Generic Aadhar Chennai

  • Home
  • Generic Aadhar Chennai

Generic Aadhar Chennai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Generic Aadhar Chennai, Pharmacy / Drugstore, .

மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு; உலகில் முதலிடத்தில் பிரதமர் மோடிபுதுடில்லி: மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள அரசுகள் பட்டிய...
15/07/2017

மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு; உலகில் முதலிடத்தில் பிரதமர் மோடி

புதுடில்லி: மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள அரசுகள் பட்டியலில், 73 சதவீத மக்களின் ஆதர வோடு, உலகில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்ற சர்வதேச அமைப்பு, மக்களின் ஆதரவை பெற்றுள்ள அரசுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 73 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று, பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதற்கு காரணமாக, அந்த அமைப்பு கூறி உள்ளதாவது: கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற, பிரதமர்நரேந்திர மோடி, செல்லாத ரூபாய் நோட்டு, ஜி.எஸ்.டி., எனப் படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என, மக்களை கவரும் பல்வேறு திட்டங்களால், மக்கள் விரும்பும் தலைவராக விளங்குகிறார். இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா, 62 சதவீத மக்கள் ஆதரவுடன், பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன் தலைமையான, துருக்கி அரசு, 58 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முயற்சிகளில் ஈடுபட்ட பிரிட்டனில், 41 சதவீத மக்கள், பிரதமர் தெரசா மேக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 30 சதவீத மக்களின் ஆதரவையே பெற்றுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பிய அகதிகள் பிரச்னைகளால் திணறி கொண்டிருக் கும், கிரீஸ் அரசு, 13 சதவீத மக்கள் ஆதரவுடன், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஜிஎஸ்டியின் ஆரம்பமே மகிழ்ச்சி-லாரி டிரைவர்கள்ஜிஎஸ்டியின் நன்மை என்பது உடனடி பலன் அல்ல . அது ரோடு போடுவது போன்றதாகும்.ஆரம...
03/07/2017

ஜிஎஸ்டியின் ஆரம்பமே மகிழ்ச்சி-லாரி டிரைவர்கள்

ஜிஎஸ்டியின் நன்மை என்பது உடனடி பலன் அல்ல . அது ரோடு போடுவது போன்றதாகும்.ஆரம்பத்தில் ஒரு புது ரோடு வரும்.பொழுது மக்களுக்கு உண்டாகும் இடைஞ்சல்களும் அது உருவான பிறகு அதனால் மக்களுக்கு கிடைக்கும் பலனும் நான்கு வழி சாலை உருவாக்கத்தின் பொழுது மக்களுக்கு உண்டான சிரமங்களும் அதனால் இப்பொழது கிடைக்கும் பலன்களும் நமக்கு தெரிந்ததே..

அதே மாதிரி தான் ஜிஎஸ்டியும்..ஆரம்பத்தில் வியாபாரிகளால் உருவாக்கப்படும் விலை யேற்றங்களால் விலை வாசி உயர்வது போன்ற தோற்றம் தெரிந்தாலும் நாளடைவில் பொருட்களின் விலை வாசி குறைந்து விடும்..

சரிப்பா அது வரும் போது வரட்டும் இப்பொழுது ஜிஎஸ்டியால் என்ன நன்மை என்கிறீர்களா. ஜிஎஸ் டியால் நேற்று முதல் மாநிங்களின் எல்லையில் இருக்கும் சுங்க சாவடிகள் மூடப்பட்டு வருகின்றன.

நேற்று வரைமணிக்கணக்கில் ஏன் நாள்கணக்கில் கூட லாரிகள் வெளி மாநில எல்லைகளில் காத்து நின்ற லாரிகள் இன்று சர்சர்ன்னு டோல்கேட்டை தாண்டி பறக்கிறது என்றால் அதற்கு காரணம் ஜிஎஸ்டி தான்..இனி மாநிலம் விட்டு மாநிலம் எடுத்து செல்லப்படும் பொருட்களுக்கு டேக்ஸ் ஆகியிருக்கா
இல்லையா என்கிற பில் வெரிபிகேசன் தேவை யில்லை.

அதோடு மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பொருட் களுக்கு நுழைவு வரி என்கிற பெயரில் டொல்கேட டில் காத்திருந்து கணக்கு சொல்லும் காலம் இனி இல்லை. கணக்கு சரியில்லாத லாரிகளை மிரட்டி லஞ்சம்ஜிஎஸ்டிம் ஆபிசர்கள் வரப்போவதில்லை.

ஜிஎஸ்டியில் அங்கமான இன்டகிரேட்டடு ஜிஎஸ்டி் என்கி்ற ஜஜிஎஸ்டி மூலம் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு விற்பனை யாகும் பொருட்க ளுக்கு ் கேரளா அரசிற்கு நேரிடையாகவே வரி போய் விடும் என்பதால் கேரள எல்லைகளில் உள்ள டோல்கேட்கள்
எல்லாம் மூடப்பட்டு விட்டன..

இதோ இதைப்பற்றி இன்றைய தினத்தந்தியில் வந்துள்ள செய்தி இதோ....

கோவை மண்டலத்தில் வணிக வரித்துறை கட்டுப் பாட்டில் வாளையாறு, கே.ஜி. சாவடி, பிச்சனூர், மீனாட்சிபுரம், கோபாலபுரம், கூடலூர் ஆகிய 6 சோதனை சாவடிகள் உள்ளன. அந்த 6 சோதனை சாவடிகளும் நேற்று முதல் மூடப்பட்டன. இதில் லாரி டிரைவர்களுக்கு அதிக நெருக்கடி கொடுத்து வந்தது தமிழக–கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச்சாவடி.

இங்கு கேரள அரசு சார்பில் உள்ள வணிக வரித்து றை சோதனை சாவடியில் தினமும் ஆயிரக்கணக் கான லாரிகள் அணிவகுத்து நிற்பது வழக்கம். வாளையாறில் வட்டார போக்குவரத்து சோதனை சாவடி, போலீஸ் சோதனை சாவடிகள் இருந்தாலும் கேரள அரசின் வணிக வரித்துறை சோதனை சாவடியில் தான் அதிக வாகனங்கள் நிற்பது வழக்கம்.

இதற்கு காரணம் கேரள அரசின் வருமானத்தில் வணிகவரி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கேரளாவுக்குள் வரும் லாரிகளில் உள்ள சரக்குகளுக்கு வணிகவரி செலுத்தப்பட்டுள்ளதா? என்று ஊழியர்கள் தீவிரமாக சோதனை செய்த பின்னரே லாரிகளை உள்ளே அனுமதித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. நேற்று முதல் அமலான தை தொடர்ந்து மாநிலங்களுக்கிடையில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன. அதன்படி வாளையாறு வணிகவரி சோதனை சாவடியும் மூடப்பட்டது. இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவர்கள் லாரி டிரைவர்கள் என்று சொன்னா ல் மிகையாகாது

வாளையாறு சோதனை சாவடி வழியாக கேரளா வுக்கு சரக்கு ஏற்றி வந்த நாமக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர் தியாகராஜன் என்பவர் கூறியதாவது:–

நான் வடமாநிலங்களிலிருந்து அடிக்கடி சரக்குகள் ஏற்றிக் கொண்டு கேரளா செல்வேன். எனக்கு ஒடிசா மற்றும் வாளையாறு சோதனை சாவடிகள் தான் சோதனையான சாவடிகள். ஒடிசா சோதனை சாவடியில் 2 நாட்களும், வாளையாறில் 4 நாட்களும் காத்திருக்கவேண்டும்.

வாளையாறு சோதனை சாவடியில் சரக்கு ஏற்றி வரும் லாரிகள் அங்குலம் அங்குலமாக தான் நகர்ந்து செல்லும் நிலை இருந்தது. இதனால் எங்களால் லாரியை விட்டு இறங்கவும் முடியாது. அதிகாலை நேரங்களில் எங்களால் காலை கடனை கூட கழிக்க முடியாத அவஸ்தையை அனுபவித்து வந்தோம். ஆனால் தற்போது சோதனை சாவடி மூடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் நாக்பூரிலிருந்து எலக்டிரிக்கல் பொருட்களை ஏற்றிக் கொண்டு காலை 8 மணிக்கு வாளையாறு வந்தேன். இங்கு லாரியை நிறுத்த வேண்டிய அவசியமில்லாததால் பாலக்காடு சென்று சரக்குகளை இறக்கி விட்டு மதியம் 2½ மணிக்கே வாளையாறு திரும்பி விட்டேன். கேரளாவுக்குள் சென்று சரக்குகளை இறக்கி விட்டு வருவதற்கு ½ நாள் தான் ஆனது. ஆனால் முன்பு 4 நாட்கள் ஆனது.
என்று அந்த டிரைவர் கூறியுள்ளார்.

இது தாங்க ஜிஎஸ்டியால் உண்டான உண்மையான
நிகழ்வு. மற்றபடி 4 இட்லி சாப்பிட்டதற்கு
18% வரி போட்டுள்ளார்களே இது தான் ஜிஎஸ்டியின் பலனா என்று முட்டாள்த்தன மாக பேசுவது நல்லத ல்ல...

4 நாட்கள். கேரள மாநில த்தி ன் எல்லையில ஒரு லாரி் காத்திருந்த காலம் போய் 4 மணி நேரத்தில் நுழைந்து சரக்கை டெலிவரி செய்து விட்டு வருகிறது என்றால் அந்த லாரி டிரைவரின் உழைப்பும் நேரமும் எப்படி வேஸ்டாகாமல் மிச்சமானது என்று வயிற்றில் பசியை அனுபவி த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்..

மாறாக முட்டுல பசியை வைத்துக்கொண்டு ஆடம்பர ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு டைம்பாசுக்கு சாப்பிட்டு விட்டு
இதுதான் ஜிஎஸ்டியின் லட்சணம் என்று உளறுபவர் களுக்கு என்ன தெரியும்?

முதல் முறையாக சில உண்மைகளை தேசத்தின் முன்னும் உங்கள் முன்னும் வைக்கிறேன்.. கிட்டத்தட்ட  3 லட்சம் கம்பெனிகளின் வரவு செலவு...
03/07/2017

முதல் முறையாக சில உண்மைகளை தேசத்தின் முன்னும் உங்கள் முன்னும் வைக்கிறேன்.. கிட்டத்தட்ட 3 லட்சம் கம்பெனிகளின் வரவு செலவு சந்தேகத்துக்கு இடமாக உள்ளன.இன்னும் யாரையும் நாங்கள் விசாரிக்க ஆரம்பிக்கவில்லை..

demonetisation க்கு பிறகு data mining தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. யாருடைய கணக்கில் எவ்வளவு வந்தது போனது என்று எக்கச்சக்கமாக தகவல்கள் எங்களிடம் வந்து கொண்டே இருக்கிறது..

இந்த அரசு எப்படிப்பட்ட அரசு, எவ்வளவு #நெஞ்சுரம்_மிக்க_அரசு, எவ்வளவு நேர்மையான அரசு என்பதற்கு உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் நண்பர்களே..

30ஆம் தேதி இரவு என்ன நடக்கும், ஜூலை 1 gst எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்று மீடியா மற்றும் பலரின் கவனம் இருக்க.. 48 மணி நேரம் முன்பு ஒரே கையெழுத்தில் 1 லட்சம் ஷெல் ( போலி) கம்பெனிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன . ROC யில் இருந்து அவை நீக்கப்பட்டுள்ளன.

மேலும் 37000 கம்பெனிகள் வரிசையில் உள்ளன.

இது சாதாரண முடிவு அல்ல மக்களே.. எல்லோராலும் எடுக்கக் கூடிய முடிவும் அல்ல.. அல்லும் பகலும் தேசநலனுக்காக வாழ்பவர்களால் தான் எடுக்க முடியும்.

தேச மக்களிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம் மீண்டும் அவர்களுக்கு கிடைக்கும் வரை ஓய மாட்டோம்.

- பிரதமர் மோதி...

☀ காலை  வணக்கம்  🙏🏼                     '''''''''             திருக்குறள்              """""""""""""""""""தித்திக்கும்  ...
02/07/2017

☀ காலை வணக்கம் 🙏🏼
'''''''''
திருக்குறள்
"""""""""""""""""""
தித்திக்கும்
திருக்குறளைத்
தேசிய நூல்
ஆக்குவோம்.
👍🏽
புல்லறிவாண்மை : 85
***********************
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு.-841
--------
இல்லாமையுள் மிகவும் கொடிய
இல்லாமை அறிவில்லாமையே
ஆகும்.பொருள் இல்லாது இருத்
தலை உலகம் இல்லாமையாகக்
கருதாது.
'''''''''''''
# அறிவில்லாமையே இல்லாமை
என உலகம் கருதும்.

02/07/2017

பிரதமராக மோடி பொறுப்பு ஏற்கும் முன் அதாவது மார்ச் 2014 ல்...,

பெட்ரோல் - 76 ரூபாய்
பருப்பு - 120 ரூபாய்
டாலர் - 65 ரூபாய்

இன்று 2017 ல்

பெட்ரோல் - 68 ரூபாய்
பருப்பு - 90 ரூபாய்
டாலர் - 63 ரூபாய்

இப்படி எதிலும் விலைவாசி உயர்வு இல்லை காரணம் பதுக்கல் இல்லை .

அப்படியிருந்தும் பலர் பாஜக அரசை எதிர்க்கிறார்களே ஏன்..?

தினமும் காலை 8 மணிக்கு எழுந்து பழகிவிட்டது இனி 6 மணிக்கே எழ வேண்டும் என்றால் எப்படி நமக்கு கோபம் வரும் அப்படி தான் இன்றைய நிலவரம் .

மோடியின் பாஜக அரசானது சாதாரண அரசு ஊழியர்கள் முதற்கொண்டு துறைகளின் IAS அலுவலகர்கள் வரை நேர்மையை கடைபிடிக்க செய்கிறது அதற்கான விலைதான் டெல்லி மாநில தேர்தலில் பாஜக தோற்றுபோனது .

ஆனாலும் அசராமல் பிரதமர் அவர்கள் ஊழலை ஒழிக்கவே முழுவேலை செய்கிறார் பண மதிப்பிழப்பு மூலமாக கள்ள சந்தையை முடக்கினார் ஆதார் கார்டு லிங் செய்ததின் மூலமாக பலகோடி ரூபாய் அரசு பணம் கஜானாவுக்கு திரும்பியுள்ளது .

நம்மில் பலரும் எதோ ஒரு விஷயத்தில் அரசை ஏமாற்றியே தொழில் நடத்தி வந்தோம் இன்று அதற்கு வழியில்லை

நேர்மையாக தொழில் செய்பவனுக்கு மோடி அரசால் எந்த பிரச்சனையுமில்லை நேர்மை இல்லாதவனுக்கு மோடி மட்டுமே பிரச்சனை .

நேர்மையான வழியில் சொத்து சேர்த்து ஊடகங்கள் நடத்தும் எவனும் தமிழகத்தில் இல்லை என்பதே இதற்கு சாட்சி .

Tamilnadu government 28 sale tax check post closed because of the GST economic revelation
02/07/2017

Tamilnadu government 28 sale tax check post closed because of the GST economic revelation

⛅ காலை வணக்கம் 🙏🏼             திருக்குறள்                      ***          பேதைமை : 84                    ****கழாஅக்கால...
01/07/2017

⛅ காலை வணக்கம் 🙏🏼
திருக்குறள்
***
பேதைமை : 84
****
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.-840
***
சான்றோர் கூடியுள்ள அவையில்
ஒரு பேதை புகுதல், அசுத்தத்தை
மிதித்த காலோடு படுக்கையில்
வைத்தது போன்றதாகும்.
*****
# சான்றோர் சபையில் அறிவிலி
நுழைவது, அசுத்தத்தோடு
படுக்கை அறையில் நுழைவது
போன்றது ஆகும்.

01/07/2017

Address


Telephone

+917305996988

Website

Alerts

Be the first to know and let us send you an email when Generic Aadhar Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share