Dr Vishnu Sivapatham

Dr Vishnu Sivapatham Paediatrician
(1)

03/01/2026
03/01/2026

சாப்பாடு தொடங்குவது எவ்வாறு?
Part 2

I started my new year yesterday with this lovely compliment.
02/01/2026

I started my new year yesterday with this lovely compliment.

I've just reached 50K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
02/01/2026

I've just reached 50K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

Starting the new year with full of energy Happy New Year everyone
01/01/2026

Starting the new year with full of energy
Happy New Year everyone

28/12/2025

எவ்வாறு சாப்பாடு தொடக்குவது

நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளுங்கள்:அரசு சுகாதார சேவை என்பது சொகுசு வசதிகளுக்கான இடமல்ல. அரசு சுகாதாரத் துறையானது வரையறுக்...
26/12/2025

நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளுங்கள்:

அரசு சுகாதார சேவை என்பது சொகுசு வசதிகளுக்கான இடமல்ல. அரசு சுகாதாரத் துறையானது வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பு, குறைந்த மனிதவளம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டே இயங்குகிறது. இருப்பினும், அது முழு மக்கள் தொகைக்கும் வரம்பற்ற சேவைகளை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் கருத்து அல்ல; இதுதான் கட்டமைப்பின் எதார்த்தம்.

​எந்தவொரு அரசு மருத்துவமனையின்—குறிப்பாக அவசர சிகிச்சைப் பிரிவின்—முதன்மை நோக்கம், உயிர் காக்கும் சிகிச்சையையும், உறுப்புகளைக் காப்பாற்றும் சிகிச்சையையும் (Life-saving and limb-saving care) வழங்குவதே ஆகும். அதுவே தார்மீக மற்றும் செயல்பாட்டு முன்னுரிமை. மற்ற அனைத்தும் இதற்கு அடுத்தபடியானதுதான்.

​இருப்பினும், பல தனிநபர்கள்—குறிப்பாகத் தங்களை "சமூக ஊடகப் படைப்பாளிகள்" (Content creators) என்று அழைத்துக்கொள்ளும் கூட்டம் மற்றும் தொடர்ந்து புகார் கூறுபவர்கள்—சிறிய, அவசரமற்ற பிரச்சனைகளுடன் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். ஆனால், தங்களுக்கு உடனடி, தனிப்பட்ட கவனம் கிடைக்க வேண்டும் என்று கோருகின்றனர். அந்தத் தருணத்தில், தங்கள் பிரச்சனைதான் மருத்துவமனையிலேயே மிக முக்கியமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகள் அல்லது மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.

​நோயாளிகளின் தீவிரத்தன்மை அடிப்படையில் (Triage) அவர்களுக்கு முன்னுரிமை குறைவு என்று தெரிந்தாலும், அவர்களால் காத்திருக்க முடிவதில்லை.
​அவர்கள் சிகிச்சைக்காக வருவதில்லை; தாங்கள் நினைப்பதை சாதிக்கவே (Validation) வருகிறார்கள்.
​மருத்துவத் தேவைக்காக அல்லாமல், தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பரிசோதனைகள், அட்மிஷன் அல்லது சிறப்பு மருத்துவரின் பார்வையை எதிர்பார்க்கிறார்கள்.

​எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, புகார்களை பெரிதுபடுத்துகிறார்கள், வீடியோ எடுக்கிறார்கள் அல்லது இதை அலட்சியம் என்று சித்தரிக்கிறார்கள்.

​இது சிகிச்சையின் தோல்வி அல்ல. இது மனப்பான்மை மற்றும் புரிதலின் தோல்வி.

Copy.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதனால் மக்களை தமது சுற்றுச்சூழல்கள் தொடர்பில் அவத...
21/12/2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதனால் மக்களை தமது சுற்றுச்சூழல்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் கோரிக்கை

நமக்கு நாமே பொறுப்பு

எப்பொழுதுமே விடுமுறை எடுக்காமல் வேலைக்குச் செல்லும் கமலா மூன்று நாட்களாக தொடர்ந்து வேலைக்கு வரவில்லை. அதனால் அவளின் ஊடாக ஓய்வூதியம் பெறும் முதியவர்களும் அலைக்கழிக்கப்படுகின்றனர். அவளுடன் வேலை செய்யும் வேணி இன்று வேலை முடிந்தவுடன் கமலாவின் வீட்டுக்கு வருகிறார்.

வீடு சென்று பார்த்த பொழுது கமலாவின் முகமானது சோகமயமாக காணப்படுகிறது. பின்னர் கமலா கண்ணீர் மல்க தனது கதையை தொடங்குகிறாள்.

ஆம்! கூட்டுக் குடும்பமாக வாழும் கமலாவுக்கு அவளுடைய அம்மா தான் எல்லாமே. மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் அவளுக்கு கடைசியாக எட்டு மாதத்தில் ஒரு கைக் குழந்தையும் உள்ளது. கணவரும் சுயமாக தொழில் செய்து வருவதால் பிள்ளைப் பராமரிப்பு, சமையல் மற்றும் இதர வேலைகளையும் கமலாவின் தாயே கவனித்துக் கொள்கிறார். இதில் பரிதாபம் என்னவென்றால் கமலாவுக்கு ஒழுங்காக சமைக்கவும் தெரியாது.

இந்த நிலையில் கமலாவின் அம்மாவிற்கு நான்கு நாட்களுக்கு முதல் கடும் தலைவலியுடன் காய்ச்சல் ஏற்படுகின்றது. அதனையும் பொருட்படுத்தாது தாயானவள் வீட்டு வேலைகளில் வழமைபோலவே ஈடுபடுகிறார். ஆனாலும் நிலைமை மோசம் அடையவே நான்காம் நாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவளுக்கு டெங்கு இரத்தப் பெருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது அது சற்று மோசமான நிலையில் இருப்பதாகவும் வைத்தியர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பொழுதுதான் குடும்பத்தில் பெரிய பிரச்சனை எழுகிறது.

கமலாவின் தாயுடன் ஒருவர் வைத்தியசாலையில் உதவிக்கு இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே அவளின் அக்கா திருகோணமலையில் இருந்து வந்து அம்மாவுடன் வைத்தியசாலையில் உதவிக்கு இருக்கிறாள்.

சமைக்கவும் தெரியாத கமலாவுக்கு இப்பொழுது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது பெரிய சிரமமாக இருக்கின்றது. இதனால் முதலாவது மகனின் இறுதி தவணை பரீட்சையிலும் சற்று பின் தங்கிய நிலை காணப்படுகின்றது. இரண்டாவது மகளும் பாலர் பாடசாலைக்கு செல்வதற்கு அடம்பிடிக்கிறாள். கைக்குழந்தை கூட சற்று அதிகமாக குழப்படி பண்ணுகிறான்.

இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டு தனது தாயையும் மூன்று நேரம் சென்று வைத்தியசாலையில் பார்த்துவர கமலாவுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

கமலாவின் கணவருக்கும் தனது சுய தொழிலையும் செய்ய முடியாத ஒரு இக்கட்டான நிலை. வீட்டில் அடுப்பு எரிந்து சில நாட்கள் ஆகின்றன. மிக அரிதாகவே கடைச் சாப்பாடு சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதுவே இப்பொழுது வாடிக்கையாகி விடுகிறது.

இந்தக் கதைகளைக் கேட்டு வேணி விடைபெறவும் கமலா வைத்தியசாலைக்கு செல்ல தயாராகவும் சரியாக இருந்தது.

ஒருவழியாக ஐந்து நாட்களின் பின் கமலாவின் தாயார் வீடு திரும்புகிறார். ஆனாலும் அவரினால் முன்போல் இப்பொழுது வேலை செய்ய முடியவில்லை. வைத்தியர்கள் வேறு ஒரு வார காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இப்பொழுது கூட கமலாவின் பிரச்சினைகள் முடிவடையவில்லை.

அடுத்த நாள் காலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் வீட்டை சோதனையிட வீட்டின் பின்புறம் டெங்கு நுளம்பு பெருகும் இடம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதற்கு கமலாவின் கணவர் நீதிமன்றம் சென்று தண்டப் பணம் கட்டி வர அமைதியான குடும்பத்தில் பெரிய ஒரு புயலே வந்து சென்றது போல் இருக்கின்றது.

இப்பொழுது பாடசாலையில் இருந்து திரும்பிய கமலாவின் முதலாவது மகனுக்கும் சற்று காய்ச்சல் ஏற்பட கமலாவுக்கோ வாழ்க்கையே வெறுத்துப் போகிறது.

இவை சாதாரணமாக ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது அதைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள். இவை எமக்கு ஏற்படும் வரைக்கும் நாம் இதைப்பற்றி கொஞ்சமும் சிந்திப்பதில்லை. இந்தக்கதையில் கமலாவும் அவரின் அயலவர்களும் சற்று அவதானமாக இருந்திருந்தால் இதனை கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம்.

இன்று நாட்டில் ஏற்பட்டுவரும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான பொறுப்பு எமது கைகளிலேயே உள்ளது. சுற்றுச்சூழலை சுத்தமாகவும் மழைநீர் தேங்காத வகையிலும் ஒரு கூட்டுப் பொறுப்புடன் செயற்படுவதன் மூலம் எம்மையும் எமது அன்புக்குரியவர்களையும் இந்த நோயில் இருந்து பாதுகாக்க முடியும்.

டெங்கு காய்ச்சல் வந்த பின்னர் அரசாங்க உத்தியோகத்தர்களையோ அல்லது வைத்தியர்களையோ குறை கூறுவதன் மூலம் எமக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கப்போவதில்லை.

எனவே நமக்கு நாமே பொறுப்பு.

டெங்கு காய்ச்சலை தடுக்கும் முறை பற்றிய என்னது கட்டுரையை இந்த இணைப்பில் பெறலாம்.

https://www.facebook.com/2469107900030941/posts/2615052015436528/

Dr. விஷ்ணு சிவபாதம்,
MBBS, DCH, MD Paediatrics
குழந்தைநல மருத்துவ நிபுணர்,
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு.

உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது உங்களுக்கோ வைத்தியரினால் அன்டிபயாடிக் பரிந்துரை செய்யப்படும் பொழுது அதற்குரிய காரணத்தை நன்ற...
15/12/2025

உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது உங்களுக்கோ வைத்தியரினால் அன்டிபயாடிக் பரிந்துரை செய்யப்படும் பொழுது அதற்குரிய காரணத்தை நன்றாக கேட்டறிந்து கொள்ளுங்கள்!!

“டாக்டர் எனது மகனுக்கு இரண்டு நாட்களாக சரியான காய்ச்சல். பனடோல் கொடுத்தும் குறையவில்லை. என்ன அன்டிபயாட்டிக் கொடுக்கலாம்?” இது பொதுவாக பெற்றோர்களினால் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.

இன்று அபரிமிதமான அன்டிபயாடிக் பாவனையால் எமது எதிர்காலம் கேள்விக்குறியாகி கொண்டிருக்கின்றது. எனவே அதைப் பற்றி சிறிது விளக்கமாக பார்ப்போம்.

காய்ச்சல் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு நிலையாகும். அதிலும் தற்போதைய காலத்தில் காய்ச்சல் ஏற்படாத குழந்தையே வீட்டில் இல்லை என்ற அளவுக்கு காய்ச்சல் ஏற்படுகின்றது. காய்ச்சல் ஒரு நோயின் அறிகுறியே தவிர காய்ச்சல் என்பது மட்டும் ஒரு நோய் அல்ல.

ஒருவரின் உடல் வெப்பநிலை 38°C க்கு மேலும் அதிகரிக்கும் பொழுது அதை நாம் காய்ச்சல் என்று குறிப்பிடுகின்றோம். ஆனாலும் வெறுமனவே தலை சூடாக உள்ளது என்பது காய்ச்சலுக்குரிய அறிகுறி அல்ல. எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது வெப்பமானி கொண்டு அதை உறுதிப்படுத்த வேண்டும்.

காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

பெரும்பாலான வேளைகளில் ஒரு நுண்ணங்கி தொற்றே காய்ச்சலுக்கு காரணமாகும். அதிலும் வைரஸால் ஏற்படும் காய்ச்சலே மிக அதிகம். சிலவேளைகளில் பாக்டீரியாக்களும் காய்ச்சலை ஏற்படுத்தலாம்.

வைரஸ்சால் காய்ச்சல் ஏற்படும் பொழுது அது இலேசான காய்ச்சலாகவும் காய்ச்சலுக்கு இடையில் குழந்தை நன்றாகவும் இருக்கும். ஆனால் டெங்கு வைரஸால் ஏற்படும் காய்ச்சலின்போது காய்ச்சல் சற்று அதிகமாக இருப்பது சாதாரணமானதானதாகும்.

உடலின் வெப்பநிலை அதிகரிப்பது நுண்ணங்கி தொற்றுக்கு உடலால் செயற்படுத்தப்படும் ஒரு பிரதிபலிப்பு என்பதால், காய்ச்சல் ஏற்படும் போது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இது பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியாத ஒரு விடயம்.

1. குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் போது பெற்றோர்களால் செய்யப்பட வேண்டியவை.
குழந்தையின் உடல் வெப்பநிலையை கவனமாக அளந்து குறித்து வைக்க வேண்டும்.

2. குழந்தைகளுக்கு நிறைக்கேற்ற அளவு பரசிட்டமோல் கொடுக்க வேண்டும்.

3. காய்ச்சல் அதிகரிக்குமானால் இளம் சூடான துணியினால் குழந்தையின் நெற்றி மற்றும் முகத்தை துடைத்து விடலாம்.
தண்ணீரில் அவர்களை குளிப்பாட்டுவதன் மூலம் காய்ச்சலை குறைக்க முடியாது.

4. குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் ஏற்படும் மற்ற அறிகுறிகளை கவனமாக அவதானிக்க வேண்டும்.

5. மூன்று மாதத்திற்கு குறைந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

6. காய்ச்சலுடன் குழந்தைக்கு பசி வருவது குறைவடைவதனால் அவர்கள் பொதுவாக உணவு உண்ண மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் அவர்களுக்கு நீராகாரங்களை சிறிதளவேனும் அடிக்கடி கொடுக்க வேண்டும்.

7. அவர்களுக்கு போதுமான அளவு உடை அணிவித்து அதிகளவு குளிராகவோ அல்லது சூடாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் ஏற்படும் பொழுதெல்லாம் அன்டிபயாடிக் கொடுக்க வேண்டுமா?

அன்டிபயாடிக் எனப்படும் மருந்து வகையானது பாக்டீரியாக்களின் தொழிற்பாட்டுக்கும், பெருக்கத்துக்கும் எதிராக தொழிற்படும் ஒரு மருந்தாகும். எனவே பாக்டீரியாக்களால் ஏற்படுத்தப்படும் நோய்களுக்கு அன்டிபயாடிக் இன்றியமையாதது.

ஆனாலும் பெரும்பாலான காய்ச்சல் வைரஸ்சினால் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்கு அன்டிபயாடிக் தேவையில்லை.ஏனென்றால் அன்டிபயாட்டிக்களால் வைரஸ்சுக்கு எதிராக தொழிற்பட முடியாது.
வைரஸ் காய்ச்சலானது இரண்டு அல்லது மூன்று நாட்களில் முற்றாக சரியாகிவிடும்.

எனவே காய்ச்சல் ஏற்படும் பொழுதெல்லாம் அன்டிபயாடிக் கொடுக்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்து பெற்றோர்களும் வைத்தியர்களும் விடுபடவேண்டும்!

அளவுக்கு அதிகமாக அன்டிபயாடிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்.

அன்ட்டிபயாட்டிக் ஒரு மருந்து என்றாலும் அதனால் பக்க விளைவுகளும் ஏற்படும். உங்களது குழந்தைக்கு தேவையேற்பட்டாத பொழுது அன்டிபயாடிக் பயன்படுத்துவதால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளே அதிகம்.

பொதுவாக அன்டிபயாடிக் குழந்தையின் குடலிலுள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களையும் அழிப்பதனால் அவர்களுக்கு வயிற்றோட்டம் மற்றும் அஜீரணதன்மை ஏற்படும்.

ஆன்டிபயாட்டிக் கொடுப்பதால் ஏற்படும் வாந்தி மற்றும் வயிறு வீக்கம் என்பன ஏற்படும்.

உங்களுக்கு மேலதிக செலவை ஏற்படுத்தும்.

இதைவிட மிக முக்கியமாக, பாக்டீரியாக்கள் பாவனையில் உள்ள அன்டிபயாடிக்கு இசைவாக்கம் அடைந்து எதிர்ப்புத் தன்மையை வெளிப்படுத்தும். அதாவது குறிப்பிட்ட அந்த அன்டிபயாட்டிக்கை பாக்டீரியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாத ஒரு நிலை ஏற்படும்.

அது அந்தக் குழந்தைக்கு மட்டுமன்றி எமது முழு மனித குலத்திற்கும் ஒரு பேரழிவை ஏற்படுத்தலாம்.
ஏனென்றால் எங்களிடம் குறிப்பிட்டளவு வகையான அன்டிபயாட்டிக் மட்டுமே பாவனையில் உள்ளது. புதிதாக ஒரு அன்டிபயாடிக் கண்டுபிடிப்பதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லலாம். எனவே எதிர்ப்புத்தன்மை கூடிய பக்டீரியாக்கள் சூழலில் பெருகும் பொழுது அது மனித குலத்திற்கு ஒருநாள் பேராபத்தை ஏற்படுத்தலாம்.

இதுவே இப்பொழுது எமக்குள்ள பெரிய சவால்.

எனவே எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது உங்களுக்கோ வைத்தியரினால் அன்டிபயாடிக் பரிந்துரை செய்யப்படும் பொழுது அதற்குரிய காரணத்தை நன்றாக கேட்டறிந்து கொள்ளுங்கள்.

Dr. விஷ்ணு சிவபாதம்,
MBBS, DCH, MD Paediatrics
குழந்தைநல மருத்துவ நிபுணர்,
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு.

14/12/2025

வெள்ளத்தின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்கள்
Thank you Shakthi FM

மழைகால நோய் தொற்றுகள் -1சிக்கன் பொக்ஸ் - அறிவியல் உண்மை (The Scientific Fact)சிக்கன் பொக்ஸ் என்பது வரிசெல்லா-ஸோஸ்டர் வைர...
02/12/2025

மழைகால நோய் தொற்றுகள் -1

சிக்கன் பொக்ஸ் - அறிவியல் உண்மை (The Scientific Fact)

சிக்கன் பொக்ஸ் என்பது வரிசெல்லா-ஸோஸ்டர் வைரஸ் (Varicella-Zoster Virus) என்ற கிருமியால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
• இது ஒருவரிடமிருந்து இருமல், தும்மல் மூலமாகவோ அல்லது கொப்புளங்களின் திரவத்தின் மூலமாகவோ மிக வேகமாகப் பரவும்.
• பெரும்பாலானோருக்கு இது லேசான நோயாக இருக்கும்.
• சரியான கவனிப்பு இல்லாவிட்டால், தோல் தொற்று, நிமோனியா (நுரையீரல் அழற்சி), மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம்.
அதிகளவான கொப்புளங்கள் தோன்றும் போது தோலில் அவை தழும்பாக்கி குணப்படுத்த முடியாத வடுவாகிவிடும்.
நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி antiviral மருந்தான Acyclovir எனும் மருந்தை எடுப்பதன் மூலம் நோயின் தீவிரத்தன்மையை நன்றாக கட்டுப்படுத்த முடியும்.
(தயவுசெய்து மருத்துவ ஆலோசனைக்குபின்னரே மருந்தை எடுங்கள் )
• தடுப்பூசி மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும்! (ஆனால் இந்த தடுப்பூசி இலங்கை தடுப்பூசி திட்டத்தில் இன்னும் உள்ளடக்கப்படவில்லை. இலங்கையில்மட்டுமல்ல பல வளர்ந்த நாடுகளிலும் இதை கட்டணம் செலுத்தியே பெற்று கொள்ள வேண்டும். )

⚠️ ஓர் எச்சரிக்கை உதாரணம்: மூடநம்பிக்கையின் விலை!

இரண்டு நாட்களுக்கு முன் எனது கிளினிக்கிற்கு 9 வயது சிறுமியை அழைத்து வந்தார்கள். அவளுக்கு 2 வாரங்களுக்கு முன் என்ற சிக்கன் பொக்ஸ் ஏற்பட்டிருந்தது.
• அவளின் குடும்பம், இது "கடவுளின் சாபம், குளிக்கக் கூடாது, மாத்திரை போடக் கூடாது" என்ற மூடநம்பிக்கையில், அவளை 14 நாட்களுக்குக் குளிக்க விடாமல், தனிமைச் சிறைபோல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தனர்.
• அவளுக்கு தீவிரமான அரிப்பு இருந்தும், வைத்தியரிடம் அழைத்து செல்லாமல் வைத்திருந்தார்கள். .
• சரியான அவளுக்குச் சரியான கவனிப்பு இல்லாததால், தலைப் பேன் தொல்லை (Pediculosis) கடுமையாக இருந்தது மற்றும் சொறிந்த இடங்களில் கடுமையான பாக்டீரியா தொற்று (Bacterial Infection) ஏற்பட்டிருந்தது.
• துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தோல் தொற்றின் காரணமாகச் சிறுமி நிலாவிற்குச் சிறுநீரகத்தை பாதிக்கும் கடுமையான குளோமெருலர் நெஃப்ரிடிஸ் (Acute Glomerular Nephritis) என்ற நோய் ஏற்பட்டுள்ளது.
💡 இந்தப் குழந்தையின் துயரம் நமக்குக் கற்றுக்கொடுப்பது: மூடநம்பிக்கை ஒரு உயிரையே ஆபத்தில் ஆழ்த்தும்!

👩‍⚕️ மருத்துவ உதவிக்கு எப்போது செல்ல வேண்டும்? (When to Seek Medical Help?)
அம்மை நோய் வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்:
1. உடலில் உள்ள கொப்புளங்கள் சிவந்து, சீழ் பிடித்து, காய்ச்சல் அதிகமாக இருந்தால்.
2. மூச்சு விடுவதில் சிரமம் அல்லது கடுமையான இருமல் இருந்தால்.
3. மயக்கம் அல்லது தலைவலி இருந்தால்.
சிறிதும் தாமதியாது வைத்தியாசலைக்கு செல்லுங்கள்.

அம்மை நோய் என்பது ஒரு நோய்தான். அது மருத்துவத்தால் குணப்படுத்தப்பட வேண்டியது. மூடநம்பிக்கைகளால் அல்ல!
இந்தத் தகவலை அனைவரிடமும் பகிர்வதன் மூலம் உயிர்களைக் காக்க உதவுங்கள்!

From.
Dr. தனுஷா பாலேந்திரன்
Consultant Dermatologist

https://www.facebook.com/share/p/175m7tvULR/?mibextid=wwXIfr

ஆரோக்கியமான எதிர்காலக் குழந்தைக்காகத் தன்னுயிரைப் பணயம் வைக்கும் தாய்.இலங்கையின் தாய் சிசு மரண வீதம் பெருவளர்ச்சியடைந்த ...
01/12/2025

ஆரோக்கியமான எதிர்காலக் குழந்தைக்காகத் தன்னுயிரைப் பணயம் வைக்கும் தாய்.

இலங்கையின் தாய் சிசு மரண வீதம் பெருவளர்ச்சியடைந்த நாடுகளின் வீதத்தோடு ஒப்பிடும் அளவுக்கு மிகச் சிறியதாக இருப்பதற்கும், எம் நாட்டுக் குழந்தைகள் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் போசாக்குடனும் சிறந்த ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கான கரணங்களுள் Midwives எனப்படுகின்ற செவிலியர்களின் பங்கு அபரிமிதமானது.

Salute to all the frontline workers

நகல்

Address

Main Road
Batticoloa

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr Vishnu Sivapatham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Vishnu Sivapatham:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram