30/10/2025
இரத்தப் பரிசோதனை செய்யும் முன் சாப்பிடாமல் விரதம்(Fasting) இருப்பது அவசியமா?
என்ன காரணம்?
எத்தனை மணி நேரம் விரதம் இருக்க வேண்டும்?
எதற்கெல்லாம் விரதம் அவசியம்?
1-இரத்தப் பரிசோதனை மூலம் ஒருவருடைய உடல் நல பாதிப்புகளை எளிதில் கண்டறிய முடியும்.
2-அந்த பரிசோதனையின் முடிவுகளை வைத்தே அடுத்த கட்டத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
3-இந்த இரத்தப் பரிசோதனை சிறுநீரகம், தைரொய்ட், இதயம்,நுரையீரல் தொடர்பான பிரச்சினை,மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளை கண்டறிய உதவும்.
4-பரிசோதனைக்கு முன் விரதம் எனில் எதுவுமே சாப்பிடக்கூடாது, குடிக்கக் கூடாது என்பதே அர்த்தம். காரணம்,அப்போதுதான் அந்த சோதனையில் சரியான காரணத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும்.
5-இல்லையெனில் உணவு சாப்பிட்டுவிட்டால் உணவின் சத்துக்கள்,மூலக்கூறுகள் இரத்தத்தில் கலப்பதால் பரிசோதனை முடிவுகள் பிழைத்து போகும் (false positive or false negative results)(சில மருந்து மாத்திரைகளும் காரணமாகலாம்)
6-அதேபோல் இந்த விரதம் என்பது எல்லா வகை இரத்தப் பரிசோதனைகளுக்கும் தேவைப்படாது.
7-ஒருசில பரிசோதனைகளுக்கு மட்டுமே தேவைப்படும்.
8-குளுக்கோஸ்(சீனி) பரிசோதனைக்கு(விரதம்-fasting) உணவு சாப்பிடக்கூடாது,இது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படும். இதற்கு 8 முதல் 10 மணி நேரம் விரதம் தேவைப்படும்
9-கொழுப்பு பரிசோதனைக்கு (Cholesterol test)
விரதம் இருக்க வேண்டும்.
10-Lipid profile பரிசோதனைக்கும்
விரதம் இருக்க வேண்டும்,அப்போதுதான் கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பின் அளவை கண்டறிய முடியும்,இதன்மூலம் இதய பாதிப்புகளை கண்டறியலாம்.
11-Lipid profile பரிசோதனையில் ட்ரைகிளிசரைடு நிலை சோதனை (Triglyceride level test),உயர் அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதம் (எச்.டி.எல்) நிலை சோதனை High-density lipoprotein (HDL) level test,குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதம் (எல்.டி.எல்) நிலை சோதனை Low-density lipoprotein ஆகியவற்றுடன் மொத்த கொலஸ்டிரோல்(Total cholesterol), அதன் விகிதம்(T.Chol/HDL) மற்றும் Very Low Density Lipoprotein (VLDL) ஆகிய ஐந்து பிரிவுகளுக்கு மேலாக பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
12-Lipid profile பரிசோதனைக்கு எத்தனை மணி நேரம் சாப்பிடக்கூடாது?.....இது நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதன் பரிசோதனை முறை மாறுபடும். ஆதலால் பொதுவாக பல பரிசோதனைகளுக்கும் 8-10 மணி நேரம் சாப்பிடாமல் இருக்க அறிவுறுத்துவார்கள்.சில தீவிர சோதனைகளுக்கு 12 மணி நேரம் வரை சாப்பிடாமல் இருக்க அறிவுறுத்தப்படும்(பொதுவாக 10-12 மணி)
குறிப்பு :விரதத்தின் போது தண்ணீர் மட்டும் குடிக்கலாம், மேலும் சாதாரண கொழுப்பு/மொத்த கொழுப்பு(Total cholesterol) பரிசோதனையை விடவும் Lipid profile பரிசோதனை பல பிரிவுகளில் கொழுப்பு/கொலஸ்டிரோலின் பிரிவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால் அநேக வைத்திய நிபுணர்கள் இந்த Lipid Profile பரிசோதனையையே அதிகம் பரிந்துரைக்கின்றனர்.எனவே விரதம் (fasting) இருப்பவர்கள் தங்களின் விரத அளவை தங்களின் வைத்தியர்களிடமோ அல்லது வைத்திய நிபுணர்களிடமோ உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.
🩸மேலதிக தகவல்களுக்கு 🩸
👨🔬MC. RAJAB MLT👨🔬
🏥BASE HOSPITAL🏥
🕹️VALAICHENAI🕹️
🏥MCR மருத்துவ ஆய்வு கூடம்🏥
🕹️பாடசாலை வீதி,மீராவோடை(கப்பல் ஹாஜியார் சந்தி)🕹️
🕹️பிரதான வீதி, ஓட்டமாவடி(மதீனா ஹோட்டல் முன்பாக)🕹️
🕹️வைத்தியசாலை வீதி, வாழைச்சேனை(வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு முன்பாக)🕹️
📲0777976690📲
📲0757296651📲