21/11/2025
சங்ககால தமிழக வரலாறு
[அரசியல்/மொழி/மெய்யியல்]
சங்ககால தமிழகம் என்பது நூறுவீதம் ஈழமும் சேர்ந்ததுதான், சங்ககால தமிழக வரலாறு என்பதும் சேரநாடு போலவே நூற்றுக்கு நூறு வீதம் ஈழமும் சேர்ந்ததுதான்.சங்ககால தமிழக வரலாற்றை கூறியுள்ள சங்ககால பாடல்களில் உள்ள வரலாற்று நிகழ்வுகளும் ஈழத்தையும் சேர்த்துத்தான் கூறுகின்றன எனவே அந்த சங்ககால தமிழக வரலாற்றை சரியாக அறிந்து கொள்ள வேண்டுமானால் சங்ககாலம் எது என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியமானது . அதில் சங்ககால வரலாற்றுக்காலம் எனப்படுகின்ற கி.மு 350 - கி.மு 50 வரையிலான காலம் மிக முக்கியமான காலம் ஆகும்.
எனவே அவற்றை அறிய சங்ககால பாடல்களில் கூறப்பட்டுள்ள விடயங்களை மாத்திரமே நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டுமே தவிர பிற களப்பிரர் காலத்தில் எழுந்த நூல்களில் உள்ள புனைவுகளை சங்ககால வரலாற்றோடு பொருத்தி ஈழத்து வரலாறு வேறாகவும் , சேரநாட்டு வரலாறு வேறாகவும் தமிழக வரலாறு வேறாகவும் என தனித்தனி வரலாறாக கருதக்கூடாது. அவை தமது இருப்புக்காக தமக்கு சொந்தமல்லாத இந்த மண்ணை தமக்குரியதாக காட்டவென பல வரலாற்று புனை கதைகளோடு இயற்றப்பட்டவை, அந்த புனைவு வரலாற்றை உண்மை என கருதி நாம் சங்ககால வரலாற்றை ஆராய்வோமானால் அது பிழையான வரலாற்றை முடிவுகளையே தந்து கொண்டிருக்கும் அந்த தவறுதான் கடந்த காலங்களில் நிறையவே நிகழ்ந்து வந்திருக்கிறது . மேலும், சங்ககால அரசியல் ,மெய்யியல் பற்றி ஆராய்வோமானால்
சங்ககாலத்தில் தமிழரின் தாயகம் கடைச்சங்கக் காலத்தில் வேங்கடம் முதல் குமரி வரையெனக் குன்றிவிட்டது.இங்கே குமரி எனப்படுவது கன்னியாகுமரி அல்ல ,அது ஈழத்தைப் குறிப்பது. அவ்வாறு தமிழரின் தாயகம் சுருங்கிய பின்னரும் எந்த ஒரு நேரடி ஆரியப் படையெடுப்பாவது சங்ககால தமிழகத்தின்மீது நடந்ததுண்டா? இல்லையே! வடவாரியப் படையெடுப்பாளரும், தமிழர்களை வென்றதுண்டா? மாலிக்காஃபூரின் படை யெடுப்புக்கு முன்னால் எந்த வடவராவது தமிழகத்தின்மீது படை யெடுத்து அதைப் பிடித்துவைத்து ஆண்டதுண்டா? இல்லையே! ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்குப் பின்னாலன்றி, யாதொரு வடவாரி யரும் தமிழகத்தைப் பிடித்து நேரடியாக ஆண்டதில்லையே!
கோசர்களுக்குப் பழையனுடைய மோகூர் பணிய மறுத்ததால், அக் கோசர்க்குத் துணையாக வந்த வம்ப மோரியர் படையெடுப்பைப்பற்றி அகநானூறு கூறும் ஒரு செய்தி நம்முடைய வரலாற்றறிவுக்கு எட்டுகின்றது.
நந்தன் வெறுக்கை யெய்தினும் மற்றவண் தங்கலர் வாழி தோழி வெல்கொடித் துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மு தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர்!
என்னும் அகநானூற்று வரிகள் அதைச் சொல்கின்றன.
வடவராம் அந்த வம்ப மோரியரையும் மோகூர்ப் பழையன் என்னும் பாண்டியர் படைத்தலைவன் எல்லையிலேயே முறியடித்து விரட்டியடித்துவிட்டான்.
வடநாட்டு ஆரியவரசன் ஒருவன் மிகப் பெரும் படையோடு வந்து தமிழகத்தின்மீது படையெடுத்தபோது, திருக்கோயிலூரை ஆண்டுவந்த மலையமான் திருமுடிக்காரி அவனுடைய படைகளை யெல்லாம் தென்பெண்ணையாற்றின் தென்மேற்கிலிருந்த முள்ளூர் என்னும் இடத்தில் முறியடித்து, அந்த ஆரியப் படைகளை ஓடவோட விரட்டினான் என்பதைச் சொல்லும்,
ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒருவேற்கு ஓடி யாங்கு...?
என்னும் நற்றிணை வரிகள் இன்னொரு குறிப்பாகும்.
ஒட்டுமொத்தத்தில், பெரிய வடவாரியர் படையெடுப்புகள் எதுவும் விந்தியமலைக்குத் தெற்கே வெற்றி பெற்றதேயில்லை. மாறாக, தமிழ்ப் பேரரசர்களே வடக்குநோக்கிப் படைசெலுத்தி வென்று கொடி நாட்டிய வரலாறுகள் உண்டு. ஆயினும், வென்ற இடங்களை எந்தத் தமிழரசனும் பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல ஆரிய நாடுகளை வென்று திறை கொண்டனரேயன்றி, அவற்றைப் பிடித்தாள எண்ணியதேயில்லை.
இதனால், வடஇந்தியாவில், விந்தியமலைக்கு மிகவும் அப்பால், நடந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்து, அவ் வடஇந்திய வரலாற்றைச் சென்ற இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தமிழக வரலாற்றின்மீது கண்மூடித்தனமாகத் திணிப்பது பெருந்தவறு.
தமிழகத்திற்குள் ஆரியர்கள் புகுந்ததே இல்லையாவென்பது அடுத்த கேள்வி.
கைபர், போலன் கணவாய்களின் வழியாக வந்ததாகக் கூறப் படும் ஆரியர்களோ, ஆரிய வழியினரெனக் கூறிக்கொண்ட வடவரோ, தமிழகத்தைப் படைகொண்டு வென்ற வரலாறே இல்லை.
ஆனால், எண்ணியம் (சாங்கியம்), ஆசீவகம், உலகாய்தம் முதலான பல வடிவங்களாகக் கிளைத்த தமிழர் மெய்யியல் விளக்கங்களிலிருந்து வடவர்கள் அறிவுக் களவாடல் செய்ததன் விளைவாக வந்த ஆரியச் சமயநெறிகள், தமிழர் மெய்யியலைக் கெடுத்துக் குறைபடுத்தி அழித்ததுடன், அதனைத் தம்வயமாக்கிக் கொள்ளவும் செய்தனவென்னும் வரலாறு ஒருபுறம் கிடக்கட்டும். அவை சங்ககால தமிழகத்தில் பழமையானவை எனவெண்ணி மயங்கியது மிகப் பெரிய கேட்டை விளைவித்துள்ளது.
தமிழகத்தின்மேல் எக்கால பகுதியிலும் ஆரியர் படையெடுத்து வெல்லவில்லை யெனின், வேறு யார்தான் அவர்களை வென்றனர்?
வேங்கடம் முதல் குமரி வரை என்றான தமிழகத்தின்மீது முதன் முதலில் நடந்த மிகப் பெரும் படையெடுப்பு களப்பாளர் படை யெடுப்பேயாகும். இந்தக் களப்பாளர்கள் இன்றைய கருநாடகப் பகுதியிலிருந்து வந்த கன்னட வடுகர்கள். அவர்கள் தமிழ்நாட்டைச் சூறையாடினர். தமிழகத்தில் ஒழுங்கானதும் நிலையானதுமான ஓர் அரசும் இல்லா ஆட்சிக்குழப்பத்தை (Anarchy) ஏற்படுத்தினர்.
இவர்களுடைய ஆட்சியின் விளைவாகத்தான் அன்றைய காலப்பகுதியில் பல்வேறு புராண இதிகாச கதைகள் எழுந்தன.
சங்ககாலத்தின் பின்பாக கி. பி. மூன்றாம் நூற்றாண்டில்த்தான் தமிழகத்தில் நிலவிய சமயங்களைப் பற்றிய செய்தி சமயநெறி விளக்கத்துடன் தெளிவாகத் தெரியவருகின்றன. ‘சமயம்’ என்னும் சொல் சங்கப் பாடல்களில் இல்லை. தெய்வம் என்னும் சொல் உள்ளது. சமயம் என்னும் சொல் சிலப்பதிகாரத்திலும் இல்லை. பண்டைய நூல்களில் மணிமேகலை, பழமொழி ஆகியவற்றில் மட்டும் அவ்வாறு வருகிறது.மணிமேகலை, சிலப்பதிகாரத்துக்குப் பிந்தையது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி அவர்களின் ஆராய்ச்சி நூலின்படி, சிலம்பின் காலம் கி பி 436 - 560/590 (Studies in ancient Tamil Society, 1998) என்கிறார். அவ்வாறாயின் மணிமேகலை அதனை விட பிந்தையது என்றாகிறது.கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை காப்பியம் படைக்கப்பட்ட கால தமிழகத்தில் புத்த மதம் ஒரு சிறுபான்மை மதமாகவே இருந்தது என்பதை மணிமேகலை காப்பியம் உறுதி செய்கிறது
பௌத்தம், சமணம் ஆகிய இருமதங்களும் கடவுள் குறித்தும் சடப்பொருள் குறித்தும், உலகத் தோற்றம் குறித்தும் கூறிய தத்துவார்த்த கோட்பாடுகள் அனைத்திற்கும் எண்ணியக் கோட்பாடுகளே அடிப்படை. இவை அவைகளை எண்ணியத்திலிருந்து தான் பெற்றுக் கொண்டன. இதனை உலகாயதம் நூலில் சட்டோபாத்தியாயா, “எண்ணியம் என்பது இந்தியத் தத்துவங்களில் மிகப் பழமையானது என்பதோடு இந்தத் தத்துவத்திலிருந்து தான் பௌத்தம் தோன்றியது என கார்பே கூறுவதை சாசுதிரியும் ஆதரித்தார் என்றும் ‘பௌத்தமதக் கோட்பாடுகள் சாங்கியத்திலிருந்து தோன்றியவை என அசுவகோசு விரிவாகக் கூறியுள்ளார் எனவும் புத்தரின் ஆசிரியர்களான ஆதாரகலமா, உத்தகா (இராமபுத்தர்) ஆகியோர் சாங்கியக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள்’ எனவும் சாசுதிரி கூறுகிறார்” என்கிறார் (5) மேலும் “இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு மெய்யியலும், ஒவ்வொரு சமய நிறுவனமும் கபிலர் என்ற மாமனிதருக்கு உளவியல் அடிப்படையிலும், மெய்யியல் அடிப்படையிலும் கடமைப்பட்டுள்ளன” என்ற விவேகானந்தரின் கூற்றும் (6) சமண பௌத்த மதங்கள் எண்ணியத்திலிருந்து பல கருத்துக்களை கடன் பெற்றுள்ளன என்பதை உறுதி செய்கிறது.
இந்த உலக வாழ்க்கை துன்பகரமானது. முன்செய்த தீவினைகளை இப்பிறவியில் மனிதன் அனுபவிக்க வேண்டும். இப்பிறவியில் தீவினைகளைச் செய்பவர்கள் அடுத்த பிறவியில் துன்பத்தை அனுபவிப்பார்கள். ஆசைகளை விடுத்து, நல்வினைகளைச் செய்வதன் மூலம் முக்தியடைந்து பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறலாம். அதாவது வீடுபேறு அடையலாம். இவைகளை சமண பௌத்த மதங்கள் இரண்டுமே கூறிவந்தன. ஆனால் தமிழர்கள் இவ்வுலக வாழ்வு துன்பகரமானது என்பதையோ அதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதையோ ஏற்கவில்லை. அவர்கள் உலக வாழ்க்கை இன்பமும் துன்பமும் கொண்டதுதான் எனினும் வாழ்வில் இனிமை காண முயலவேண்டும் எனவும் வாழ்வு இன்பகரமானது எனவும் இவ்வுலக வாழ்வை அறம் பொருள் இன்பம் ஆகியன கொண்டு மிகச் சிறந்த முறையில் வாழவேண்டும் எனவும் கருதினர். தமிழ்ச் சிந்தனை மரபின் பொருள்முதல்வாத எண்ணிய மெய்யியல், இவ்வுலகம், உயிரினங்கள், மனித இனம் ஆகியவைகளின் தோற்றம் வாழ்வு அழிவு ஆகியன குறித்த அறிவியல் அடிப்படையும், காரணகாரியத் தர்க்கவாதச் சிந்தனைகளும் கொண்ட தெளிவான திட்டவட்டமான கோட்பாடுகளைக் கொண்டிருந்தது. கடவுள் இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதன் வழிவந்த தமிழர்கள் இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வு என்பதையோ, வீடுபேறு என்பதையோ ஏற்கவில்லை. இந்த சமண பௌத்த மதங்கள், எண்ணிய மெய்யியலின் உலகத்தோற்றம், கடவுள் ஆகியன குறித்தக் கோட்பாடுகளைப் பின்பற்றித் தான் தங்கள் கொள்கைகளை வடிவமைத்துக் கொண்டன என்பதையும் பழந்தமிழர்கள் அறிந்தே இருந்தனர்.
தமிழர்களின் வாழ்வில் அறம் பொருள் இன்பம்
தமிழ் மரபு, மனித வாழ்வின் அடிப்படைகளாக அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று கோட்பாடுகளை வகுத்திருந்தது. இதனை
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்போடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம்.... (தொல்-களவியல்: 1038) என்பார் தொல்காப்பியர்.
அறத்தோடு நிற்றல் என்பது தமிழ் மரபிற்கே உரிய வாழ்க்கையின் இலக்கணம். உயிரின் இயற்கைப்பண்பு இன்பநாட்டம். இன்பத்திற்குத்தேவை பொருள். இந்தப் பொருளையும், இன்பத்தையும் அறத்தின் அடிப்படையில் தான் ஈட்டவும், துய்க்கவும் வேண்டும். இவை தொல்காப்பியர் தரும் வாழ்வின் இலக்கணம். தனி மனித வாழ்வு சமூக வாழ்வோடு இணையும் பொழுது அறம் முதலிடத்திற்கு வந்து அறம், பொருள், இன்பம் எனும் முறை உருவாகிறது. ஆனால் அகவாழ்வில் இன்பமும் பொருளும் அறமும் என ஆகி இன்பம் முதலிடத்தைப் பெறுகிறது.
இன்பம் துன்பம் இரண்டும் மனித வாழ்க்கையின் இயல்பு. எனினும் வாழ்க்கையில் இனிமை கண்டு சிறந்தமுறையில் வாழவேண்டும் என்பதே தமிழர்களின் கோட்பாடு. அதனை இந்திய அளவில் எண்ணியத்திற்கான மிகப்பெரும் சங்கத்தின் தலைவராக இருந்த, புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்த பக்குடுக்கை நன்கணியார் என்ற புறநானூற்றுப்புலவர்,
‘இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே’ (புறம்-194). எனக் கூறுகிறார்.
இன்பம், துன்பம் இரண்டையும் தந்த இறைவன் பண்பற்றவன் என இறைவனை இப்பாடலில் அவர் கடுமையாகச் சாடுகிறார். இறுதியில் வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டும் இயல்பானது எனவும் அதை உணர்ந்தவர்கள் வாழ்வில் இனிமை காண முயல்வர் எனவும் அவர் கூறுகிறார். இந்திய மொழிகளில் எண்ணியம், ஆசிவகம் ஆகியவற்றின் கடவுள் மறுப்பிற்கான சான்றாக இப்பாடல் சொல்லப்படுகிறது.
மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபில் மூலஎண்ணியத்திற்கும், தொடக்ககாலச் சிறப்பியத்திற்கும், நியாயவியல் என்ற அளவையியலுக்கும் ஓக, உலகாயத மெய்யியல்களுக்கும் உரியவை எனக் கருதுகிற
படிமுறைக்கோட்பாடு (THEORY OF EVOLUTION)
அண்டவியல் (ஐம்பூதக்) கோட்பாடு (THEORY OF UNIVERSE)
அளவை இயல் கோட்பாடு (THEORY OF REASONING & LOGIC)
காரண – காரியக் கோட்பாடு (THEORY OF CAUSE & EFFECT)
இன்பவியல் கோட்பாடு (THEORY OF HEDONISM)
ஆகிய அறிவியல் துறைகளைத் தொல்காப்பியம் விரிவாகவும் செறிவாகவும் கூறிச்செல்கிறது (7). தமிழர்களின் இன்பவியல் கோட்பாட்டை
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான மர்ந்து வரூஉம் மேவற் றாகும்” -தொல்.பொருளதிகாரம்-219.
எனக் கூறுகிறார் தொல்கப்பியர். அதாவது எல்லா உயிர்களும் இன்பத்தைப் பெறுவதில்தான் நாட்டம் கொள்ளும். அதுவே இயற்கை. ஆகவே மனிதர்கள் இன்பத்தைப் பெற முயல்வது என்பது இயல்பானது.
அற அடிப்படையில் நிறையப் பொருளைச்சேர்த்து, தேவையானவர்களுக்கு பொருளுதவி செய்து, அற வழியில் இன்பத்தை அனுபவித்து சுற்றத்துடன் கூடி வாழும் வாழ்க்கையே ஒரு நிறைவான வாழ்வு என தமிழர்கள் கருதினர். பொருளதிகாரத்தின் 190ஆம் பாடலில், களவிலும், கற்பு வாழ்க்கையிலும், இன்பம் நுகர்ந்து, அறத்தோடு கூடிய பெருவாழ்வு வாழ்ந்த தலைவனும் தலைவியும், முதுமையில் தம் மக்களோடும் சுற்றத்தோடும் பாதுகாப்போடும், பெருமதிப்போடும் சிறந்த முறையில் வாழ்ந்து இறத்தலே பேரின்ப வாழ்வாகும் எனக் கூறுகிறார் தொல்காப்பியர்.
“காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும், கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (கற்பியல் – 51)
இப்பாடல் துறவறம் குறித்தோ, வீடு குறித்தோ பேசவில்லை. இந்த வாழ்வை மிகச்சிறந்த முறையில் வாழ்வதே பேரின்ப வாழ்வு எனக் கூறுகிறது. பழந்தமிழர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக் கொண்டு வாழ்ந்தனர். வாழ்க்கையில் பொருள் சேர்ப்பதையும், இன்பமாக வாழ்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்த தமிழர்கள், பொருள் சேர்ப்பதிலும், இன்பமாக வாழ்வதிலும் அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற கருத்தையும் தங்கள் வாழ்வின் இலக்கணமாகக் கொண்டிருந்தனர். அறமற்ற பொருள் சேர்க்கையும், அறமற்ற இன்ப நுகர்வும் ஏற்கத்தக்கதல்ல என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் ‘அறத்தோடு நிற்றல்’ என்பது மிகமிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதனால்தான் தொல்காப்பியர் உலக வழக்கில் இருக்கும் அறம் சாராத நடைமுறைகள் இலக்கியப் படைப்புகளில் கூட இடம்பெறுவதை ஏற்கமுடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். இலக்கியப் படைப்புகளில் அறம் சாராத நடைமுறைகளைப் படைப்பது பழித்தலுக்குரியது எனக்கூறுகிறார்.
அறக்கழிவு உடையன பொருட்பயன் வரினே
வழக்கென வழங்கலும் பழித்தது என்ப (பொருளியல் – 22).
அறம் சாராத நடைமுறைகள் உலக வழக்கில் இருந்தாலும் அவற்றை மரபு எனக் கொண்டு இலக்கியம் படைப்பது பழிக் குறியதாகும் எனத் திட்டவட்டமாக தொல்காப்பியர் அறிவுறுத்துகிறார். ஆகவே அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றிலும் ‘அறத்தோடு நிற்றல்’ என்பது வாழ்வுக்கான மிக முக்கிய இலக்கணம் எனத் தமிழர்கள் கருதினர். அறம் இல்லாத பொருள் சேர்க்கையும், அறம் இல்லாத இன்ப நுகர்வும் பழிக்குறியது மட்டுமல்ல சமூக அளவில் புறக்கணிப்புக்கும் தண்டனைக்கும் உரிய கேவலமான அவமானகரமான தீயசெயலாகும் என தமிழர்கள் கருதினர்.
கர்மவினை மறுப்பு:
இன்பவியல் கோட்பாட்டைக் கொண்டிருந்த தமிழர்கள் கர்மவினைக் கோட்பாட்டுக்கு எதிராக இருந்தார்கள். தமிழர்களின் தற்செயல் கோட்பாடு என்பது இந்த கர்மவினைக்கு எதிரான கோட்பாடாகும். சமண, பௌத்த வைதிகம் ஆகிய மூன்று மதங்களும் கர்மவினைக் கோட்பாட்டைக் கொண்டிருந்தன. ஆகவே இவை தற்செயல் கோட்பாட்டைக் கடுமையாக எதிர்த்துப் போராடின. எண்ணியம்தான் இந்தத் தற்செயலியம் என்ற கருத்தியலை உருவாக்கியது எனினும் ஆசிவக மதத்தைத் தோற்றுவித்த மூவருள் ஒருவரும் தமிழருமான பூரண காயபர் இந்தத் தற்செயலியத்தை ஒரு தனி மெய்யியலாகவே வளர்த்தெடுத்தார்.
பழந்தமிழ் அகத்திணை மரபில் உரிய வயதில் ஆணும் பெண்ணும் சந்திப்பது என்பது மிகவும் ஒரு தற்செயலான நிகழ்வாகும். இந்தத் தற்செயல் நிகழ்வு ஒருசில முறை நடந்து அதுவே களவுக்காதலாகவும் பரிணமித்து இறுதியில் திருமணம் என்ற முடிவுக்கு இட்டுச்செல்கிறது. ஆகவே தமிழ் அகத்திணை மரபில் தற்செயலியம் என்பது மிக முக்கியப் பங்கை வகித்தது எனலாம். களவுக்காதலுக்கு மட்டுமல்ல மனிதவாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அல்லது வினைக்கும் காரணம் தற்செயலியம் எனப்படும் தற்செயல் நிகழ்வுகளும் தேவையும் தான் காரணம் என தமிழ்மரபு கருதியது. ஆதலால் அதற்குக் கர்மவினைகள் காரணமல்ல என தமிழர்கள் கருதினர். கர்மவினை மறுப்பைச் சார்ந்த பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறம் 134 ஆம் பாடல் அதற்கு மிகச்சிறந்த சான்றாகும். இதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இறுதியாகும்.
‘இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே’
‘இப்பிறப்பில் செய்யும் அறம் மறுபிறப்பிற்கு உதவுமென்று நினைத்து அறம் செய்யும் வணிகன் அல்லன் ஆய் அண்டிரன். சான்றோர் பலரும் சென்ற வழியிலேயே நம் செயலும் இருக்கவேண்டும் என்று கருதியே ஆய் அண்டிரன் எல்லோருக்கும் நல்லது செய்கிறான்’ என்பதே இதன் பொருள். இப்பிறப்பில் நல்லது செய்தால் அடுத்த பிறப்பில் நல்லது நடக்கும் என்ற கர்மவினை இங்கு மறுக்கப்படுகிறது. அன்றைய தமிழ்ச் சான்றோர்கள் கர்மவினையை மறுத்தவர்கள் என்பதையும் இப்பாடல் எடுத்துரைக்கிறது. இதே கருத்தில் பரணர் தனது புறம் 141ஆம் பாடலில் பாடியுள்ளார்.
‘மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண் மையே’ என்கிறார்.
பேகனின் கொடை என்பது மறுபிறப்பை நோக்கியதன்று, அவனது கொடை பிறரது வறுமையை மட்டுமே நோக்கியது’ என்பதே இதன் பொருள். இங்கும் கர்மவினை மறுக்கப்படுகிறது. பழந்தமிழர்கள் இப்பிறப்பில் நன்மை செய்தால் மறுபிறப்பில் நன்மை கிடைக்கும் என்ற கர்மவினையை ஏற்கவில்லை என்பதை இப்பாடல்களும், தமிழர்களின் கர்மவினைக்கு எதிரான தற்செயலியமும் உறுதி செய்கிறது. பரணரின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. தமிழர்களின் கர்மவினை மறுப்பு என்பது வீடுபேறு என்பதையும் மறுப்பதாகும். ஆகவே சங்ககாலத்திலேயே தமிழர்கள் கர்மவினை, வீடுபேறு போன்றவற்றை மறுத்தவர்கள். ஆக தமிழ்ச் சமூகம் சங்ககாலத்தின் தொடக்கம் முதலே ஒரு அறிவியல் சமூகமாக இருந்தது. அதற்கு எண்ணிய மெய்யியலே காரணம்.
கி.மு. 3300 ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழகத்தில் இரும்புக்காலம் தொடங்கிவிட்டது என்பதை சிவகளை அகழாய்வு உறுதி செய்துள்ளது. கி.மு. 1500 வாக்கில் ஆதிச்சநல்லூர் ஒரு தொழிற்துறை நகராக ஆகியிருந்தது. அன்றே தமிழர்கள் தமிழ்க் குறியீடுகளை
தமிழ்மொழிக்கான எழுத்தாகக் கொண்டிருந்தனர். ஆதலால் அன்றே பழந்தமிழகத்தில் நிறையச் சிறுகுறு நகரங்கள் உருவாகியிருந்தன எனலாம். எனவே பழந்தமிழர் நாகரிகத்தின் தொடக்ககாலத்தை கி.மு. 1500 எனக்கொள்ளலாம். கி.மு. 1000க்கு முன்பே சேர சோழ பாண்டிய நகர அரசுகள் உருவாகியிருந்தன. கி.மு. 750க்கு முன்பே அவை வேந்தர்களாக உருவாகியிருந்ததோடு, தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியை உருவாக்கி தங்களைத்தவிர வேறு யாரும் வேந்தர்களாக ஆக முடியாது என்பதை நடைமுறைப்படுத்தியிருந்தனர். தொல்கபிலர் கி.மு. 750 வாக்கில் அறிவியல் அடிப்படையைக் கொண்ட பொருள்முதல்வாத எண்ணிய மெய்யியலை தோற்றுவித்திருந்தார் (8).
சங்ககாலம் எனப்பட்ட நகர அரசுகளின் காலம் கி.மு. 750-50 வரை எனவும், சங்கம் மருவிய காலம் எனப்பட்ட பேரரசுகளின் காலம் கி.மு.50-கி.பி.250 வரை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.பி. 250வரை பழந்தமிழ்ச்சமூகத்தின் அடிப்படையாக பொருள்முதல்வாத மெய்யியலே இருந்து வந்தது. சங்க காலத்தின் இறுதியிலும் சங்கம் மருவிய காலத்திலும் பழந்தமிழகத்தில் சமண பௌத்த மதங்கள் மிகச்சிறுபான்மை மக்களால் மட்டுமே பின்பற்றப்பட்டன. அன்று வைதீக மதம் என்பது ஒரு மத நிறுவனமாக உருவாகவில்லை. ஆகவே கி.பி. 250வரை அறிவியல் அடிப்படையைக்கொண்ட பொருள்முதல்வாத மெய்யியலே தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைக் கருத்தியலாக இருந்து வந்தது.
சமண பௌத்த மதங்கள் வாழ்க்கை துன்பகரமானது என்றன. ஆனால் தமிழர்கள் வாழ்க்கை இன்பகரமானது என்ற இன்பவியல் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். வாழ்க்கை துன்பகரமானது என்ற கருத்தைக் கொண்டிருந்த சமண பௌத்த மதங்கள் அத்துன்பத்திற்கு இவ்வுலக வாழ்க்கை மீதும் இவ்வுலகப் பொருட்கள் மீதும் ஆசையும் பற்றும் வைப்பதும், கர்மவினையும் காரணம் என்றன. கர்மவினை என்பது முந்தைய பிறவிகளிலும் இன்றைய பிறவியிலும் செய்த நல்ல தீய செயல்களின் ஒட்டுமொத்த விளைவாகும் என்றன. ஆசையோ, பற்றோ இல்லாத நற்செயல்களைக் கொண்ட துறவு வாழ்வு கர்மவினையைப் போக்கி முக்தி அல்லது வீடுபேறை வழங்கும் என்றன. வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கருத்து கொண்ட தமிழர்கள், இந்த வாழ்வே வேண்டாம் என்பதையும், கர்மவினை, பிறவிச் சுழற்சி, வீடுபேறு போன்றவற்றையும் ஏற்கவில்லை. கர்மவினை மறுப்பு என்பதை ‘தற்செயலியம்’ என்ற கோட்பாடாக தமிழர்கள் வளர்த்தெடுத்தார்கள். ஒரு தலைவனும் தலைவியும் சந்திப்பது என்பது ஒரு தற்செயலான நிகழ்வு. இது போன்ற பல தற்செயல் நிகழ்வுகளால் அது களவுக் காதலாக வளர்ந்து இறுதியில் திருமணத்தில் முடிகிறது. இதுபோன்றே, வாழ்வில் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் தற்செயல் நிகழ்வுகளும் தேவைகளுமே காரணம் எனவும் கர்மவினை காரணமல்ல எனவும் தமிழர்கள் கருதினர். ஆகவே வீடுபேறு, கர்மவினை போன்றவற்றை தமிழர்கள் மறுத்தார்கள்.
தமிழ்ச் சிந்தனை மரபு இப்பேரண்டம், உயிரினங்கள், மனித இனம் ஆகியவைகளின் தோற்றம் வாழ்வு அழிவு ஆகியன குறித்த அறிவியல் அடிப்படையைக் கொண்ட தெளிவான மெய்யியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்தது. பழந்தமிழ்ச்சமூகம் சமயச்சார்பற்ற பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட சமூகமாக இருந்ததால் அவர்களிடம் முழுமுதற்கடவுள் என்ற கருத்து இருக்கவில்லை அதனை மறுப்பவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களின் சாங்கியம் எனப்படும் எண்ணிய மெய்யியல் ஆதிமூலப்பொருளில் இருந்துதான் இவ்வுலகம் தோன்றியது எனவும் இறுதியில் இவ்வுலகம் முழுவதும் ஆதிமூலப் பொருளில் ஒடுங்கி அடங்கும் எனவும் கூறியது. ஊழி ஊழிக் காலமாய் இருந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தைப் படைப்பதற்கு யாரும் தேவைப்படவில்லை எனவும் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தான் இவ்வுலகில் உயிரினமும் மனிதனும் தோன்றினர் எனவும் எண்ணியம் கூறியது. ‘இன்மை’ என்ற பழந்தமிழர்களின் கோட்பாடு, பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் கோட்பாடாக இருந்தது.
இன்மை என்பது ஒரு பொருளின் ஏழாவது பண்பாக, பொருளின் மறுதலையாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு பொருள் உருவாவதற்கு முன் இருந்த நிலைமைதான் இன்மை. ஒரு பொருள் அப்பொருளாக உருவாகுவதற்கு (இல்லாததற்கு) முன்பிருந்த நிலைதான் இன்மை. ஒரு செடி உருவாவதற்கு முன் அது ஒரு விதையாக இருந்தது. பெருவெடிப்பிலிருந்து இப்பேரண்டம் தோன்றுவதற்கு முன் அது ஒரு ஆதிமூலப்பொருளாக இருந்தது. ஒரு செல் உயிரினம் உலகில் முதலில் தோன்றுவதற்கு முன் அது ஒரு சடப்பொருளாக இருந்தது. இங்கு விதையும், ஆதிமூலப்பொருளும் சடப்பொருளும் இன்மை ஆகும். ஆகவே இன்மை என்பது விதையிலிருந்து செடி உருவாகுதல், ஆதிமூலப் பொருளில் இருந்து இப்பேரண்டம் உருவாகுதால், சடப்பொருளில் இருந்து ஒரு செல் உயிரினம் தோன்றுதல் ஆகிய ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறும் திரிவாக்கக் கோட்பாடு அல்லது பரிணாமக் கோட்பாட்டைக் குறிப்பிடுவதாகும். வெளி, காலம், இயக்கம், பரிணாமம் ஆகியவை குறித்த நவீனக் கருத்துகள் பலவற்றை எண்ணியம் அன்றே கூறிச் சென்றுள்ளது. ஆகவே கி.பி.250 வரை பொருள்முதல்வாத மெய்யியலே பழந்தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைக் கருத்தியலாக இருந்தது. பெரும்பாலோர் சமய நம்பிக்கை இல்லாதவர்களாகவும் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே கொண்டவர்களாகவும் இருந்தனர்.
அதே சமயம் பழந்தமிழர்களிடையே தெய்வங்களும் வழிபாடுகளும் இருந்தன. இந்த தெய்வங்கள் என்பன முன்னோர்கள். அதனால்தான் தொல்காப்பியர் தெய்வத்தை கருப்பொருளில் வைத்தார். முதற்பொருளில் வைக்கவில்லை. வள்ளுவன் தனது 50ஆவது குறளில் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்றான். ஆகவே சங்ககாலத் தெய்வம் என்பது முன்னோர்கள் ஆவர். அன்று முன்னோர் வழிபாடும் இயற்கை வழிபாடும் இருந்தன. அன்று இருந்த நில தெய்வ, குல தெய்வ, நடுகல் வழிபாடுகள் முன்னோர் வழிபாடுகளே. இவை போக இயற்கை வழிபாடாக ஐம்பூதங்களும் இன்ன பிறவும் வழிபடப்பட்டன. அன்று சேயோன், மாயோன் ஆகிய இருவருக்கும், ஐம்பூதங்களுக்கும் கோயில்கள் இருந்தன. ஆகவே பழந்தமிழர்களின் மெய்யியல் என்பது பொருள்முதல் வாத மெய்யியல். அவர்களின் வழிபாடு என்பது முன்னோர் வழிபாடும், இயற்கை வழிபாடுமாகும்.
கி.பி.250 வாக்கில் ஏற்பட்ட களப்பிரர் படையெடுப்பு தமிழகத்தில் பேரழிவைக் கொண்டு வந்தது. தமிழக நகரங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. களப்பிரர் படையெடுப்பாலும் அதன்பிந்தைய அவர்களின் தொடக்ககால கொடுங்கோல் ஆட்சியாலும் தமிழ்ச்சமூகம் ஒரு பின்தங்கிய பிற்போக்கான சமயம் சார்ந்த கிராமச்சமூகமாக மாறிப்போனது. களப்பிரர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டும், வேள்விக்குடி செப்பேடும் பேசுகின்றன. கி.பி. 5ஆம் நூற்றாண்டு பூலாங்குறிச்சிக் கல்வெட்டு பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்டதை, அன்று பிரம்மதேயங்களும் பிரம்மதேயக் கிழார்களும் இருந்ததை உறுதி செய்கிறது (9). ஆகவே அக்காலகட்டத்தில் வைதீக மதம் அரச ஆதரவால் செல்வாக்கு மிக்க மதமாக ஆகியிருந்தது. சங்ககாலத்தில் பிரம்மதேய நிலதானங்கள் வழங்கப்படவில்லை. களப்பிரர் பல்லவர் காலத்தில்தான் பார்ப்பனர்களுக்கு அவை முதல்முதலாக வழங்கப்பட்டன. ஆனால் சங்ககாலத்திலேயே பார்ப்பனர்களுக்கு நிலதானங்கள் வழங்கப்பட்டன என்ற மாயையை உருவாக்குவதே வேள்விக்குடி செப்பேட்டின் நோக்கம். அச்செப்பேடு ஒரு பொய்யான செப்பேடு. ஆகவே களப்பிரர்கள் வைதீகத்துக்கும், பார்ப்பனர்களுக்கும் பேரளவான ஆதரவை வழங்கியவர்கள் என்பதே உண்மை.
மதச்சார்பான சமூகமாக மாறிய தமிழ்ச் சமூகம்:
களப்பிரர் காலத்தின் தொடக்ககாலத்தில் நடந்த வன்முறையாலும் பேரழிவாலும் கொடுங்கோன்மை ஆட்சியாலும், தமிழ்ச் சமூகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் அதன் அடிப்படைக் கட்டமைப்புகளும் முழுமையாக அழிக்கப்பட்டு, சமயம் சார்ந்த பிற்போக்குச் சிந்தனைகள் மேலோங்கி வளர்ந்தன. அதற்கு அக்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் இருந்த பஞ்சம், பட்டினி, வறுமை, ஏழ்மை, இன்னபிற கொடுமைகள் போன்ற நிலைமைகளும், பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இல்லாது போனதும் காரணமாயின. இதுபோன்ற சூழ்நிலைகள் மனிதனுக்கு ஆறுதலைத்தரும் சமய நம்பிக்கையில் அவனை ஈடுபட வைக்கிறது. களப்பிரர் காலத்தில் அதுதான் நடந்தது. இக்காலத்தில் சமண பௌத்த மதங்களோடு வைதீகமும் ஆதரிக்கப்பட்டு பார்ப்பனர்களுக்குப் பிரம்மதேயங்கள் வழங்கப்பட்டன. நாளடைவில் சமயம் சார்ந்த சிந்தனைகள் வளர்ச்சியடைந்து, கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டில் திருமூலரின் திருமந்திரமும், காரைக்கால் அம்மையாரின் பக்திப் பாடல்களும் தமிழில் தோன்றின (10). கி.பி. 5 முதல் 7ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய பௌத்தமதத் தமிழ்ச் சிந்தனையாளர்களான தின்னாகர், தர்மகீர்த்தி, திக்நாதர், தருமபாலர், போதிதர்மர் போன்ற அனைவரும் தங்கள் நூல்களை சமற்கிருதத்தில் எழுதினர் (11). சமண சமயத்தை வளர்த்தெடுப்பதற்காக கி.பி. 470இல் வச்சிரநந்தி என்பவர் மதுரையில் திரமிளசங்கத்தை நிறுவினார் (12). ஆக, சங்கம் மருவிய காலம்வரை மதச்சார்பற்ற சமூகமாக இருந்த தமிழ்ச் சமூகம் களப்பிரர் காலத்தில் மதச்சார்பான சமூகமாக ஆகிப் போனது.
தமிழகத்தில் வடமொழிகளின் ஆதிக்கம்:
களப்பிரர்கள் பாலி மற்றும் பிராகிருத மொழியை ஆதரித்தார்கள். அன்று பல நூல்கள் அம்மொழிகளில் படைக்கப்பட்டன. கி.பி. 5ஆம் நூற்றாண்டில், சோழ நாட்டைச் சேர்ந்த புத்ததத்த மகாதேரர் என்னும் தமிழ் பௌத்த அறிஞர் பாலி மொழியில் புத்தவம்சாத்த கதா, அபிதம்மாவதாரம், உத்தரவினிச்சியம் போன்ற பல நூல்களைப் படைத்தார். களப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் ஆட்சிக் காலத்தில்தான் ‘வினய வினிச்சியம்’ என்னும் நூலை அவர் எழுதினார். களப்பிரர் காலத்தைச் சேர்ந்த தஞ்சை தருமபால ஆசாரியார் பாலிமொழியில் பல உரைநூல்களை எழுதியுள்ளார். இவரும் தமிழர் (13). ஆகவே களப்பிரரின் தொடக்க காலத்தில் பாலி, பிராகிருத மொழிகள் செல்வாக்கு பெற்றவைகளாக இருந்தன. ஆனால் இறுதியில் சமற்கிருதம் பெரும் செல்வாக்கு பெற்றதாக ஆகி சமற்கிருதமயமாக்கலும் நடைபெற்றது. பௌத்தமதத் தமிழ்ச் சிந்தனையாளர்களான தின்னாகர், தர்மகீர்த்தி திக்நாதர் போன்றவர்கள் தங்கள் நூல்களை சமற்கிருதத்தில் எழுதினர்.
களப்பிரர், பல்லவர் காலத்திற்கு முன்வரை கலை, இலக்கியம், அறிவியல் முதலான அனைத்திற்குமான மொழியாகத் தமிழ் இருந்தது. பரத நாட்டிய சாத்திரம் என்ற இசை நாட்டிய இலக்கண நூல், சரக சம்கிதை என்ற மருத்துவ நூல், மயமதம் மானசாரம் போன்ற கட்டடக்கலை, சிற்பக்கலை நூல்கள், வானவியல், கணிதம் சார்ந்த ஆரியபட்டியம் போன்ற பல நூல்கள் தமிழின் வழிநூலாக அல்லது அதன் மொழிபெயர்ப்பு நூலாக களப்பிரர் பல்லவர் காலத்தில்தான் சமற்கிருதத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன (14). இவ்வாறு பல கலை, அறிவியல், தொழில்நுட்பம் முதலான தமிழ் நூல்களை மொழி பெயர்த்துத் தன்வயப்படுத்திக்கொண்டு சமற்கிருதம் ஒரு அறிவியல் மொழியாக ஆனது. ஆனால் தமிழ்மொழி கீழ்மக்களின் மொழியாக மாற்றப்பட்டு, அறிவியல் மொழி, வணிகமொழி போன்ற தகுதிகளை இழந்து போனது. தமிழ் அறிவர்கள் அனைவரும் தொடக்கத்தில் பாலி, பிராகிருதத்திலும் பின் சமற்கிருதத்திலும் எழுதினர். இந்த மாற்றங்களுக்குக் களப்பிரர்காலப் பேரழிவும், அதன் கொடுங்கோன்மை
ஆட்சியும் சமண, பௌத்த வைதீக மதங்களின் ஆதிக்கமும்தான் காரணம். சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களையும், நூற்றுக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப நூல்களையும், அதற்கான பேரளவான சொல் வளங்களையும் கொண்ட, தன்னை மொழியால் அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு அறிவியல் சமூகம், பிற மொழிகளில் எழுதுவது என்பது வரலாற்றில் எங்கும் நடைபெறவில்லை.
பண்டைய காலத்திலேயே பெருவளர்ச்சி பெற்று, தங்களை மொழியால் அடையாளப்படுத்திக்கொண்ட