03/04/2020
கொரோனா பற்றிய விழிப்புணர்வை விட, கொரோனா பற்றிய வதந்தியும் அச்சமும் தான்
மக்களிடையே நிலவுகிறது.
கொரோனா பற்றி பல கேள்விகள் முன் வைக்கப்படுகிறது.
1. கொரோனா வந்தால் இறந்து விடுவோமா ?
2. வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு கொரோனா வந்து விடுமா? அவர்களுடன் விலகி இருக்க வேண்டுமா?
3. கொரோனா பல உயிர்களை பறித்து விட்டு தான் செல்லும் என்கிறார்களே?
4. எது வரை இந்த ஊர் அடங்கு நீட்டிக்கப்படும்?
5. மருத்துவனையில் புதிதாக பிறக்கும் அல்லது பிறக்க இருக்கும் குழந்தைக்கும் கொரானா வர வாய்ப்பு உள்ளதா?
என பல கேள்விகள் / சந்தேகங்கள்.
நமக்கு நம்பிக்கை தரும் நிகழ்வுகள்
பல நடந்து கொண்டுள்ளன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவைகளை அனைத்து ஊடகங்களும் மற்றும் சமூக ஊடங்கங்கள் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
1. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விடுவார்கள் என்று சொல்வது உண்மையில்லை.
2. கொரானாவின் பிறப்பிடம் என்று நம்பப்படுகின்ற ஊஹான் என்ற இடத்தில் இருந்து கிட்டத்தட்ட 90 சதவிகிதம் மக்கள் குணம் அடைந்து விட்டனர் என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளது.
3. உலக அளவிலும் பலர் குணம் அடைந்து வருகின்றனர்.
4. பல நாடுகளில் ஊர் அடங்கு உத்தரவு மூலம் கொரனவை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்து வருகின்றனர்.
5. கொரோனா மூலம் பலருக்கு வீட்டில் இருப்பவர்களுடன் நேரம் செலவிட முடிகிறது.
6.அழுத்தம் நிறைந்த வாழ்வில் இருந்து சற்று வெளியே வர நமக்கு உதவி இருக்கிறது.
#நல்ல_செய்திகள் ஊரை தாண்டும் முன்பு வதந்திகளும், பொய்களும், கெட்ட விஷயங்களும் #உலகை_சுற்றி வந்து விடுகிறது. அதற்க்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மில் சிலரும் காரணாமாக இருந்து விடுகிறோம்.
எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. அதற்கு பதில், அரசின் ஊர் அடங்கு உத்தரவை முறையாக கடைபிடித்தால் நாம் அனைவரும் சேர்ந்து கொரோனவை துரத்தி விடலாம்.
மேலுள்ள கேள்விகளுக்கு விரைவில் விளக்கமாக காணொளியில் பதில் சொல்கிறோம்...உங்களுக்கும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் ல் தெரிவிக்கவும்.
நன்றி.