11/05/2024
Kids Summer Camp in Theni ♥️
தாத்தா வீடு, ஆற்றில் குளியல், மலை மேல் பயணம், ஆடு, கோழிகளுக்கு உணவிடுதல், 7 ஸ்டெப் விளையாடுறது... பாட்டி கிட்ட கதை கேட்கிறதுன்னு நாம வாழந்த சிறார் வாழ்க்கையை நம்ம பசங்களுக்கு அறிமுகம் செய்யணும்ன்னு இந்த 80's - 90's கிட்ஸ்க்கெல்லாம் ஒரு ஏக்கம் இருக்கும்ல. அதை செய்லபடுத்திறதுக்கு இந்த சம்மர் லீவை பயன்படுத்தி ஒரு சின்ன ப்ளான்...!!
குழந்தைகளுக்கான ஷார்ட் & ஸ்வீட் 4 நாள் பாரம்பரிய கோடை விழாவாக இந்த கேம்ப் இருக்கும். இயற்கையை நேசித்தல், மனிதாபிமானம் உணர்தல், யாரையும் சாராதிருத்தல்..! - இது தான் கேம்போட நோக்கம்...
குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் கற்பித்தலாக விவசாயம், ஆதரவற்றோரிடம் அன்பு, நடனம், இயற்கையுடன் வாழ்தல், அதிகாலை நடைப்பயணம், பறவைகளை உணர்தல், கூட்டாஞ்சோறு, நிலாச்சோறுன்னு அவங்க அதிகம் கண்டிராத விசயங்களை வேடிக்கையாக சொல்லி கொடுக்க போறோம். முக்கியமா மொபைல் இல்லாம 4 நாள்..!
இந்த கேம்ப்பில் அதிகாலை ட்ரெக்கிங் போறோம், பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடுறோம், கலப்படமில்லாத கீரை காய்கள்ன்னு இயற்கை உணவினை சாப்பிடுறோம்,
ஆற்றில் நீந்தறோம்,
பூக்கள், காய்கறிகள் சேகரிக்கிறோம்.
பறவைகளை தேடி காணுறோம்.
குழந்தைகளுக்கான உலக திரைப்படம் பார்க்கிறோம், தாத்தா பாட்டிகளின் கதைகள் கேட்கிறோம், நாட்டுப்புற இசை, நடனம், பாடல்கள் கேட்கிறோம்.... சிலம்பம், கபடி, கோலிகுண்டு, சொட்டாங்கல், பல்லாங்குழி ஆடுறோம்,
குழந்தைகள் தங்கள் கையால் குறு விவசாயம் செய்ய வைக்கிறோம். அவங்க நட்ட விதைகள் செடிகளாக துளிர்விடுவதையும் அவை வளர்வதையும் ரசிக்க வைத்து அவர்களுக்கு இயற்கையின் உன்னதத்தை போதிக்கிறோம்.
இன்னிக்கு IAS உட்பட பல்வேறு பரீட்சைகளில் குழு மணப்பான்மை ஒரு முக்கிய பங்கு வைக்குது. தனி நபராக வாழ்வது அதிகரித்து வரும் வேலையில் ஒரு குழுவை எப்படி பராமரிக்கிறது, அதற்கான தலைமை பண்பு நமக்கு இருக்கான்னு பல்வேறு சோதனைகளில் அதை உறுதி செய்றாங்க. இந்த குழு பண்புகளான விட்டுக்கொடுத்தல், தலைமைத்துவம், உதவி செய்தல், ஆறுதல் அளித்தல், கூட்டாக சிந்தித்தல், செயல்படுத்துதல் எல்லாமே விளையாட்டுகளின் மூலமாக தான் கிடைக்கும் என்பது ஆராய்ச்சிகளின் முடிவு. இந்த கேம்ப், உங்க குழந்தையின் தலைமை பண்பை வெளிக்கொணர்வதாக இருக்கும். அதனால உங்க குழந்தை 5 - 15 வயதுக்குள் இருந்தால் கண்டிப்பாக கலந்துக்க வைங்க...!
நல்ல பாதுகாப்பான கிராம சூழ்நிலையில் தங்குமிடம் உணவுகள், பயிற்சிகள் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 1000. மொத்தம் 4 நாட்கள்..!
இடம்: Maaya Farm stay, Theni
நாள் : 20 மே முதல் 23 மே வரை
விருப்பமுள்ளவர்கள் 7358560776 / 9842775242 கால் செய்து புக் செய்துக்கலாம். 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி..
( இதுக்கு முன் #ஆச்சிவீடு கிட்ஸ் கேம்ப் புகைப்படங்களை இத்துடன் இணைத்திருக்கேன். )