Agathiyar Siddha Clinic

Agathiyar Siddha Clinic Siddha medicine is the traditional medicinal practice performed in India. Many incurable diseases ar

நூறு ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் மேட்டூர் அணை – வரலாறு.கர்நாடகாவில் இருந்து ஆர்ப்பரித்து வரும் காவிரி ஆற்றினை தன் கட்டமை...
03/08/2024

நூறு ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் மேட்டூர் அணை – வரலாறு.
கர்நாடகாவில் இருந்து ஆர்ப்பரித்து வரும் காவிரி ஆற்றினை தன் கட்டமைப்பால் கட்டுக்குள் வைத்திருப்பது தான் மேட்டூர் அணை.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் மேட்டூர் அணைக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. என்னவென்றால் அன்றைய சென்னை மாகாண கவர்னர் சர் ஜார்ஜ் ஸ்டான்லி (1929-1934)அவர்களால் கட்டப்பட்டது தான் ஸ்டாலின் மருத்துவமனை மற்றும் மேட்டூர் அணை.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே இந்த அணை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது ஆனால் அப்போது அன்றைய மைசூர் சமஸ்தானம் பலமுறை இதற்கு தடை விதித்து கட்ட அனுமதி மறுக்கப்பட்டு கட்ட இயலாமல் இருந்து இருக்கிறது. பின்னர் அப்பகுதியில் வாழும் மக்கள் சார்பாக அன்றைய கவர்னர் தாண்டி அவர்கள் மைசூர் சமஸ்தானத்திற்கு அங்கே இருந்து வரக்கூடிய தண்ணீரால் ஏற்படும் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணமாக 30 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு வழங்க வேண்டும் என கூறி ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் அப்பொழுது தங்கத்தின் விலை ஒரு பவுன் 30 ரூபாய். ஆக ஒரு லட்சம் பவுன் தங்கத்திற்கு நிகரான மதிப்பு கொண்ட தொகையை நிவாரணமாக வழங்குவதை விட அணைகட்ட அனுமதி வழங்கலாம் என மைசூர் சமஸ்தானம் முடிவு எடுத்து மேட்டூரில் அணை கட்டுவதற்கு அனுமதி அளித்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கவர்னர் ஸ்டான்லி அவர்களின் ஆணைப்படி கர்னல் W.M எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின்படி ரூ4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும்.
மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக அணையின் நீர்பரப்பு பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28-05-2017 அன்று துவக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேட்டூர் அணையின் நீரியியல் விவரங்கள்
அட்சரேகை – 11’ 48’ 11’’ வடக்கு
தீர்க்கரேகை – 77’ 48’ 24’’ கிழக்கு
அணையின் மொத்த நீளம் – 5300 அடி
அணையின் அதிகபட்ச உயரம் – 214 அடி
அணையின் அதிகபட்ச அகலம் – 171 அடி
அணையின் மேல்பகுதி அகலம் – 20 அடி 5 இன்ச்
அணையின் மேல்பகுதியில் சாலையின் அகலம் – 16 அடி
சுரங்கத்தின் நீளம் – 4400 அடி
அதிகபட்ச நீர்த்தேக்கும் உயரம் – 165 அடி
உபயோகப்படுத்தக்கூடிய தண்ணீர் உயரம் – 120 அடி
அணையின் மொத்த கொள்ளளவு – 95660 மி.கன அடி
அணையின் பயனுள்ள கொள்ளளவு – 93470 மி.கன அடி
முழுநீர்த்தேக்க மட்டத்தில் நீர்பரப்பின் நீளம் – 33 மைல்கள்
அதிகபட்ச நீர்பரப்பு பகுதி – 59.25 ச.மைல்கள்
நீர்பிடிப்பு பகுதி – 16300 ச.மைல்கள்

அணையின் மதகுகள்
16 கண் உபரிநீர் போக்கி – 16 * 60 அடி * 20 அடி
8 கண் மேல்மட்ட மதகு – 8 * 10.6 அடி * 16 அடி
5 கண் கீழ்மட்ட மதகு – 5 * 7 அடி * 14 அடி
அணைமின் நிலையம் – 4 விசைபொறி
சுரங்கமின் நிலையம் – 4 விசைபொறி

இந்த படத்தில் இருப்பவர் பெயர் ஆதம் லெப்பை இவர் கல்குடா பகுதியில் ஒட்டமாவடி என்ற இடத்தில் பள்ளிவாசலுக்கு எதிரே கைக்கடிகார...
07/02/2024

இந்த படத்தில் இருப்பவர் பெயர் ஆதம் லெப்பை இவர் கல்குடா பகுதியில் ஒட்டமாவடி என்ற இடத்தில் பள்ளிவாசலுக்கு எதிரே கைக்கடிகாரங்கள் மற்றும் கடிகாரங்கள் சரி பார்க்கும் கடை வைத்துள்ளார் . 45 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகிறார். இவர் பல்வேறு நாடுகளின் நாணயங்களை சேகரித்து அவைகளை கண்ணாடிக்கு உள் வைத்து உள்ளார். அவரது கடையில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரங்கள் வைத்துள்ளார். இந்த மாவட்டத்தில் உள்ள ஒரே கைக்கடிகாரம் சரிபார்க்கும் கடை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

வால் டி ஃபாஸாவில் மோனா. கிறிஸ்துமஸ் சூழலில் அந்தி நேரத்தில், அற்புதமான இயற்கை காட்சி.
29/11/2023

வால் டி ஃபாஸாவில் மோனா. கிறிஸ்துமஸ் சூழலில் அந்தி நேரத்தில், அற்புதமான இயற்கை காட்சி.

Address

Tirukkoyilur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agathiyar Siddha Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category