24/09/2022
தமிழ்நாடு டிப்ளோமா பொறியாளர் பேரவை.
எண் :19/10, லால் முகமது தெரு, சேப்பாக்கம், சென்னை- 600 005.
24-09-2022அன்று நடைபெற்ற பேரவை பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் :
பேரவையின் பொதுக்குழு கூட்டம் 24-09-2022 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு , சென்னை, சேப்பாக்கம், தமிழ்நாடு பொறியியல் சங்க அலுவலகம்-பொறியாளர் சி. ப. ஷண்முகம் அரங்கில், பேரவை துணை தலைவர் Er. அசோகன் (PWD)அவர்கள் தலைமையில், பொதுச்செயலாளர் Er. பாஸ்கரன்(TWAD) அவர்கள் முன்னிலையில் துவங்கியது.
பேரவை அமைப்பு செயலாளர் Er. கருணாகரன்(BEL ) அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பேரவை பொதுச்செயலாளர் Er.பாஸ்கரன் அவர்கள் பேரவையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து விளக்கி உரையாற்றினார். பேரவையின் Megazine வெளியீடு செயலாளர் Er. ரவிச்சந்திரன் (Metro Water )அவர்கள் , பேரவையின் கொள்கை பரப்பு செயலாளர் Er. தமிழரசன் (TWAD)அவர்கள் அவர்தம் பொறுப்பு சார்ந்த செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்
பேரவையின் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல் படி இணைப்பு சங்க நிர்வாகிகள் Er.பாலகிருஷ்ணன் (REAT )அவர்கள், Er.Murugesan (PWD/TNEA )அவர்கள், Er.சிதம்பரம் (AIFODE /TWAD)அவர்கள், Er.ராமமூர்த்தி (Medical dept ), Er.கணேஷ் பிரகாஷ் (TNEA )Er. மரிய வர்கீஸ் (GCCorporation /chennai )அவர்கள் Er.மாரிமுத்து (Highways )அவர்கள், Er. Dr.நடராஜன் (Overseers )அவர்கள், Er........(TWAD)அவர்கள், Er.ராஜமாணிக்கம் (Medical dept.)அவர்கள், Er.கமலக்கண்ணன் (chennai Metro water )அவர்கள், மற்றும் பேரவை கிளை நிர்வாகிகள் Er. ரவிக்குமார் (வேலூர்)அவர்கள், Er..... (சேலம் )அவர்கள் உரையாற்றிய பின்னர் பேரவை நிதிநிலை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது.
இறுதியாக 2022-2024 கால அளவிற்கான பேரவையின் மைய்ய புதிய பொறுப்பாளர்கள் தேர்தல், Er.பாலகிருஷ்ணன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக இருந்து நடைபெற்றது.
புதிய பொறுப்பாளர்களாக கீழ் காணும் பொறியாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தலைவர் -Er.கணேஷ் பிரகாஷ் (PWD )
துணை தலைவர் -Er.மரிய வர்கீஸ் (GCCorporn. Chennai )
பொதுச்செயலாளர் -Er.ராமமூர்த்தி (Medical Dept)
நிதிசெயலாளர் -Er.பாஸ்கரன் (TWAD )
அமைப்பு செயலாளர் டாக்டர்.வீ.நடராஜன் (overseerRD)
கொள்கை பரப்பு செயலாளர் -Er.M.மாரிமுத்து (Highway)
வெளியீடு செயலாளர் -Er.ரவிச்சந்திரன் (chennai Metrowater ).
புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்புக்குப்பின் கீழ்கானும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1.பேரவையின் 2022-2024 கால அளவிற்கான புதிய மைய பொறுப்பாளர்கள் பட்டியல் பொதுக்குழுவால் ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாக தீர்மானிக்கப் பட்டது.
2.பேரவையின் விதிமுறைகளின் படி புதிய பொதுச்செயலாளர் /நிதிசெயலாளர் இணையாக வங்கி கணக்கு பரிவர்த்தனை மேற்கொள்வார்கள் என்று தீர்மானிக்கப் படுகிறது.
3. தமிழ்நாடு அரசு பொறியியல் துறைகளில் டிப்ளோமா பொறியாளர்களுக்கான பதவிகளில், டிப்ளோமா பொறியாளர்களை மட்டுமே பணி நியமனம் செய்திடல் வேண்டும், காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் டிப்ளோமா பொறியாளர்கள் பதவி உயர்வு நியமனங்கள் உடனடியாக நிரப்பிட கோரும் கோரிக்கை மனுக்கள் பேரவை சார்பாக மாண்புமிகு முதலமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், மற்றும் துறை தலைவர்களுக்கு அளித்திடவேண்டும் என்று தீரமாணிக்கப் பட்டது.
இறுதியில் பேரவை அமைப்பு செயலாளர் Dr.V.நடராஜன் அவர்கள் நன்றியுரை ஆற்றியதும் பொதுக்குழு கூட்டம் இனிதே முடிந்தது.
தலைவர் / பொதுச்செயலாளர். DECT