Mei AcuYoga Centre, Tiruvannamalai

Mei AcuYoga Centre, Tiruvannamalai ஒருங்கிணைந்த அக்குபங்க்சர், யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் சிகிச்சை மையம்

25/04/2022

சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயம் யாருக்கு அதிகமாக உள்ளது? அறிகுறிகள் என்ன? அதைத் தடுப்பது எப்படி?

சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலினத்தவருக்கும் சம அளவு உள்ளது. சிறுநீர்ப்பை உடலின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. உடலில் இருந்து வெளிவரும் திரவங்கள் சிறுநீர் வடிவில் இங்கு சேர்க்கப்படுகிறது.

சிறுநீர்ப்பையின் உள்ளிருக்கும் சவ்வுகளில் உள்ள அணுக்கள் கட்டுப்படுத்த முடியாமல் வளரும் நிலையை சிறுநீர்ப்பை புற்றுநோய் என்று கூறுகிறோம். சிறுநீர்ப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் இரத்தம் சேர்ந்து வெளிப்படுவது, சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சிறுநீர் கழிக்கும் போது அடிவயிற்றில் வலி ஏற்படுவது போன்றவையாகும்.

UTI என்னும் சிறுநீர் பாதை தொற்று அல்லது இதர தொற்று பாதிப்புகளுக்கும் இதே அறிகுறிகள் தென்படுவதால் மக்கள் இந்த அறிகுறிகள் குறித்து குழப்பம் கொள்கின்றனர். பொதுவாக, சிறுநீர்ப்பை புற்றுநோய் பெரிய அளவிற்கு இருந்தால் மட்டுமே அதன் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு தெரிய வருகிறது. இதனால் சிகிச்சை அளிப்பது கடினமாகிறது.

ஆகவே இந்த நோய் உண்டாவதற்கான வாய்ப்புகளை களைவது மட்டுமே இதனைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும். உங்கள் வாழ்க்கையில் சிறுநீர்ப்பை புற்றுநோய் பாதிப்பு உண்டாகாமல் தடுக்க இந்த 3 பழக்கங்களை இன்று முதல் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

சிறுநீர்ப்பை புற்றுநோய் அபாயம் யாருக்கு அதிகமாக உள்ளது ?
* புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

* ஆரோக்கியமற்ற உணவு பழக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்க முடியும்.

* ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் உட்கொள்ளும் நபர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது .

தீங்கு விளைவிக்கும் ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்பவர்களுக்கு இந்த அபாயம் உள்ளது.

* போதுமான அளவு தண்ணீர் பருகாமல் உள்ளவர்களுக்கு இந்த நோய் பாதிப்பின் அபாயம் உள்ளது.

திரவ உணவுகள் மற்றும் தண்ணீர் அதிகம் பருகுங்கள்
போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால் சிறுநீர்ப்பை புற்றுநோய் உங்களை தாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தண்ணீர் பருகுவதால் நமது தாகம் தனிக்கப்படுவது மட்டுமல்லாமல் உடலில் உள்ள நச்சு கழிவுகள், அழுக்கு மற்றும் விஷ பொருட்கள் ஆகியவை வெளியேற்றப்படுகின்றன. நூற்றுக்கணக்கான வியாதிகளுக்கு தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. அதாவது நீங்கள் போதுமான அளவு தண்ணீர் பருகுவதால் உங்கள் உடல் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது.

சிறுநீரகத்தின் பணி
இரத்தத்தை வடிகட்டியவுடன் சிறுநீரகம் நச்சுகளை தனியாக பிரிக்கிறது, அதாவது எல்லா கழிவு பொருட்களும் சிறுநீர்ப்பையில் சேர்த்து வைக்கப்படுகின்றன. நீங்கள் குறைவான அளவு தண்ணீர் பருகும் போது, சிறுநீர்ப்பை எளிதாக அவற்றை வெளியேற்றுவதில்லை. அதனால் அதிக அளவு நச்சுகள் உங்கள் உடலில் படிந்து , சிறுநீர்ப்பையில் உள்ள சவ்வுகளில் ஒட்டிக் கொள்கின்றன. நீண்ட நாட்கள் இந்த சவ்வுகளில் நச்சு பொருட்கள் தங்குவதால் கொடிய சிறுநீர்ப்பை புற்றுநோய் உண்டாகிறது.

எவ்வளவு நீர் பருக வேண்டும்?
பொதுவாக ஒரு நாளில் 8-10 க்ளாஸ் அளவு அதாவது 3 லிட்டர் தண்ணீர் பருகுவது பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர, உங்கள் உணவில் இளநீர், பழச்சாறு, க்ரீன் டீ, ப்ளாக் டீ, எலுமிச்சை நீர், மூலிகை டீ போன்ற திரவ உணவுகளை உங்கள் தினசரி உணவு பழக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். மற்றுமொரு முக்கிய குறிப்பு என்னவென்றால் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் கட்டுப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் 3 பங்கு அதிகம் இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் அமைப்பு தெரிவிக்கிறது. சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் புகைப்பழக்கம் அதாவது சிகரெட் , பீடி, குட்கா, ஈ-சிகரெட் போன்றவற்றிற்கு அடிமையானவர்கள் என்று தேசிய சுகாதார நிறுவனம் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றனது. காகித சிகரெட்டை காட்டிலும் ஈ -சிகரெட் பாதுகாப்பானதென்று இன்றைய இளைஞர்கள் நினைக்கின்றனர். ஆனால் இரண்டுமே ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆகவே சிறுநீர்ப்பை புற்றுநோய் வராமல் தடுக்க உடனடியாக புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளலாம்
பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உட்கொள்ளும் நபர்களுக்கு புற்றுநோய்க்கான அபாயம் குறைகிறது என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பழங்கள் மாற்றம் காய்கறிகளில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளைத் தடுக்கின்றன. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின், மினரல், புரதம் போன்ற சத்துகள் இருப்பதால் உடலின் எல்லா உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் உடலின் எந்த ஒரு பாகத்திலும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், குறைவாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றை உட்கொள்வதால் சிறுநீர்ப்பை புற்றுநோய் தடுக்கப்படுகிறது என்று இன்வெஸ்டிகேட்டிவ் அன்ட் க்ளினிக்கல் யூராலஜி என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது.

13/04/2022
Kalesvara mudra is practiced by joining middle fingers on their tips while curling other fingers towards the palm. Pract...
10/10/2021

Kalesvara mudra is practiced by joining middle fingers on their tips while curling other fingers towards the palm.
Practice Kalesvara mudra for a minimum of 5-10 minutes.
It is recommended to set an intention before getting into this mudra either to inculcate a desirable habit or to get rid of a bad one.
Hence, practice it for at least 21 days if you are chasing a good habit and for leaving one, the duration has to be of 41 days.
Kalesvara mudra is done with conscious deep breathing. It helps in opening the clogged energy channels to the brain. This brings forth clarity of mind and enables the ability to contemplate.
Benefits of Kalesvara mudra
1. Brings serenity
2. Stimulates the Ajna Chakra
3. Develops adaptability
4. Brings control over senses
5. Improves concentration power
6. Resolves psychological issues – Practicing Kalesvara mudra has remedial effects on psychological disorders. It alleviates anxiety levels, relieves stress, and depression.

Stay Safe... Stay Healthy... Stay with Mei AcuYoga Centre
15/08/2021

Stay Safe... Stay Healthy... Stay with Mei AcuYoga Centre

 #இயற்கை  #முறை  #அவல்  #பாயசம்****************************தேவையான பொருட்கள்:*************************சிவப்பு அவல்தேங்கா...
24/07/2021

#இயற்கை #முறை #அவல் #பாயசம்
****************************

தேவையான பொருட்கள்:
*************************
சிவப்பு அவல்
தேங்காய் பால்
நாட்டுச் சர்க்கரை
ஏலக்காய்
பாதாம் பருப்பு பொடி

செய்முறை:
***********
ஊறவைத்த சிவப்பு அவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து அரைத்த தேங்காய் பால், பாதாம் பருப்பு பொடி சேர்த்து நன்கு கலந்து அருந்தலாம்.

பயன்கள்:
**********
நமது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும் ஆக்ஸிஜனேற்றிகள் சிவப்பு அவல் கொண்டுள்ளது. சிவப்பு அவல் புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கிறது. பாரம்பரியமாக சிவப்பு அவலை சாப்பிடும் போது அது புற்றுநோய் அபாயத்தை தடுக்க செய்கிறது.

தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள்
தேங்காய் பாலில் விட்டமின் சி, இ, கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன.

மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரோடீன், நார்ச்சத்து, நிறைவுற்ற கொழுப்புகள், இயற்கை சர்க்கரை ஆகியவையும் காணப்படுகின்றன.

தேங்காய் பாலின் மருத்துவப் பண்புகள்
தேங்காய் பாலானது பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நுண்நோய்கிருமிகள் எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளது. தேங்காயில் தாய்பாலில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பான லாரிக் அமிலம் உள்ளது.

இதய நோய்களில் இருந்து நாட்டுச் சர்க்கரை காக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.
- புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.
- இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.

உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் கைக்கொடுக்கிறது. வாய் துர்நாற்றம், வாய் , பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சொத்தைப்பல் உருவாக்கத்தையும் தடுக்கிறது. பற்களின் ஈறுகளையும் வலுவாக்குகிறது.

மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
#சாந்தாதேவி

*அன்பு தோழியின் மகனுக்காக செய்தது* மிகவும் எளிதாக விரைவாக செய்யக்கூடிய சுவையும் சத்தும் நிறைந்த உணவு.

09/06/2021

அனைவருக்கும் வணக்கம்.

நுரையீரல் மற்றும் இதயம், நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க உதவும் மூச்சுப் பயிற்சி மற்றும் முத்திரைகள் குறித்த ஒரு வார ஆன்லைன் வகுப்பும் ரெகுலர் யோகா ஆன்லைன் வகுப்பும் துவங்க உள்ளன.

இவை இரண்டும் குறித்த இலவச அறிமுக வகுப்பு நாளை இரவு 7 மணிக்கு Google meet நடைபெறும்.

தேவைப்படுபவர்கள் தேவையான வகுப்பை தேர்ந்தெடுத்த பின்னர் கட்டணம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.

Google meet I'd link நாளை அனுப்பப்படும்.

23/05/2021




 #இலவச  #ஆன்லைன்  #உளவியல்  #ஆலோசனைபெருகிவரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் மன அழுத்தம், மரணபயம், நிலையில்லாத தன...
18/05/2021

#இலவச #ஆன்லைன் #உளவியல் #ஆலோசனை

பெருகிவரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் மன அழுத்தம், மரணபயம், நிலையில்லாத தன்மை, பேரச்சம், உறவுகளை பறிகொடுத்த ஆழ் மன வேதனை போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தேவை ஆறுதல் மற்றும் நம்பிக்கை தரும் வார்த்தைகள் மட்டுமே.

உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்.
7358683768 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசெஜ் கொடுத்தால் உங்களுக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.

M.Santhadevi MD(acu).,B.Sc.,MA .,DYHE.,
AcuYoga Therapist.

Due to the Pandemic situation our Mei AcuYoga Centre is now available for online consultation.Increase your immunity wit...
17/05/2021

Due to the Pandemic situation our Mei AcuYoga Centre is now available for online consultation.

Increase your immunity with our support to recover or as prevention with our yoga , acupressure and naturopathy from covid related issues, general health issues, stress and panic.

For kids and elders online yoga (physical and breathing techniques) classes also available.

M. Santhadevi MD(Acu)., B.Sc(Yoga)., MA.,DYHE.,
_AcuYoga Therapist_
MEI ACUYOGA CENTRE
TIRUVANNAMALAI
7358683768

Healthy Carrot Ginger Soupஇரண்டு கேரட் ஒரு தக்காளி பழம் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து (தோல் சீவியது) அரைத்து சிறிது நெய்யில்...
07/05/2021

Healthy Carrot Ginger Soup

இரண்டு கேரட் ஒரு தக்காளி பழம் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து (தோல் சீவியது) அரைத்து சிறிது நெய்யில் சீரகம் ஒரு வெங்காயம் (நறுக்கியது) ஆறு பூண்டு பற்கள் (நறுக்கியது) சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்த்து தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க வைத்து தேவைக்கேற்ப மிளகு தூள் கொத்துமல்லி சேர்த்து பரிமாறலாம்.

இதனால் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் ஆரோக்கியம் கூடும். நோய்வாய்ப்பட்டவர்கள், முதியோர்கள் கூட எளிதாக செய்து பயன்பெற முடியும்.
✍️Acuhr.M.சாந்தாதேவி
மெய் அக்குயோகா மையம்
திருவண்ணாமலை.

     ஆஸ்த்துமா பிரச்சனைகள் தீர்க்க உதவும் முத்திரைhttps://youtu.be/KESqCxUnD2g
04/05/2021


ஆஸ்த்துமா பிரச்சனைகள் தீர்க்க உதவும் முத்திரை

https://youtu.be/KESqCxUnD2g

This is the best Mudra for Asthma... Duration: 15 minutes

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் ஆக்ஸிஜன் லெவல் அதிகரிக்கவும் சளி இருமல் நீங்கி  நுரையீரல் மற்றும் இதயம் நன்கு செயல்...
03/05/2021

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் ஆக்ஸிஜன் லெவல் அதிகரிக்கவும் சளி இருமல் நீங்கி நுரையீரல் மற்றும் இதயம் நன்கு செயல்படவும் உதவும் லிங்க முத்திரை ...

பயன்படுத்தி பலனடையவும் நண்பர்களுக்கு share பண்ணவும் கீழ்க்கண்ட link பார்க்கவும்.
https://youtu.be/inv-_KF0qKw

30/04/2021

இந்த ஹார்மோன் இம்பேலனஸ் பற்றிக் கூறுங்களேன்....

ஏன் நிலை குலைகிறது?
எப்படி சரிசெய்வது? -திருமதி. ஷக்தி

ஹார்மோன்கள் உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் மிக முக்கிய பணியாற்றுகின்றன, எனவே ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மிக கணிச வழிகளில் உடல் செயல்பாடுகளை பாதிக்கலாம். சில முக்கிய ஹோர்மோன் பிரச்சனைகள்

சீரற்ற இதய துடிப்பு

தூக்கமின்மை

பசியின்மை அல்லது அதிக பசி

பாலியல் இயக்கம் மற்றும் இனப்பெருக்க செயல்பாடு

வளர்ச்சியின்மை

உடல் வெப்பநிலை ஏற்றத்தாழ்வு

அதிக மன அழுத்தம்

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள்

ஹார்மோன்கள் நாளமில்லாச் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனித உடலில் பல சுரப்பிகள் உள்ளன எடுத்துக்காட்டாக, பிட்யூட்டரி சுரப்பி, கணையச் சுரப்பி, அண்ட மற்றும் விந்தகச் சுரப்பிகள். சுரப்பியினால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் இரத்த்தின் வழியாக உடலினுள் கடத்தப்படுகிறது.

இதில் வயது காரணமாக, வாழ்வியல் முறை காரணமாக, அதிகப்படியான கவலை/மகிழ்ச்சி, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது, சிலருக்கு மரபுவழி பிரச்சனைகள் போன்ற பல காரணங்களால் ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்படுகிறது.

இவற்றில் பல பிரச்சனைகள் மிகவும் எளிதாக அக்குயோகா மற்றும் உணவு மற்றும் லைஃப் ஸ்டைல் மாற்றங்களினால் சரி செய்ய முடியும்.

*அக்குபங்க்சர்/அக்குபிரஷர் சிகிச்சை

*அரோமாதெரபி

*தியானம்

*யோக ஆசனங்கள்
உடற்பயிற்சி

*இயற்கை காற்றில் இருப்பது/மூச்சுப் பயிற்சி செய்வது

*நல்ல ஆரோக்கியமான உணவு

*ரிஃப்ளெக்ஸாலஜி

*நல்ல தூக்கம்

*தன்னை பாதிக்கும் வெளி காரணிகள் மற்றும் மக்களிடம் இருந்து விலகி இருத்தல்

*உளவியல் ஆலோசனை

போன்ற சில விஷயங்கள் செய்கையில் நல்ல முறையில் குணப்படுத்த முடியும்.

மன அழுத்தம் எனும் stress தான் பலருக்கும் ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

நேரில் வருபவர்களுக்கு மேற்கண்ட சிகிச்சை முறைகளும் மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனைகள் வழங்கியும் அரோமோ ஆயில் மற்றும் natural food supplements அனுப்புகிறேன்.

Address

Tiruvannamalai
606601

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm
Sunday 10am - 2pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mei AcuYoga Centre, Tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mei AcuYoga Centre, Tiruvannamalai:

Share