
23/06/2025
பருத்தித்துறை - குடத்தனையை சேர்ந்த 11 அகவையுடைய அஜய் ஜெய்சங்கருக்கு மிகவும் சிக்கலான இருதய சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது!
இதய சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி காஞ்சனா சிங்கப்புலி இது போன்று ஆயிரக்கணக்கான சிறு பிள்ளைகளின் உயிர்களை காத்து, அசராது நோயாளிகளுக்கான சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டிருப்பவர். இவர் இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த அரிய வரப்பிரசாதம். இவர் நினைத்திருந்தால் எப்போதோ வெளிநாடு சென்று பல மடங்கு உழைத்திருக்கலாம். இறைவன் இவருக்கு நீண்ட ஆசியை கொடுக்க வேண்டும்.
இச்சிகிச்சை வெற்றி பெற உழைத்த இதய சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி காஞ்சனா சிங்கப்புலி, இதய நோய் நிபுணர் வைத்திய கலாநிதி ரெஜினால்டு ரகுநாதன், யாழ் மருத்துவமனையை சேர்ந்த வைத்தியர் சுகந்தி நவநீதன், மற்றும் லங்கா மருத்துவமனையின் இருதய சத்திர சிகிச்சை - ஒருங்கமைப்பு குழு, இதற்கு நிதியுதவி செய்த சுரக்க்ஷஆ திட்டத்திற்கும் கோடான கோடி நன்றி. 🙏❤🙏
பின்குறிப்பு மேலுள்ள படத்தில் சிறுவன் அஜயுடன் இருதய சத்திர சிகிச்சை பிரிவின் தாதியர் ரண்டுனி.
#இதயம் #இலங்கை #மட்டகளப்பு #நிவாரணம் #கனடா #செந்தில்குமரன் #சிறுநீரகம் #முல்லைத்தீவு #வவுனியா #திருகோணமலை #கிளிநொச்சி #மலையகம் #வடமாராட்சி #அம்பாறை #யாழ்ப்பாணம் #கனடா #மனிதம் #தானம்