26/07/2022
நீங்களும் கடவுளாகலாம்!
மனித வாழ்வு , இதை பற்றி பலபேருக்கு பல வகையான புரிதல் உண்டு. சிலர் பெண்களின் மனதை போல் புரிந்து கொள்ள முடியாத புதிராக அதை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள் ,சிலர் தமக்கு எட்டிய அறிவுப்படி ஒரு நம்பிக்கையிலான நடைமுறையை வகுத்து அதன் படி வாழ்கின்றனர்.
ஒன்றை பற்றி சிந்திக்கவோ அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தவோ ஏன் தேவை எமக்கு ஏற்படுகின்றது.
நாம் சிந்திக்காமல் இருப்பதால் இயக்கம் நின்றுவிடுமா ? அல்லது சிந்திப்பதால் இயக்கம் வேகமாக இயங்க ஆரம்பிக்குமா ? இரண்டும் கிடையாது .
சிந்தித்து செயற்படுபவர்கள் அவர்கள் வாழ்வு அவர்கள் கையில் என எண்ணி வாழ்வார்கள் , சிந்தியாதவர்களோ அவர்களின் வாழ்க்கையை பிறரிடமோ விதியிடமோ கடவுளிடமோ அல்லது தற்செயலிடமோ விட்டுவிடுவார்கள்.
வாழ்க்கைக்கும் சிந்தனைக்கும் மனித வாழ்வில் முக்கிய பங்கு உள்ளது. அனைவருக்கும் தெரியும் பிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் இறப்பார்கள் என்று அவ்வாறு இருக்கும் பொழுது ஒரு மனிதன் எதற்காக சிந்திக்க வேண்டும் தத்தம் வேலைகளை பார்த்துகொண்டு இருந்துவிடலாம் அல்லவா ? , உண்மையை சொல்லபோனால் உலகின் 80% மான மனிதர்கள் இவ்வாறு தான் உள்ளனர். 20% மானவர்கள் மட்டுமே சிந்திக்கின்றனர். அவர்கள் அவர்களது வாழ்க்கையை மட்டும் அன்றி பிறரது வாழ்க்கை பற்றியும் சிந்தித்தவர்கள். அவர்களை மீத முள்ள 80% மானோர் தலைவர்கள் சிந்தனையாளர்கள் அறிவாளிகள் தத்துவஞானிகள் என்று இன்னும் பல பட்டங்களை கொடுத்து உள்ளார்கள்.
ஏன் அவர்களை அவ்வாறு அழைக்கிறார்கள் என்றால் தாங்கள் பட வேண்டிய கஸ்டங்களையும் துன்பங்களையும் அவமானங்களையும் அவர்கள் வாங்கிக்கொண்டு அவர்களின் சிந்தனையின் மூலம் இவர்கள் சிந்திக்காமல் சொகுசாக வாழ்வதற்கு.
அந்த 20% மானவர்களை பற்றி பேச பலர் உள்ளனர் ஆனால் இந்த 80% மானவரை பற்றி பேச யாரும் இல்லை. காரணம் இவர்கள் உயிர்அற்றவர்கள் அதாவது மண்ணில் இருந்து வந்தவர்கள் மனிதர்கள் என நாம் கூறுவோம் இவர்கள் மண்ணின் பிற நல்ல குணங்களை எல்லாம் விட்டு விட்டு அசைவற்று இருக்கும் குணத்தை மட்டும் கொண்டவர்கள் போல கருதப்படுகின்றனர்.
அவ்வாறு இருப்பதில் என்ன தவறு கஷ்டப்படமால் மகிழ்சியாக தாம் உண்டு தங்கள் வேலை உண்டு என இருப்து தவறா ? நாங்கள் கொள்ளை அடித்தோமா கொலை செய்தோமா என அவர்கள் கேட்க கூடும்.
அப்படி கேட்பவர்களுக்கு ஒன்று சரியாக புரியவில்லை கொள்ளை அடிப்பவர்களும் கொலை செய்பவர்கள் கூட உங்கள் 80 % குள் தான் வருவார்கள். அவர்கள் உருவாகவில்லை உருவாக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 80% மானவர்கள் தவறானவர்கள் என்ற கருத்தை முன் வைக்கவில்லை அவர்கள் தவறவிட்ட சில விடயங்கள் தான் அவர்களையும் அவர்கள் வருங்கால வாழ்வையும் கடினமான பாதையை நோக்கி நகர்ந்து செல்கிறது . யார் யாரோ அவர்களை ஏமாற்றுகிறார்கள் ஏமாற்றுபவர்கள் இன்னோருவரிடம் ஏமாறுகின்றார் இதனால் மனித நற்குணங்கள் அழிந்து பயமும் சந்தேகமும் சோர்வும் மட்டுமே அவர்களிடம் எஞ்சி உள்ளது இது மிகவும் வருத்தத்திற்கு ஒன்றான விடயமாக உள்ளது.
நமது முன்னோர்கள் பெரியோர்கள் மற்றும் பலர் பார்த்து பார்த்து கட்டிய வீட்டை நாங்கள் இடித்து தரை மட்டம் செய்வது போல உள்ளது .
இதற்கான முடிவுரையை நாம் ஒவ்வொருவரும் எழுதுவோம். அதற்கான முதல் படி முதல் செயல் எங்களின் பலமான ஆயுதமாகிய சிந்தனை .
நாம் முதலில் நம்மை பற்றி சிந்திப்போம். நமது உடல் , உளம் , பொருளாதாரம், சமூக உறவு , நல்வாழ்வு மற்றும் சமாதானம் நம்முள் உண்டா என சிந்திப்போம் அதன் பின் நமது குடும்பத்தில் உண்டா என பார்போம் அதன் பின் சமுதாயத்தில் பார்ப்போம் மீதமுள்ளது தாமாக நன்மை பெறும்.
நீங்கள் இவ்வாறு உங்கள் வாழ்க்கை பற்றி சிந்திக்கும் போது அதில் ஏதாவது குறைகள் இருக்குமேயானால் அதை சரி செய்வதற்கான முயற்சி எடுங்கள். விடை இல்லாத கேள்வி இங்கு இல்லை அதனால் விடை கிடைக்கும் வரை ஓடுங்ஙள். அப் பொறுப்பை பிறரிடம் விட்டு விடாதீர்கள் உங்கள் வாழ்க்கை மேல் நீங்கள் முழுப் பொறுப்பையும் நீங்களே எடுங்கள். நமக்கு ஏற்பட்ட பிரட்சனைக்கு முக்கிய காரணமே பொறுப்பை பிறர் மேல் விட்டது தான்.
சற்று சிந்தித்து பாருங்கள் நீங்கள் வாழ்நாளில் உபயோகிக்கும் பொருளில் இருந்து செய்கின்ற வேலை படிக்கின்ற படிப்பு அனைத்தும் உங்களின் சிந்தனையால் அல்லது உங்களின் பொறுப்பால் நடைபெற்றதா ? அது அனைத்தும் உங்கள் மேல் திணிக்கப்பட்டதாக இருக்கும் அல்லது பழக்கப்படுத்தப்பட்டதாக இருக்கும். நமக்கு என்ன தேவை என்பதை பிறர் முடிவு செய்வது மிகப்பெரிய கொடுமை. பல்லு முளைத்த குழந்தைக்கு பால்கொழுக்கட்டை உடன் சேர்த்து பல பொருட்களை போட்டு அதில் குழந்தை எதை எடுக்கின்றது என பார்ப்பதை போல பிறர் எமக்கு சொற்ப தெரிவை தந்து அதை தெரிவு செய்வதால் வரும் மாய மகிழ்ச்சியை உண்மை என நம்ப வைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம். இதுவே எம் நாட்டின் தற்போதய நிலைக்கு காரணமும் கூட.
ஆகவே இனிமேல் உங்கள் மீதும் மேலும் உங்களை படைத்த அந்த சக்தி மேலும் மட்டும் நம்பிக்கை வைத்து செயற்படுங்கள். நன்மை உருவாகும்.
நீங்களும் கடவுளாகலாம்!