28/01/2023
கடந்த ஆண்டு முதல் எமது வைத்தியசாலையில் நோயாளிகளின் நன்மை கருதி OPD மற்றும்
அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை கணிணி மயமாக்கல், OPD சேவையை
பி.ப 6.00 மணி வரை விஸ்தரித்தல்,
OPD நோயாளர்களை வகைப்படுத்தி அவசியமானவர்களுக்கு முன்னுரிமை வழங்கல் போன்ற சேவை விஸ்தரிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் எமது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் ஏதும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினால் அது சம்பந்தமாக எமக்கு முறைப்பாடுகளையோ அல்லது ஆலோசனைகளையோ வழங்க முடியும்.
உங்களது ஆலோசனைகளை OPD நோயாளர் காத்திருப்பு பகுதியில் உள்ள ஆலோசனைப்பெட்டியில் இடுவதன் மூலம் அல்லது கீழுள்ள poster இல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் மூலம் எமக்கு அறியத்தரலாம்.
ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எமது சேவையினை மேலும் சிறப்பாக வழங்க உறுதுணையாக அமையுமாதலால் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.