Vizhithidu Kanna - விழித்திடு கண்ணா

  • Home
  • India
  • Tirupur
  • Vizhithidu Kanna - விழித்திடு கண்ணா

Vizhithidu Kanna - விழித்திடு கண்ணா நாளைய உலகு வலுப்பெற பார்வை பரிசளப்போம்.

12/11/2023

அனைவரின் இல்லங்களில் ஒளி ஏற்றி மகிழ்ந்திடும் இந்த தீபாவளி திருநாளில்
குன்றி மலை வாழ் குழந்தைகளின் பார்வையில் ஒளியேற்றி மகிழ்ந்த தருணங்கள்.....

விழித்திடு கண்ணா ஃபவுன்டேஷன்: *பார்வை பரிசளிப்போம்*சத்தியமங்கலம், குன்றி மலை கிராமத்தில்  அமைந்துள்ள அரசு சார் தொடக்கப்ப...
19/08/2023

விழித்திடு கண்ணா ஃபவுன்டேஷன்: *பார்வை பரிசளிப்போம்*

சத்தியமங்கலம், குன்றி மலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு சார் தொடக்கப்பள்ளி, அரசு சார் உயர்நிலைப்பள்ளி, குஜ்ஜம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி ஆகிய 4️⃣ பள்ளிகளில் பயிலும் 3️⃣6️⃣2️⃣ மாணவ-மாணவியருக்கு முழு கண் நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பார்வை குறைபாடு உள்ள மாணவ மாணவியருக்கு பார்வை திறன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கண் கண்ணாடிக்கான அளவுகள் எடுக்கப்பட்டது.. வரும் நாட்களில் கண் கண்ணாடி தயார் செய்யப்பட்டு பரிசாக வழங்கப்பட உள்ளது..

துணை நின்ற அனைவருக்கும் , நிகழ்வை இனிதாக நடத்தி கொடுத்த பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல🙏🏻🙏🏻

04/08/2023

இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனரும், மக்கள் சேவகியான திருமதி. இந்திரா சுந்தரம் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம்.
இறைவன் அருளாலும், இயற்கை பிரபஞ்சத்தின் ஆசீர்வாதத்துடனும்,
உடல் நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ விழித்திடு கண்ணா குழு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க வளத்துடன்
வளர்க அருளுடன்

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி சீருடை தேவை என்பதை கேட்டறிந்தோம்... நண்பர்களது துணையுடன் தேவையை பூர்த்தி செ...
29/06/2023

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி சீருடை தேவை என்பதை கேட்டறிந்தோம்... நண்பர்களது துணையுடன் தேவையை பூர்த்தி செய்ததில் மனம் மகிழ்ச்சியே...

சீருடையை பரிசாக பெற்ற மாணவர்கள் மனநிறையுடன் நன்றி கூறியது, ஏழ்மை எவ்வாறு அவர்களை பக்குவப்படுத்தி உள்ளது என்பதை உணரச் செய்தது.

இவர்கள் ஈட்டும் கல்வி நாளைய தலைமுறையின் ஏழ்மையை விரட்டும் சக்தியாக அமையட்டும்...

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
08/03/2023

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

பார்வை பரிசளிப்போம்: நமது விழித்திடு கண்ணா ஃபவுண்டேஷன் மற்றும் மெட்ரோ அல்ட்ரா லெஜன்ட் டிரஸ்ட் குழுவினர் இணைந்து நடத்திய ...
01/03/2023

பார்வை பரிசளிப்போம்:

நமது விழித்திடு கண்ணா ஃபவுண்டேஷன் மற்றும் மெட்ரோ அல்ட்ரா லெஜன்ட் டிரஸ்ட் குழுவினர் இணைந்து நடத்திய பார்வை பரிசளிப்போம் நிகழ்வு.

பெருமாநல்லூர் மரியபுரம் கிராமத்தில் உள்ள அரசு சார் துவக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவருக்கும் நமது குழுவின் சார்பாக முழு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பார்வைத்திறன் மேம்பட கண் கண்ணாடி தேவைப்பட்ட குழந்தைகளுக்கு மெட்ரோ அல்ட்ரா லெஜெண்ட் டிரஸ்ட் குழுவின் பங்களிப்புடன் கண் கண்ணாடிகள் பரிசாக வழங்கப்பட்டது.

05/10/2022

என்றென்றும் புன்னகை-
அனைவரிடமும் உரிமையாக பழகும்
குணம் -
சமூகத்தின் மேல் உள்ள
அக்கறையால்
தன்னை சுற்றியுள்ளவர்களின்
விழிகளை
என்றென்றும்
ஒளிர செய்ய வேண்டும்
என்று முளைத்த
விடிவெள்ளி ...
அன்பு தம்பி ரமேஷ் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை வாழ்த்துவதில் விழித்திடு கண்ணா குழு பெருமை கொள்கிறது...
உடல் நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் 🎂🎂🎂

அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம்யுகம் தோறும்அவதரிப்பேன் என கூறியபரந்தாமனின் பிறந்தநாளைஅனைவரும்கொண்டாடி மகிழ்வோம்சர்வம் கிர...
19/08/2022

அதர்மம் தலை தூக்கும்
போதெல்லாம்
யுகம் தோறும்
அவதரிப்பேன் என கூறிய
பரந்தாமனின் பிறந்தநாளை
அனைவரும்
கொண்டாடி மகிழ்வோம்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻🙏🏻🙏🏻

 #விழித்திடு_கண்ணா_ஃபவுண்டேஷன் சார்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பெருமாநல்லூர் கருப்பன் காட்டுப்புதூர் ஊராட்சி ஒன்ற...
15/08/2022

#விழித்திடு_கண்ணா_ஃபவுண்டேஷன் சார்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பெருமாநல்லூர் கருப்பன் காட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு முழு கண் பார்வை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கண் கண்ணாடி தயார் செய்து இன்றைய தினம் நமது 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் அக்குழந்தைகளுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இன்றைய தினம் விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு பார்வை பரிசோதனையின் தேவை குறித்தும் அதனால் குழந்தைகளின் கண்களுக்கு பாதுகாப்பு மற்றும் கல்வி திறன் அதிகரிப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஸ்ரீனிவாசன் மற்றும் ஆசிரியர் திரு சந்திரசேகர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

நல் முயற்சிகள் அனைத்திற்கும் உற்ற தோழனாய் வழிகாட்டும் நண்பர் திரு தங்கராஜ் அண்ணா அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை பகிர்ந்து கொள்கிறோம்.

எங்களது விழித்திடு கண்ணா ஃபவுண்டேஷன் சார்பாக பார்வை பரிசளிக்கும் பயணம் தொடரும்..

நன்றிகள்..

Address

Tirupur

Telephone

+918778374807

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vizhithidu Kanna - விழித்திடு கண்ணா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vizhithidu Kanna - விழித்திடு கண்ணா:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram