத்துவம்

05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.

11. நோயற்ற வாழ்வுக்கு வாழை இலை சாப்பாடு!

12. மருந்தாகும் நாட்டுக்கோழி!

13. மருந்தாகும் ‘சைவ ஆட்டுக்கால்’

14. நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு

15. சாயம் வெளுக்கும் சமையல்!

16. பீட்ஸா, பர்கருக்கு மாற்றாகும் ‘செட் வகை’ உணவுகள்


‘சாப்பிட்டவுடன் நடக்கலாமா, கூடாதா?’ என்ற தலைப்பில் பெரிய விவாத மேடையே நடத்தும் அளவுக்குப் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. ‘நண்புபெற வுண்டபின்பு குறுநடையுங் கொள்வோம் (உண்ட பிறகு குறுநடை கொள்வோம்)…’ இந்த சித்த மருத்துவச் சொற்றொடரில் உணவியலோடு அறிவியல் எந்த அளவிற்குப் பிணைந்திருக்கிறது தெரியுமா! சாப்பிட்டு முடித்த பின்பு சிறிது தூரத்திற்கு மெல்லிய நடை மேற்கொள்ளச் சொல்கிறது சித்த மருத்துவம். ‘சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக நடக்கலாமா… அப்படி நடப்பதால் செரிமானம் பாதிக்கப்படுமா… அல்லது செரிமானத் திறன் அதிகரிக்குமா…’ போன்ற சந்தேகங்களுக்கான விளக்கம் தான் என்ன!

உணவியல் ஒழுக்கங்களுள் மிக முக்கியமானது...

‘அசுர வேகத்துல ஓடிக்கிட்டு இருக்கோம்… சாப்பிடுறதுக்கே நேரமில்ல… இதுல சாப்பிட்ட பிறகு நடக்கறதுக்கு எங்க நேரம்…’ என அங்கலாய்ப்பவர்களுக்கு, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற திட்டமிடல் இருப்பின், உடனடியாக உங்கள் அங்கலாய்ப்பை ஓரம் கட்டுங்கள்! ஒருவகையில் உண்மை தான்… சாப்பிடுவதற்கே நேரமின்றி துரித கதியில் பலரும் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நீண்ட காலத்திற்கு செரிமானம் சிக்கலின்றி நடைபெற வேண்டும் என்றால் சில உணவியல் ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். அதில் உண்டபிறகு குறுநடை மேற்கொள்வது முக்கியமானதோர் ஒழுக்கம்!

அலுவல் நிமித்தமாக காலையிலும் மதிய வேளையிலும் சாப்பிட்டவுடன் குறுநடை போட யாருக்கும் வாய்ப்பில்லை. ஆனால் இரவு உணவை சாப்பிட்டு முடித்த பிறகாவது, வீட்டுத் தெருக்களில் அல்லது வீட்டு மாடியில் ரிலாக்ஸாக குடும்பத்தோடு மெல்லிய நடை போடலாமே! அதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் இரவு உணவைச் சாப்பிட வேண்டும். அப்படியான சூழலும் இப்போது குறைந்துவிட்டது. ஒரே இரவு உணவு… ஒரே குடும்ப உறுப்பினர்கள் தான்… ஆனால் உணவைச் சாப்பிடும் நேரத்திலோ ஒவ்வொருவருக்கும் மிகப்பெரும் இரவு நேர கால இடைவெளி!

ஒன்றாகச் சாப்பிட்டு ஒன்றாக நடப்போம்...

வட்டமாக அமர்ந்து ஒற்றுமையாக உணவுகளைப் பகிர்ந்து சாப்பிட்ட கூட்டம் தானே நாம்! ஆனால் காலவோட்டத்தில் எப்படியோ அந்த அழகிய பழக்கத்தைத் தவற விட்டுவிட்டோம். கூட்டாக அனைவரும் அமர்ந்து இரவு உணவைச் சாப்பிடும் சூழலைக் குடும்பத்தில் மீண்டும் ஏற்படுத்த முயல வேண்டும். சில குடும்பங்களில் வேலை நாள்களில் சாத்தியமே இல்லை எனில், வார இறுதி நாள்களிலாவது ஒன்றாக இரவு உணவைச் சாப்பிட்ட பின் குடும்பம் சகிதமாக ஒரு குறுநடையைப் போடுங்கள்! செரிமானத்தோடு சேர்ந்து அன்பும், ஒற்றுமையும் பல மடங்கு அதிகரிக்கும். பத்து அல்லது பதினைந்து நிமிட குறுநடை குடும்ப உறுப்பினர்களிடம் இணக்கமான சூழலை உருவாக்கும்.

எது சரி?

உணவு உண்ட பின்பு, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு மெதுவாக நடப்பது ஆரோக்கியத்தைத் தரும். உணவுக்குப் பின் குறுநடை போடுவதால், உணவு செரிப்பதற்குத் தேவையான சுரப்புகளின் செயல்பாடுகள் சிறப்படையும் என்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள்.

அதென்ன குறுநடை என்கிறீர்களா? எவ்வித அவசரமோ பதற்றமோ இன்றி சுமார் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு, மிகக் குறைந்த வேகத்தில் நடப்பது. சாப்பிட்டவுடன் நடக்க வேண்டும் என்பதற்காக வேகநடை கூடாது. காலை மற்றும் மாலை வேளைகளில் மைதானங்களிலும் பூங்காக்களிலும் நடைபோடுவதைப் போல வேகநடை போடக்கூடாது. வேகநடையால் கிடைக்கும் பலன்கள் வேறு, மெதுநடையின் மூலம் கிடைக்கும் பலன்கள் வேறு! இரண்டுக்குமான காரணங்களும் வேறு.

சாப்பிட்டவுடன் வேகநடை எடுத்தால், செரிமானம் நிச்சயம் பெருமளவில் பாதிக்கப்படும். உணவு எதுக்களித்தல், மலச்சிக்கல், வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும். நேரமின்மை காரணமாகச் சிலர் தங்களின் உற்சாகமான நடைப்பயிற்சியை இரவு உணவு முடித்த பிறகு தொடங்குவார்கள். அந்தப் பழக்கம் வேண்டவே வேண்டாம். ‘உணவை முடித்த பிறகு குறுநடை மட்டுமே’ எனும் வாசகத்தை ஆழமாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

இரவு உணவைச் சாப்பிட்டவுடன் உறக்கத்தைத் தழுவ ஆசைப்படுபவர்கள், உணவை முடித்த மறுநொடியே கணினி முன்பு அடைக்கலமாகும் சூழலில் பணிபுரிபவர்கள், நிச்சயம் உண்ட பிறகு குறுநடை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பழக்கத்தை மேற்கொண்ட பிறகு உங்கள் உடலில் நடக்கும் ஆரோக்கிய மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!

அலுவலகங்களில் மதிய நேரத்தில் மெலிதான நடைபோட வாய்ப்பு இருப்பவர்கள் முயற்சி செய்யலாம். அலுவலகத்தில் உள்ள அனைவரும் இதை புதுப் பழக்கமாக எடுத்து மதிய உணவை முடித்த அடுத்த பத்து நிமிடங்களுக்கு குறுநடை போடலாம். விடுமுறை நாள்களில் காலை உணவை முடித்த பிறகும் தாராளமாகக் குறுநடை எடுக்கலாமே!

மேலும் சாப்பிட்டவுடன் உறங்குவதால் மண்ணீரலின் செயல்பாட்டில் பாதிப்பு உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். பாதிக்கப்பட்ட ரத்தச் சிவப்பணுக்களை அகற்றுவது, தொற்றுகளை எதிர்க்க வெள்ளை அணுக்களை உருவாக்குவது என மண்ணீரலின் பணி அதி நுணுக்கமானது! ஆகையால், மண்ணீரலைப் பாதுகாப்பதற்காக சாப்பிட்ட உடன் உறங்கச் செல்லாமல் குறுநடை செல்லுங்கள்.

நிலவின் வெளிச்சத்தில் இரவின் அழகை ரசித்துக்கொண்டே நடப்பதில் தான் எத்தனை மருத்துவப் பயன்கள்! சாப்பிட்டவுடன் மெதுவான நடை பயில்வதால், செரிமானப் பகுதியில் சேர்ந்த உணவுக் கூழ்மங்களின் நகரும் தன்மை (Gastric emptying) அதிகரிக்கிறதாம்! செரிமான மண்டலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரித்து மலச்சிக்கல், உணவு எதுக்களித்தல், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இடையூறு அற்ற உறக்கத்தைத் தேடுபவர்கள் குறுநடை போகலாம். மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து உங்களுக்குள் மகிழ்ச்சி பிறக்கும். மொத்தத்தில் உண்ட பிறகு நாம் போட வேண்டியது வேகநடை அல்ல, குறுநடை…

குறுநடை தான்… ஆனால் பெரும் பலன்கள்!...

தொடரும்...

நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை, விகடன்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர் விழிப்புணர்வு வினீத் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும் சரித்திரம் தெரிந்து கொள்வோம்

பல் வலி குணமாக - குறிப்பு 9ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து...
04/08/2025

பல் வலி குணமாக - குறிப்பு 9

ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும். ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும் சரித்திரம் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வு வினீத்

பல் வலி குணமாக - குறிப்பு 8இஞ்சிச் சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள ...
04/08/2025

பல் வலி குணமாக - குறிப்பு 8

இஞ்சிச் சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும் சுக்கு வீக்கத்தில் உள்ள நீரை உறிஞ்சி பல் வலியைப் போக்கும்.

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும் சரித்திரம் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வு வினீத்

பல் வலி குணமாக - குறிப்பு 7பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் அது நிறைய வகைகளில் நமக்கு பயன்படுகிறது. இதில் உள்...
04/08/2025

பல் வலி குணமாக - குறிப்பு 7

பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் அது நிறைய வகைகளில் நமக்கு பயன்படுகிறது. இதில் உள்ள அல் சின் என்ற பொருள் ஆன்டிபாக்டீரியல் தன்மை வாய்ந்தது. பல் வலி இருக்கும் போது பூண்டு பற்களை நசுக்கி அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை அப்படியே வலி உள்ள பற்களில் வையுங்கள். பல் வலி சீக்கிரம் குறைந்து விடும்.

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும் சரித்திரம் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வு வினீத்

பல் வலி குணமாக - குறிப்பு 6கடுகு எண்ணெயில் சிறிதளவு உப்பு கலந்து பல் வலி இருக்கும் இடத்தில் தடவினால் பல் வலி நீங்கும். அ...
04/08/2025

பல் வலி குணமாக - குறிப்பு 6

கடுகு எண்ணெயில் சிறிதளவு உப்பு கலந்து பல் வலி இருக்கும் இடத்தில் தடவினால் பல் வலி நீங்கும். அதே போல் கொய்யா இலையை காயவைத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக்க அதை கொண்டு பற்களை துலக்கினால் பல் வலி குறையும்.

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும் சரித்திரம் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வு வினீத்

பல் வலி குணமாக - குறிப்பு 5குப்பை மேனி தழையில் இருந்து சாறு பிழிந்து அதை கொண்டு பனங்கிழங்கை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்த...
04/08/2025

பல் வலி குணமாக - குறிப்பு 5

குப்பை மேனி தழையில் இருந்து சாறு பிழிந்து அதை கொண்டு பனங்கிழங்கை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து சிறிது நேரம் நன்கு காய்ச்ச வேண்டும். அதன் பிறகு காய்ச்சிய எண்ணெயை எங்கெல்லாம் பல் வலி உள்ளதோ அங்கெல்லாம் துளி துளியாய் விட்டு வர பல் வலி குறையும்.

Address

Theni

Telephone

+919840980224

Website

https://reghahealthcare.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்:

Share