
19/09/2024
மாற்றுத்திறனாளி வேலை நாடுனர்கள் கவனத்திற்கு,
நமது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20.09.2024 அன்று நமது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கு (அறை எண் 20 ) காலை 10:30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
சிறப்பம்சங்கள்:
1. 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
2. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு செய்தல்.
3. மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பு ஆலோசனை
4. தனியார் நிறுவனங்கள் வழங்கும் இலவசதிறன் பயிற்சிக்கான பதிவு செய்தல்.
இதில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறிப்பு:
1.இதில் தேர்வு செய்யும் மாற்று திறனாளிகளின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது
2. இதில் தேர்வாகும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகை ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது
3. மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுடைய சுயவிபர குறிப்பினை (biodata or resume) உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,
திருப்பூர்.