Nelliady.Com

Nelliady.Com Nelliady is the largest city in the Northern Province of Sri Lanka. Nelliady is a centre for learning. Secondary schools were one of the best in the country.

It has a population of doctors, engineers and professors working all over the world. Nelliady Madhya Maha Vidyalayam, Sacred Heart College, Vigneswara College, Uduppiddy American Mission College, Gnanasariyar College and Hartley College are schools of the region.

நீதிபதி இளம்செழியன் அவர்கள் நீதித்துறை யில் இருந்து ஓய்வுபெறுகிறார்..நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார் நீதவான்...
19/01/2025

நீதிபதி இளம்செழியன் அவர்கள் நீதித்துறை யில் இருந்து ஓய்வுபெறுகிறார்..

நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார் நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சேர் அவர்கள் 🖤 அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாதவர் நீதியை சரியாக நிலைநாட்டும் நீதிவான் ❤️

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிபதியாக 27 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்.

05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து 05.02.2024 27 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதி என்ற சிறப்பிற்குரியவராகிறார்.

இன்றைய வடக்கு - கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் பெருமைக்குரிய தமிழ் நீதிபதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1999 இல் யாழ். செம்மணி புதைகுழி வழக்கு.

1999 இல் மன்னாரில் காமாலிக்கா கொலை வழக்கு, மடு தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு, மற்றும் லயன் எயார் குண்டு வெடிப்பு வழக்கு.

2000 - 2008 ஒன்பது ஆண்டுகள் கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வவுனியாவில் நீதிபதியாக கடமையாற்றியமை.

ஜெயசிக்குறு தாக்குதல் காலம், யுத்த நிறுத்த காலம், மீண்டும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட யுத்த காலத்தில் வவுனியா நீதிபதியாக கடமையாற்றினார்.

2006 இல் வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் கொலை வழக்கு.

2008 இல் மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டமை.

2009 இல் திருகோணமலை கோயில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கியமை, அந்த கொலை வழக்கு தீர்ப்பு உயர் நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டமை.

2014 இல் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்.

2015 இல் கணவர் கொலை கொலை வழக்கில் இஸ்லாமிய பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை, தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டமை.

2015 இல் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்று மூவர் அடங்கிய தீர்ப்பாயத்தில் 1 நீதிபதியாக வித்தியா கொலை வழக்கில் தனித் தீர்ப்பு எழுதி மரண தண்டனை விதித்தமை.

2018இல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று யாழ். இளைஞன் கொலை வழக்கில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தமை.

2022 இல் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு, தயா மாஸ்டர் வழக்கில் இரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி விடுதலை செய்தமை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

27 வருட காலப் பகுதியில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்குறித்த முக்கிய வழக்குகளுக்கான தீர்ப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதியின் காவலனுக்கு வாழ்த்துக்கள்

07/01/2025
https://www.facebook.com/share/1BRLgrZ1kJ/?mibextid=wwXIfr
03/01/2025

https://www.facebook.com/share/1BRLgrZ1kJ/?mibextid=wwXIfr

வதிரி கல்வத்தையைப் பிறப்பிடமாகவும் கல்வத்தை, கொழும்பு மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி துரைராஜா ( முன்னாள் துணைவேந்தர்மாமனிதர் அ.துரைராஜா அவர்களின் துணைவியார் ) அவர்கள் அமெரிக்காவில் காலமானார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்...

1970 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி- சரசாலையில்  நிறுவப்பட்ட பனை சீனி உற்பத்தி நிலையம் ❤️
30/11/2024

1970 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி- சரசாலையில் நிறுவப்பட்ட பனை சீனி உற்பத்தி நிலையம் ❤️

பழங்காலத்தில் கப்பல் மாலுமிகள், கரையைக் கண்டுபிடிக்க காகத்தைப் பயன்படுத்தினார்கள் கப்பலில் இருந்து பறக்கவிட்டால் காகங்கள...
27/11/2024

பழங்காலத்தில் கப்பல் மாலுமிகள், கரையைக் கண்டுபிடிக்க காகத்தைப் பயன்படுத்தினார்கள்

கப்பலில் இருந்து பறக்கவிட்டால் காகங்கள்
கரை இருக்கும்
திசை நோக்கி பறக்கும் பழக்கம் கொண்டவை.

கிட்டத்தட்ட
ஒரே நேர்கோட்டில் திரும்பி வரக்கூடியவை.

பாய்மரக் கப்பல்களின் உச்சியில் காக்கைக் கூடு (Crow’s nest) என்று ஒரு பகுதி உண்டு. நான்(எழுத்தாளர் மோகன ரூபன் ) மொழிபெயர்த்த திமிங்கில வேட்டை புதினத்தில் கூட
இந்த காக்கைக்கூடு பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்.

சங்க இலக்கியமான நற்றிணையில்
ஒரு பாடல்,

மருங்கூர் துறைமுகத்தில் பச்சை இறாலைக் கவர்ந்து கப்பலின் பாய்மர உச்சியில் போய் உட்கார்ந்த காக்கையைப் பற்றி குறிப்பிடுகிறது.

‘பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேர்க்கும்
மருங்கூர்ப் பட்டினத்து...’

இது ஒருபுறம் இருக்கட்டும்.

கப்பலுக்கும் காக்கைக்கும் தொடர்பு ஏற்படுத்துவது போன்ற ஒரு தகவல், நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலும் காணப்படுகிறது.

நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில், ‘கூம்பேறும் பறவை அதுவே போன்றிருந்தேனே’ என்று ஒரு வரி வருகிறது.

கடல்நடுவே
(ஆழக் கடலில்) மிதக்கும் கப்பலின் கூம்பில் (பாய்மர உச்சியில்) இருந்து பறக்கும் பறவை கடலில் எங்கு சுற்றினாலும் மீண்டும் கப்பலுக்குத்தான் திரும்பி வர வேண்டியிருக்கும்.

அதுபோல எங்கு சுற்றினாலும் இறைவா உன்னைத் தேடித்தான் நான் வந்தாக வேண்டும் என்பதுதான்,

‘கூம்பேறும் பறவை அதுவே போன்றிருந்தேனே’ என்று நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில்,

‘கப்பலேறி விட்ட காகம் கலங்குமா?’ என்று
ஒரு பழமொழி உள்ளது.

பறக்கும் திசைக்காட்டி கருவியாக
(அந்தக் காலத்து ட்ரோனாக!) பயன்படும் காகத்துக்கு
அது வளர்ப்புப் பறவை என்பதால் கப்பலிலும் உணவு கிடைக்கும். கடலிலும் உணவு கிடைக்கும்.

இதைத்தான் ‘கப்பலேறி விட்ட காகம் கலங்குமா?’ என்ற தமிழ்ப்பழமொழி சுட்டிக்காட்டுகிறது.

🔴முக்கிய அறிவித்தல் அதிகம் பகிரவும்🔴👉வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் ...
27/11/2024

🔴முக்கிய அறிவித்தல் அதிகம் பகிரவும்🔴

👉வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும் இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும்.

எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬

அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு
ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Jaffna 0212222609
Thirunelveli Kondavil 0212222498
Chunnakam 0212240301
Chavakachcheri 0212270040
Point Pedro 0212263257
Vaddukoddai 0212250855
Velanai 0212211525.

முல்லைத்தீவு சந்தியில் சிவப்பு மஞ்சள் வர்ணக்கொடி
27/11/2024

முல்லைத்தீவு சந்தியில் சிவப்பு மஞ்சள் வர்ணக்கொடி

25/11/2024

வதிரி , மாப்பிலவை (அம்மன் கோவிலடி) பிறப்பிடமாகவும் புலவராவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.கந்தவனம் கமலநாதன் அவர்கள்
( ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்)
இன்று 25.11.2024 திங்கட்கிழமை இறைவனடி சேந்தார்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 26.11.2024 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கியைகளுக்காக பூதவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்..

The Photo Of Day 🌸
16/11/2024

The Photo Of Day 🌸

இன்று இலங்கையில் முக்கிய செய்தியாக அங்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் உள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான...
15/11/2024

இன்று இலங்கையில் முக்கிய செய்தியாக அங்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் உள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 225 ஆசனங்களில் குறைந்தது 123 ஆசனங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளார்கள், மேலும் மாற்றுப்பங்கு முறையின் மூலம் 2/3 பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது  .

இந்த வெற்றி வரலாற்றுச்சுவடாக இருக்கிறது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் எப்போதும் இன, மத பேதங்களால் பிரிக்கப்பட்ட வாக்குகள் தற்போது NPP-க்கு ஆதரவாக திரண்டுள்ளன. இது எதிர்கால அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும், குறிப்பாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு அஸ்திவாரம் ஆகலாம்

யாழ்தேவி புகையிரத சேவை மீள ஆரம்பம்(28/10/2024)(FORT - KKS)கொழும்பு - 05.45 amஅனுராதபுரம் - 09.30 amவவுனியா        - 10.3...
29/10/2024

யாழ்தேவி புகையிரத சேவை மீள ஆரம்பம்
(28/10/2024)
(FORT - KKS)

கொழும்பு - 05.45 am
அனுராதபுரம் - 09.30 am
வவுனியா - 10.30 am
கிளிநொச்சி - 11.45 am
யாழ்ப்பாணம் - 12.52 pm
காங்கேசன்துறை - 13.23 pm

29/10/2024 இல் இருந்து
(KKS - FORT)

காங்கேசன்துறை - 10.30 am
யாழ்ப்பாணம் - 11.00 am
கொடிகாமம் - 11.24 am
கிளிநொச்சி - 12.17 pm
வவுனியா - 13.29 pm
அனுராதபுரம் - 14.30 pm
கொழும்பு - 18.30 pm

ஆசன முற்பதிவுகள் செய்ய முடியும்...

அத்தோடு அனுராதபுரத்தில் இருந்து கொழும்பிற்கு காலை 05.30 மணிக்கும்

கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கு மதியம் 13.45 மணிக்கும்
புகையிரத சேவைகள் இடம்பெறும்.

மூன்று நிறங்களிலான புதிய கடவுச்சீட்டுக்கள் இன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.1. சாதாரண கடவுச்சீட்டுக்கள் ...
21/10/2024

மூன்று நிறங்களிலான புதிய கடவுச்சீட்டுக்கள் இன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

1. சாதாரண கடவுச்சீட்டுக்கள் - கருநீல நிறம்

2. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் - பழுப்பு சிவப்பு நிறம் (Maroon)

3. இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள், - சிவப்பு நிறம்

கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன.

4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை
6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்
8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்
9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்
10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்
12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை
14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம்
16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி
18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம்
20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை
22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம்
24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம்
26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள்
28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம்
29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை
30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள்
31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை
32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று
34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு
35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா
36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிலாய் பறவைகள் சரணாலயம்
37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம்
38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம்
40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல்
42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை
44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு
45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை
என்பன அச்சிடப்பட்டுள்ளன.

🛑 #ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.!நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவார...
12/10/2024

🛑 #ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, நிவாரண சேவைகளை வினைத்திறனாக அமுல்படுத்துவதற்கு தேவையான உதவியை வழங்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

அனர்த்தங்களால் மக்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிவாரண சேவைகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உரிய நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதற்கு நன்கு ஒருங்கிணைந்து செயற்படுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு மேலும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6,018 குடும்பங்களைச் சேர்ந்த 24,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

584 குடும்பங்களைச் சேர்ந்த 2,200 பேர் பாதுகாப்பாக 23 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தின் ஊடாக அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அழைப்பு அறை 117 மற்றும் 0112 136 136, 0112 136 222, 0112 670 002 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் அவசர நிலைமைகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம்.

இலங்கை செய்திகள்

🛑 #நடுத்தர மக்களும் காரில் பயணம் செய்ய வேண்டும் என நினைத்து குறைந்த விலையில் நானோ கார் தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு க...
10/10/2024

🛑 #நடுத்தர மக்களும் காரில் பயணம் செய்ய வேண்டும் என நினைத்து குறைந்த விலையில் நானோ கார் தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த சேவை மனப்பான்மையுடைய மாமனிதர் போய் வாருங்கள் சார்.

இலங்கை செய்திகள்

பிரான்சில் நெல்லியடி  இளைஞர்  மர்மமான முறையில் உயிரிழப்பு !    பிரான்சில்  வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் மர்...
07/10/2024

பிரான்சில் நெல்லியடி இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு !

பிரான்சில் வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் மர்மமான
முறையில்நிலையில்உயிரிழந்துள்ளார் .

ஐந்து வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற குறித்த இளைஞர் தொழில் புரிந்து வந்துள்ளார் .
நேற்றையதினம்மர்மமானமுறையில்நிலையில்உயிரிழந்துள்ளார்.

கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் நெல்லியடி வதிரி இரும்புமதவடி பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் சிந்துஜன் வயது 28 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

 #பிக்குவின்_அடாவடி திருகோணமலை திரியாய்க் கிராமத்தின் பூர்விக வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான  #வளத்தாமரை  #ஆதிக்க...
05/10/2024

#பிக்குவின்_அடாவடி

திருகோணமலை திரியாய்க் கிராமத்தின் பூர்விக வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான #வளத்தாமரை #ஆதிக்காடு #ஒட்டுப்புல்மோட்டை #நீராவிக்கண்டல் #வேடன்குளம் என உள்ளடக்கிய வயல் வெளிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வயற்செய்கை மேற்கொண்டு வரும் நிலையில் புல்மோட்டை அரிசிமலைப் பிக்குவினால் அடாவடியாக கையகப்படுத்தப்பட்ட 88 ஏக்கர் பொதுமக்களின் உறுதிக் காணியில் விவசாயம் மேற்கொள்ள பாரிய சிரமத்தை மக்கள் எதிர்கொள்கின்றனர். இக்காணிக்கள் அனைத்துமே #உறுதிக்காணிகள்.

வருடா வருடம் பெரும் போக வயற்செய்கையின் போதும் இவவிதமான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்வதும் பின் பிக்குவின் அடாவடியினால் பயந்து இருப்பதுமான அவல நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

நீதிமன்றினால் மக்களிடம் காணிகளை கையப்படுத்தக் கோரியும் பிக்கு அடாவடியான முறையில் இச்செய்யற்பாட்டை முன்னெடுப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை செய்திகள்

🛑 #ஜனாதிபதி செயலத்தின் அறிக்கையின் படி வாகன பாவனையாளர்களின் பட்டியல் பின்வருமாறு.!!107 மீளளிக்கப்பட்ட வாகனங்களின் விபரத்...
30/09/2024

🛑 #ஜனாதிபதி செயலத்தின் அறிக்கையின் படி வாகன பாவனையாளர்களின் பட்டியல் பின்வருமாறு.!!

107 மீளளிக்கப்பட்ட வாகனங்களின் விபரத்தை பொதுமக்கள் தகவலுக்காக வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அண்மையில் மீள பெறப்பட்டன அரச கட்டிட வளாகத்திற்குள் இடப்பற்றாக்குறை காரணமாக திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள் பொலிஸ் பாதுகாப்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியினால் தனிப்பட்ட நியமனம் வழங்கப்பட்ட அதிகாரிகளுக்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த 107 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மீளளிக்கப்பட்ட அரச வாகனங்களை காட்சிப்படுத்துவது புதிய நிர்வாகத்தின் நோக்கமல்ல என தெரிவித்த ஜனாதிபதி செயலகம் புதிய ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அத்தியாவசிய சேவைகளுக்காக வாகனங்களை உடனடியாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கை செய்திகள்

🛑 #நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம் வாக்குகளால் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களையைம் , சுகபோகங்கள் பற்றியும் நீங்கள் எவ்வளவு அறி...
28/09/2024

🛑 #நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம் வாக்குகளால் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களையைம் , சுகபோகங்கள் பற்றியும் நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்களா??

தில்லையம்பலம் தரணிதரன்--
நாம் தெரிவுசெய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வரி செலுத்துவோரின் இழப்பில் ஏராளமான சலுகைகளை அனுபவிக்கின்றனர்.

நாங்கள் செலுத்தும் வாக்குகள் அவர்களுக்கு மிகப்பெரும் வாழ்வை கொடுத்து நிற்கிறது, ஆனால் எங்கள் வாழ்வியல் எதுவித முன்னேற்றமும் இன்றி ஒற்றை புள்ளியிலேயே ஒடுங்கி விடுகிறது ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமது வாக்குகள் மூலமாக எம்பிக்கள் ஆகி என்ன என்ன வரப்பிரசாதங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் சொல்கிறேன்.

தற்போது, ​​ஒரு MP மாதம் சராசரியாக, 55,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். கூடுதலாக, ஒரு எம்.பி.க்கு உரிமையுள்ள பல்வேறு சலுகைகொடுப்பனவுகள் உள்ளன. இவற்றில் அலுவலக அலவன்ஸ் மாதம் ரூ. 100,000 அடங்கும், இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதச் சம்பளத்தை விட இருமடங்காகும்.

இந்த கொடுப்பனவு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னாள் பிரதமரின் இந்த மிகப்பெரிய அதிகரிப்புக்கான காரணம் ஒருபோதும் விளக்கப்படவில்லை; இது நாட்டிற்கு எந்த நன்மையையும் தராத பொது நிதியின் மொத்த தவறான ஒதுக்கீடு.

ஒரு எம்.பி.க்கு அஞ்சல் கட்டணமாக ரூ.350,000 (Annually ) மற்றும் தொலைபேசி அலவன்ஸ் ரூ.50,000 மாதம் வழங்கப்படும். இவை அனைத்தும் ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் ரூபாயை சேர்க்கின்றன. தனது தொகுதியில் அலுவலகத்தை பராமரிப்பதற்காக 100,000 யும் போக்குவரத்துப்படி 15,000 யும் வழங்கப்படுகிறது.

கூடுதலாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான வரியில்லா கொடுப்பனவுக்கு உரிமையுடையவர் மற்றும் இந்த கொடுப்பனவு 40 மில்லியனுக்குக் குறையாது.
இந்த வரி விலக்கு அளிக்கப்பட்ட வாகன உரிமைகளை பெற்றுக்கொண்டு, அதை விற்று காசாக்குகின்ற ஏராளமான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள், பட்டியல் தேவை என்றால் கேளுங்கள் தருகிறேன். Bar permit , Petrol ⛽️ உரிமங்கள் போன்றவை கணக்கில் இல்லாதவை.

நாடாளுமன்றத்தில் வருகின்ற சட்டப் பிரேரணைகளை நிறைவேற்றுவதற்காக கைய உயர்த்தி விட்டு, பெட்டிகளை பெற்றுக் கொள்ளும் கோடிகளை கொட்டிக் கொள்ளும் வரப்பிரசாதங்கள் கணக்கில் உள்ளடக்கப்படவில்லை, (Ex -20 ம் திருத்தம் + இரட்டைப் பிரஜாவுரிமை )

இதனிடையே பிரதமருக்கு மாதம் 71,500 ரூபாய் அடிப்படை சம்பளம். நாடாளுமன்ற சபாநாயகர் 68,000 ரூபாவையும் பிரதி சபாநாயகரின் அடிப்படை சம்பளம் 63,500 ரூபாவாகவும் பெறுகிறார். அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மாதாந்தம் 65,000 ரூபா அடிப்படைச் சம்பளமாகப் பெறுகின்றனர், அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவரும் பெறுகின்றார்.

எம்.பி.க்களை பொறுத்தவரை அவர்களின் அடிப்படை சம்பளம் 54,285 ரூபாய். நாடாளுமன்றத்திற்குச் செல்லும் தினசரி 2,500 ரூபாயும் பெறுகிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் எரிபொருள் கொடுப்பனவு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான தூரத்தை கணக்கிடுவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது,

இதைவிடவும் மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாடகையில்லா அடுக்குமாடி குடியிருப்புக்கு உரிமை உண்டு. (Madiwela housing complex) இதற்கான மாதாந்த அறவீடு வெறுமனே 1000 ரூபா மட்டுமே. அந்த குடியிருப்புக்கான மின்சாரக் கட்டணம் வெறுமனே 2500 மட்டுமே,

ஐயாயிரம் ரூபாய் கடந்து விட்டால் என்னுடையதோ உங்களுடையதோ வீட்டு மின் இணைப்புகளை துண்டித்து விடுவார்கள். வெறுமனே 2500 ரூபாய் மாத மின் கட்டணம் என்பது சாதாரணமாக அடிப்படையில் மிக கீழ் நிலையில் இருக்கின்ற ஒருவரின் மின் கட்டணமாகும். சொகுசு வாழ்க்கையில் சுகபோகம் அனுபவிக்கும் ஒருவர் AC அறையில் ஓசியில் இருப்பதற்கு கட்டணம் 2500 மட்டுமே.

மேலும், அவர்கள் ஓய்வூதியம் பெறவும் தகுதியுடையவர்கள். பொதுவாக, அரசு ஊழியருக்கு மட்டுமே ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கும்; ஆனால் MP க்கள் MP யாக ஐந்தாண்டுகளை முடித்த பிறகு ஓய்வூதியத்தை அனுபவிக்கின்றனர்.

இம்முறை 70-க்கும் மேற்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான ஐந்து ஆண்டு காலத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர், நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்ட காரணத்தால் தங்களுக்கான ஓய்வூதிய தொகையை பெறுவதற்கு தகுதியற்றவர்களாக மாறியமை வேறுகதை.

உதாரணமாக, ஒரு MP தனது ஐந்தாண்டு சேவைக்காக 18,091 ஓய்வூதியமாகப் பெறுகிறார். மறுபுறம் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் சேவைக்காக 21,666 மதிப்பிலான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். ஐந்தாண்டு பணிக்கான சபாநாயகரின் ஓய்வூதியம் 22,833.50. ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலத்தை முடிக்கும் ஒரு பிரதமர் ஓய்வூதியமாக 23,500 ரூபாய் பெறுகிறார்.

இதனிடையே சில அமைச்சர்கள் தமது அமைச்சில் மூன்று அல்லது நான்கு வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் 15 பேர் வரையிலான துணை ஊழியர்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலர் தற்போதைய விலையின் அடிப்படையில் 100 மணிநேர கூடுதல் நேர ஊதியம்( over time) மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளுக்குத் தகுதியுடையவர், மேலும் ஒரு துணைப் பணியாளர் நியமிக்கப்படுகிறார், அவர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர்.

அமைச்சர்களின் இந்த ஊழியர்கள் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகளையும் பெறுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு பேர் அடங்கிய துணை பணியாளர்கள் வழங்கப்படுவதுடன் (அதுவும் குடும்ப உறுப்பினர்களே), அமைச்சர்கள் பதவிக்காலத்தில் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு உரிமை உண்டு. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஐந்து மில்லியன் ரூபாவையும் இரண்டு மில்லியன் ரூபா வரையிலான காப்புறுதித் (Insurance ) தொகையையும் பெறுகின்றனர்.

ஒரு எம்.பி., பயங்கரவாதத் தாக்குதலால் அல்லது விபத்தில் இறந்தால், அவர்களது குடும்பத்துக்கு ஆறு மில்லியன் ரூபாய் வழங்கப்படும். இந்தச் சலுகைகள் அனைத்தும் அரசாங்கத்தில் அவர்கள் பணியாற்றிய ஐந்தாண்டு காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

‘நீங்கள் ஈட்டும்போது வரி செலுத்துங்கள்’ Pay As You Earn Tax (PAYE) முறையின் கீழ் அரசாங்கம் அண்மையில் வெவ்வேறு வருமான வரையறைகளை அறிமுகப்படுத்தியது.

நீங்கள் மாதத்திற்கு 100,000 முதல் 141,667 ரூபாய் வரை சம்பாதித்தால், ரூபாய் 100,000க்கு மேல் சம்பாதித்ததற்கு 6% வரி விதிக்கப்படும். இதே முறையில் நீங்கள் மாதத்திற்கு 141,667 முதல் 183,333 ரூபாய் வரை சம்பாதித்தால், உங்களிடமிருந்து 12% வசூலிக்கப்படும்.

நீங்கள் அதிகம் சம்பாதிக்கும் போது வரி விகிதம் அதிகரிக்கிறது - 183,333 முதல் 225,000 ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 18%, 225,000 முதல் 226,267 ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 24% மற்றும் மாதத்திற்கு 226,267 முதல் 308,333 ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 30%; நீங்கள் மாதத்திற்கு 308,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், உங்களிடமிருந்து 36% வரி விதிக்கப்படும்.

சரி இந்த வரி வரையறை முறைகளை ஏன் உங்களுக்கு சொல்லி இருக்கிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம், வாருங்கள் தொடர்ந்து பார்ப்போம் .

அண்மையிலே நாடாளுமன்றத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (தயாசிரி ஜெயசேகர) தான் வரியாக 36% செலுத்தியதாக (77,466) புலம்பி தள்ளுகிறார். ஓகே வரியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 36 வீதத்தை செலுத்தி இருப்பாராக இருந்தால் அவரின் மாதத்துக்கான வருமானம் (350,000 +) என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுங்கள் .2023 ஜனவரி மாதம் MP ஒருவரின் சமூக வலைத்தளத்தில் வெளியான Pay sheet ஒன்றையும் நான் இங்கே இணைத்து இருக்கிறேன். (322,658 ரூபா சம்பளமாக ஒரு குறித்த மாதத்தில் அவர் சம்பளமாக பெற்றிருக்கிறார்.

நாடாளுமன்ற உணவுக்கான செலவுகள் ரூ. ஆண்டுக்கு 120 மில்லியன். மேலும், மின்சாரம், தொலைபேசி வசதிகள், குடிநீர் ஆகியவற்றிற்காகச் செலவிடப்பட்ட மொத்தத் தொகை தோராயமாக ரூ. ஆண்டுக்கு 103 மில்லியன். இதன் மூலம் மொத்தம் ரூ. 220 மில்லியன் நாடாளுமன்றத்தை ஓராண்டுக்கு இயங்க வைக்க தேவைப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத்தின் (2020) ஆரம்ப நாட்களிலான தொராயமான செலவு விபரங்கள் இவை.

நாடாளுமன்றத்தில் ஐந்து பிரத்தியேக உணவகங்கள் மற்றும் VVIP உணவு அறைகள் உட்பட 12 உணவு மற்றும் பானங்கள் விற்பனை நிலையங்கள் உள்ளன. இதன் விளைவாக ஏற்படும் செலவு ரூ. 225 பேருக்கு உணவளிக்க மாதத்திற்கு 10 மில்லியன் அல்லது தோராயமாக ஒரு நபருக்கு மாதம் 45,000.

உணவுக்காக ஒரு நபருக்கு மாதத்திற்கு 45,000 என்பது ஒப்பீட்டளவில் பெரிய தொகை. இந்த எண்ணிக்கையைப் பார்த்தால், உணவுச் செலவை வெகுவாகக் குறைக்க முடியும் என்பது தெளிவாகிறது. இதற்கு நடவடிக்கை எடுக் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? மோசமான வருகை உணவுக்கான செலவு அதிகமாக இருந்தாலும், பார்லிமென்டில் வருகை குறைவாக உள்ளது.

20 எம்.பி.க்களின் கோரம் கூடாததால், பல நாட்கள் நாடாளுமன்றம் கூட்டப்படாமல் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களின் செலவில் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பது இப்போது தெளிவாகிறது.

யாருக்கு பாதிப்பு?

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் தங்கள் இடத்தைப் பாதுகாக்க மக்கள் ஏன் தேர்தல் பிரச்சாரங்களுக்கு இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லையா?

வரி செலுத்துவோர் மறைமுகமாகச் செலுத்தும் இத்தகைய அதிகப்படியான செலவுகளைக் குறைக்கும் திறன் அரசுக்கு உள்ளது என்பதும் தெளிவாகிறது. எம்.பி.க்களுக்கு இவ்வளவு சலுகைகள் அளிக்கப்பட்டாலும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் குறைந்த போக்குதான் உள்ளது. சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் அவர்களுக்காக செலவிடும் பணத்திற்கு அவர்களின் சேவை மதிப்புள்ளதா?

கஷ்டப்பட்டு சம்பாதித்த பொதுப் பணத்தை பொறுப்புடன் கையாளும் பொறுப்பு அவர்களுக்கு இல்லையா? நாங்கள் நிதியளிப்பவர்கள், அவர்கள் எங்கள் குரல். இந்தச் செலவையெல்லாம் நாம் தாங்கிக்கொள்ள அவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்கிறார்களா என்பதுதான் கேள்வி. அது மதிப்புள்ளதா?

மிகப்பெரிய இன்னல்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு படித்து அரச கல்வி & நிர்வாக சேவை ( SLAS , SLEAS, SLPS ) போட்டி பரீட்சைகளில் முட்டி மோதி சித்தியடைந்து மிகப்பெரிய கல்விமான்கள் கூட இவ்வளவு தூரமான வருமானமீட்டல்களை தங்கள் வாழ்நாளில் பெறுவது கிடையாது.

ஆகவே மக்கள் சேவையாற்றுவதற்காக நான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும், என்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குங்கள் என்று யாராவது உங்களிடம் வந்து கேட்டால் அவரை நேரடியாக என்னிடம் கூட்டிவாருங்கள், இங்கே இருக்கின்ற வரப்பிரசாதங்களை வைத்துக்கொண்டு நிற்க வைத்து நான்கு கேள்வி கேளுங்கள்.

என்னை பொறுத்தவரையில் இந்த நாட்டில் உயர் சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றம் செல்வதற்கு ஆசைப்படும் எல்லோரும் 75 % + மானவர்கள் உழைப்பதற்காகவும் சொத்து சேர்ப்பதற்காகவும் மட்டுமே ஆசைப்படுகிறார்கள், இல்லாவிட்டால் தங்கள் Illegal Business ஐ பாதுகாக்கவே என்பதை பகிரங்கமாகவே சொல்லி வைப்பேன்.

வெறும் பத்து வீதமானவர்கள் மட்டுமேதான் உண்மையான சேவையுடனும் மக்கள் சேவையாற்றவும் என்று புறப்படுகிறார்கள்.

இம்முறை தூய சிந்தனையோடு நாடாளுமன்றம் சென்று ஊழலற்ற நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற போர்வையில் போட்டி போட தயாராக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை ,நீங்கள் நான் குறிப்பிடும் அந்த பத்து வீதத்தில் ஒருவராய் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

எங்கள் திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து தமிழர் பிரதிநிதித்துவம் காக்கப்பட வேண்டும், தமிழ் மக்கள் தமிழ் எம்பி ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் இல்லாவிட்டால் எங்கள் தமிழருக்கான உரிமை இல்லாத போய்விடும் என்று மக்களின் மண்டையை கழுவி ஒரு வயது முதிர்ந்த பெருந்தலைவர் ஒருவரை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்கள் .

இறுதியாய் அவர் நாடாளுமன்றம் சென்றதற்கு பின்னர் அவர் உயிர் நீத்த பின்னர்தான் அவர் உடலம் திருமலையை வந்தடைந்தது, இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் எத்தனை கோடிகள் அளவிலான வரப்பிரசாதங்களை அந்த பெருந்தலைவர் பெற்றிருப்பார் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

மக்களுக்காகவும் தேசியத்திற்காகவும் நாட்டின் உரிமைக்காகவும் நாடாளுமன்றம் அனுப்புங்கள் என்று கேட்ட ஒருவர், தன் உடல்நிலை இயங்க மறுத்தபோது அதனால் ஏற்பட்ட வருமான ஈட்டல்களையும் வரப்பிரசாதங்களையுமாவது அந்த மாவட்டத்தில் இருக்கின்ற மக்களுக்கு அல்லது பாடசாலைகளுக்கோ கொடுத்து உதவி இருந்தால்கூட நான் கையெடுத்து கும்பிட்டு இருப்பேன் .

இதனை எல்லாம் உரக்க உரக்கச் சொன்னால் உங்களுக்கு என்னை பைத்தியகாரனை பார்ப்பது போன்றுதான் பார்க்கத் தோன்றும். இப்படித்தான் ஜேவிபி இவ்வாறான ஊழல்களை புட்டு புட்டு வைத்த போது நீங்களும் நானும் நோக்கினோம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 11 பில்லியன் என்று அறியப்படுகிறது ,அப்படியாக இருந்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நாம் நாடாளுமன்றம் அனுப்புவதற்காக மட்டும் ஐந்து கோடி ரூபாய் அளவிலான எங்கள் தொகையை விரயம் செய்கிறோம் . இத்தனைக்கும் இது கடந்தாண்டு Budget ல் ஒதுக்கப்படாத நிதி என்பதும் சிந்திக்கவேண்டியது, ஜனாதிபதித் தேர்தலுக்காக 10 பில்லியனுக்கும் அதிகமான நிதி செலவு செய்யப்பட்டு இருக்கிறது, ஆக குறித்த கால இடைவெளியில் இரண்டு பெரும் தேர்தலுக்காக இவ்வளவு பெரிய நிதி நாட்டின் திறைசேரியால் செலவு செய்யப்படுகிறது.

இத்தனை புள்ளி விபரங்களையும் உங்களுக்கு எதற்காக நான் முன் வைத்திருக்கிறேன் என்று சொன்னால், உங்கள் வாக்கு என்பது எவ்வளவு பலமானது என்பதும் உங்கள் வாக்குகளால் அனுப்பப்படும் ஒரு உறுப்பினர் எவ்வளவு வரப்பிரசாதங்களை அனுபவிக்கிறார் என்பதையும் உணர்ந்து சரியான தெரிவை தேர்வு செய்யுங்கள்.

ஊழல் அற்ற நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்க உதவுங்கள், உங்கள் வாக்குகளை செலுத்த தயாராக முன் ஆழமாய் சிந்தியுங்கள் + செயல்படுங்கள் .

ஊழலற்ற நாடாளுமன்றம் ஒன்று அமையட்டும்.!

இலங்கை செய்திகள்

Address

Nelliady

Alerts

Be the first to know and let us send you an email when Nelliady.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nelliady.Com:

Share