
06/08/2025
2025.08.06
නව දන්ත ශල්ය වෛද්යවරු බඳවා ගැනීම කඩිනම් කිරීමට පියවර
සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්ය වෛද්ය නලින්ද ජයතිස්ස මහතා සහ රජයේ දන්ත ශල්ය වෛද්ය සංගමයේ (Government Dental Surgeons' Association - GDSA) නිලධාරීන් අතර විශේෂ සාකච්ඡාවක් පසුගියදා සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්යාංශයේ දී පැවැත්විණි.
නව දන්ත ශල්ය වෛද්ය පත්වීම් සඳහා අනුමැතිය කඩිනමින් ලැබෙනු ඇති බව සෞඛ්ය අමාත්යවරයා මෙහි දී පැවසීය. පත්වීම ප්රමාද වීම හේතුවෙන් දැනට දුෂ්කර සේවයේ නියුතුව සිටින දන්ත ශල්ය වෛද්යවරුන් මුහුණපාන ගැටලු පිළිබඳ අවධානය යොමු කර පත්වීම් කඩිනම් කිරීමේ කටයුතු පිළිබඳව ක්රියා කරන ලෙස අමාත්යවරයා මෙහිදී නිලධාරීන්ට උපදෙස් ලබා දුන් අතර, වැටුප් ගැටලුව විසඳීම සඳහා මුදල් අමාත්යාංශයට යෝජනාවක් ඉදිරිපත් කිරීමට ද කටයුතු කරන බව අවධාරණය කළේය.
ජාතික මුඛ සෞඛ්ය ප්රතිපත්තිය කඩිනමින් ක්රියාත්මක කිරීම, ජාතික ඖෂධ නියාමන අධිකාරිය විසින් දන්ත නිෂ්පාදන නියාමනය ඉවත් කිරීම, වෛද්ය සැපයුම් හිඟය සහ ප්රසම්පාදන කටයුතු, ශ්රී ජයවර්ධනපුර විශ්ව විද්යාලය - දන්ත වෛද්ය පීඨයේ කටයුතු බාහිර රෝගී ඒකකයන් තුළ දන්ත ශල්ය වෛද්යවරුන්ගේ සමාලෝචන සැලසුම් කිරීම මෙන් ම නව දන්ත ශල්ය වෛද්ය පත්වීම් සහ වැටුප් ඇතුළු කරුණු රැසක් පිළිබඳව ද මෙහිදී අවධානය යොමු කෙරිණි.
ජාතික සැලසුම් දෙපාර්තමේන්තුව විසින් (මුදල් අමාත්යාංශයේ) ජාතික සෞඛ්ය ප්රතිපත්තිය යටතේ ම ජාතික මුඛ සෞඛ්ය ප්රතිපත්තිය ඇතුළත් කිරීමේ අවශ්යතාවය නිසාවෙන් දැනට ප්රමාදයක් ඇති වී ඇති බවත්, මෙය කඩිනමින් ක්රියාත්මක කරන ලෙස මෙහි දී දන්ත ශල්ය වෛද්යවරුන්ගේ සංගමය විසින් අමාත්යවරයාගෙන් ඉල්ලීමක් කළ අතර, ජාතික සැලසුම් දෙපාර්තමේන්තුවේ අනුමැතිය ලැබුණු විගසම එය කැබිනට් මණ්ඩලයට ඉදිරිපත් කිරීමට කටයුතු කරන බව සෞඛ්ය අමාත්යවරයා මෙහි දී පෙන්වා දුන්නේය
ජාතික චිකිත්සක කමිටුවට දන්ත වෛද්යවරුන්ගේ නියෝජනයක් ඇතුළත් කරන ලෙස ද අමාත්යවරයා සෞඛ්ය සේවා අධ්යක්ෂ ජනරාල් වෛද්ය අසේල ගුණවර්ධන මහතා වෙත මෙහි දී උපදෙස් ලබාදුන්නේය. සායනික පුහුණුව ආරම්භ කරන සිසුන්ගේ ගැටලු පිළිබඳව ද මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කෙරිණි.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருக்கும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க அதிகாரிகளுக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
- புதிய பல் அறுவை சிகிச்சை நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.
- தேசிய சிகிச்சை குழுவில் பல் மருத்துவர்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.
- தேசிய மட்டத்தில் வாய் சம்பந்தமான சுகாதாரக் கொள்கையை உடனடியாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அரசாங்க பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (Government Dental Surgeons' Association - GDSA) அதிகாரிகளுக்கு இடையே ஒரு கலந்துரையாடல் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அரசாங்க பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகள், அவர்களின் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் சேவைககளுடன் சம்பந்தபடும் பல மனித மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பல் மருத்துவத் துறையில் சிறந்த தரத்தைப் பேணுவதற்கான சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.. அதன்படி, வாய் சம்பந்தமான சுகாதாரக் கொள்கையை உடனடியாக செயல்படுத்துதல், மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தில் பல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மதிப்பாய்வுகளைத் திட்டமிடுதல், வெளிநோயாளர் பிரிவுகள், அத்துடன் புதிய பல் அறுவை சிகிச்சை நிபுணர் நியமனங்கள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. புதிய பல் அறுவை சிகிச்சை நிபுணர் நியமனங்களுக்கான ஒப்புதல் உடனடியாகப் பெறப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார். நியமனங்களில் ஏற்படும் தாமதம் காரணமாக தற்போது பணியாற்றும் பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி, அவர்களின் நியமனங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க நிதி அமைச்சகத்திற்கு ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தேசிய திட்டமிடல் துறை (நிதி அமைச்சகம்) தேசிய மட்டத்தில் வாய் சுகாதாரம் சந்பந்தமான சுகாதாரக் கொள்கையை தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் சேர்க்க வேண்டியதன் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார், மேலும் பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் இதை அவசரமாக செயல்படுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தது. தேசிய திட்டமிடல் துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன் அதை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள பல் அறுவை சிகிச்சை பிரிவுகளில் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை குறித்தும் விவாதிக்கப்பட்டது, மேலும் மருத்துவ வழங்கல் பிரிவின் இயக்குநரும் இது தொடர்பாக இதன்போது விளக்கமளித்தார். தேசிய சிகிச்சை குழுவில் பல் மருத்துவர்களின் பிரதிநிதித்துவத்தை சேர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் அறிவுறுத்தினார்.
மருத்துவப் பயிற்சியைத் தொடங்கும் மாணவர்களின் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ஒரே தொழிற்சங்கமாக, அரசாங்க பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், அதன் உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதையும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் தொழில்முறை மேம்பாட்டு முயற்சிகளில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் துணை பணிப்பாளர் நாயகம் (பல் சேவைகள்) டாக்டர் சந்தன கஜநாயக்க, அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தேதுனு டயஸ், சிறப்பு மருத்துவர் நதுன் தம்மிக்க, செயலாளர் டாக்டர் அருண அபயவர்தன மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
============
Subscribe Our Social Media Channels :
Subscribe on YouTube : https://www.youtube.com/channel/UCdx49t9VoLVOfl-X3z-6lkg
Like on Facebook : https://www.facebook.com/DepartmentOfGovernmentInformation
Follow on Instagram : https://www.instagram.com/infodprtsl/
Follow on TikTok : https://www.tiktok.com/
Follow on X : https://x.com/infodprtsl
Follow on Whatsapp : https://chat.whatsapp.com/GiCXhhpwVFpCVEDG4AVADo
Follow on Web : https://www.dgi.gov.lk/