Saneya Herbal care Center

Saneya Herbal care Center Herbals

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பி...
13/04/2025

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.
அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான்.

இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.

மற்ற எந்த உடல்
உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.

நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.

பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும்.
அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.

இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.

அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.

மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.

கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.

கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல்.
அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.

கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !

இத்தகைய கல்லீரலை காப்பாற்ற
~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~

~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.

உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.

நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Happy Sunday........

மெட்டபாலிக் அடாப்ஷன் - உடல் பருமனும் நீரிழிவும் கட்டுப்பாட்டில்!🔥🥦🧘‍♀️🏃‍♂️*உடல் பருமனும் நீரிழிவு நோயும் ஒரு நாள் வெளியி...
11/04/2025

மெட்டபாலிக் அடாப்ஷன் - உடல் பருமனும் நீரிழிவும் கட்டுப்பாட்டில்!
🔥🥦🧘‍♀️🏃‍♂️

*உடல் பருமனும் நீரிழிவு நோயும் ஒரு நாள் வெளியில் இருந்து வரும் இல்லை. இது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தில் (Metabolism) நடந்த திசைமாற்றத்தின் விளைவு.

Metabolic Adoption என்பது உங்கள் உடல் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது கலோரி எரிப்பு முறையை மாற்றிக்கொள்வது. தொடர்ந்து தவறான உணவு பழக்கங்கள், தூக்கக் குறைபாடு, மன அழுத்தம் போன்றவை உங்களது மெட்டபாலிசத்தை மெதுவாக்கி, கொழுப்பு சேமிப்பு முறையை தூண்டுகிறது. இதுவே உடல் பருமனுக்கும் மற்றும் நீரிழிவு நோய்க்கும் அடிப்படை காரணமாகிறது.

ஆனால் நல்ல செய்தி என்னவென்றால்... இதனை மாற்ற முடியும்!

உங்கள் மெட்டபாலிசத்தை மீண்டும் தூண்டி செயலில் ஈடுபடுத்தும் முறையே Metabolic Adoption.

இதன் மூலம் நீங்கள் பெறும் நன்மைகள்:
✅ எளிதில் கொழுப்பு எரிக்க முடியும்
✅ இன்சுலின் எதிர்ப்பு குறையும்
✅ இரத்த சர்க்கரை இயல்பாக கட்டுப்படும்
✅ ஹார்மோன்கள் சமநிலைப்படும்
✅ உடல் உற்சாகமாக மாறும்

எப்படி மெட்டபாலிக் அடாப்ஷனை தூண்டும்?

1. ஆயுர்வேத டிடாக்ஸ் (Shodhana): உடலிலுள்ள ஆமாவை அகற்றும்

2. Intermittent Fasting & Autophagy: உடல் தன்னைத் தானாகச் சீராக்கும்

3. குணப்படுத்தும் உணவுகள்: குறைந்த GI உணவுகள், ஹெர்பல் டீ, நார்ச்சத்து அதிக உணவுகள்

4. ஆழமான தூக்கம்: குறைந்தது 7 மணி நேரம்

5. இயற்கை இயக்கம்: நடைபயிற்சி, யோகா, பிராணாயாமா

6. மன அழுத்தக் கட்டுப்பாடு: தியானம் மற்றும் சுவாச பயிற்சிகள்

உடல் பருமனும், டைப் 2 நீரிழிவும் மாற்றக்கூடியவை! ஆனால் அதற்குத் தேவை மெட்டபாலிச சிந்தனை மாற்றம் — தற்காலிக தீர்வுகள் அல்ல.

இன்று ஒரு மாற்றத்திற்குத் தயாரா? உங்கள் உடலை திரும்ப செயல்பட வையுங்கள்! இல 262 செம்மணி வீதி,நாயன்மார்கட்டு ஆயுர்வேத வைத்தியசாலை.நல்லூர்.யாழ்ப்பாணம்.ESTD 1838..Dr.பிரம்னி ராம்.077 735 1954 முற்பதிவு அவசியம்..வெளிநாடுகளில் வதிவோர் Whatsapp 94777 351954.பொதிகள் சேவை வசதிகள் உண்டு..

தூக்கத்தின் போது சுவாசப்பாதை தடைபட்டு, தொண்டையின் பின்புறத்தில் உள்ள திசுக்கள் மோதும்போது குறட்டை ஏற்படுகிறது. இதனால், அ...
23/03/2025

தூக்கத்தின் போது சுவாசப்பாதை தடைபட்டு, தொண்டையின் பின்புறத்தில் உள்ள திசுக்கள் மோதும்போது குறட்டை ஏற்படுகிறது. இதனால், அதிர்வு ஏற்பட்டு உரத்த சத்தம் எழுப்பப்படுகிறது.
குறட்டை பிரச்சனையின் அறிகுறிகள்: தூக்கத்தின் தரம் குறைதல், பகல்நேர சோர்வு, கவனம் செலுத்துவதில் சிக்கல், விபத்துகளின் அபாயம்.
குறட்டை பிரச்சனையை ஏற்படுத்தும் காரணங்கள்: அதிக எடை அல்லது பருமன், மது அருந்துதல், ஜலதோஷம் அல்லது ஒவ்வாமை, பெரிய டான்சில்கள் போன்றவை.
குறட்டை பிரச்சனையை சரிசெய்யும் வழிகள்:
மது அருந்துவதை கட்டுப்படுத்துதல்
மிளகு சாப்பிடுதல் அல்லது மிளகுஅவித்துக் குடித்தல்
தேனை உட்கொள்ளுதல்
ஒரு சிறப்பு வாய் காவலரை உபயோகித்தல்
CPAP (தொடர்ச்சியான நேர்மறை காற்றுப்பாதை அழுத்தம்) இயந்திரத்தைப் பயன்படுத்துதல்
சுவாசப்பாதையை மறுவடிவமைக்க அறுவை சிகிச்சை செய்தல்
சுவாசத்தைத் தடுக்கும் திசுக்களை வெளியே எடுத்தல்

தூக்கத்தின் போது காற்று ஓட்டம் பகுதியளவு தடைபடுவதால் குறட்டை ஏற்படுகிறது.
தொண்டை தசைகள் தளர்த்தப்படுவதாலும், நாசிப் பாதைகளில் உடல் அடைப்பு ஏற்படுவதாலும் குறட்டை ஏற்படுகிறது.
குறட்டை ஒரு உடல் பிரச்சினை.
குறட்டைக்கு பல காரணிகள் பங்களிக்கலாம். இரவு வணக்கங்கள்...

எமது வைத்தியசாலையில் பெற்றுக்கோள்ளக்கூடிய சேவைகள்...* பொது வைத்தியம்* குழந்தை வைத்தியம்* தோல் வைத்தியம்* பெண் நோயியல் வை...
15/03/2025

எமது வைத்தியசாலையில் பெற்றுக்கோள்ளக்கூடிய சேவைகள்...

* பொது வைத்தியம்
* குழந்தை வைத்தியம்
* தோல் வைத்தியம்
* பெண் நோயியல் வைத்தியம்
* உள நலஆலோசனைகள்..சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கானது.
* முறிவு நெரிவுச்சிகிச்சைகள்

முற்பதிவு அவசியம் 0777351954.வெளிநாடுகளில் வதிவோர் Whatsapp 94777351954.
நாயன்மார்கட்டு ஆயுர்வேதவைத்தியசாலை ESTD1838.
262 செம்மணிவீதி,நாயன்மார்கட்டு..

சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான சகல பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு - இல 262 செம்மணி வீதி,நாயன்மார்கட்டு ஆயுர்வேத வைத்த...
03/03/2025

சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான சகல பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு - இல 262 செம்மணி வீதி,நாயன்மார்கட்டு ஆயுர்வேத வைத்தியசாலை.நல்லூர்..யாழ்ப்பாணம்..

Ayurvedic Treatments 💫
*மாற்றமுடியாத பருக்கள்
*பருக்களின் வடுக்கள்
*கருமை நிறம்
*கருவளையம்
*முகத் தொய்வுகள்
*முகச்சுருக்கங்கள்
*மருக்கள்
*பாலுண்ணிகள்
*கண்ணுக்கு கீழ் நீர்போன்ற வீக்கம்
*வயதான தோற்றம்
*கிறீம்களின் பாவணையால் ஏற்பட்ட கருமைகள்
*கிறீம்களின் பாவணையால் ஏற்பட்ட தோல் பிரச்சனை
*முகத் தசைக் கொழுப்புகள்
*வரண்ட முகத்தோற்றம்
*நிறவேறுபாடுடைய தோல்
*தலைமுடி உதிர்வு
*முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி
*பொடுகு

போன்ற பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கான தீர்வினை Ayurvedic treatments
மூலம் பெற்றுக்கொள்ளலாம்🫶

📞 0777 351954..வெளிநாடுகளில் வதிவோர் 077 735 1954 .Dr.Pramni Ram...

🚨🚨 சிறுவர்களின் தோலின் கீழ் இவ்வாறான அடையாளம் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுங்கள்!!இது ஒரு வகை புழுவாகும்!...
02/01/2025

🚨🚨 சிறுவர்களின் தோலின் கீழ்
இவ்வாறான அடையாளம் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுங்கள்!!
இது ஒரு வகை புழுவாகும்!!

இதனை, Cutaneous Larva Migrans என்று அழைப்பர்!!
Ancylostoma எனப்படும் Parasite யினை சேர்ந்த கொலுக்கி புழுவினால்
(Hook 🪝 Work) யினால் ஏற்படுகின்றது!!

தொற்றுக்குள்ளான நாய், பூனை போன்றவற்றின் மலக்கழிவில் இந்த புலுவின் குடம்பிகள் காணப்படும்!!
இது, கடல் மண்,நீர் நிலைகளில் விடும்போது தோல் மூலமாக மனிதனை அடைகின்றது!!

சிவப்பு நிற புழு போன்ற அமைப்பு தோலின் கீழ ஊர்ந்து செல்வதை அவதானிக்கலாம்!!
சில வேளை கொப்பளங்கள் மூலம் Bacterial Infection களை தோற்றுவிக்கும்!!

பொதுவாக சிறுவர்களில் அதிகம் வர வாய்ப்புள்ளது!!
இதற்காக, Anthelmintic Drugs கள் உடனடியாக உரிய வைத்திய ஆலோசனைபடி எடுக்க வேண்டும்!!

நாய், பூனை வளர்ப்பவர்கள், இது தொடர்பாக அவதானமாக இருங்கள்!!

MLM.Sameem
B.Pharm (Hon)(UOJ)

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ..!சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும்,கழுதையிடம் இருந்து மூன்றைய...
02/01/2025

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும்,
கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,
தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் தனது இனத்துடன் சேர்ந்து இருத்தல்,
தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,
உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை
வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.Good morning to you all...

"Anti Ageing Treatments"....சருமம் வயதாதலை கட்டுப்படுத்தல் சிகிச்சைகள்..முற்பதிவு அவசியம்..Dr.பிரம்னி ராம். 0777351954. ...
01/01/2025

"Anti Ageing Treatments"....சருமம் வயதாதலை கட்டுப்படுத்தல் சிகிச்சைகள்..முற்பதிவு அவசியம்..Dr.பிரம்னி ராம். 0777351954. வெளிநாடுகளில் வதிவோர் Whatsapp 94777351954.

உடற்பருமன் குறைத்தல் ...குறிப்பாக வயிறு,இடுப்புப்பகுதி தசைப்பகுதிகளைக்குறைப்பதற்கான ஆயுர்வேதசிகிச்சைகள்.....இல.262 செம்ம...
11/12/2024

உடற்பருமன் குறைத்தல் ...குறிப்பாக வயிறு,இடுப்புப்பகுதி தசைப்பகுதிகளைக்குறைப்பதற்கான ஆயுர்வேதசிகிச்சைகள்.....இல.262 செம்மணி வீதி,நாயன்மார்கட்டு ஆயுர்வேத வைத்தியசாலை.நல்லூர்.யாழ்ப்பாணம்..ESTD 1838..முற்பதிவிற்கு 0777351954: வெளிநாடுகளில் வதிவோர் 94777351954 Whatsapp.

11/12/2024

Warnings…

யாழ்ப்பாணத்தில் leptospirosis எனப்படும் எலிக்காய்ச்சல் பரவுவுவதாக அறியக்கிடக்கிறது. இதுவரை உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் இந்த கிருமியானது எடுத்து செல்லப்பட்டிருக்கும் சாத்தியமிருப்பதால் இதனால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக இருக்கபோகிறார்கள்.

சாதாரணமாக காய்ச்சல் , உடம்பு நோவு , தசை நோவு , கண் மஞ்சல் நிறமாதல் என்று ஆரம்பிக்கும் இந்த வருத்தம் பல்வேறு சிக்கல் நிலைகளை ஏற்படுத்தவல்லது. எல்லா அவயவங்களையும் குறிப்பாகா சிறு நீரக செயலிழப்பு , நுரையீரலில் ரத்தப்பெருக்கு போன்ற உயிராபத்தை ஏற்படுத்தும் சிக்கல் நிலைகளை தோற்றுவிக்கவல்லது. கடுமையாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறப்பதற்கான வாயுப்பு 5-10% ஆகவும் , நுரையீரல் இரத்தபெருக்கு ஏற்படும் பட்சத்தில இது 50 % இற்க்கும் அதிகரிக்க சந்தர்ப்பம் உள்ளது.

எனவே இது சாதரண காய்ச்சல் இல்லை. மேற்கண்ட குணங்குறிகள் இருந்தால் வைத்திய உதவியை நாடுவது பொருத்தம்.

ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான சில அறிகுறிகள் என்ன?தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். முக்க...
11/12/2024

ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான சில அறிகுறிகள் என்ன?

தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். முக்கியமாக பிறர் பலவீனத்தை தனக்கு தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
தன்னிடம் இருப்பதைக் கொண்டு கர்வம் கொள்ள மாட்டார்கள். பெருமை பேசுவதற்காக கடன் வாங்கி பொருட்கள் வாங்க மாட்டார்கள்.
நண்பர்களை குடும்ப விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். ஆலோசனை வேண்டுமானால் கேட்பார்கள். முடிவு எப்பொழுதுமே தன்னிடத்தில்.
குறைவாகப் பேசுவார்கள்.
புறம் பேசமாட்டார்கள். எப்படியும் சேரவேண்டியவரிடம் சேர்ந்து விடும் என்பதை அறிந்தவர்கள்.
அரசியல்வாதி/விளையாட்டு வீரர்கள்/ நடிகர்களுக்காக சண்டையிட்டுக் கொள்ள மாட்டார்கள். திறமையை மட்டுமே ரசிப்பார்கள்.
வியாபார தந்திரங்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். உழைக்காமல், குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவரே தந்திரங்களில் சிக்குவார்கள்.
தோல்விக்குப் பிறகு துவண்டு போகாமல் உடனடியாக அடுத்த வேலைக்கு தயாராகி விடுவார்கள். பிறரின் வெற்றியையும் அங்கீகரிப்பார்கள். அக்கறை கொள்வார்கள்.
பொழுதுபோக்கு கூட அவர்களுடைய லட்சியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும். தினமும் தன் லட்சியத்தை நோக்கி ஒரு அடியாவது முன்னேறியிருப்பார்கள்.
தொலை நோக்கு பார்வை கொண்டவர்கள். பூங்காவில் அமர்ந்து இருந்தால் கூட, அருகில் இருக்கும் ரோஜாவை ரசிக்காமல், தூரத்தில் இருக்கும் ஆலமரத்தில் எத்தனை விழுதுகள் என்று எண்ணுவார்கள்.
லேசாக புருவம் நெறித்து, கண்கள் சுருக்கிய கூர்மையான பார்வை கொண்டவர்கள். முக்கியமாக ஏதோ யோசிக்கையில் கண்கள் மூடி யோசிப்பார்கள்.

Tailpiece

நடைமுறை வாழ்க்கையில் பல புத்திசாலிகளிடம் கண்கூடாக பார்த்ததை மட்டுமே பகிர்ந்திருக்கிறேன்.

சுருக்கமான பதிலுக்காக 10 அறிகுறிகள் மட்டுமே எழுதியுள்ளேன். இதில் குறைந்தபட்சம் 5 அறிகுறிகள் உங்களிடம் இருந்தாலும் நீங்கள் புத்திசாலியே.:) அன்பான காலை வணக்கங்கள்...

10/12/2024

Address

No 262, Nayanmarkadu Ayurveda Hospital Chemani Road Nallur Jaffna
Jaffna Town
40000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+94777351954

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saneya Herbal care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share